Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


முயற்சியில்லாமல் எதையும் சாதிக்க முடியாது! - ஏக்தா கபூர்

Posted: 07 Feb 2016 06:17 AM PST

டிவி தொடர்கள், திரைப்பட தயாரிப்பு, ஈகே பேஷன் நிறுவனம் என பல துறைகளில் ஆண்களுக்கு சமமாக தைரியமாக நுழைந்து புதிதாக இத்துறைகளுக்கு வருபவர்களுடன் ஈடுகொடுத்து சாதனை படைத்துவரும் ஏக்தா கபூர், பழம்பெரும் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள்.

விசில் வித்வான்

Posted: 07 Feb 2016 06:14 AM PST

விசில்... இவ் வார்த்தை அல்லது இது சார்ந்த ஒலி காதில் விழும் மாத்திரத்தில் நம் மனதில் வரும் முத்திரைப் படிமம்...

உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிடுங்கள்:மாநில அரசுகளுக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

Posted: 06 Feb 2016 01:41 PM PST

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றவும் மாநில அரசுகள் கூடுதல் நிதியைச் செலவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தி உள்ளார்.

விவசாயிகள் நலன் காக்கும் பட்ஜெட் வேண்டும்: திமுக

Posted: 06 Feb 2016 01:40 PM PST

எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளின் நலன்களை உறுதிப்படுத்தக் கூடிய நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்

Posted: 06 Feb 2016 01:40 PM PST

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

அனுமதியில்லாமல் நீண்ட கால விடுப்பு:அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Posted: 06 Feb 2016 01:39 PM PST

அனுமதியில்லாமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட நீண்ட கால விடுப்பில் இருந்தால் அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

"ஏர்செல்-மேக்சிஸ்' அமலாக்கத் துறை வழக்கு:குற்றப்பத்திரிகை மீது பிப்.20-க்கு பிறகு உத்தரவு

Posted: 06 Feb 2016 01:38 PM PST

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை மீது வரும் 20-ஆம் தேதி நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசு கொண்டு வராது?

Posted: 06 Feb 2016 01:36 PM PST

வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

பழ.கருப்பையா ராஜிநாமா ஏற்பு:துறைமுகம் தொகுதி காலியானது!

Posted: 06 Feb 2016 01:36 PM PST

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அளித்த கடிதம் பேரவைச் செயலகத்தால் ஏற்கப்பட்டது. அவர் பேரவை உறுப்பினராக இருந்த துறைமுகம் தொகுதி காலியானதாக தேர்தல்

கெயில் எரிவாயுக் குழாய் வழக்கு: தேமுதிக மறுஆய்வு மனு தாக்கல்

Posted: 06 Feb 2016 01:35 PM PST

தமிழக விளைநிலங்களில் இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) எரிவாயு குழாய்களை பதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தேமுதிகவைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

Posted: 06 Feb 2016 01:34 PM PST

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்துக்கு அருகே இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல் படையினர், படகில் இருந்த 11 மீனவர்களை கைது செய்தனர்.

மகாராஷ்டிரம்: பொது இடங்களில் எச்சில் உமிழ்வதை தடை செய்யும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்

Posted: 06 Feb 2016 01:33 PM PST

அடுத்த மாதம் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, பொது இடங்களில் எச்சில் உமிழ்வதைத் தடுக்க வழிவகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

"டிஜிட்டல் இந்தியா' திட்டம்:அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Posted: 06 Feb 2016 01:33 PM PST

"டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார்.

நவாஸ் ஷெரீஃபின் இல்லத்தில் தாவூத் இப்ராஹிமை சந்தித்தார் மோடி:ஆஸம்கான் குற்றச்சாட்டு

Posted: 06 Feb 2016 01:33 PM PST

மும்பைத் தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம்கான் குற்றம்சாட்டினார்.

தலித் மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்திய நிதீஷ் அரசு: பாஜக குற்றச்சாட்டு

Posted: 06 Feb 2016 01:32 PM PST

பிகாரை ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, தலித் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை நிறுத்திவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத்தில் அனைத்து நில ஒதுக்கீடு குறித்தும் எஸ்ஐடி விசாரணை தேவை:காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 06 Feb 2016 01:32 PM PST

குஜராத் மாநில முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற அனைத்து நில ஒதுக்கீடுகளையும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி பலி

Posted: 06 Feb 2016 01:32 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாரதீப் சுத்திகரிப்பு ஆலையை இன்றுநாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

Posted: 06 Feb 2016 01:31 PM PST

ஒடிஸா மாநிலம் பாரதீப்பில் "இந்தியன் ஆயில் நிறுவனம்' சார்பில் ரூ.34,555 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப். 7) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சோனியா காந்தி குடும்பத்தால் பெருமை: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

Posted: 06 Feb 2016 01:31 PM PST

சோனியா காந்தி குடும்பத்தைக் கண்டு பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

சனி சிங்க்ணாபூர் கோயில் நிர்வாகிகளுடன் மகளிர் அமைப்பினர் பேச்சுவார்த்தை

Posted: 06 Feb 2016 01:31 PM PST

மகாராஷ்டிர மாநிலம், சிங்க்ணாபூரில் உள்ள சனி பகவான் கோயில் விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், மகளிர் அமைப்பினரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரயில் ஏசி முதல் வகுப்புப் பெட்டிகளில் கட்டணச் சலுகை ரத்து?

Posted: 06 Feb 2016 01:30 PM PST

ரயில் ஏசி முதல் வகுப்புப் பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் உள்பட குறிப்பிட்ட பிரிவினருக்கு அளிக்கப்படும் 50 சதவீத கட்டணச் சலுகையை திரும்பப் பெறுவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது.

இரண்டாவது நாளாக தொடரும் காபு தலைவரின் உண்ணாவிரதம்

Posted: 06 Feb 2016 01:30 PM PST

ஆந்திரத்தில் காபு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி அந்த சமூகத்தின் தலைவர் முத்ரகட பத்மநாபமும், அவரது மனைவி பத்மாவதியும் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 06 Feb 2016 01:26 PM PST

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு, கெயில் நிர்வாகம் கை விடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு வெள்ளிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள்: அரசியல் கட்சியினர் ஆய்வு

Posted: 06 Feb 2016 01:26 PM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை நடந்த சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் ஏராளமானோர் பட்டியலில் பெயர் சேர்க்க மனுக் கொடுத்தனர். இம் முகாம்களை திமுக, அதிமுக நிர்வாகிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர்.

ராமேசுவரம் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

Posted: 06 Feb 2016 01:26 PM PST

ராமேசுவரம் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க நந்தி வாகனத்தில் சுவாமி, அம்மன் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சனிக்கிழமை காட்சியளித்தனர்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Posted: 06 Feb 2016 01:25 PM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் சனிக்கிழமை சனிப்பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 06 Feb 2016 01:20 PM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் தாலுகாக்களைச் சேர்ந்த வைகைப் பாசனப் பகுதிகளில் தண்ணீரின்றி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திருத்தளிநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷ விழா

Posted: 06 Feb 2016 01:20 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி

Posted: 06 Feb 2016 01:19 PM PST

அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை: மீன்துறை உதவி இயக்குநர் தகவல்

Posted: 06 Feb 2016 01:19 PM PST

ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி அனுமதிச் சீட்டு வாங்காமல் மீன்பிடிக்கச்  சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநர் கோபிநாத் சனிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நாளை மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறப்பு

Posted: 06 Feb 2016 01:18 PM PST

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்த மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் முழு உருவ வெண்கலச்சிலையை  ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

காரைக்குடியில் திருவையாறு இசை விழா துவக்கம்

Posted: 06 Feb 2016 01:18 PM PST

காரைக்குடி தமிழ் இசைச்சங்கம், மியூசிக் அகாதெமி ஆகியவை சார்பில் காரைக்குடியில் திருவையாறு 2015-16 எனும் இசை விழாவின் துவக்க நிகழ்ச்சி ஸ்ரீ ராமநவமி மகோத்சவசபா மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர் எஸ் மங்கலம் அருகே நெல் கதிர் எரிந்து நாசம்

Posted: 06 Feb 2016 01:17 PM PST

திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே கலங்காபுலி கிராமத்தில் வயலில் கிடந்த வைக்கோலுக்கு தீவைத்ததில் அருகில் இருந்த நெல் வயலில் தீ பரவியதில் நெல் கதிர்கள் எரிந்து நாசமாயின.

ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் வாங்கியதாக  இருவர் மீது வழக்கு

Posted: 06 Feb 2016 01:16 PM PST

போலியான ஆவணங்கள் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீஅஹோபில மடம் ஜீயர் நாளை திருப்புல்லாணி சேதுக்கரையில் புனித நீராடல்

Posted: 06 Feb 2016 01:16 PM PST

திருப்புல்லாணி சேதுக்கரையில் ஸ்ரீஅஹோபில மடம் 46ஆவது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடுகிறார்.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

Posted: 06 Feb 2016 01:15 PM PST

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது

Posted: 06 Feb 2016 01:15 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற  இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இலவசங்கள் தருவதாக கூறும் கட்சியுடன் கூட்டணி இல்லை: டாக்டர் பாரிவேந்தர்

Posted: 06 Feb 2016 01:14 PM PST

இலவசங்கள் தருவதாக கூறும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டோம் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் சனிக்கிழமை ராமநாதபுரத்தில் பேசினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர்

Posted: 06 Feb 2016 01:14 PM PST

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் வகிப்பதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை பேசினார்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 06 Feb 2016 01:13 PM PST

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் வெள்ளிக்கிழமை சூற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

Posted: 06 Feb 2016 01:13 PM PST

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வரலாற்று ஆவணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

சிவகாசியில் 750 பேருக்கு சிறுவணிக கடன் வழங்கல்

Posted: 06 Feb 2016 01:12 PM PST

அம்மா சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் சிவகாசியில் 750 பேருக்கு சனிக்கிழமை சிறுவணிக கடனை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

சிறு தானிய பயிர்கள் மேலாண்மை பயிற்சி முகாம்

Posted: 06 Feb 2016 01:12 PM PST

சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் சிறு தானிய பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்த பயிற்சி முகாம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக விழிப்புணர்வுப் பேரணி

Posted: 06 Feb 2016 01:11 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக சார்பில் வாக்காளர் சந்திப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை

Posted: 06 Feb 2016 01:11 PM PST

ராஜபாளையத்தில் மாநில அமைப்பு சாரா நலவாரியம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடந்தது.

முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள்: திண்டுக்கல் அணிகள் ஆதிக்கம்

Posted: 06 Feb 2016 01:10 PM PST

முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான கால்பந்து போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல் மாவட்ட அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பரோடா முருங்கை விலை குறைவு

Posted: 06 Feb 2016 01:10 PM PST

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் பரோடா முருங்கை விலை குறைந்து கிலோ ரூ.75-க்கு விற்பனையானது.

கோவிலூரில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி 13 பவுன் நகை கொள்ளை

Posted: 06 Feb 2016 01:10 PM PST

கோவிலூர் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்து 13 பவுன் நகை மற்றும் ரூ.5ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

சாலைப் பாதுகாப்புக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

Posted: 06 Feb 2016 01:10 PM PST

தேனி மாவட்ட காவல் துறை நிர்வாகத்துக்கு சாலை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Posted: 06 Feb 2016 01:10 PM PST

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மின்வாரிய தாற்காலிக பணியாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீ: மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகார்

Posted: 06 Feb 2016 01:10 PM PST

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து வருவதையொட்டி, மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கொடைக்கானலில் புகைப்படம் மற்றும் விடியோகிராபர் சங்க 3ஆம் ஆண்டு விழா

Posted: 06 Feb 2016 01:10 PM PST

கொடைக்கானலில் புகைப்படம் மற்றும் விடியோகிராபர் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுகவினர் லட்சிய விளக்கப் பேரணி

Posted: 06 Feb 2016 01:10 PM PST

மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், பழனியில் வெள்ளிக்கிழமை லட்சிய விளக்கப் பேரணி நடத்தப்பட்டது.

பாஜக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 06 Feb 2016 01:10 PM PST

தேனி அருகே வீரபாண்டியில், புதன்கிழமை போடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓடையில் தவறி விழுந்து பெண் சித்த மருத்துவர் சாவு

Posted: 06 Feb 2016 01:10 PM PST

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஆயிஷா பீவி (72) என்பவர் சித்த மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர், வெள்ளிக்கிழமை கூக்கால் பகுதியிலுள்ள ஓடைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ஆயிஷா பீவி,    சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுதானியப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு பயிற்சி

Posted: 06 Feb 2016 01:10 PM PST

வத்தலகுண்டு வட்டாரம், சென்மார்பட்டி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான சிறுதானியப் பயிர்களில் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்னை நார் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

Posted: 06 Feb 2016 01:09 PM PST

கூடலூர் அருகே தென்னை நார் ஏற்றிச் சென்ற லாரியில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்ததால், லாரி முழுவதும் எரிந்து நாசமானது.

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

Posted: 06 Feb 2016 01:09 PM PST

ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதால், ஓய்வூதியப் பலன் தொடர்பான குறைகளை பிப். 10ஆம் தேதிக்குள் மனுவாக அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலத்தை சனிக்கிழமை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்தலகுண்டு சுயம்பு லிங்கம் குகை கோயிலில் வழிபாடு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

வத்தலகுண்டு தங்கமலை முருகன் கோயில் கரட்டுப்பகுதி பாறையில் குகையில் உள்ள சுயம்பு லிங்கத்துக்கு பக்தர்கள் சனிக்கிழமை வழிபாடு நடத்தினர்.

பூட்டிய வீட்டில் பொருள்கள் திருட்டு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பிஸ்மி நகரைச் சேர்ந்தவர் கலாராணி (42). இவர் உத்தமபாளையத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 06 Feb 2016 01:09 PM PST

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சின்னவீரணன். இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவிக்கும், குணசேகரன் (30) என்பவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு, பிப்.12ஆம் தேதி திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வந்தன. சைல்டுலைன் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜா, விஜயலட்சுமி மற்றும் சண்முகவள்ளி ஆகியோர் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சார்நிலை கருவூல அலுவலகத்தில் ரூ.43 லட்சம் மோசடி: கருவூல அலுவலர் மீது புகார்

Posted: 06 Feb 2016 01:09 PM PST

உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர் நிதி ரூ.43 லட்சத்து 64 ஆயிரத்து 835-ஐ மோசடி செய்ததாக சார்நிலை கருவூல அலுவலராக பணியாற்றிய கார்த்திகேயன் என்பவர் மீது சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வத்தலகுண்டு அருகே விஷம் வைத்து கொல்லப்பட்ட ஆடு, மாடுகள்

Posted: 06 Feb 2016 01:09 PM PST

வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை தீவனத்தில் விஷம் வைத்து கால்நடைகள் கொல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சின்னமனூரில் லாரியில் பற்றி எரிந்த தீ அணைப்பு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

சின்னமனூர் பழைய பாளையம் வழியாக ரேஷன் கடைகளில் சேகரிக்கப்பட்ட காலி சாக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பியில் உரசியதால் லாரியில் இருந்த சாக்குகள் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காணாமல்போன குழந்தை சடலமாக மீட்பு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

செம்பட்டி அருகே காணாமல்போன 3 வயது குழந்தை சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.

கொடைக்கானல் காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

கொடைக்கானல் நாயுடுபுரம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீபத்ர காளியம்மன் கோயிலில் சனிக்கிழமை உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சாத்தூரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Posted: 06 Feb 2016 01:09 PM PST

சாத்தூரில் புதுவாழ்வு திட்டம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ராஜபாளையம் கோயிலில் மஹா பிரதோஷ விழா

Posted: 06 Feb 2016 01:09 PM PST

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் மஹா பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அருகே காணாமல்போன பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

சிவகாசி அருகே காணாமல்போன 2 பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

ராஜபாளையம் அருகே நக்கனேரியில் சனிக்கிழமை விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுமி இறந்தார்.

மகளிர் கல்லூரியில் வடிவமைப்பு கண்காட்சி

Posted: 06 Feb 2016 01:09 PM PST

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மேலாண்மை சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 06 Feb 2016 01:09 PM PST

விருதுநகர் இந்து நாடார் வியாபாரிகள் சங்க 25ஆவது பொதுக்குழு கூட்டம் அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றது.

விருதுநகர் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

Posted: 06 Feb 2016 01:09 PM PST

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் ரூ.5.32 கோடியில் செவிலியர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை

Posted: 06 Feb 2016 01:09 PM PST

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5.32 கோடி மதிப்பீட்டில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு புதிய தங்கும் விடுதிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

வாகனம் மோதி மெக்கானிக் சாவு

Posted: 06 Feb 2016 01:08 PM PST

காரியாபட்டியில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மெக்கானிக் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ராஜபாளையம் அருகே பெண் ஆட்டோவில் கடத்தல்

Posted: 06 Feb 2016 01:08 PM PST

ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானத்தில் இளம்பெண்னை ஆட்டோவில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர்.

மணல் திருட்டு: 2 பேர் கைது

Posted: 06 Feb 2016 01:08 PM PST

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிவகாசியில் புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 06 Feb 2016 01:08 PM PST

சிவகாசி பகுதியில் புதுப்பட திருட்டு சி.டி.க்களை வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தொழிலாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது

Posted: 06 Feb 2016 01:08 PM PST

சிவகாசியில் வெள்ளிக்கிழமை தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

போதை ஒழிப்பு கருத்தரங்கம்

Posted: 06 Feb 2016 01:08 PM PST

பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் இளைஞர் நலத்துறை சார்பாக போதை ஒழிப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு

Posted: 06 Feb 2016 01:08 PM PST

மதுரையில் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி சங்கிலியைப் பறித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விளாத்திகுளத்தில் அதிமுக ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 06 Feb 2016 12:22 PM PST

அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 06 Feb 2016 12:18 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அழகிய மண்டபத்தில் இருபெரும் விழா

Posted: 06 Feb 2016 12:18 PM PST

நாஞ்சில் கரியர் அகாதெமி சார்பில் நூல் இல்ல அடிக்கல் நாட்டு விழா, அன்னை ஆதா பயிற்சி மைய முதலாமாண்டு விழா ஆகிய இருபெரும் விழா அழகியமண்டபத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் பேரூராட்சியில் 10 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கும் கிணறு: சீரமைக்கக் கோரிக்கை

Posted: 06 Feb 2016 12:18 PM PST

குலசேகரம் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையில் இருக்கும் கிணற்றை,  பயன்பாட்டிற்கு கொண்டு வர இப்பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பண்பாட்டு எச்சங்களைக் காக்கும் கடற்கரைப் பகுதி மக்கள்: எழுத்தாளர்  ஜோ டி.குரூஸ்

Posted: 06 Feb 2016 12:18 PM PST

கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பண்பாட்டு எச்சங்களைக் காத்து வருகிறார்கள் என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி. குரூஸ்.

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 12 இல் தொடங்குகிறது

Posted: 06 Feb 2016 12:18 PM PST

பிளஸ் 2 செய்முறை தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(பிப்.12) தொடங்குகிறது.

மார்த்தாண்டத்தில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 06 Feb 2016 12:18 PM PST

அதிமுக இளைஞர் பாசறை சார்பில் எழுச்சி தின பொதுக்கூட்டம், மார்த்தாண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) நடைபெறுகிறது.

சவூதியில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 06 Feb 2016 12:18 PM PST

சவூதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய காவலரை கண்டித்து வேலை நிறுத்தம்

Posted: 06 Feb 2016 12:18 PM PST

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய போக்குவரத்து காவலரை கண்டித்து சனிக்கிழமை அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் புதிய குடும்ப அட்டை, சிறு வணிக கடன் வழங்கும் விழா

Posted: 06 Feb 2016 12:18 PM PST

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய குடும்ப அட்டை மற்றும் சிறு வணிக கடன் வழங்கும் விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

மினி மாரத்தான்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Posted: 06 Feb 2016 12:18 PM PST

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் போலி வாக்காளர்கள்: திமுக புகார்

Posted: 06 Feb 2016 12:17 PM PST

விளாத்திகுளம் பேரூராட்சியில் இரட்டை பதிவு, இறந்தவர்கள் பெயர், குடியிருப்பு இல்லாத நபர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரி திமுகவினர் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 06 Feb 2016 12:17 PM PST

தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை வார விழாவையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சிங்கி இறால் கொழுப்பேற்றுதல் பயிற்சி முகா

Posted: 06 Feb 2016 12:17 PM PST

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் தருவைகுளம் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு துறையில் சிங்கி இறால் கொழுப்பேற்றுதல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

Posted: 06 Feb 2016 12:17 PM PST

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

200 மாணவிகள் ரத்த தானம்

Posted: 06 Feb 2016 12:17 PM PST

தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 200 மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனி பிரதோஷம்

Posted: 06 Feb 2016 12:17 PM PST

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற சனி பிரதோஷத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு..!

Posted: 06 Feb 2016 11:21 AM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™