Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'கபாலி' டீசர் மார்ச் மாதம் வெளியீடு ?

Posted:

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கபாலி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்துடன் மலேசியாவில் நிறைவுற்றது. குறுகிய காலத்தில் இந்தப் படத்தில் தனி கவனம் செலுத்தி ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் முதல் பார்வை ...

தெலுங்கு பேசும் பண்ணையாரும் பத்மினியும்

Posted:

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயபிரகாஷ், துளசி மற்றும் பலர் நடிக்க இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் நானி வாங்கியிருந்தார். அப்படத்திற்கான வேலைகளை துவங்கியபோது எவிடே சுப்ரமணியம் படத்தை முடிக்க நானி, பண்ணையாரும் ...

மம்முட்டி நலமுடன் தான் இருக்கிறார்..!

Posted:

மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் உடல்நிலை குறித்து திடீரென பரவிய வதந்தியால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.. பின்னர் அது பொய்யான தகவல் என்றும் மம்முட்டி நலமுடன் தான் இருக்கிறார் என்றும் மம்முட்டிக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் இருந்து புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டதும் தான் தற்போது ஆசுவாச பெருமூச்சு ...

துல்கரின் புதிய நாயகியாக ஷான் ரோமி..!

Posted:

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான 'சார்லி' படத்திலேயே கதாநாயகியாக புதுமுகம் ஒருவரை கொண்டுவரத்தான் முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக பார்வதி கதாநாயகியாக நடித்தார். அடுத்து தற்போது நடித்து நடித்துவரும் 'களி' படத்தில் 'பிரேமம்' புகழ் 'மலர்' டீச்சரான சாய் பல்லவி நடித்தால் நன்றாக ...

முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

தமிழோ, மலையாளமோ, தங்களது திரையுலகில் ஓரளவு ஸ்திரமாக காலூன்றிய ஒவ்வொரு ஹீரோவுக்கும் இரண்டு முக்கியமான ஆசைகள் கட்டாயம் இருக்கும். ஒன்று டபுள் ரோலில் நடிப்பது.. இன்னொன்று அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிப்பது.. இதில் முன்னே பின்னே நடந்தாலும் கூட இந்த இரண்டையும் சாதித்தால் தான் தாங்கள் ஹீரோவானதன் பலனை அடைந்ததாக அவர்களுக்கும், ...

மே மாதத்தில் பிரம்மோத்சவம் ரிலீஸ்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா, காஜல், பிரணிதா என மூன்று நாயகிகளுடன் டூயட் பாடி வரும் பிரம்மோத்சவம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் குடும்ப பொழுபோக்கு திரைப்படமான இப்படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக நடிகர் ...

புதிய ஸ்டைலில் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

டெம்பர், நானாகு பிரேமதோ போன்ற வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஜனதா கேரச். மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கி இயக்குனர் கொரடலா சிவா இப்படத்தை இயக்கவுள்ளார். மிர்ச்சி படத்தில் பிரபாஸ் போன்று வலிமையான கதாபாத்திரத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளாராம். இதற்காக தீவிர ...

பிப்ரவரி 18ல் முதல் சரைனொடு டீசர்

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் ஹீரோ அல்லு அர்ஜுன், இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் தனது வழக்கமான ஸ்டைலில் அல்லாமல் ஆக்ரோஷமான ஸ்டையில் நடித்து வரும் சரைனொடு படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சரைனொடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி ...

மேமு சைதம் புரமோஷனில் மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லக்ஷ்மி மஞ்சு, சமூக அக்கறையுடன் கூடிய மேமு சதம் எனும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக ராகுல் ப்ரீத்தி கடை ஒன்றில் காய்கறி விற்றார், நடிகர் ராணா மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் உடையனிந்து சந்தையில் மூட்டை ...

10 ஓநாய்கள் நடிக்கும் தமிழ்ப்படம்

Posted:

தற்போதைய படத் தயாரிப்பு நிறுவனங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் பட நிறுவனங்களில் ஒன்று - திருக்குமரன் எண்டர்மெயின்மெண்ட். ஒவ்வொரு படத்தையும் பக்காவாக திட்டமிட்டு, அளவான பட்ஜெட்டில் படம் எடுக்கிறார் சி.வி.குமார். அந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போதே நியாயமான லாபத்தை வைத்து வேறு ஒருவரிடம் கைமாற்றிவிடுவதையும் வழக்கமாக ...

அஞ்சாதே- 2 படத்தில் ஜெயம்ரவி?

Posted:

மிஷ்கின் இயக்கிய பல படங்கள் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியில் வெற்றியைத் தொடாத படங்களே. அவர் இயக்கிய ஒரு சில படங்களே வணிக ரீதியிலும் வெற்றியடைந்துள்ளன. அவற்றில் அஞ்சாதே படமும் ஒன்று. நேமிசந்த் ஜபக் இப்படத்தை தயாரித்திருந்தார். நரேன், அஜ்மல், பிரசன்னா, விஜயலட்சுமி முதலானோர் நடித்து 2008-ல் வெளியான 'அஞ்சாதே' ...

கௌதம் மேனன் தவறவிட்ட மலையாளப்படம்

Posted:

நிவின் பாலி நடித்து ஹிட்டான மலையாளப் படம் - 'ஒரு வடக்கன் செல்ஃபி'. இந்த படத்தில் கதாநாயகனான நிவின் பாலி இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர விரும்புவது மாதிரி காட்சி அமைத்திருந்தார் இப்படத்தின் கதையை வினீத் சீனிவாசன். சூப்பர் ஹிட்டான இப்படத்தை தொடர்ந்து நிவின் பாலியை வைத்து 'ஜாக்கோபின்டெ சொர்க ராஜ்ஜியம்' என்ற ...

தெலுங்கில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய கார்த்தி

Posted:

'கொம்பன்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வந்த படம் காஸ்மோரா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் இடைப்பட்ட நாட்களில் ஊபிரி என்ற தெலுங்குப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இணைபிரியாத நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை 'தோழா' என்ற பெயரில் தமிழில் டப் ...

மாதவன் - விஜய்சேதுபதி இணையும் புதிய படம்!

Posted:

ஆர்யா நடித்த 'ஓரம் போ', மிர்ச்சி சிவா 'வா' என்கிற குவார்ட்டர் கட்டிங் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இயக்கும் மூன்றாவது படத்தில் மாவதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் தமிழில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது ...

தமிழ்ப்படம் வேண்டாம்... வரலட்சுமி முடிவு?

Posted:

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்தபோது அந்தப் படத்தை தன்னுடைய வாழ்க்கையாக எண்ணினார் வரலட்சுமி. ஏற்கனவே அவர் நடித்த இரண்டு படங்கிளனாலும் அவருக்கு பிரயோஜனமில்லை. எனவே தாரை தப்பட்டை படம் தன் திரையுலக வாழ்க்கையை மாற்றும் என்று நம்பியவர் கடும் ஏமாற்றுத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளானார். அதிலிருந்து மீண்டு வர ...

இரண்டுநாளில் வெறும் ரூ.7.81 கோடி மட்டுமே வசூலித்த 'பிட்டூர்'

Posted:

அபிஷேக் கபூர் இயக்கத்தில், ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப், தபு ஆகியோரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று(பிப்.12ம் தேதி) வெளியான படம் 'பிட்டூர்'. இப்படம் ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது. இதனால் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கும் குறைவாகவே வசூலித்திருக்கிறது. இப்படம் வெளியான இரண்டு நாளில் வெறும் ரூ.7.80 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ...

கயால் 3-யும் உருவாகிறது.?

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான சன்னி தியோல் நடிப்பில் 90-ல் வெளியான படம் 'கயால்'. இப்படம் ஹிட்டானது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகமான கயால் ஒன்ஸ் அகைன் படத்தை சமீபத்தில் நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டார். இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சுமார் வெற்றியையும், வசூலையும் பெற்றுள்ளது. ...

ஜெய் கங்காஜல் : ப்ரியங்காவுக்கு நேரம் இல்லை

Posted:

ஹாலிவுட், பாலிவுட் என மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அவர் இப்போது தனது ஜெய் கங்காஜல் படத்தை முடித்துவிட்டு அமெரிக்க டெலி சீரியலான குவாண்டிகோ-வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 4ம் தேதி அவர் நடித்துள்ள ஜெய் கங்காஜல் படம் வெளியாக உள்ளது. ஆனால் அவரால் ...

பீப் பாடல் விவகாரம் : சிம்பு ஆஜராக கோர்ட் உத்தரவு

Posted:

சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடிகர் சிம்பு எழுதி பாடிய பீப் பாடல் தொடர்பான வழக்கு தொடர்பாக, வரும் 24ம் தேதி, கோவை போலீஸ் முன்பு சிம்பு ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் உடன் இணைந்து பீப் பாடலை வெளியிட்டிருந்தனர். இந்த பாடல், பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ...

யூப்-டிவி இணையதளத்தில் ஆசிய கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்

Posted:

பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதளம் பல்வேறு தொழில்நுட்பம் சாதனங்களை வளர்த்து கொண்டே வருகிறது. மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புதிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இம்மாதம் ஆசிய கோப்பைக்கான டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்.24ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™