Tamil News | Online Tamil News |
- குஜராத் இந்தியாவில் இல்லையா? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
- ஓய்வு பெற்றவர்களுக்கு 'டாட்டா': மின் வாரியம் அதிரடி
- இது ஆட்சியின் சாதனையா? கருணாநிதி கேள்வி
- மோடியின் கையில் இருக்கும் ரொக்கம் ரூ.4,700 : சொத்து மதிப்பிலும் பெரிய மாற்றமில்லை
- அடுத்த இலவசம் என்ன? அ.தி.மு.க., - தி.மு.க., தீவிரம்
- மீனவர்கள் பிரச்னை: மோடிக்கு ஜெ., கடிதம்
- எல்லாம் மன்மோகனுக்கு தெரியும்: சி.பி.ஐ., கோர்ட்டில் ராஜா வாதம்
- ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்கள் பாதிப்பு
- தி.மு.க., கூட்டணியில் சேர விஜயகாந்த் புது நிபந்தனை: எம்.எல்.ஏ.,க்கள் நச்சரிப்பால் தளர்கிறது பிடிவாதம்
- காஷ்மீரில் புதிய அரசு அமையுமா? பி.டி.பி., - பா.ஜ.,வுக்கு கவர்னர் அழைப்பு
| குஜராத் இந்தியாவில் இல்லையா? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Posted: 01 Feb 2016 08:26 AM PST புதுடில்லி: குஜராத் மாநிலத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப் படாததற்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில், 'ஸ்வராஜ் அபியான்' என்ற, அரசு சாரா அமைப்பு, பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது. அதில், 'குஜராத், உ.பி., கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட, பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. அம்மாநிலங்களில், போதிய நிவாரண உதவி வழங்கப்படவில்லை. 'அங்கு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. இம்மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான ... |
| ஓய்வு பெற்றவர்களுக்கு 'டாட்டா': மின் வாரியம் அதிரடி Posted: 01 Feb 2016 08:29 AM PST தமிழ்நாடு மின் வாரியத்தில், மின் கொள்முதல், மின் திட்டம், நிலக்கரி என, பல பிரிவுகள் உள்ளன.இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன. ஓய்வுபெற்ற, 30க்கும் மேற்பட்டதலைமை, மேற்பார்வை பொறியாளருக்கு, ஓ.எஸ்.டி., எனப்படும், 'ஆபிசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி' என்ற பெயரில், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், தனி அறை என, சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்காக, ஆண்டுதோறும், பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.'மின் வாரிய கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய நிலையில், ஓ.எஸ்.டி.,களை நீக்க வேண்டும்' என, ஊழியர்கள், ... |
| இது ஆட்சியின் சாதனையா? கருணாநிதி கேள்வி Posted: 01 Feb 2016 08:48 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனை விதிமுறை மீறல்கள் குறித்த ஒரு வழக்கில் நீதிபதிகள், 'பதில் மனு தாக்கல் செய்ய, எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இவ்வாறு கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல' என்று கருத்து கூறியுள்ளனர். பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'பல முறை அவகாசம் கொடுத்தும் பதில் மனு தாக்கல் செய்யாததால், தமிழக சுகாதாரத் துறைச் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், தீயணைப்புத் துறை இயக்குனர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர்துறைச் செயலருக்கு, இரண்டாவது முறையாக, ... |
| மோடியின் கையில் இருக்கும் ரொக்கம் ரூ.4,700 : சொத்து மதிப்பிலும் பெரிய மாற்றமில்லை Posted: 01 Feb 2016 09:03 AM PST புதுடில்லி: நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, 19 மாதங்களுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அவருடைய சொத்து பட்டியலில், மிகப் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதே நேரத்தில் அவருடைய ரொக்க கையிருப்பு, 4,700 ரூபாயாகக் குறைந்து உள்ளது. நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்றதும், 'அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். அதன்படி, 2014 ஆகஸ்டில், அனைத்து அமைச்சர்களும், தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட்டனர். பிரதமர் மோடியும், தன் சொத்து விவரங்களை வெளியிட்டார். இந்த நிலையில், 2015 மார்ச்சிலும், சொத்து பட்டியல் வெளியிடப்பட்டது. ... |
