Cinema.tamil.com |
- தனுஷ் படத்தில் இருந்து விலகிய ஷாமிலி?
- மார்ச்-4ல் சிங்கிளாக வருகிறார் எஸ்.ஏ.சி.,!
- ஆங்கில படம் இயக்குகிறார் கமல்
- ரசிகர்களின் கதைக்காக வீட்டைக்கொடுத்த விஜய்
- “மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது என் நீண்டநாள் கனவு” - விக்ரம்..!
- பிப்ரவரி 24-ல் '24' பட டீசர்
- 'பாகுபலி 2'-க்கு குவியும் கோடிகள்
- அவள் நான் அல்ல, லட்சுமி மேனன் விளக்கம்
- குருநாதரின் பாராட்டில் நெகிழும் இறுதிச்சுற்று இயக்குநர்
- ஜோம்பிஸ்களை ரசிகர்களுக்கு பிடிக்கும்:மிருதன் இயக்குநர் பேட்டி
- நிஜத்திலும் வில்லத்தனம் காட்டிய சினிமா வில்லன் மீது வழக்கு
- ஹீரோவானார் ரிஷிகேஷ்
- என்னுள் ஆயிரம் டீசர் மாதவன் வெளியிட்டார்
- தமிழில் டப் ஆகிறது பி.வாசுவின் தெலுங்கு படம்
- 10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா
- நசவரச திலகத்தில் ரியல் எஸ்டேட் காமெடி
- சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா
- கௌதம் மேனனுக்கு கை கொடுத்த லைகா
- 2.0 பட செட்டில் செல்போனுக்கு தடை
- சற்குணத்துக்கு தயாரிக்கும் படத்திற்குப்பின்னால்....
| தனுஷ் படத்தில் இருந்து விலகிய ஷாமிலி? Posted: ஷாலினியின் தங்கை ஷாமிலி. அஞ்சலியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பல படங்களில் நடித்து வந்த அவர், படிப்பின் மீதிருந்த ஆர்வத்தில் வெளிநாடு சென்று சில ஆண்டுகளாக படித்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தனுஷ் நடித்து வரும் கொடி ... |
| மார்ச்-4ல் சிங்கிளாக வருகிறார் எஸ்.ஏ.சி.,! Posted: டூரிங் டாக்கிஸ் படத்தை அடுத்து டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள படம் நய்யப்புடை. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை விஜயகிரண் இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஏ.சியுடன் பா.விஜய், சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சமுதாயத்தில் மன்னிக்க முடியாத தவறு செய்பவர்களை தேடிச்சென்று ... |
| Posted: விரைவில் ஆங்கில படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கமல். ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உரையாற்ற அமெரிக்க சென்றுள்ள கமல் அங்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் அங்குள்ள மீடியாக்களிடம் பேசும்போது ஆங்கில படம் இயக்கும் தகவலை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ... |
| ரசிகர்களின் கதைக்காக வீட்டைக்கொடுத்த விஜய் Posted: நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேரின் கதையை '3 ரசிகர்கள்' என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார் ஷெபி. இவர் ஏற்கெனவே பிளஸ் 2, டூரிஸ்ட் ஹோம் என்கிற குறும்படங்களை இயக்கியவர். தற்போது 3 ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். இது 3 விஜய் ரசிகர்களை பற்றியது. விஜய்யின் தீவிர ... |
| “மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது என் நீண்டநாள் கனவு” - விக்ரம்..! Posted: கேரளாவில் 18வது ஆசியாநெட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மலையாள நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள நமது சீயான் விக்ரம் மற்றும் த்ரிஷா இருவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். விழாவில் புகழ்பெற்ற தமிழ் நடிகருக்கான விருதை மோகன்லால் கையால் பெற்ற விக்ரம், மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவாகவே ... |
| Posted: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் '24'. சூர்யா மீண்டும் லைம் லைட்டில் வருவதற்கு இந்தப் படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். 'அஞ்சான், மாஸ்' ஆகிய படங்களின் தோல்வியிலிருந்து மீண்டு வர அவர் '24' படத்தைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அறிவியல் கலந்த கதையாக ... |
| 'பாகுபலி 2'-க்கு குவியும் கோடிகள் Posted: திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் ஒன்றைத் தயாரித்தால் அதற்கு முதலீடே தேவையில்லை. வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் அவர்களாகவே வந்து படம் தயாரிக்கத் தேவைப்படும் பட்ஜெட்டை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள். 80, 90களில் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் அப்படித் தயாரானதுண்டு. அந்தக் ... |
| அவள் நான் அல்ல, லட்சுமி மேனன் விளக்கம் Posted: சினிமா நட்சத்திரங்களின் பெயரில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போலியான அக்கவுண்ட்டை ஆரம்பித்து, அவர்களது நிஜ அக்கவுண்ட் என்று மக்களை நம்ப வைப்பதற்கு என்றே ஒரு வட்டம் இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள பல கணக்குகள் போலியானவைதான். நடிகர் விஜய்யின் பெயரில் அதாவது ஆக்டர் விஜய் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் ... |
| குருநாதரின் பாராட்டில் நெகிழும் இறுதிச்சுற்று இயக்குநர் Posted: ஒரு படம் ஓடவில்லை என்றால், அந்தப் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டதாகவும் அதை உடனே தடுக்கும்படி போலீஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுப்பதுபோல் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிப்பார்கள். பெரும்பாலும் கார்த்தி நடித்த படங்கள் வெளியாகும்போது இப்படிப்பட்ட ஸ்டண்ட் நடக்கும். கடந்த வாரம் வெளியான இறுதிச்சுற்று படத்தின் திருட்டு டிவிடி ... |
