Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பட்ஜெட்டில் பங்குச் சந்தை அதிருப்தி: சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு
- ஏழைகள், விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட்
- உள்கட்டமைப்புக்கு ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு
- "தொலைநோக்குப் பார்வையில்லாத பட்ஜெட்'
- புதிய தொழில் பிரிவுகளுக்கு நிறுவன வரி 25% ஆகக் குறைப்பு
- எளிதாகத் தொழில் தொடங்க கம்பெனி சட்டத்தில் திருத்தம்
- வரி விதிப்புக்கு உள்ளாகிறது "பிஎஃப்' பணம்
- மானியங்களை ரூ.2.31 லட்சம் கோடியாக குறைக்கத் திட்டம்
- புத்திசாலித்தனத்திற்குப் பாராட்டுகள்!
- சாம்பல்கூட நெருப்புக் கங்குகளாக மாறும்...
- கிள்ளி எறியும் மனத்திண்மை
- வெறுப்பூட்டும் பேச்சு:சுப்பிரமணியன் சுவாமியின் மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
- ஜாட் கலவரம்: கூட்டத்தினர் மீது சுட ராணுவத்துக்கு உத்தரவிட முடியாது
- சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைகளுக்கு புதிய தலைவர்கள் பதவியேற்பு
- தில்லி காவல் துறை புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா பொறுப்பேற்பு
- கன்னையா குமார் ஜாமீன் மனு: நாளை தீர்ப்பு
- இஷ்ரத் ஜஹான் விவகாரம்: மறு ஆய்வு செய்ய அரசு முடிவு
- அம்ருத், பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.7,290 கோடி
- உப்பூர் அனல் மின் திட்டம் தொடக்கம்; 13 துணை மின்நிலையங்களும் திறப்பு
- பொது பட்ஜெட்: தமிழக எம்.பி.க்கள் கருத்து
- நீதிபதி கர்ணன் மீது விசாரணைக்கு உத்தரவு:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நடவடிக்கை
- பட்ஜெட்டுக்கு வரவேற்பும், விமர்சனமும்...:தேர்ச்சி பெற்றதாக கருணாநிதி கருத்து
- கருப்புப் பணம்: தாமாக முன்வந்து தகவல் அளிக்க 4 மாத கால அவகாசம் :மத்திய அரசு அறிவிப்பு
- எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து
- இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் சூசகம்
- 88 ஆவது ஆஸ்கர் விருது:சிறந்த படம் "ஸ்பாட்லைட்' சிறந்த நடிகர் −யோனார்டோ!
- குற்றச் செய்திகள்
- பிரதமரை விட எனக்கு தேசப்பற்று அதிகம்
- கன்னியாகுமரி
- அரசுக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு :மத்திய முன்னாள் அமைச்சர் துங்கனுக்கு மூன்றரை ஆண்டு சிறை
- தமிழர் பிரச்னைக்கு கூட்டாட்சி முறையில் தீர்வு:இந்தியா உதவ சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
- லாரி மீது கார் மோதல்: இருவர் சாவு
- கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
- 44,282 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்
- வெவ்வேறு இடங்களில் விபத்து: மூவர் சாவு
- தன்னம்பிக்கையும், கடின உழைப்புமே கட்சியை வளர்க்கும்: சரத்குமார்
- என்.ஐ.பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கருத்தரங்கு
- பேச்சிப்பாறை அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதி 6 பேர் காயம்
- ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்:மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