| அடுத்த இலவசம் என்ன? அ.தி.மு.க., - தி.மு.க., தீவிரம் Posted: 01 Feb 2016 09:06 AM PST இலவசங்கள் கொடுத்து, வாக்காளர்களை கவரும் புதிய யுக்தியை, அ.தி.மு.க., - தி.மு.க., தொடர்ந்து பின்பற்றி வருகிறது. கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், கலர், 'டிவி', இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டன. கடந்த, 2011 சட்டசபை தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்தன. அ.தி.மு.க., தரப்பில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப் - டாப், தாலிக்கு தங்கம், ஆடு, மாடு உள்ளிட்ட இலவசங்கள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இவற்றைசெயல்படுத்த, சிறப்பு திட்ட செயலாக்க துறை உருவாக்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலிலும், வாக்காளர்களை கவர, ... |
| மீனவர்கள் பிரச்னை: மோடிக்கு ஜெ., கடிதம் Posted: 01 Feb 2016 09:31 AM PST சென்னை: இலங்கை சிறையில் உள்ள, 15 மீனவர்களையும், அவர்களின், 69 படகுகளையும், உடனடியாக விடுவிக்க எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதம்:புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த, ஐந்து மீனவர்கள்; கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த, நான்கு மீனவர்கள், ஜன., 30ல், இரண்டு படகுகளில்,மீன் பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து, இலங்கை சிறையில் உள்ள, 15 மீனவர்களையும், அவர்களின், 69 படகுகளையும், உடனடியாக விடுவிக்க, வெளியுறவுத் துறை ... |
| எல்லாம் மன்மோகனுக்கு தெரியும்: சி.பி.ஐ., கோர்ட்டில் ராஜா வாதம் Posted: 01 Feb 2016 09:44 AM PST புதுடில்லி: 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை; அதுபற்றி, முக்கிய கட்டங்களில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் பிற கேபினட் அமைச்சர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்,'' என, முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா தரப்பில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நேற்று தெரிவிக்கப்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, தி.மு.க.வை சேர்ந்த, முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட, 15பேருக்கு எதிராக, டில்லியில், ... |
| ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்கள் பாதிப்பு Posted: 01 Feb 2016 09:46 AM PST சென்னை : ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' நடத்திய போராட்டத்தால், நேற்று வகுப்புகள் நடைபெறாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, ஜாக்டோ நடத்திய போராட்டம், மூன்றாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால், போராட்டத்தால் பாதிப்பில்லை. ஆனால், நேற்று வேலை நாள் என்பதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் ஆசிரியர்கள் மறியலில் கைதாகினர். சில இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, ஊர்வலமாகச் செல்ல முயன்ற ... |
| Posted: 01 Feb 2016 10:40 AM PST தி.மு.க., கூட்டணியில் சேர ஆட்சியிலும், தொகுதியிலும், 50 : 50 என்ற புதிய நிபந்தனையை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் நச்சரிப்பு காரணமாக கூட்டணி விஷயத்தில் அவசரப்பட்டு வாய் திறப்பதில்லை என்ற பிடிவாதத்தை தளர்த்தி இந்த நிபந்தனையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் முனைப்பில் தி.மு.க., உள்ளது. இதற்கு உதவ முன்வரும் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணிக்கு கொண்டு ... |
| காஷ்மீரில் புதிய அரசு அமையுமா? பி.டி.பி., - பா.ஜ.,வுக்கு கவர்னர் அழைப்பு Posted: 01 Feb 2016 12:57 PM PST ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், புதிய அரசு அமைப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.,) மற்றும் பா.ஜ.,வுக்கு, அம்மாநில கவர்னர், என்.என்.வோரா அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி அரசின் முதல்வராக இருந்த, பி.டி.பி., தலைவர் முப்தி முகமது சயீத், சமீபத்தில் காலமானார். புதிய அரசு அமைப்பது குறித்து, தொடர்ந்து இழுபறி நிலவியதால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், முப்தி சயீத்தின் மகளும், கட்சியின் புதிய தலைவருமான மெகபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., மூத்த தலைவர்கள், நேற்று முன்தினம் ஆலோசனை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |