Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திமுக., வில் இணைந்தார் இமான் அண்ணாச்சி

Posted:

தனியார் டிவி ஒன்றில் ''சொல்லுங்கண்ணே சொல்லுங்க...'' மற்றும் ''குட்டீஸ் சுட்டீஸ்'' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவரது யதார்த்தமான நெல்லை வட்டார காமெடி பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கும் புரமோஷன் ஆனார். பூஜை, கோலிசோடா, மரியான், காக்கிச்சட்டை உள்ளிட்ட பல ...

ராஜபாளையம் மக்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரும் விஷால்

Posted:

ராஜபாளையத்தில் திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்க விஷாலின் 'மருது' பட குழுவினர் 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை, கான்ட்ராக்டரிடம் அளித்தனர். இதன் மூலம் 10 வீடுகளுக்கு கழிப்பறை கட்டும் வசதி கிடைக்கும். அதோடு கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு வசதி செய்து தரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் விஷால்.

கதகளி படத்திற்கு பிறகு விஷால் ...

தனுஷுடன் மோதும் சித்தார்த், ஜீவா!

Posted:

ஒரு பக்கம் நடிகர் சங்கம் பல இளம் நடிகர்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக அடுத்தடுத்து பல புதிய விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் மறுபக்கம் சில இளம் நடிகர்களுக்குள் இனம் புரியாத ஒரு போட்டி இருந்து கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று அவர்களாக வெளியில் எதையும் சொல்வதில்லை.

அதிலும் தனுஷுடன் சித்தார்த், ...

'மிருதன், சேதுபதி, நவரச திலகம்' - வரவேற்பு எப்படி ?

Posted:

பொங்கலுக்குப் பிறகு நேற்றுதான் நட்சத்திர அந்தஸ்துள்ள இரண்டு நடிகர்களின் படங்கள் வெளிவயானது. தங்களது முந்தைய வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ஜெயம் ரவி, விஜய் சேதுபதி இருவரது படங்களும் நேற்றி வெளியாகின.

ஜெயம் ரவி நாயகனாக நடித்த 'மிருதன் ' படம் தமிழ் சினிமாவுக்குப் புதியதான 'சாம்பி' வகைப் படமாக வெளியானது. ...

தோழா படத்தை வெளியிட கார்த்தி விருப்பம்

Posted:

தெலுங்குப்படத்துறையில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும் பிவிபி சினிமாஸ் நிறுவனம், அங்கே பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கிறது. தமிழில் ராஜபாட்டை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், நான் ஈ, இரண்டாம் உலகம், 'இஞ்சி இடுப்பழகி', 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ள 'பிவிபி சினிமாஸ்' தற்போது தயாரித்துள்ள படம் 'தோழா'. ...

கௌதம் மேனனின் அசாத்திய திறமை

Posted:

புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்வார்கள். ஏறக்குறைய இப்படி ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். ஒரு படத்தின் அவுட்லைனை தயார் பண்ணிக் கொண்டு ஹீரோக்களிடம் சொல்வார். அந்த அவுட்லைனில் இம்ப்ரஸ்ஸாகும் ஹீரோக்கள் கால்ஷீட் தருவதாக சொல்வார்கள். படப்பிடிப்பு தொடங்கும்வரை கதையை டெவலப் பண்ணாமலே இருப்பார் கௌதம் மேனன். ...

ஜீவாவின் மார்ச் 4-ஆம் தேதி சென்ட்டிமெண்ட்

Posted:

'பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகா நடிக்க, 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. டி.இமான் இசை ...

நிவின்பாலி படத்துக்கு கேரள அமைச்சர் பாராட்டு..!

Posted:

சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற படம் மலையாளத்தில் வெளியானது. காவல்துறை அதிகாரியின் அன்றாட நடவடிக்கைகளில் மட்டுமே சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாக்கி இருப்பதால் பாராட்டுக்கள் பல பக்கம் இருந்தும் குவிகின்றன. இதனை கேள்விப்பட்ட உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்தப்படத்தை பார்க்க விரும்ப, ...

சீனாவில் புதிய சாதனை படைக்கவிருக்கும் 'புலி முருகன்'..!

Posted:

இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த நேரம் வரைக்கும் மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் 'புலி முருகன்' தான்... இயக்குனர் வைசாக் இயக்கும் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மோகன்லாலை ரசிகர்கள் காண இருக்கிறார்கள் என்பது படத்தின் ...

'புதிய நியமம்' வெற்றியை கொண்டாடிய மம்முட்டி..!

