Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தில்லியில் குடிநீர்க் கட்டண நிலுவை தள்ளுபடி: ஓராண்டு விழாவில் கேஜரிவால் அறிவிப்பு

Posted: 14 Feb 2016 01:25 PM PST

தில்லியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று

அதிமுகவில் புதுவை கண்ணன்

Posted: 14 Feb 2016 01:24 PM PST

புதுச்சேரி சட்டப் பேரவை முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.கண்ணன் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.

தேமுதிக தலைமையில் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Posted: 14 Feb 2016 01:23 PM PST

தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதையும் அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா என்பது குறித்தும் கட்சித் தலைவர் விஜயகாந்த் 5 நாளில்

ஜேஎன்யு மாணவர் போராட்டப் பின்னணியில் ஹஃபீஸ் சயீது: ராஜ்நாத் சிங் பகிரங்க குற்றச்சாட்டு

Posted: 14 Feb 2016 01:22 PM PST

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்திய தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்களின்

இலக்கியச் சங்கமம்

Posted: 14 Feb 2016 01:11 PM PST

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் தாய்த் தமிழ் திருவிழா. பங்கேற்பு: வெற்றியழகன், கா.ச.கஜேந்திரன்

வரப்பெற்றோம்

Posted: 14 Feb 2016 01:10 PM PST

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் - பதிப்பாசிரியர்: டி.சுப்புலட்சுமி; பக்.480; ரூ.275; ஜீவா பதிப்பகம், சென்னை

நூல் அரங்கம்

Posted: 14 Feb 2016 01:09 PM PST

கன்னடச் சிறுகதைகள், சீனச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் என்று தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர்

நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 30 பேர் பலி

Posted: 14 Feb 2016 01:06 PM PST

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில் இரு கிராமங்களைச் சேர்ந்த 30 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் சவூதி தலையிட அனுமதிக்க மாட்டோம்

Posted: 14 Feb 2016 01:05 PM PST

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என

தாற்காலிகப் போர் நிறுத்தம் ரஷியாவுக்குச் சாதகம்

Posted: 14 Feb 2016 01:05 PM PST

சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தாற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ரஷியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக

ஆப்கன் சண்டை: 2015-இல் உச்சத்தை தொட்டது பொதுமக்கள் உயிரிழப்பு

Posted: 14 Feb 2016 01:04 PM PST

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான சண்டையில் சிக்கி உயிரிழந்த

பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில்10 பயங்கரவாதிகள் சாவு

Posted: 14 Feb 2016 01:03 PM PST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பிரிவினைவாத

கிரீஸ்: 3 குர்து ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் கைது

Posted: 14 Feb 2016 01:03 PM PST

துருக்கியையொட்டிய கிரீஸ் எல்லையில் ஏராளமான ஆயுதங்களுடன் 3 பிரிட்டன் நாட்டவரை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் சுட்ட 2 பாலஸ்தீன சிறார்கள் சுட்டுக் கொலை

Posted: 14 Feb 2016 01:02 PM PST

இஸ்ரேலிய வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு பாலஸ்தீன சிறார்கள், பாதுபாப்புப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியா காதலர் தினத்துக்குத் தடை

Posted: 14 Feb 2016 12:31 PM PST

இந்தோனேசியாவில் இளைஞர்கள் காதலர் தினம் கொண்டாடுவதற்கு அதிகாரிகளும், முஸ்லிம் மதத் தலைவர்களும் தடை விதித்துள்ளனர்.

சிரியாவில் பீரங்கித் தாக்குதலை நிறுத்த துருக்கியிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

Posted: 14 Feb 2016 12:30 PM PST

சிரியாவில் குர்துப் படையினருக்கு எதிராக துருக்கி நிகழ்த்தி வரும் பீரங்கித் தாக்குதலை நிறுத்துமாறு அந்த நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

யு-19 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்

Posted: 14 Feb 2016 12:28 PM PST

19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் ஆனது.

திருச்சி ரயில்வே கோட்டம் புதிய ஏற்பாடு புகார்களையும், ஆலோசனைகளையும் டிவிட்டர், தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்

Posted: 14 Feb 2016 12:27 PM PST

ரயில் பயணிகளின் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கவும், ஆலோசனை வழங்கவும் டிவிட்டர் மற்றும் தொலைபேசி வசதிகளை திருச்சி கோட்டம் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இரு புதிய பாலங்கள் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 14 Feb 2016 12:27 PM PST

திருச்சியில் ரூ.75.47 கோடியில் கட்டப்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்பாலமும், காவிரியாற்றின் தென்கரையில் ரூ. 52.70கோடியில் அமைக்கப்பட்ட ஓடத்துறை ரயில்வே பாலமும் ஞாயிற்றுக்கிழமை காலை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

ஜூரிச் செஸ்: ஆனந்த் தனி முன்னிலை

Posted: 14 Feb 2016 12:26 PM PST

ஜூரிச் சேலஞ்சர் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.

மாதனூரில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா

Posted: 14 Feb 2016 12:26 PM PST

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பாக மாதனூரில் நடைபெற்ற ஆன்மிக ஜோதி ஏற்றும் விழாவில் பங்காரு அடிகளாரின் மகன் கோ.ப.செந்தில் குமார் பங்கேற்றார்.

ரதசப்தமி தங்க ரிஷப வாகனத்தில் மயூரநாதர் வீதியுலா

Posted: 14 Feb 2016 12:25 PM PST

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ரதசப்தமியை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் மயூரநாதர் வீதியுலா நடைபெற்றது.

சந்தோஷ் டிராபி: புதுச்சேரியை வீழ்த்தியது ஆந்திரம்

Posted: 14 Feb 2016 12:25 PM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஆந்திரம் 4-1 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியைத் தோற்கடித்தது.

காதலர் தினத்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு

Posted: 14 Feb 2016 12:25 PM PST

காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலூர் கோட்டை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

போராட்டத்தில் தொமுச பங்கேற்காது

Posted: 14 Feb 2016 12:25 PM PST

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளர்களின் சங்கங்கள் சார்பில் ஓய்வூதியம் கேட்டு திங்கள்கிழமை (பிப். 15) நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச பங்கேற்காது என தொமுச மாநில செய்தித் தொடர்பாளர் பிரம்மபுரம் பஞ்சாட்ரம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் 3-ஆவது தங்கம் வென்றார் செயின் சிங்

Posted: 14 Feb 2016 12:24 PM PST

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரங்களில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

ஆம்பூர் அருகே ரூ. 15 கோடியில் ரயில்வே மேம்பாலம்

Posted: 14 Feb 2016 12:24 PM PST

ஆம்பூர் அருகே கன்னடிகுப்பத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

"வேலூரில் நவீன வாக்குப்பதிவு இயந்திரங்கள்'

Posted: 14 Feb 2016 12:24 PM PST

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 14 Feb 2016 12:24 PM PST

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூலி உயர்வு கோரி நெசவாளர்கள் மனு

Posted: 14 Feb 2016 12:23 PM PST

குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 14 Feb 2016 12:23 PM PST

ஆம்பூர் வட்ட ஓய்வுபெற்றோர் சங்கத்தின் 2016-2018-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி

Posted: 14 Feb 2016 12:23 PM PST

கடந்த 1998-ஆம் ஆண்டு, கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இந்து மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் ஞாயிற்றுக்

டிவில்லியர்ஸ் சதம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

Posted: 14 Feb 2016 12:23 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில்

திருவாசக முற்றோதல் மாநாடு

Posted: 14 Feb 2016 12:23 PM PST

அரக்கோணத்தை அடுத்த வளர்புரத்தில் திருவாசக முற்றோதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகத்தை ஓதினர்.

மர்மமான முறையில் முதியவர் சாவு

Posted: 14 Feb 2016 12:22 PM PST

குடியாத்தம் அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடியாத்தத்தை அடுத்த காத்தாடிகுப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (78). இவரது மனைவி சுபத்ரை. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். பெருமாள் தனியாக குடிசை வீட்டில் வசித்து

கார் திருட முயன்றவர் கைது

Posted: 14 Feb 2016 12:22 PM PST

வாலாஜாபேட்டை அருகே காரைத் திருட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

"விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு திமுக தான் காரணம்'

Posted: 14 Feb 2016 12:22 PM PST

விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முக்கிய காரணம் திமுக தான் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தெரிவித்தார்.