- கருங்கல்லில் இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
- உண்ணியூர்கோணம் அரசுப் பள்ளி ஆண்டு விழா
- தென்பாற்கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
- 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- பதான்கோட் தாக்குதல்:கூட்டுக் குழுவின் விசாரணை விரைவில் முடிவடையும்
- தக்கலையில் நல உதவிகள் வழங்கல்
- வெங்கலராஜன் கோட்டை சானலில் தண்ணீர் திறப்பு
- முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தின விழா
- அதிமுகவினர் ரத்த தானம்
- தெலுங்கு தேசம் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டம்
- திருவட்டாறு நரசிம்மர் கோயிலில் சிறப்பு யாகம்
- தலைமைப் பண்பு பயிற்சி முகாம்
- மங்கலம் பத்திரகாளி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு
- இரணியல் நீதிமன்றத்தில் நாளை பிஎஸ்என்எல் லோக் அதாலத்
- ஆசிய கோப்பை கிரிக்கெட் :இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை
- பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
- தேசிய கராத்தே போட்டி:கர்நாடக அணி சாம்பியன்
- கிரிக்பஸ் நிபுணர் குழுவில் சேவாக்
- இந்திய ஓபன் ஸ்நூக்கர்: ராகுல் சச்தேவ் சாம்பியன்
- சந்தோஷ் டிராபி கால்பந்து: வெற்றியோடு தொடங்கியது மகாராஷ்டிரம்:மிஸோரம்-ரயில்வே ஆட்டம் டிரா
- தயான் சந்த் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு
- உலக டேபிள் டென்னிஸ்: 3-ஆவது சுற்றில் இந்தியா
- மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
- பாகிஸ்தான்:பஞ்சாப் மாகாண ஆளுநரைப் படுகொலை செய்தவர் தூக்கிலிடப்பட்டார்
- ஃபுகுஷிமா அணு உலை விபத்து:3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
- பொதுத் துறை நிறுவனங்களின் பயன்பாடற்ற சொத்து விற்பனை
- பட்ஜெட்டில் கல்வி, பழங்குடியினர் நலவாழ்வுக்கு நிதி குறைப்பு:நவீன் பட்நாயக் கடும் அதிருப்தி
- பங்குச் சந்தையில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள்
- பட்ஜெட்: மத்திய அமைச்சர்களின் பயணச் செலவின ஒதுக்கீடு குறைப்பு
- "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.11,300 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம்:மூலதன ஆதாய வரி விலக்கு
- வரி செலுத்துவோரின் குறைகளுக்குத் தீர்வு காண தனிப் பிரிவு தொடக்கம்
- கார்களின் விலை அதிகரிக்கும்
- ஈரான்: மத குருக்களின் அவைத் தேர்தலில் மிதவாதிகள் அமோக வெற்றி
- "பின்லேடனிடம் நிதி பெற்றார் நவாஸ் ஷெரீஃப்'
- இராக் இரட்டை குண்டு வெடிப்பு:பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு
- வாகன விற்பனையாளர்களிடமே பதிவு எண் பெறலாம்: ஆந்திராவில் இன்று புதிய வசதி அறிமுகம்
- திருமலையில் நடிகர் ஸ்ரீகாந்த் வழிபாடு
- கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம்
- பாஜக எம்எல்ஏவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மதுக்கடை ஊழியர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.50,000 பறிப்பு
- ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதில் விஐடி இரண்டாமிடம்: வேந்தர் ஜி.விசுவநாதன்
- சோளிங்கர் அருகே ஜெயலலிதாவுக்கு கோயில்!
- வேலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் சிக்னல்கள் அமைப்பு
- ஆம்பூரில் சார்நிலை கருவூலம் திறப்பு
- சாலைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 8-இல் தொடக்கம்
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு
- மட்றப்பள்ளி வாரச் சந்தை ரூ. 6.76 லட்சத்துக்கு ஏலம்
- மரத்தில் வேன் மோதியதில் ஓட்டுநர் சாவு
- தில்லி காவல் துறை புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா பொறுப்பேற்பு
- காவல் துறை தலைமையகத்துக்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
- தில்லி மெட்ரோ பணிக்கு ரூ.5,579 கோடி ஒதுக்கீடு
- பட்ஜெட்: தில்லிக்கு ரூ. 758 கோடி; மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை
- லஞ்ச வழக்கில் அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
- பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: சிஏஐடி
- திகார் சிறையில் கைதி தற்கொலை
- மத்திய பட்ஜெட்: தில்லி பாஜக வரவேற்பு
- புதுதில்லி
- வெள்ள நிவாரணம் கோரி குவிந்த மக்கள்
| பட்ஜெட்டில் பங்குச் சந்தை அதிருப்தி: சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு Posted: 29 Feb 2016 01:41 PM PST மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் 152 புள்ளிகள் குறைந்தது. |
| ஏழைகள், விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் Posted: 29 Feb 2016 01:40 PM PST ஏழைகள், விவசாயிகள் மற்றும் கிராமங்களின் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். |
| உள்கட்டமைப்புக்கு ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு Posted: 29 Feb 2016 12:31 PM PST எதிர்வரும் நிதியாண்டில் (2016-17) உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.2.21 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. |
| "தொலைநோக்குப் பார்வையில்லாத பட்ஜெட்' Posted: 29 Feb 2016 12:31 PM PST மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையில்லை என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. |
| புதிய தொழில் பிரிவுகளுக்கு நிறுவன வரி 25% ஆகக் குறைப்பு Posted: 29 Feb 2016 12:31 PM PST புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நிறுவன வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| எளிதாகத் தொழில் தொடங்க கம்பெனி சட்டத்தில் திருத்தம் Posted: 29 Feb 2016 12:30 PM PST இந்தியாவில் எளிதான முறையில் தொழில் தொடங்க கம்பெனி சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதா நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் தெரிவித்தார். |
| வரி விதிப்புக்கு உள்ளாகிறது "பிஎஃப்' பணம் Posted: 29 Feb 2016 12:30 PM PST இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறும் போது 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| மானியங்களை ரூ.2.31 லட்சம் கோடியாக குறைக்கத் திட்டம் Posted: 29 Feb 2016 12:30 PM PST அடுத்த நிதியாண்டில் (2016-17) உணவு, உரம் மற்றும் பெட்ரோலியத்துக்கான மானியங்கள், நடப்பு நிதியாண்டை ஒப்பிடும்போது 4 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.2.31 லட்சம் கோடியாகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| புத்திசாலித்தனத்திற்குப் பாராட்டுகள்! Posted: 29 Feb 2016 11:26 AM PST நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இது. இதுவரையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், பல முன்மாதிரித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருந்தன. தொழில்துறையை முடுக்கிவிட்டுப் பொருளாதாரத்திற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தப் பல முயற்சிகள் இருந்தன. |
| சாம்பல்கூட நெருப்புக் கங்குகளாக மாறும்... Posted: 29 Feb 2016 11:25 AM PST அடிப்படையில் இறை நம்பிக்கை இல்லாதவர், பண்டித ஜவாஹர்லால் நேரு. ஆனால், இந்திய நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக அவர் கட்டிய அறிவாலயம், நேரு பல்கலைக்கழகம். அறிவுத்தாகம் கொண்ட ஆன்மாக்களின் சரணாலயமாக இருந்த அந்த வளாகத்தில், இப்போது சில அபஸ்வரங்களும் குடியேற ஆரம்பித்துவிட்டன. |
| Posted: 29 Feb 2016 11:23 AM PST நாட்டை ஆள்பவர்களால் தங்களது மதம் அல்லது ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுவதாக அல்லது ஒடுக்கப்படுவதாக நினைப்பது சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அக்குறைகள் மனங்களில் விதைக்கப்படுவதும் உண்டு. |
| Posted: 29 Feb 2016 11:19 AM PST வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு, எழுத்து ஆகியவை தொடர்பான சட்டப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். |
| ஜாட் கலவரம்: கூட்டத்தினர் மீது சுட ராணுவத்துக்கு உத்தரவிட முடியாது Posted: 29 Feb 2016 11:18 AM PST ஹரியாணா மாநிலத்தில், இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் மேற்கொண்டு வரும் போராட்டத்தில், கூட்டத்தைப் பார்த்து சுடுவதற்கு ராணுவத்தினருக்கு சுதந்திரம் அளிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைகளுக்கு புதிய தலைவர்கள் பதவியேற்பு Posted: 29 Feb 2016 11:18 AM PST மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகிய துணை ராணுவப் படைகளுக்கு முறையே, கே.துர்கா பிரசாத்தும், கே.கே.சர்மாவும் புதிய தலைவர்களாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். |
| தில்லி காவல் துறை புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா பொறுப்பேற்பு Posted: 29 Feb 2016 11:17 AM PST தில்லி நகர காவல் துறையின் புதிய ஆணையராக டிஜிபி அந்தஸ்தில் உள்ள இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரி அலோக் குமார் வர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| கன்னையா குமார் ஜாமீன் மனு: நாளை தீர்ப்பு Posted: 29 Feb 2016 11:16 AM PST தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமைக்கு (மார்ச் 2) ஒத்தி வைத்துள்ளது. |
| இஷ்ரத் ஜஹான் விவகாரம்: மறு ஆய்வு செய்ய அரசு முடிவு Posted: 29 Feb 2016 11:16 AM PST இஷ்ரத் ஜஹான் விவகாரத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த வழக்கு தொடர்பான கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்யவுள்ளது. |
| அம்ருத், பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.7,290 கோடி Posted: 29 Feb 2016 11:16 AM PST நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ருத், பொலிவுறு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.7,290 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. |
| உப்பூர் அனல் மின் திட்டம் தொடக்கம்; 13 துணை மின்நிலையங்களும் திறப்பு Posted: 29 Feb 2016 11:14 AM PST தமிழகத்தில் ரூ.424 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். மேலும், ரூ.5,580 கோடியில் உப்பூர் அனல் மின் திட்டத்தையும் அவர் தொடக்கிவைத்தார். |
| பொது பட்ஜெட்: தமிழக எம்.பி.க்கள் கருத்து Posted: 29 Feb 2016 11:14 AM PST நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களவையில் அதிமுக குழுத் தலைவர் டாக்டர் வேணுகோபால், மாநிலங்களவையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சீய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு: |
| நீதிபதி கர்ணன் மீது விசாரணைக்கு உத்தரவு:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நடவடிக்கை Posted: 29 Feb 2016 11:12 AM PST சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது, நீதிபதி கர்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதன் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌலுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் உத்தரவிட்டுள்ளார். |
| பட்ஜெட்டுக்கு வரவேற்பும், விமர்சனமும்...:தேர்ச்சி பெற்றதாக கருணாநிதி கருத்து Posted: 29 Feb 2016 11:12 AM PST பட்ஜெட் தொடர்பான தேர்வில் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு பெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பிற கட்சித் தலைவர்கள் வரவேற்றும், விமர்ச்சித்தும் உள்ளனர். |
| கருப்புப் பணம்: தாமாக முன்வந்து தகவல் அளிக்க 4 மாத கால அவகாசம் :மத்திய அரசு அறிவிப்பு Posted: 29 Feb 2016 11:08 AM PST உள்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து தாமாக முன்வந்து தகவல் தெரிவித்து அதற்கான வரியும், அபராதமும் செலுத்துவதன் மூலம் குற்ற நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள 4 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
| எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து Posted: 29 Feb 2016 11:08 AM PST தமிழக மக்களின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். |
| இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் சூசகம் Posted: 29 Feb 2016 11:07 AM PST இந்த வார இறுதியில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். |
| 88 ஆவது ஆஸ்கர் விருது:சிறந்த படம் "ஸ்பாட்லைட்' சிறந்த நடிகர் −யோனார்டோ! Posted: 29 Feb 2016 11:02 AM PST இந்த ஆண்டின் சிறந்த ஹாலிவுட் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை "ஸ்பாட்லைட்' பெற்றது. |
| Posted: 29 Feb 2016 11:01 AM PST மார்த்தாண்டம் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 59 புதுப்பட சி.டி.க்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பிரதமரை விட எனக்கு தேசப்பற்று அதிகம் Posted: 29 Feb 2016 10:59 AM PST பிரதமர் மோடியை விட எனக்கு தேசப்பற்று அதிகம் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கூறியுள்ளார். |