Posted:

போன வருட ஆரம்பத்தில் வெளியான 'பயர்மேன்' ஆகட்டும் அல்லது இந்த வருடம் வெளியான 'புதிய நியமம்' ஆகட்டும் மம்முட்டியின் இந்த இரண்டு வருட முதல் படங்களும் அவருக்கு வெற்றிக்கணக்கைத்தான் தொடங்கி வைத்துள்ளன. அதிலும் இந்த வருடம் அவரது முதல் ரிலீசான 'புதிய நியமம்' படத்தின் வெற்றி அவரை ரொம்பவே உற்சாகப்படுத்தி விட்டது. காரணம் ...

இந்தாண்டும் நல்ல இசையை கொடுப்பேன் - பிறந்தநாளில் ஹிப்-ஹாப் ஆதி பேட்டி!

Posted:

கடந்தாண்டு அறிமுகமான இசையமைப்பாளர்களில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி இருக்கிறார். தனியாக ஆல்பங்கள் இயக்கி வந்தவர், சுந்தர்.சி-யின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இசையில் வெளிவந்த இன்று நேற்று நாளை, தனி ஒருவன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் ...

மார்ச்-4ல் ரவி தேஜாவின் 'ராபின் ஹூட்' படப்பூஜை

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா, இயக்குனர் சக்ரி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ராபின் ஹூட் படம் மார்ச் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி ஐதராபாத்தில் ராபின் ஹூட் படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பெங்கால் டைகர் படத்தில் ரவி தேஜாவுடன் நடித்த ராக்ஷி கண்ணா இப்படத்தில் ...

இலியானா நடுவிரலைக் காட்ட காரணம் என்ன?

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். பின்னர் ஹிந்தி பக்கம் சென்ற இலியானாவிற்கு தற்போது தெலுங்கில் மார்கெட் இல்லை. ஹிந்திலும் இரண்டொரு படங்களையே கையில் வைத்துள்ளார். அண்மையில் ஜாக்கி ஜானுடன் ஹாலிவுட் படம் ஒன்றில் இலியானா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஏற்கனவே ...

ஜுனியர் என்.டி.ஆருக்கு தந்தையான சாய்குமார்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும், வசன கர்தாவுமான சாய்குமார் டோலிவுட்டின் யங் டைகரான ஜுனியர் என்.டி.ஆருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ஜுனியர் என்.டி.ஆர் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேச் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சாய்குமார் ஜுனியர் என்.டி.ஆருக்கு தந்தையாக நடிக்கின்றார். சமந்தா மற்றும் ...

போக்கிரி ராஜாவில் நான்தான் கட்டப்பா: சிபி

Posted:

ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிக்கும் போக்கிரிராஜா படத்தை புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். மார்ச் 4ந் தேதி வெளிவருகிறது. இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடந்தது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. ஆர்யா ...

நீச்சல் உடை படம் வெளியானதால் சாக்ஷி 'ஷாக்'

Posted:

திருட்டு விசிடி, ஆத்யன் படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது கககபோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை பி.எஸ்.விஜய் என்பவர் இயக்கி உள்ளார். விரைவில் படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் சாக்ஷி ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்த சாக்ஷி, அதன் போட்டோக்களை மீடியாக்களுக்கு ...

யாக்கை படப்பிடிப்பு நிறைவடைந்தது

Posted:

யட்சன் படத்திற்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம் யாக்கை. அவருக்கு ஜோடியாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிக்கிறார். ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய டி.குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நீ என்று தொடங்கும் இந்தப் போடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ...

குறும்பட ஹீரோயின் ஆனார் திவ்யா

Posted:

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கெஞ்சம் காபி நிறைய சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி திவ்யா, தற்போது நடிகையாகிவிட்டார். மேஜிக் என்ற குறும்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பானுஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். விஜயசுந்தர் என்பவர் இயக்கி உள்ளார். ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷரன் ...

சண்டை காட்சியில் சிம்பு மூக்கு உடைந்தது

Posted:

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள். ஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார். நேற்று முன்தினம் சண்டைக் கலைஞர்கள் பலரோடு சிம்பு சண்டையிடும் காட்சிகள் ...

மம்முட்டி பட ரீமேக்கில் நடிக்கிறார் ரஜினி: இயக்குனர் சித்திக்

Posted:

தமிழில், பிரண்ட்ஸ், சாது மிரண்டால், காவலன் படங்களை இயக்கிய சித்திக் மலையாளத்தில் முக்கியமான இயக்குனர். அங்கு அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ஹிட். கடைசியாக அவர் இயக்கிய படம் ''பாஸ்கர் தி ராஸ்கல்''. மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™