தொடரை வென்றது இந்தியா: அஸ்வின் சுழலில் சுருண்டது இலங்கை

Posted: 14 Feb 2016 12:21 PM PST

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

மாயமான மணப்பெண் காதலருடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

Posted: 14 Feb 2016 12:21 PM PST

 ஜோலார்பேட்டை அருகே மணக் கோலத்தில் மாயமான பெண், தனது காதல் கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

Posted: 14 Feb 2016 12:21 PM PST

திருப்பத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூஸி. போராட்டம்

Posted: 14 Feb 2016 12:20 PM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

அருணாசலில் பாஜக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்டு அரசமைக்க சதி: மத்திய அரசு மீது நபம் துகி குற்றச்சாட்டு

Posted: 14 Feb 2016 12:18 PM PST

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்டு புதிய அரசமைக்கும் சதியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக

பயங்கரவாதிகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை

Posted: 14 Feb 2016 12:18 PM PST

பயங்கரவாதிகளுக்கும், மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர்

காஷ்மீர்: குப்வாராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளும் வெளிநாட்டினர்: விசாரணையில் புதிய தகவல்

Posted: 14 Feb 2016 12:17 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளும், வெளிநாட்டினர்

தெலங்கானா: சாலை விபத்தில் நடிகை பிரணிதா உயிர் தப்பினார்

Posted: 14 Feb 2016 12:16 PM PST

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பிரபல நடிகை பிரணிதா சுபாஷ் காயம் எதுவுமின்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நாளை கூடுகிறது: காங்கிரஸுடன் கூட்டு சேர்வது குறித்து ஆலோசிக்க முடிவு

Posted: 14 Feb 2016 12:15 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ளது.

ஆர்ஜேடி எம்எல்ஏ கட்சியில் இருந்து இடைநீக்கம்

Posted: 14 Feb 2016 12:14 PM PST

பிகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி எம்எல்ஏ ராஜ் வல்லப யாதவுக்கு எதிராக பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு

"நாட்டின் ஒருமைப்பாட்டுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை'

Posted: 14 Feb 2016 12:13 PM PST

நாட்டின் ஒருமைப்பாட்டுடன் விளையாட யாருக்கும் உரிமையில்லை என்று பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்

Posted: 14 Feb 2016 12:12 PM PST

உலக காதலர் தினம் என்று கருதப்படும் "வாலண்டைன் தினம்', நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக விமானங்களை விற்கும் முடிவு ஏன்? அமெரிக்கா விளக்கம்

Posted: 14 Feb 2016 12:11 PM PST

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பது, அந்த நாட்டுடனான வர்த்தக உறவில்

தில்லி பல்கலை. விவகாரத்தில் என் மகள் மீது ஆதாரமற்ற புகார்

Posted: 14 Feb 2016 12:09 PM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் போராட்டத்தில் தனது மகள் பங்கேற்றதாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவரின் பெயரை பரிந்துரைக்க ஒபாமா முடிவு?

Posted: 14 Feb 2016 12:08 PM PST

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து

என்ஐஏ கேள்விகளுக்கு ஹெட்லியின் மனைவி பதிலளிக்க மறுப்பு

Posted: 14 Feb 2016 12:07 PM PST

தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) கேள்விகளுக்கு பதிலளிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் மனைவி ஷாசியா மற்றும் ஹெட்லியின்

தில்லியில் சிபிஎம் தலைமையகம் மீது இளைஞர்கள் கல் வீச்சு: ஒருவர் கைது

Posted: 14 Feb 2016 12:06 PM PST

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தலைமை அலுவலகம் மீது 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அம்பேத்கரின் படைப்புகளுக்கு இணையதளம் தொடக்கம்

Posted: 14 Feb 2016 12:06 PM PST

அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுத் தலைவரும், தலித் மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவருமான பி.ஆர். அம்பேத்கரின்

இந்தியப் பொருளாதாரம் மட்டும்தான் பாதிப்படையவில்லை: பிரதமர் மோடி

Posted: 14 Feb 2016 12:04 PM PST

சர்வதேசப் பொருளாதார நெருக்கடியால் உலகமே பாதிக்கப்பட்ட போதிலும், இந்தியப் பொருளாதாரம் மட்டும்தான் பாதிக்கப்படாமல்

மும்பை "மேமக் இன் இந்தியா' விழா அரங்கில் தீ விபத்து

Posted: 14 Feb 2016 12:03 PM PST

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற "மேக் இன் இந்தியா' வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டது

விவிஐபி-களுக்கு பாதுகாப்பில் ஈடுபட்ட 600 வீரர்களை திரும்பப் பெற்றது என்எஸ்ஜி

Posted: 14 Feb 2016 12:01 PM PST

முக்கியப் பிரமுகர்களுக்கு (விவிஐபி) பாதுகாப்பு அளித்து வந்த சுமார் 600 வீரர்களை தேசியப் பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) அண்மையில்

ஒடிஸா காங்கிரஸ் தலைவரை நீக்கக் கோரி கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி

Posted: 14 Feb 2016 12:01 PM PST

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சி படுதோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்து ஒடிஸா காங்கிரஸ் தலைவர் பிரசாத்

நிதியமைச்சராக திறம்பட பணியாற்றிய மன்மோகன் பிரதமராக செயல்படவேயில்லை: அருண் ஜேட்லி

Posted: 14 Feb 2016 12:01 PM PST

"நாட்டின் நிதியமைச்சராக பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மன்மோகன் சிங் திறம்பட மேற்கொண்டார். ஆனால், அவர் பிரதமரான

பட்ஜெட் கூட்டத் தொடர்: பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை கோருவோம்; காங்கிரஸ்

Posted: 14 Feb 2016 11:59 AM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி மத்திய அரசை

ரயில் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலை அறிந்துகொள்ள உதவும் செயலி அறிமுகம்!

Posted: 14 Feb 2016 11:58 AM PST

ரயில் நிலையங்கள் வாரியாக காத்திருப்போர் பட்டியலை தெரிந்துகொண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக

எம்.பி.க்களின் ஊதியச் சட்டத்தில் புதிய விதிகள்: நாடாளுமன்ற கூட்டுக் குழு தகவல்

Posted: 14 Feb 2016 11:58 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) வீட்டு வசதிக் கடன் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை

திமுக கூட்டணியில் சேர விஜயகாந்தை நேரில் அழைப்போம்: இளங்கோவன்

Posted: 14 Feb 2016 11:57 AM PST

திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பேன் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் கூறினார்.

நேதாஜி தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்கள் இந்த மாதம் வெளியிடப்படுகின்றன

Posted: 14 Feb 2016 11:55 AM PST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் மேலும் 25 ரகசிய ஆவணங்கள், இந்த மாதம் வெளியிடப்பட

ரூ.61.68 கோடியில் 68 லட்சம் மரக்கன்றுகள்: ஆலமரக்கன்றை நட்டு திட்டத்தைத் தொடங்கினார் முதல்வர்

Posted: 14 Feb 2016 11:54 AM PST

தனது 68-ஆவது பிறந்தநாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக கிர்லோஷ் குமார் நியமனம்

Posted: 14 Feb 2016 11:52 AM PST

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஆர்.கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருளும் பங்குச் சந்தையும்

Posted: 14 Feb 2016 11:47 AM PST

என் நண்பர் ஒருவர் பங்குச் சந்தையில் விற்பன்னர். ஒரு மாதத்துக்கு முன்பு, புத்தாண்டு தள்ளுபடி சீசனின் போது சில பிரபல ஷோரூம்களில் கூட்டம் அலைமோதுவதைக்

உங்கள் இதயம் காப்பாற்றப்பட...

Posted: 14 Feb 2016 11:45 AM PST

இந்திய வாழ்வு பாமாயிலுக்கு அடிமையாகிவிட்டது. பாமாயில் என்பது எண்ணெய்ப் பனம்பழத்திலிருந்து பிழியப்படும் ஒரு மலிவான சமையல் எண்ணெய்.

பேச்சுரிமையல்ல, அஃப்சல் குரு!