| Posted: 29 Feb 2016 10:59 AM PST |
| அரசுக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு :மத்திய முன்னாள் அமைச்சர் துங்கனுக்கு மூன்றரை ஆண்டு சிறை Posted: 29 Feb 2016 10:58 AM PST தில்லியில் கடந்த 1993-94-ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான கடைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் பி.கே.துங்கனுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. |
| தமிழர் பிரச்னைக்கு கூட்டாட்சி முறையில் தீர்வு:இந்தியா உதவ சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் Posted: 29 Feb 2016 10:58 AM PST இலங்கை இனப் பிரச்னைக்கு கூட்டாட்சி முறையில் தீர்வு காண இந்தியா தலையிட்டு உதவ வேண்டும் என்று அந்நாட்டின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். |
| லாரி மீது கார் மோதல்: இருவர் சாவு Posted: 29 Feb 2016 10:58 AM PST திருவள்ளூர் அருகே லாரி மீது, கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை Posted: 29 Feb 2016 10:57 AM PST மதுராந்தகம் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை கொலை செய்தவருக்கு திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| 44,282 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர் Posted: 29 Feb 2016 10:57 AM PST தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 23,784 மாணவிகள், 20,498 மாணவர்கள் உள்பட 44,282 மாணவர்கள் இத் தேர்வை எழுதுகின்றனர் |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: மூவர் சாவு Posted: 29 Feb 2016 10:57 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். |
| தன்னம்பிக்கையும், கடின உழைப்புமே கட்சியை வளர்க்கும்: சரத்குமார் Posted: 29 Feb 2016 10:57 AM PST கொள்கை பிடிப்பு, தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவை இருந்தால் கட்சியை முதலிடத்துக்கு கொண்டு வரமுடியும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். |
| என்.ஐ.பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 29 Feb 2016 10:57 AM PST குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொறியியல் மற்றும் அறிவியல் மேலாண்மை சார்ந்த புதிய தொழில்நுட்பக் கருத்தரங்கு இரண்டு நாள்கள் நடைபெற்றது. |
| பேச்சிப்பாறை அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதி 6 பேர் காயம் Posted: 29 Feb 2016 10:57 AM PST கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். |
| ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்:மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி Posted: 29 Feb 2016 10:57 AM PST மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. |
| கருங்கல்லில் இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் Posted: 29 Feb 2016 10:57 AM PST கருங்கல்லில் கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| உண்ணியூர்கோணம் அரசுப் பள்ளி ஆண்டு விழா Posted: 29 Feb 2016 10:57 AM PST உண்ணியூர்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா, கிராமக் கல்விக் குழு விழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. |
| தென்பாற்கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா Posted: 29 Feb 2016 10:57 AM PST அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, சாமிதோப்பில் இருந்து வாகனப் பேரணி (மார்ச் 3) ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரை அய்யா வைகுண்டர் தவவனத்துக்குச் செல்கிறது. |
| 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு Posted: 29 Feb 2016 10:57 AM PST மார்த்தாண்டம் அருகே மேல்புறத்தில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பதான்கோட் தாக்குதல்:கூட்டுக் குழுவின் விசாரணை விரைவில் முடிவடையும் Posted: 29 Feb 2016 10:57 AM PST பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானில் அந்நாட்டு கூட்டு விசாரணைக் குழு (ஜே.ஐ.டி.) நடத்தி வரும் விசாரணை, இந்த வாரத்தில் முடிவடையும் என்று அந்நாட்டுப் பிரதமரின் வெளி விவகாரங்கள் துறை அதிகாரி சையது தாரிக் ஃபதேமி கூறினார். |
| Posted: 29 Feb 2016 10:57 AM PST தமிழக முதல்வரின் 68ஆவது பிறந்தநாளையொட்டி, பத்மநாபபுரம் நகர அதிமுக சார்பில் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. |
| வெங்கலராஜன் கோட்டை சானலில் தண்ணீர் திறப்பு Posted: 29 Feb 2016 10:57 AM PST தென்தாமரைகுளத்தை அடுத்த வெங்கலராஜன் கோட்டை சானலில் திங்கள்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. |
| முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தின விழா Posted: 29 Feb 2016 10:56 AM PST கிள்ளியூர் வட்டார மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தின விழா மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Feb 2016 10:56 AM PST முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிமுகவினர் 68 பேர் ரத்த தானம் செய்தனர். |
| தெலுங்கு தேசம் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டம் Posted: 29 Feb 2016 10:56 AM PST ஆந்திர சட்டப்பேரவையில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆளும் தெலுங்கு தேசம் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. |
| திருவட்டாறு நரசிம்மர் கோயிலில் சிறப்பு யாகம் Posted: 29 Feb 2016 10:56 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில், திருவட்டாறு நரசிம்மர் திருக்கோயிலில் மகா நரசிம்ம யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Feb 2016 10:56 AM PST மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| மங்கலம் பத்திரகாளி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு Posted: 29 Feb 2016 10:56 AM PST குலசேகரம் அருகே மங்கலம் பத்திரகாளி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. |
| இரணியல் நீதிமன்றத்தில் நாளை பிஎஸ்என்எல் லோக் அதாலத் Posted: 29 Feb 2016 10:56 AM PST இரணியல் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் சார்பில், மக்கள் நீதிமன்ற முகாம் புதன்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது. |
| ஆசிய கோப்பை கிரிக்கெட் :இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை Posted: 29 Feb 2016 10:55 AM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. |
| Posted: 29 Feb 2016 10:54 AM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியைத் தோற்கடித்தது பாகிஸ்தான். இதன்மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான், இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. |
| தேசிய கராத்தே போட்டி:கர்நாடக அணி சாம்பியன் Posted: 29 Feb 2016 10:53 AM PST தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. |
| கிரிக்பஸ் நிபுணர் குழுவில் சேவாக் Posted: 29 Feb 2016 10:53 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கிரிக்பஸ் இணையதளத்தின் நிபுணர் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார். |
| இந்திய ஓபன் ஸ்நூக்கர்: ராகுல் சச்தேவ் சாம்பியன் Posted: 29 Feb 2016 10:52 AM PST இந்திய ஓபன் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் ராகுல் சச்தேவ் சாம்பியன் பட்டம் வென்றார். |
| சந்தோஷ் டிராபி கால்பந்து: வெற்றியோடு தொடங்கியது மகாராஷ்டிரம்:மிஸோரம்-ரயில்வே ஆட்டம் டிரா Posted: 29 Feb 2016 10:51 AM PST சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் காலிறுதி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீர் அணியைத் தோற்கடித்து. |
| தயான் சந்த் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 29 Feb 2016 10:50 AM PST விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் தயான் சந்த் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| உலக டேபிள் டென்னிஸ்: 3-ஆவது சுற்றில் இந்தியா Posted: 29 Feb 2016 10:50 AM PST உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன. |
| Posted: 29 Feb 2016 10:49 AM PST தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது. |
| பாகிஸ்தான்:பஞ்சாப் மாகாண ஆளுநரைப் படுகொலை செய்தவர் தூக்கிலிடப்பட்டார் Posted: 29 Feb 2016 10:48 AM PST பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதற்காக, அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை சுட்டுக் கொன்ற காவலர் மும்தாஜ் காத்ரி திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டார். |
| ஃபுகுஷிமா அணு உலை விபத்து:3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு Posted: 29 Feb 2016 10:48 AM PST ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலை விபத்து தொடர்பாக, அந்த அணுமின் நிலையத்தைப் பராமரித்து வந்த நிறுவனத்தின் 3 உயரதிகாரிகள் மீது திங்கள்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. |
| பொதுத் துறை நிறுவனங்களின் பயன்பாடற்ற சொத்து விற்பனை Posted: 29 Feb 2016 10:47 AM PST பொதுத் துறை நிறுவனங்களில் பயன்பாடற்றுக் கிடக்கும் சொத்துகள் விற்பனை செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும், பங்கு விலக்கல் துறையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது |
| பட்ஜெட்டில் கல்வி, பழங்குடியினர் நலவாழ்வுக்கு நிதி குறைப்பு:நவீன் பட்நாயக் கடும் அதிருப்தி Posted: 29 Feb 2016 10:47 AM PST நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வி, பழங்குடியினரின் நலவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். |
| பங்குச் சந்தையில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் Posted: 29 Feb 2016 10:46 AM PST அரசுக்கு சொந்தமான பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பட்ஜெட்: மத்திய அமைச்சர்களின் பயணச் செலவின ஒதுக்கீடு குறைப்பு Posted: 29 Feb 2016 10:46 AM PST நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், மத்திய அமைச்சர்களின் பயணச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. |
| "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.11,300 ஆயிரம் கோடி ஒதுக்கீடு Posted: 29 Feb 2016 10:46 AM PST மத்திய அரசின் "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.11 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டம்:மூலதன ஆதாய வரி விலக்கு Posted: 29 Feb 2016 10:46 AM PST தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| வரி செலுத்துவோரின் குறைகளுக்குத் தீர்வு காண தனிப் பிரிவு தொடக்கம் Posted: 29 Feb 2016 10:45 AM PST வருமான வரி செலுத்துவோரின் புகார்கள், குறைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் அந்தத் துறையில் தனிப் பிரிவு ஒன்றை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிடிபிடி) உருவாக்கியுள்ளது. |
| Posted: 29 Feb 2016 10:45 AM PST பட்ஜெட்டில் கார்களுக்கு கூடுதலாக 1 முதல் 4 சதவீதம் வரை உள்கட்டமைப்பு கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களின் விலை அதிகரிக்கும். முக்கியமாக டீசல் வாகனங்களின் விலை அதிகம் உயர வாய்ப்புள்ளது. |
| ஈரான்: மத குருக்களின் அவைத் தேர்தலில் மிதவாதிகள் அமோக வெற்றி Posted: 29 Feb 2016 10:45 AM PST ஈரானில் சக்தி வாய்ந்த மத குருக்களின் அவைக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி பெற்றனர். |
| "பின்லேடனிடம் நிதி பெற்றார் நவாஸ் ஷெரீஃப்' Posted: 29 Feb 2016 10:45 AM PST பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அல்-காய்தா தலைவர் பின்லேடனிடம் நிதியுதவி பெற்றதாக அண்மையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| இராக் இரட்டை குண்டு வெடிப்பு:பலி எண்ணிக்கை 73-ஆக உயர்வு Posted: 29 Feb 2016 10:44 AM PST இராக் தலைநகர் பாக்தாதில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய இரட்டைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்தது. |
| வாகன விற்பனையாளர்களிடமே பதிவு எண் பெறலாம்: ஆந்திராவில் இன்று புதிய வசதி அறிமுகம் Posted: 29 Feb 2016 10:33 AM PST வாகன விற்பனையாளர்களிடமே வாகனப் பதிவு எண் பெறும் வசதி மார்ச் 1-இல் விசாகப்பட்டினத்தில் அறிமுகமாகிறது. |
| திருமலையில் நடிகர் ஸ்ரீகாந்த் வழிபாடு Posted: 29 Feb 2016 10:33 AM PST திருமலை ஏழுமலையானை நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வழிபட்டார். |
| கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயம் Posted: 29 Feb 2016 10:33 AM PST புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கேட்டரிங் மாணவர், ஆரோவில் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். |
| பாஜக எம்எல்ஏவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 29 Feb 2016 10:33 AM PST காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறாகப் பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கைலாஷ் சௌத்திரியைக் கண்டித்து, வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மதுக்கடை ஊழியர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.50,000 பறிப்பு Posted: 29 Feb 2016 10:33 AM PST ஆற்காட்டை அடுத்த விளாபாக்கத்தில் அரசு மதுக்கடை மேற்பார்வையாளரின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டு ரூ. 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறித்துச் சென்றனர். |
| ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதில் விஐடி இரண்டாமிடம்: வேந்தர் ஜி.விசுவநாதன் Posted: 29 Feb 2016 10:33 AM PST ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுவதில் விஐடி பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தில் உள்ளது என அதன் வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். |
| சோளிங்கர் அருகே ஜெயலலிதாவுக்கு கோயில்! Posted: 29 Feb 2016 10:33 AM PST சோளிங்கர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வேலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் சிக்னல்கள் அமைப்பு Posted: 29 Feb 2016 10:33 AM PST வேலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் கூடுதலாக மூன்று சிக்னல்கள் திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டன. |
