Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


2016-17 பொது பட்ஜெட்: விவசாயத்துக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு - எரிவாயு மானியத்தை 75 லட்சம் பேர் விட்டுக்கொடுத்துள்ளனர்

Posted: 28 Feb 2016 11:13 PM PST

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, பேசியதாவது "இந்தியப் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் 2015-16-ல் 7.6 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளவில்

2016-17 பொது பட்ஜெட் தாக்கல்: பங்கு சந்தையில் 140 புள்ளிகள் உயர்வு

Posted: 28 Feb 2016 10:45 PM PST

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்புக்ளை வெளியிட்டு வருகிறார். முன்னதாக இன்று காலை மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல்

இஸ்ரோவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய விரும்பும் நாசா

Posted: 28 Feb 2016 10:28 PM PST

சிவப்பு கிரகம் என்றழைக்கப்படுகிற செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் மீது உலக நாடுகளின் பார்வையை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தை பற்றி கூட்டாக ஆராய்வதற்கு

பாராளுமன்றத்தில் 2016-17 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்

Posted: 28 Feb 2016 09:50 PM PST

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக இன்று காலை ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற நிதி மந்திரி

அருண் ஜெட்லி ஜனாதிபதியுடன் சந்திப்பு - 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

Posted: 28 Feb 2016 09:02 PM PST

இன்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக இன்று காலை நிதி மந்திரி அருண் ஜெட்லி ராஷ்டிரபதி பவனுக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். சுமார்

அரியானாவில் இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது பெண் கற்பழிக்கப்பட்டதாக புகார்

Posted: 28 Feb 2016 07:26 PM PST

கடந்த வாரம் அரியானா மாநிலத்தில், ஜாட் வகுப்பினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்களால் சில பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மும்பை அருகே 14 பேர் கொலை: பிணக்குவியலை கண்டு படம் பிடிக்க வந்த கேமராமேன் அதிர்ச்சியில் இறப்பு

Posted: 28 Feb 2016 07:17 PM PST

மும்பையை அடுத்த தானேயில் குடும்பத்தினர் 14 பேரை கழுத்தறுத்து கொலை செய்து அஸ்னேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அங்கு நேற்று ஊடகத்தினர் குவிந்தனர். பிணக்குவியலை படம் பிடிக்க வந்த தனியார் டி.வி. கேமராமேன் ரதன் பவுமிக் (வயது 30), அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனே அவர் தானே மாநகராட்சி

எனக்கு பட்ஜெட் ஒரு தேர்வு: பிரதமர் மோடி பேச்சு

Posted: 28 Feb 2016 07:07 PM PST

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் 'மன் கீ பாத்' (மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் உரையாற்றுவது வழக்கம். நேற்று அவர் வானொலியில் சுமார் 35 நிமிடம் பேசினார்.

பாராளுமன்ற கூட்டத்தை சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களிலும் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. யோசனை

Posted: 28 Feb 2016 07:07 PM PST

இந்திய ஜனநாயகத்தின் இதயமாக வர்ணிக்கப்படும் பாராளுமன்றம் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. அங்கு நாட்டு நலனுக்காக தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மீது அரசும், எதிர்க்கட்சிகளும் நடத்தும் ஆரோக்கியமான விவாதங்களை பார்வையிட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கோவில் விழாவில் மதம் பிடித்த யானை அட்டகாசம்: 20 வாகனங்களை தூக்கி வீசியது - வீடியோ

Posted: 28 Feb 2016 06:34 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள புலபட்டா என்ற ஊரில் அமைந்துள்ள செருநல்லுசெரி கோவில் விழா நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நடந்த சாமி ஊர்வலத்தில் 11 யானைகள் அணிவகுத்து சென்றன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வங்கிகள் வாரிய கழகத்தின் தலைவராக வினோத்ராய் நியமனம்

Posted: 28 Feb 2016 06:11 PM PST

மத்திய அரசு புதிதாக வங்கிகள் வாரிய கழகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் முதல் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவி வகித்தவர் ஆவார். '2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் உள்ளிட்ட பல

கன்னையா குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Posted: 28 Feb 2016 05:47 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கடந்த 12-ந் தேதி, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் கிடையாது: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்

Posted: 28 Feb 2016 05:42 PM PST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் தேறியவர்களுக்கு மார்ச் 8-ந் தேதி நேர்முக தேர்வு தொடங்குகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு வந்த மிரட்டல் பற்றி டெல்லி போலீசார் விசாரணை

Posted: 28 Feb 2016 05:29 PM PST

பாராளுமன்றத்தில் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் தற்கொலை கொண்ட விவகாரம் குறித்த விவாதத்தின் போது இந்து கடவுள் துர்கா பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தவறாக பேசியதாக அவருக்கு ஏராளமான மிரட்டல்களும், குறுஞ்செய்திகளும்

பிச்சை எடுப்பதை குற்றமாக கருதுவதை தடுக்கும் மசோதா: பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது

Posted: 28 Feb 2016 05:05 PM PST

மும்பை பிச்சையெடுக்கும் சட்டம் 1959-ன் கீழ், தற்போது நாட்டில் பிச்சை எடுப்பது குற்றமாக கருதப்படுகிறது. இதன்படி பிச்சை எடுப்பவர்களை விசாரணையின்றி பாதுகாப்பு இல்லங்களுக்கோ, சிறைக்கோ அனுப்ப இயலும்.

பரத நாட்டிய கலைஞர் ருக்மினி தேவியின் 112-வது பிறந்த தினம் இன்று: கூகுள் சிறப்பு மரியாதை

Posted: 28 Feb 2016 04:14 PM PST

புகழ்பெற்ற நடன கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேலின் பிறந்தநாள் இன்று. கூகுள் நிறுவனம் ருக்மினி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமான இன்று அவரது படத்தினை பதிவு செய்துள்ளது. 1904-ம் வருடம் மதுரையில் பிறந்த இவர் ஒரு புகழ்பெற்ற நடனக்

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது

Posted: 28 Feb 2016 03:48 PM PST

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. 25-ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு- செலவு திட்டம்) மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

Posted: 28 Feb 2016 03:39 PM PST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குரு நினைவு தினம் அனுசரித்தது மற்றும் இந்திய எதிர்ப்பு கோஷமிட்டது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் மற்றும் சில மாணவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்ற வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Posted: 28 Feb 2016 03:20 PM PST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு: வீடியோ இணைப்பு

Posted: 28 Feb 2016 02:52 PM PST

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அலிராஜ்பூர் நகரத்தை அடுத்த ரங்கோலே கிராமத்தில் சிறுத்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™