Posted: 14 Feb 2016 11:38 AM PST

தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுப் பேரணி நடத்துவதற்கும், "அஃப்சல் குருவைத் தூக்கிலிட்ட அரசு ஒழிக' என்று முழக்கம் எழுப்புதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், இந்த இரண்டையும் ஒரே பேரணியில் நடத்தும்போது, இது பேச்சுரிமையா அல்லது பயங்கரவாதத்தின் மாரீசக் குரலா என்பதைப் பொதுநபர்கள் அடையாளம் காண்பது சிக்கலான ஒன்று.

நோ, நோ...! ஹாய், ஹாய்...!

Posted: 14 Feb 2016 11:37 AM PST

மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் தனது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்,

கர்நாடக பனிப் போர்!

Posted: 14 Feb 2016 11:37 AM PST

கர்நாடக முதல்வராக இருந்தும்கூட சித்தராமையாவால் காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.

சவாலை சமாளிப்பாரா சரத்குமார்?

Posted: 14 Feb 2016 11:36 AM PST

சாதியக் கூண்டுக்குள் தனது கட்சியை அடைக்கும் முயற்சி தகர்க்கப்பட்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும்

அதிமுகவின் 'மிஷன் 234'

Posted: 14 Feb 2016 11:34 AM PST

தேர்தல் வந்துவிட்டால் சுவரொட்டி, விளம்பரப் பதாகைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தேர்தல் ஆணையம் விதித்து வரும்

தீண்டத்தகாதது திமுக தான்!

Posted: 14 Feb 2016 11:33 AM PST

பிரதமர் மோடியின் கோவை பொதுக் கூட்டம் தமிழகத்தில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து:கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் சாவு

Posted: 14 Feb 2016 11:30 AM PST

கும்மிடிப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், சுமை ஆட்டோவும் மோதிக் கொண்டதில், பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

தில்லியில் குடிநீர்க் கட்டண நிலுவை தள்ளுபடி:ஓராண்டு நிறைவு விழாவில் கேஜரிவால் அறிவிப்பு

Posted: 14 Feb 2016 11:30 AM PST

தில்லியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார்.

ஆம் ஆத்மி அரசின் ஓராண்டு நிறைவு:கருப்பு தினம் அனுசரித்த பாஜக; காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஊர்வலம்

Posted: 14 Feb 2016 11:29 AM PST

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஞாயிற்றுக்கிழமையை கருப்பு நாளாக அனுசரித்து பாஜக தர்னாவில் ஈடுபட்டது. அதே சமயம், காங்கிரஸ் "மோசடி தினம்' (சலாவா திவஸ்) என அனுசரித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது.

சூடுபிடிக்குமா? தங்கத்துக்கான தேவை

Posted: 14 Feb 2016 11:29 AM PST

பங்குச் சந்தை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது

ஊழல்வாதிகளை காப்பாற்ற முயல்கிறார் பிரதமர் மோடி :மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

Posted: 14 Feb 2016 11:29 AM PST

ஊழலில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டினார்.

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார் கேஜரிவால்:ஆம் ஆத்மி எம்எல்ஏ குற்றச்சாட்டு

Posted: 14 Feb 2016 11:29 AM PST

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக முதல்வர் கேஜரிவால் மீது ஆம் ஆத்மி அதிருப்தி எல்எல்ஏ பங்கஜ் புஷ்கர் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள்: "டிடிஏ'வுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 14 Feb 2016 11:28 AM PST

நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), மாநகராட்சிகளின் நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விவிஐபி-களுக்கு பாதுகாப்பில் ஈடுபட்ட 600 வீரர்களை திரும்பப் பெற்றது என்எஸ்ஜி

Posted: 14 Feb 2016 11:28 AM PST

முக்கியப் பிரமுகர்களுக்கு (விவிஐபி) பாதுகாப்பு அளித்து வந்த சுமார் 600 வீரர்களை தேசியப் பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) அண்மையில் திரும்பப் பெற்றுக் கொண்டது. அத்துடன், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் அவர்களை என்எஸ்ஜி களமிறக்கியது.