| ஆம்பூரில் சார்நிலை கருவூலம் திறப்பு Posted: 29 Feb 2016 10:33 AM PST ஆம்பூரில் சார்நிலைக் கருவூலம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. |
| சாலைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 29 Feb 2016 10:33 AM PST ஆற்காடு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளர்கள் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 8-இல் தொடக்கம் Posted: 29 Feb 2016 10:33 AM PST வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கானத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்குகிறது. |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Feb 2016 10:32 AM PST கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு Posted: 29 Feb 2016 10:32 AM PST வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.ஞானசேகரன், அவரது மனைவி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. |
| மட்றப்பள்ளி வாரச் சந்தை ரூ. 6.76 லட்சத்துக்கு ஏலம் Posted: 29 Feb 2016 10:32 AM PST மட்றப்பள்ளி வாரச்சந்தையின் 2016-17ஆம் ஆண்டுக்கான ஏலம் திங்கள்கிழமை கந்திலியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹாமீத் நவாஸ் தலைமையில் நடைபெற்றது. |
| மரத்தில் வேன் மோதியதில் ஓட்டுநர் சாவு Posted: 29 Feb 2016 10:32 AM PST பேர்ணாம்பட்டு அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். |
| தில்லி காவல் துறை புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா பொறுப்பேற்பு Posted: 29 Feb 2016 10:32 AM PST தில்லி நகர காவல் துறையின் புதிய ஆணையராக டிஜிபி அந்தஸ்தில் உள்ள இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரி அலோக் குமார் வர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| காவல் துறை தலைமையகத்துக்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு Posted: 29 Feb 2016 10:32 AM PST தில்லி காவல் துறையின் புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா திங்கள்கிழமை பொறுப்பேற்ற அதே நேரத்தில் காவல் துறை தலைமையகத்துக்கு இரண்டு மாத கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு காவலர்கள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் காட்சியை அலோக் குமார் வர்மா பொறுப்பேற்கும் நிகழ்வைக் காண வந்த ஊடகக் குழுவினர் பதிவு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர். |
| தில்லி மெட்ரோ பணிக்கு ரூ.5,579 கோடி ஒதுக்கீடு Posted: 29 Feb 2016 10:32 AM PST மத்திய நிதிநிலை அறிக்கையில் தில்லி மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.5,579 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| பட்ஜெட்: தில்லிக்கு ரூ. 758 கோடி; மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை Posted: 29 Feb 2016 10:32 AM PST 2016-17ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தில்லி அரசுக்கு ரூ.758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மூன்று மாநகராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் தில்லிவாசிகளின் நலன்கள் புறக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு குற்றம்சாட்டியுள்ளது. |
| லஞ்ச வழக்கில் அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை Posted: 29 Feb 2016 10:32 AM PST நியாய விலைக் கடை விநியோகஸ்தரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் தில்லி அரசின் உணவு மற்றும் வழங்கல் துறை உதவி இயக்குநருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: சிஏஐடி Posted: 29 Feb 2016 10:32 AM PST 2016-17-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கவும் வழிஏற்படுத்தும் என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) கருத்துத் தெரிவித்துள்ளது. |
| Posted: 29 Feb 2016 10:32 AM PST கர்ப்பிணி மனைவி, மகனைக் கொன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| மத்திய பட்ஜெட்: தில்லி பாஜக வரவேற்பு Posted: 29 Feb 2016 10:32 AM PST மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பாஜக வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் "அந்தியோதயா' திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியது. ஏழைகளை உயர்வடையச் செய்யும் நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. |
| Posted: 29 Feb 2016 10:32 AM PST |
| வெள்ள நிவாரணம் கோரி குவிந்த மக்கள் Posted: 29 Feb 2016 10:32 AM PST திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நிவாரணம் கோரி, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |