ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொஞ்சம் ஜொள்ளு ...
- என் மனைவிக்காக...
- மனமது செம்மையானால் - சிறுகதை !
- பொய்யலங்காரம்
- என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !
- மகள் ! கவிஞர் இரா. இரவி !
- செல்(ல) மகன் – ஒரு பக்க கதை
- எழுத நினைத்தேன்
- என் அப்பா
- எம்.எல்,ஏ ஆக உனக்கு என்ன தகுதி இருக்கு..?
- ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !
- இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி !
- கூட்டத்தலைவர் தான் முதலில் பேச வேண்டும்…!
- தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி !
- காதல் …!
- பேஜ்மேக்கர்
- இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !
- கவிஞர் இரா .இரவியின் ஆத்தி சூடி !
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- யாசகம் ! கவிஞர் இரா .இரவி !
- பயணம் ! கவிஞர் இரா .இரவி !
- ஏழ்மையின் எதிர்பார்ப்பு ! கவிஞர் இரா .இரவி !
- அரசு ஊழியர் போராட்டம்.
- கொஞ்சம் லொள்ளு…!
- கொஞ்சம் லவ்வு…!
- நாக்குல சனி இருக்கான்னு பார்த்துனு போவாரு..!
- கேள்வி வளையம்...
- முரண்பாடு – கவிதை
| Posted: 21 Feb 2016 09:50 AM PST சோமு வாத்தியார், அவர் வசிக்கும் ஊரிலிருந்த விவசாயி மாடசாமிக்கு இரண்டு லட்சம் கடன் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. மாடசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சோமு வாத்தியார், மாடசாமியின் வீட்டுக்குச் சென்றார். மாடசாமியின் வீட்டுக் கதவை வாத்தியார் தட்டினார். மாடசாமியின் மகள் விமலா கதவைத் திறந்தாள். " யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டாள். " மாடசாமியைப் பாக்கணும்" " உள்ள வாங்க! அப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார் " " மாடசாமிக்கு ... |
| Posted: 21 Feb 2016 08:43 AM PST என்னவளுக்கு என்னிடம் கோபம்!! ஆசை ஆசையாய் பேசுபவளை ஆத்திரப்பட்டு உதிர்த்துவிட்டேன் வார்த்தைகளை!! வாய் நிறைய பேசிக்கொண்டே இருப்பவளிடம் வார்த்தைகள் ஏதும் இல்லை!!! அவள் மெளனம் முள்ளாய் குத்தியது!!! காயப்பட்டவளை கட்டி அணைக்க நினைத்தேன்!! ம்ஹூம்... அவள் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன??? அன்பாய் ஓர் முத்தம் ஆசையாய் ஓர் தீண்டல் நேசமாய் ஓர் புன்னகை பாசமாய் ஓர் குவளை தேனீர் காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!! இதிலென்ன கஷ்டம் எனக்கு யோசித்தேன்!! மண்டியிட்டேன் மனைவியிடம்! ... |
| மனமது செம்மையானால் - சிறுகதை ! Posted: 21 Feb 2016 08:41 AM PST - ''அப்பா... வரகரிசி அடை செஞ்சுருக்கேன்; சாப்பிட்டு பாருங்க. உடம்புக்கு ரொம்ப நல்லது,'' ஓய்வாக உட்கார்ந்திருந்த அப்பாவிடம் தட்டை நீட்டினாள் ஆர்த்தி. அடையை சாப்பிட்டவாறே, ''நல்லாயிருக்கும்மா... உங்கம்மா, ஒருநாள் கூட இப்படி ருசியா செய்ததில்ல,'' என்றார். ''ஆமாம்... என்னைக்காவது ஒருநாள் மகள் செய்தா உங்களுக்கு அதிசயமாத்தான் இருக்கும்,'' என்ற, அம்மாவைப் பார்த்து, 'கலகல' வென்று சிரித்தாள் ஆர்த்தி. மகளை யோசனையோடு பார்த்த குணாளன், 'பிடித்த பாடமாக ஹோம்சயின்ஸ் எடுத்துப் படித்து, வீட்டை ... |
| Posted: 21 Feb 2016 07:09 AM PST எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் நாங்கள் மட்டும் கேட்க நான் சொன்ன புது கவிதை இது. என் முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் **** நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா, உண்மையின் அருமை விளம்ப வந்தேன். வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம் இருட்டு அவசியமல்லவா? உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம் பொய்கள் பற்றி சொல்லவா? உண்மை இங்கே மலடாய் இருக்க பொய் குட்டிகள் போடுது. பொய்யின் குட்டியை பார்த்து உண்மை, குட்டிக்கரணம் போடுது. பிழைப்புக்காக பொய்கள் சொன்னது பழங்கதையாய் போனது, பொய் ... |
| என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Feb 2016 06:55 AM PST என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர் இன்று விதை நெல்கள் காணமல் போனது விதைகள் அயல்நாட்டான் முடிவானது இயற்கை விவசாயம் அழிந்து விட்டது செயற்கை உரங்கள் பெருகி விட்டது பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது பூச்சிகள் பல புதிது புதிதாக உருவானது உலகமயம் ... |
| Posted: 21 Feb 2016 06:19 AM PST மகள் ! கவிஞர் இரா. இரவி ! உறவுகளில் உன்னதமானவள் மகள் உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள் மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள் மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள் கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள் கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள் பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள் பாசத்தில் ஈடு இணையற்றவள் பெற்றோரைப் பழித்தால் பொறுக்காதவள் பொங்கி எழுந்து விடுபவள் இளவரசியாக இல்லத்தில் இருப்பவள் இளவரசனைவிட பெற்றோரை நேசிப்பவள் அப்பாவின் செல்லமாய் வளர்பவள் அம்மாவிடமும் அன்பு ... |
| Posted: 21 Feb 2016 04:17 AM PST ![]() |
| Posted: 21 Feb 2016 04:12 AM PST எழுத்தாணியால் எழுத நினைத்தேன் எண்ணங்கள் இல்லை! தூரிகையால் வரைய நினைத்தேன் வண்ணங்கள் இல்லை! பட்டாம்பூச்சியாய் பறக்க நினைத்தேன் சிறகுகள் இல்லை! எல்லாமுமாய் நீ இருக்க என் அருகில் நீ இல்லாத போது எழுத எதுவும் என்னிடம் இல்லை!! வெற்றிடமே வாழ்க்கை என்றான பொழுது வார்த்தைக்கும் வண்ணத்துக்கும் எண்ணத்துக்கும் எதுவும் சொந்தமில்லை!! |
| Posted: 21 Feb 2016 04:03 AM PST அப்பா என் அப்பா, காலம் உங்களை நன்றாக வழி நடத்தியதா இல்லை வலியே வாழ்க்கையா? என்றெல்லாம் இப்போது யோசிக்க விரும்பவில்லை!! இருந்தீர்கள் - ஒரே மகனாய் பிறந்து இளவரசன் போல இருந்தீர்கள்!! கூடா நட்பு கேடாய் முடியும் என்ற சொல்லுக்கு உங்களை விட உதாரணம் எனக்கு தேவையில்லை!! அப்பா, அம்மா, பாட்டியெல்லாம் ராஜா போல வளர்த்து வந்தாலும், உங்களுக்குள் ஒரு மிருகம் எப்படி வந்ததென நானறியேன், ஒரு வேளை உங்கள் தகப்பன் அப்படி இருந்திருப்பாரோ !! ஏன் அப்படி நினைதேன் என்றால் பாட்டனுடன் ... |
| எம்.எல்,ஏ ஆக உனக்கு என்ன தகுதி இருக்கு..? Posted: 21 Feb 2016 03:42 AM PST ![]() |
| ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Feb 2016 03:34 AM PST ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! அறவழியே ஆள்வோரின் வழி என்றான் ! அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் ! அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் ! அன்பால் உலகை ஆளலாம் என்றான் ! எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் ! எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் ! எந்த உயிரையும் கொல்லாதே என்றான் ! எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் ! உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் ! ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் ... |
| இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Feb 2016 03:16 AM PST இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி ! வாக்களிக்கப் பணம் வாங்குவதில்லை என்று வாக்காளர்கள் இனி ஒரு விதி செய்வோம் ! குளித்து விட்டு வந்து யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுமாம் ! வாக்காளர்களும் வாக்களிக்க பணம் பெறும் வழக்கத்திற்கு முடிவு கட்டுவோம் ! புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில் விழுந்த மீனாய் துடிப்பதை நிறுத்துவோம் ! வாக்களிக்க வாங்கும் பணம் ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் பெரும் துன்பம் தரும் ! வேறு மாநிலங்களால் நடக்கவில்லை வேதனை தரும் இந்த அவலம் ! தமிழகத்தில் ... |
| கூட்டத்தலைவர் தான் முதலில் பேச வேண்டும்…! Posted: 21 Feb 2016 03:01 AM PST கடந்த 1928-ல், கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்தார் நேரு. 'சாரதா சட்டம்' கொண்டு வருவது பற்றி ஆதரவு, எதிர்ப்பு என, இரு அணிகள் இருந்தன. – அப்போது, கூட்டத்திற்கு, யார் தலைமை தாங்குவது என்று பிரச்னை எழுந்தது. நேரு பேச எழுந்த போது, 'தலைவர் யார் என்று தீர்மானிக்கப்படாமல் இருக்கும் போது, நேரு பேசக்கூடாது…' என்று ஒரு அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மைக்' முன் வந்தார் நேரு. எல்லாரும் அமைதியாக இருக்கும்படி கூறி, தாம் முதலில் பேசப் போவதாக கூறினார். 'கூட்டத்தலைவர் தான் ... |
| தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Feb 2016 02:18 AM PST தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி ! தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போதெல்லாம் ! இலங்கை இராணுவம் உடனே வந்து இரக்கமின்றி சுடும் ! கைது செய்யும் ! கடலில் ஆதிக்கம் செலுத்தும் கண்டபடி சுட்டுத் தள்ளும் ! படகுகளைப் பறிமுதல் செய்யும் பாவம் வலைகளையும் அறுக்கும் ! மீன்களையும் பறிமுதல் செய்யும் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் ! இலங்கை சிறையில் அடைக்கும் இன்னும் சித்திரவைதைகள் செய்யும் ! தானம் தந்த கச்சத் தீவில் தமிழர்களின் தலை தெரிந்தால் சுட்டு விடும் ... |
| Posted: 21 Feb 2016 02:11 AM PST ![]() |
| Posted: 21 Feb 2016 12:25 AM PST பேஜ்மேக்கர் முழுவதுமாக கற்றுக்கொள்ள எனது வலை தளத்திற்கு வாருங்கள்... pagemaker, Photoshop, Coreldraw, Indesign, Mathtype, etc சாப்ட்வேர்கள் இலவசமாக டுடோரியல் மற்றும் வீடியோ டுடோரியல் ஆக உள்ளது... |
| இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 20 Feb 2016 11:54 PM PST இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி ! இன்று புதிதாய் பிறந்தோம் நாம் ! இனி நடப்பவை நல்லவையாகட்டும் ! பழைய கவலைகளை மறந்திடுவோம் ! பழைய வலிகளை மறந்திடுவோம் ! வேற்றுமைகளை விடுத்து இணைவோம் ! வேதனைகளை மறந்து மகிழ்ந்திடுவோம் ! பிறந்த குழந்தை சூதுவாது அறியாது ! பிறந்த குழந்தையின் மனம் பெற்றிடுவோம் ! குழந்தைக்கு சாதிமத பேதம் தெரியாது ! குழந்தையின் குணத்தைப் பெற்றிடுவோம் ! பொய் பேசத் தெரியாது குழந்தைக்கு ! பொய் பேசாமல் மெய்யே பேசிடுவோம் ! குழந்தை கூடஇருந்து குழி பறிக்காது ... |
| கவிஞர் இரா .இரவியின் ஆத்தி சூடி ! Posted: 20 Feb 2016 11:52 PM PST கவிஞர் இரா .இரவியின் ஆத்தி சூடி ! அன்பு செய் ! ஆறுதல் கூறு ! இயல்பாய் இரு ! ஈவு இரக்கம் கொள் ! உலகை அறி ! ஊதாரித்தனம் விடு ! எதற்கும் கலங்காதே ! ஏன் எனக்கேள் ! ஐயம் நீக்கு ! ஒன்றுபட்டு வாழ் ! ஓடாது நில் ! ஒளவையைப் படி ! -- . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி http://tamil.pratilipi.com/kavignar-eraravi https://www.facebook.com/rravi.ravi www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.eegarai.net/sta/eraeravi இறந்த ... |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 20 Feb 2016 11:50 PM PST ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! அறிகின்றன பறவைகள் அறியவில்லை மனிதன் கனமழை ! மதங்களை வென்றது மனிதநேயம் மழை ! ஆறவில்லை வெள்ளத்தின் ரணங்கள் வேண்டாம் அரசியல் ! வேண்டாம் விளையாட்டு இனியாவது உணர்க இயற்கையின் பலம் ! போதும் அறிவுரை வேண்டும் நடைமுறை இயற்கை நேசம் ! வீழ்வது தவறல்ல எழாதது தவறு எழுந்து நட ! வேண்டாம் வரிகள் மூன்றுக்கு மேல் ஹைக்கூ ! கூச்சலின்றி நடந்தது பாராளுமன்றம் கனவில் ! சொன்னவன் எங்கே ? பத்துப் பொருத்தம் மணமுறிவு ! பிறந்தவுடனும் இறக்கும் ... |