எங்களது மகன் தேச விரோதியல்ல:கன்னையா குமாரின் பெற்றோர் உருக்கம்

Posted: 14 Feb 2016 11:27 AM PST

"தங்களது மகன் தேச விரோதியல்ல' என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.

இடர்பாடு தராத சேமிப்புத் திட்டங்கள் எவை?

Posted: 14 Feb 2016 11:27 AM PST

சிறுதுளி பெருவெள்ளம் என்பது மூதாதையர் பழமொழி. பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் அதனை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.

பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?:டிடிஇஏ மாணவர்களுக்கு அறிவுரை

Posted: 14 Feb 2016 11:27 AM PST

பொதுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மெட்ரோ 4-ஆம் கட்டப் பணிகள்:ஆம் ஆத்மி அரசு அனுமதி

Posted: 14 Feb 2016 11:26 AM PST

தில்லி மெட்ரோவின் 4-ஆம் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு ஆம் ஆத்மி அரசு கொள்கையளவில் அனுமதி வழங்கியுள்ளது.

பெண்ணைக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது

Posted: 14 Feb 2016 11:26 AM PST

தில்லியில் பெண் ஒருவரைக் கொன்று, சடலத்தை கோணிப்பையில் அடைத்து, தரியாகஞ்ச் பகுதியில் வீசிய சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கலாசார நிகழ்ச்சியில் 7 மாணவர்கள் கைது

Posted: 14 Feb 2016 11:26 AM PST

தில்லியில் கலாசார நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள், பதாகைகளுடன் நுழைய முயன்ற 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

"மயானங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்'

Posted: 14 Feb 2016 11:25 AM PST

இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் மயானங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேச விரோத வழக்கில் மாணவர் கைது:ஜேஎன்யுவில் கஸ்தூரிரங்கன் ஆலோசனை

Posted: 14 Feb 2016 11:25 AM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழல் தொடர்பாக அதன் வேந்தர் கே.கஸ்தூரிரங்கன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பெண் பிறழ்சாட்சியம்: வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

Posted: 14 Feb 2016 11:25 AM PST

பாலியல் பலாத்கார வழக்கில், பெண் பிறழ்சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து, அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபரை நீதிமன்றம் விடுவித்தது.

சென்ற வாரத்தில்...

Posted: 14 Feb 2016 11:25 AM PST

வங்கித் துறையை பலப்படுத்தும் வகையில் மேலும் பல முக்கிய சீரமைப்பு கொள்கைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.

முன்னாள் தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார் தகவல் ஆணையர் மாத்தூர்

Posted: 14 Feb 2016 11:25 AM PST

ஆர்டிஐ மனுவுக்கு பதில் அளிக்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முன்னாள் தகவல் ஆணையர் சத்தியானந்த மிஸ்ரா பிறப்பித்த உத்தரவை தற்போதைய தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் ரத்து செய்துள்ளார்.

சுனந்தா புஷ்கர் மரணம்:சசி தரூரிடம் தில்லி போலீஸ் மீண்டும் விசாரணை

Posted: 14 Feb 2016 11:24 AM PST

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரிடம் தில்லி போலீஸார் சனிக்கிழமை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

பட்ஜெட் அறிவிப்புகளுக்கு காத்திருக்கும் ஜவுளித் துறை!

Posted: 14 Feb 2016 11:24 AM PST

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஜவுளித் துறை,

நத்தம்பேட்டில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

Posted: 14 Feb 2016 11:24 AM PST

திருவள்ளூர் அருகே உள்ள நத்தம்பேடு கிராமத்தில் நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்று நல உதவிகளை வழங்கினார்.

நெல்லிக்குன்றம் மலையில் சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 14 Feb 2016 11:23 AM PST

அத்திமாஞ்சேரிப்பேட்டை, நெல்லிகுன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராகேஷ் நினைவு தின ரத்த தான முகாம்

Posted: 14 Feb 2016 11:23 AM PST

திருவள்ளூரில் ராகேஷ் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத் திட்டம்: நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் ஒப்புதல்

Posted: 14 Feb 2016 11:23 AM PST

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையத் திட்டத்தை மத்திய பொதுப் பணித்துறை மூலம் செயல்படுத்த நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™