Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மாஜி'க்கள் ரூ.1 கோடி வாடகை பாக்கி

Posted: 12 Feb 2016 07:42 AM PST

புதுடில்லி :பதவி காலம் முடிந்த பின், அரசு பங்களாவை காலி செய்யாமல் தங்கியிருந்த வகையில், முன்னாள் எம்.பி.,க்கள், 56 பேர், 93 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பெறப்பட்ட இந்த பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் கிரிக்கெட் கேப்டன், காங்கிரசைச் சேர்ந்த அசாருதீன், நடிகை ஜெயபிரதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

*வாடகை நிலுவை வைத்துள்ளோரில், ஐந்து பேர் தவிர, மற்றவர்கள், பங்களாக்களை காலி செய்து விட்டனர். எனினும், வாடகை பணத்தை தராமல் உள்ளனர்* ...

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை: பொருளாதாரம் வலுவாக உள்ளதாக விலாவரி விளக்கம்

Posted: 12 Feb 2016 08:23 AM PST

புதுடில்லி:சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. கடந்த, 11ம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 807 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 239 புள்ளிகள் குறைந்து, 7,000 புள்ளிகளுக்கும் கீழாக சரிவடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள், ஒரே நாளில், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்தனர்.இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டதை அறிந்த, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்து, ...

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம்: அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

Posted: 12 Feb 2016 08:58 AM PST

தமிழகத்தில், மூன்று மாடிக்கும் மேற்பட்ட அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விதிகளில் திருத்தம் செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க, அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படும்; இதற்காக, வளர்ச்சி விதிகளில் ...

ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க மோடி வேண்டுகோள்

Posted: 12 Feb 2016 09:12 AM PST

புதுடில்லி,:''பள்ளி முதல்வர்கள், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லக் கூடிய வீரர்களை மாணவப் பருவத்தில் இருந்தே உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவு பெற்ற பள்ளிகளின் முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:பள்ளிகள் பெருகி வரும் அளவிற்கு மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த பள்ளிகளின் பாரம்பரியம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். கல்வித்தரமும், மாணவர்களின் தரமும் மேம்பட வேண்டும். ஆகவே எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு ...

திருவாரூரை கைகழுவுகிறார் சைதாப்பேட்டையில் கருணாநிதி

Posted: 12 Feb 2016 09:42 AM PST

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, 12 முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் முதன் முதலில், குளித்தலை தொகுதியிலும், இரண்டாவது முறையாக, தஞ்சாவூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குடும்பத்தினர் விருப்பம்:
அதன்பின், ஒன்பது முறை, சென்னை யில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், தன் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டார்; வெற்றியும் பெற்றார். இம்முறையும், அவர் திருவாரூரிலேயே போட்டியிட ...

'கொலையுண்டவரை கோர்ட்டில் நிறுத்தட்டுமா': பாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேச வாதம்

Posted: 12 Feb 2016 10:02 AM PST

"கிட்டத்தட்ட, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளேன். சட்டம் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, என்னை காப்பாற்றி கொள்ளக் கூட நான் விரும்பவில்லை. ஆனால், கொலையுண்ட நபரையே நேரில் அழைத்து வருகிறேன்; நீதி வழங்குங்கள்," என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ., தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள், எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதம் எப்படியிருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ...

'டாஸ்மாக்' நேரத்தை குறைக்க அரசு திட்டம்?

Posted: 12 Feb 2016 10:03 AM PST

தி.மு.க., தேர்தல் அறிக்கயின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், 'டாஸ்மாக்' கடைகள் நேரத்தை குறைக்கும் அறிவிப்பை வெளியிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளால், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. எனவே, மது விலக்கை அமல்படுத்த கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், மதுக்கடைகளை மாலை, 4:00 மணி முதல் இரவு, 10:00 வரை மட்டும் திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கையை, டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே தயாரித்துள்ளது. அதை, தமிழக அரசின் உயர் ...

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரம்: மறியலில் ஈடுபட்டு 30,000 பேர் கைதாகி விடுதலை

Posted: 12 Feb 2016 10:08 AM PST

சென்னை: அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. போராட்டத்தின், மூன்றாவது நாளான நேற்று, தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 30 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்து, சமாளிக்க முடியாமல் விடுதலை செய்தனர்.'புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உட்பட, தொகுதிப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். மூன்றாவது ...

முதல்வர் வீடு அருகே சாலை பணியை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்: 'எனக்கு தெரியாமல் எப்படி போடலாம்' என பகிரங்க மிரட்டல்

Posted: 12 Feb 2016 10:17 AM PST

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில், ஆளுங்கட்சி கவுன்சிலர், 'எனக்கு தெரியாமல் எப்படி நீ சாலை போடலாம்' என, ஒப்பந்ததாரரை மிரட்டி, பணியை தடுத்து நிறுத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, விபரம் அறிந்த மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது:பெருநகர சென்னை மாநகராட்சி, வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து வருகிறது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், ஒப்பந்ததாரர்களை வரும், 15ம் தேதிக்கு முன் பணிகளை முடிக்கும்படி மாநகராட்சி கட்டாயப்படுத்தி உள்ளது.இதனால், தினசரி ...

சிரியாவில் சண்டை நிறுத்தம்: உலக நாடுகள் ஒப்புதல்

Posted: 12 Feb 2016 12:39 PM PST

முனிச்: மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள், தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன.சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையால், 2 லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கனோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதையடுத்து, அங்கு அமைதியை ஏற்படுத்த, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது என, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதற்கான நடவடிக்கையை, ஐ.நா., விரைவில் ...

போர்க்களத்தில் ரசாயன ஆயதங்கள்: ஐ.எஸ்., பற்றிய அதிர்ச்சி தகவல்

Posted: 12 Feb 2016 01:01 PM PST

வாஷிங்டன்,:''மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதுடன், அவற்றை பயன்படுத்தியும் வருவதாக,'' சி.ஐ.ஏ., எனப்படும், அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குனர் ஜான் பிரின்னன் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் போர்களத்தில், தொடர்ச்சியாக ரசாயன ஆயுங்களை பயன்படுத்தி வருகின்றனர். 'குளோரின்' அல்லது கந்தகத்தில் தோய்க்கப்பட்ட வாயுவை பயன்படுத்தி, இதை உருவாக்கியுள்ளனர். மிக சிறிய வடிவிலான இந்த ரசாயன ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை. சிரியா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™