| Posted: 20 Feb 2016 11:49 PM PST யாசகம் ! கவிஞர் இரா .இரவி ! யாசகம் கேட்பது இழிவு என்றாலும் யாசகம் இல்லை எனல் அதினினும் இழிவு ! அன்றே உரைத்தார் நமது திருவள்ளுவர் அதனை மனதில் கொள்வோம் ! வசதி படைத்தவர்கள் வளங்கெ வேண்டும் வாடியோருக்கு வழங்கும் மனம் வேண்டும் ! ஏழ்மையினால் கேட்க நேரிட்டால் இல்லை என்று சொல்லாது வழங்குக ! கொடுத்துச் சிவந்த கரங்கள் இங்கு உண்டு இறந்தபின்னும் வாழ்வு அவர்களுக்கு உண்டு ! கர்ணன் அளவிற்கு கொடுக்காவிட்டாலும் கையால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் ! ஈகை குணம் மனிதனுக்கு அழகு தரும் இரக்க ... |
| Posted: 20 Feb 2016 11:47 PM PST பயணம் ! கவிஞர் இரா .இரவி ! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பயணம் தொடரும் அதுவே வாழ்க்கை ! ஆதியில் பயணம் பெற்றோருடன் அடுத்த பயணம் வாழ்க்கைத் துணையுடன் ! பெற்ற குழந்தைகளுடன் தொடரும் பயணம் பாடங்கள் கற்பிக்கும் ! உலகைப் புரிந்துக் கொள்ள முடியும் உணர்வுகளை அறிந்துக் கொள்ள முடியும் ! நேற்று போல இன்று இருப்பதில்லை இன்று போல நாளை இருப்பதில்லை ! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம் ஓடுகின்ற கடிகார முள் போல ஓடும் ! நல்வழி நடந்தால் நிம்மதியாகும் தீய வழி நடந்தால் நிம்மதி போகும் ! இலக்கு ... |
| ஏழ்மையின் எதிர்பார்ப்பு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 20 Feb 2016 11:43 PM PST ஏழ்மையின் எதிர்பார்ப்பு ! கவிஞர் இரா .இரவி ! மாட மளிகை கூட கோபுரம் அல்ல மண்ணில் வாழ சிறு வீடு போதும் ! ஆடம்பர இராச உடைகள் அல்ல அவசியமான சாதரண ஆடை போதும் ! விண்ணில் பறக்க விமானம் அல்ல விலைவாசி கட்டுக்குள் இருந்தால் போதும் ! அடிப்படைத் தேவைகளுக்கே போராட்டம் அல்லும் பகலும் உழைத்தும் போராட்டம் ! வாழ்வாதாரதிற்கு வகை செய்தால் போதும் வாடி வதந்கிடத் தேவை இல்லை ! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எல்லோரும் அவசியம் உழைக்க வேண்டும் ! தனியார் உடைமைகள் பொது உடைமையாக வேண்டும் தனி ... |
| Posted: 20 Feb 2016 09:44 PM PST தற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா?.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். |
| Posted: 20 Feb 2016 08:45 PM PST ![]() |
| Posted: 20 Feb 2016 08:44 PM PST ![]() |
| நாக்குல சனி இருக்கான்னு பார்த்துனு போவாரு..! Posted: 20 Feb 2016 08:39 PM PST - — செயின்ல நரிப்பல் மாதிரி ஏதோ போட்டிருக்கியே… என்ன அது? – என் மாமியாரை கடிச்ச நாயோட பல்! – பொருநை பாலு – —————————– – தலைவர் டி.வி.ல பேட்டி கொடுக்கிறதுக்கு முன்னாடி ஏன் சோசியரை பார்க்கிறாரு…? – நாக்குல சனி இருக்கான்னு பார்த்துனு போவாரு..! – வி.சாரதி டேச்சு – ———————————— – உங்க வீட்ல டி.வி.ரிப்பேர்தானே…? – அட ஆமாம்…எப்படி கண்டு பிடிச்சே? – அழுகை சத்தம் இல்லாமல் சிரிப்புச் சத்தமும் கும்மாளமுமா இருக்கியே, அதான் கேட்டேன்…! – அமுதா அசோக்ராஜா – ————————————- |
| Posted: 20 Feb 2016 07:24 PM PST 'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்; என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...' என்பர் சிலர்! - இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப் பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும், எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்! - இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா... எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது தான்! - 'பெண்ணிடம் ... |
| Posted: 20 Feb 2016 07:14 PM PST - சுட்டெரிக்கும் சூரியனை வசைபாடுகிறோம் அதுவே அடைமழையில் வெயில் வந்தால் வாழ்த்துப் பாடுகிறோம்! - 'தரிசு' என்று பெயர் சூட்டி தள்ளி வைக்கிறோம் அதுவே புதையல் இருக்கும் பூமியாக இருந்தால் முத்தமிடுகிறோம்! - புயலோடு காற்றடித்தால் புறம் பேசுகிறோம் அதுவே இதமான தென்றல் என்றால் வரவேற்கிறோம்! - ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தால் ஆற்றாமையால் கொதிக்கிறோம் அதுவே அமைதியாக இருந்தால் தெய்வமாக துதிக்கிறோம்! - துன்பம் வந்தால் தூற்றுவதும் இன்பம் வந்தால் பாராட்டுவதும் மனித இனத்தின் மாறாத ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




