Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியின் குரலில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் சினிமா வீரன்

Posted:

வை ராஜா வை படத்திற்குப் பிறகு ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் எந்தப் புதுப் படத்தையும் இயக்கவில்லை. கடந்த கோடையன்று வெளிவந்த அந்தப் படத்திற்குப் பிறகு இன்றுதான் தன்னுடைய அடுத்த படைப்பைப் பற்றி ஐஸ்வர்யா தனுஷ் அறிவித்துள்ளார். சினிமா வீரன் என தலைப்பிடப்பட்டுள்ள ஒரு டாகுமென்டரி படத்தைத்தான் அவர் இயக்க ...

மீண்டும் மௌலி இயக்கதத்தில் கமல்

Posted:

ஹேராம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும், கமல் அடிப்படையில் காமெடி விரும்பி. இதை அவரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதனால்தான் சீரியஸான படங்களில் நடித்தாலும் அவ்வப்போது காமெடி படங்களிலும் நடித்து வருகிறார்.

கமல் நடித்த காமெடிப் படங்களில் பல படங்கள் கடந்த காலங்களில் வெற்றியும் ...

'தோழா' தோள் கொடுக்குமா ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் பல நல்ல படங்களைக் கொடுக்க பல உதவி இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை இன்னும் கண்களைத் திறக்க மறுக்கிறது. பல பெரிய நிறுவனங்கள் பெரிய நட்சத்திரங்களை மட்டுமே வைத்து படம் தயாரிக்க நினைக்கிறார்களே, தவிர நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள். தனுஷ் ...

பிப்ரவரி 26 ரிலீஸ் படங்கள் - எதிர்பார்ப்பு என்ன ?

Posted:

2016, பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நாளை "கணிதன், ஆறாது சினம், நையப் புடை'' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. 'ஆறாது சினம் ' படத்தை "ஈரம், வல்லினம்" போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கி உள்ளார். அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அருள்நிதி நடித்து இதற்கு முன் வெளிவந்த ...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கௌதம் மேனன்

Posted:

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி ஸ்டைலுடன், 2001ல் வெளிவந்த 'மின்னலே' படத்திலிருந்து தற்போது இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படம் வரை இளம் ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். இன்று தன்னுடைய 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து ...

அம்மாவாக நடிப்பது தப்பில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் நடித்தவர், காக்க முட்டை படத்தில் குப்பத்து பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வித்தியாசமான ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தற்போது இவர் மீண்டும் அம்மாவாக நடித்துள்ள ஆறாது ...

நடிப்பில் ஆர்வம் இல்லை - ரேயான்

Posted:

நடிகை ராதிகாவின் மகள் ரேயான். இவருக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது, விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது ரேயான், தனது அம்மாவின் சொந்த தயாரிப்பான ராடன் பிலிம்ஸின் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ராடன் பிலிம்ஸ் சார்பில் குறும்பட விழா நடத்தப்பட ...

கருடா படத்தில் காஜல் அகர்வால்

Posted:

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் இருமுகன். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ...

இந்தியாவிற்காக உயிரையும் கொடுப்பேன் - சஞ்சய் தத் உருக்கம்

Posted:

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலையானார். சிறைக்கு வெளியே அவரது மனைவி மான்யா தத்தும், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புனே விமான நிலையம் ...

காஷ்மோரா படத்தில் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம்

Posted:

கொம்பன் படத்தைத் தொடர்ந்து காஷ்மோரா என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவகும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். கார்த்தி பங்குதாரராக உள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ...

2.0 படத்துக்காக சென்னை வந்துள்ள ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கும் இப்படத்தில், ஏமி ஜாக்சன் ரோபோவாக நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட 2.0 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில், ரஜினி மற்றும் ஏமி ...

மார்ச் 18-ஆம் தேதி 'டார்லிங்-2' ரிலீஸ்

Posted:

பரபரப்பான பட நிறுவனமாக விளங்கிய ஸ்டுடியோ க்ரீன் என்ன காரணத்தினாலோ... எவ்வித செயல்பாடும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களது பங்கைப் பிரித்துக் கொண்டுவிட்டதால் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் முன்புபோல் பரபரப்பாக இயங்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாக படத்துறையில் தகவல் பரவிக்கிடக்கிறது. அதை ...

தோழாவில் அனிருத் ஏன்? பட நிறுவனம் விளக்கம்

Posted:

பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும், மற்ற இசையமைப்பாளர்கள் அழைத்தால் பிகு பண்ணிக்கொள்ளாமல் பாடிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அனிருத். ஏற்கனவே, ஏ.ஆர்.ரகுமான், இமான், தமன், சிவமணி இசையில் பாடல்களைப் பாடிய அனிருத், 'பி.வி.பி.சினிமா' நிறுவனம் தயாரித்துள்ள தோழா படத்தின் டைட்டில் பாடலை கோபிசுந்தர் இசையில் பாடியுள்ளார். ...

'மஜ்னு' படப்பிடிப்பை முடித்த தெலுங்கு மலர் டீச்சர்

Posted:

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்து வரும் இப்படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார். மலையாள மற்றும் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த மலர் டீச்சர் வேடத்தில் ஸ்ருதிஹாசன் ...

மகேஷ் பாபுவிற்காக கோடிக்கணக்கான செலவில் உருவான கிராமம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பிரம்மோத்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ...

இந்திய அளவில் ட்ரென்டிங்கில் வந்த நானி

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்த பின்னர், தமிழ் ரசிகர்களால் அதிகம் அறியப்பட்ட தெலுங்கு நடிகர் நானி, நேற்று தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டடினார்.

அவரது ரசிகர்களும், நண்பர்களும் சமூக வலைதளங்களில் நானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று நானிக்கு ...

பாலிவுட்டில் அறிமுகமாகும் பூனம் கவுர்

Posted:

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன் போன்ற தமிழ் படங்களில் நடித்த தெலுங்கு நடிகை பூனம் கவுருக்கு நாயகி வேடம் இல்லாததால் விஷாலின் வெடி படத்தில் அவரது தங்கையாக நடித்தார். தெலுங்கிலும் பெயர் சொல்லு அளவிற்கு வெற்றிப் படங்களில் நடிக்காத பூனம் தற்போது ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். 3 தேவ் என பெயரிடப்பட்டுள்ள ஹிந்தி படமொன்றில் பூனம் ...

இணையத்தில் கஷனம் பாடல்கள் வெளியீடு

Posted:

ஆத்வி சேஷ், அனுஷ்யா, அடா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் கிரைம் திரில்லரான கஷனம் படம் நாளை திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ரவிகாந்த் இயக்கும் இப்படம் காணமல் போன சிறுமியைத் தேடும் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். காவல்துறை அதிகாரியாக ஆத்வி சேஷ் இப்படத்தில் நடித்துள்ளார். ...

ஓடுகளை உடைத்தபோது நிக்கி கல்ராணிக்கு காயம்

Posted:

வெள்ளக்காரதுரைக்கு பிறகு எழில் இயக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். அவரது உதவியாளர் ஜோதியின் கதையை இயக்குகிறார். விஷ்ணு ஹீரோவாக நடித்து, தயாரிக்கிறார். இவர்கள் தவிர சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். சத்யா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் நிக்கி கல்ராணி ...

விமலை கைதூக்கி விடுவாரா மாப்ள சிங்கம்

Posted:

மஞ்சப்பை தான் விமல் கடைசியாக நடித்த வெற்றிப் படம். அதன் பிறகு வெளிவந்த நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல படங்கள் அவருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. விமலுக்கு இப்போது தேவை ஒரு கட்டாய வெற்றி. அதை மாப்பள சிங்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ராஜசேகர் இயக்கி உள்ள இந்தப் படத்தில் அஞ்சலி ஹீரோயின், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™