| ஜோம்பிஸ்களை ரசிகர்களுக்கு பிடிக்கும்:மிருதன் இயக்குநர் பேட்டி Posted: நாணயம் படத்தில் நவீன வங்கி கொள்ளை, நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சைக்கோ கொலைகாரன் என வெவ்வேறு கதை களங்களை இயக்கிய சக்தி சரவணன் அடுத்து இயக்கி உள்ள படம் 'மிருதன்'. இது ஜோம்பிஸ்களின் கதை. இந்திய சினிமாவுக்கே புதிக கதை களம். வருகிற 19ம் தேதி படம் வெளிவருகிறது. இதையொட்டி தினமலர் இணையதளத்திற்கு சக்தி சவுந்தர்ராஜன் அளித்த சிறப்பு ... |
| நிஜத்திலும் வில்லத்தனம் காட்டிய சினிமா வில்லன் மீது வழக்கு Posted: மலையாள சினிமாவில் பிரபல வில்லன் பீமன் ரகு. 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக நடந்து கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீமன் ரகு தனது நண்பர்களுடன் காரில் திருவனந்தபுரத்தை சுற்றி வந்தார். அப்போது ஒரு ஐஸ் கிரீம் கடையின் முன் காரை நிறுத்திவிட்டு ... |
| Posted: சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ரிஷிகேஷ். வேலையில்லா பட்டதாரியில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் தனுஷின் நெருங்கிய உறவினரும்கூட. தற்போது ரிஷிகேஷ், ரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். முதல் படத்திலேயே சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறார். அஞ்சாதே ... |
| என்னுள் ஆயிரம் டீசர் மாதவன் வெளியிட்டார் Posted: குணசித்திர நடிகர் டெல்லி கணேசின் மகன் மகா ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்னுள் ஆயிரம், மெரீனா மைக்கேல் என்ற மலையாள நடிகை ஜோடியாக நடிக்கிறார், மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார், கோபி சந்தர் இசை அமைக்கிறார். படத்தின் டீசரை நேற்று நடிகர் மாதவன் ... |
| தமிழில் டப் ஆகிறது பி.வாசுவின் தெலுங்கு படம் Posted: 2008ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் கிருஷ்ணார்ஜுனா. நாகார்ஜுனா, மஞ்சு விஷ்ணு (மோகன்பாபு மகன்), மம்தா மோகன்தாஸ், மோகன்பாபு நடித்திருந்த இந்தப் படத்தை பி.வாசு இயக்கினார். மோகன்பாபு தயாரித்திருந்தார், மரகத மணி இசை அமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். நாசர், நெப்போலியன், மனோரமாவுடன் பி.வாசுவும் நடித்திருந்தார். ... |
| 10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா Posted: சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராம் தற்போது இயக்கி வரும் படம் 'அதர்வணம்'. இது கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகிறது. கன்னடன நடிகர் விஜயராகவேந்திரா, ஹரிப்பிரியா நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது. பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரெசார்ட்டிசின் நீச்சல் குளத்தில் ... |
| நசவரச திலகத்தில் ரியல் எஸ்டேட் காமெடி Posted: சென்னைக்கு மிக மிக அருகில் என்று சொல்லி விழுப்புர இடத்தை விற்கும் நிஜமான ரியல் எஸ்டேட் காமெடியை சினிமாவில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் ரியல் எஸ்டேட் காமெடியை முழுமையாக பயன்படுத்தி வருகிறது 'நவசர திலகம்'. விஜய் டி.வி. தொகுப்பாளர் மா.பா.கா.ஆனந்த் சோலோ ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சிருஷ்டி ... |
| சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா Posted: ஒரு காலத்தில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்த சூப்பர்குட் பிலிம்ஸ் பட நிறுவனம் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பை நிறுத்திவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயி நடித்த ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்தது. அந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் பட தயாரிப்பை நிறுத்தி ... |
| கௌதம் மேனனுக்கு கை கொடுத்த லைகா Posted: கௌதம் மேனன் முன்னைவிட தற்போது சுறுசுறுப்பாகிவிட்டார். தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இன்னொரு படத்திற்கான ஹீரோவாக தனுஷ் நடிப்பதாக தற்போது தகவல் ... |
| 2.0 பட செட்டில் செல்போனுக்கு தடை Posted: ஷங்கர் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எப்போதுமே கெடுபிடி அதிகமாக இருக்கும். குறிப்பாக மீடியாக்களுக்கு அனுமதியே கிடையாது. அது மட்டுமல்ல தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை மீடியாக்களை சந்திக்கவும் மாட்டார் ஷங்கர். அப்பேற்பட்ட ஷங்கர் 300 கோடியில் எடுக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பின்போது எப்படி ... |
| சற்குணத்துக்கு தயாரிக்கும் படத்திற்குப்பின்னால்.... Posted: மாயா, தனி ஒருவன், நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது இரண்டரை கோடி சம்பளம் வாங்குவதாக படத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஆனால் நயன்தாராவை வைத்து படம் எடுப்பவர்களில் பலர் சின்ன தயாரிப்பாளர்களாகவும் இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உதாணரமாக, மஞ்சப்பை படத்தின் மூலம் தயாரிப்பாளராக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |