Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா மார்ச் 3–ந்தேதி தொடங்கி 14–ந்தேதி வரை நடக்கிறது

Posted: 04 Feb 2016 10:49 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 3–ந்தேதியில் இருந்து 14–ந்தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முக்கிய விருந்தினராக ஆந்திர மாநில வன

விமானத்தின் மைக்கில் பாட்டுப் பாடிய சோனு நிகாம்: பணிப்பெண்கள் சஸ்பெண்ட்

Posted: 04 Feb 2016 10:47 PM PST

விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பை வெளியிட உதவும் ஒலிபெருக்கி சாதனத்தை பயன்படுத்தி பிரபல பாடகர் சோனு நிகாம் பாட்டுப்பாட அனுமதியளித்ததற்காக பணிப்பெண்கள் உள்பட ஐந்து பேரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில் வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை மூலம் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

Posted: 04 Feb 2016 09:50 PM PST

கேரளாவில் சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக மத்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட முக்கிய

பா.ஜ.க.வின் தவறான பிரசாரத்தை முறியடிக்க மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

Posted: 04 Feb 2016 09:50 PM PST

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கேரள சட்டசபை கூடியது: கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் அமளி – வெளிநடப்பு

Posted: 04 Feb 2016 09:36 PM PST

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், பார் ஊழல், சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராடி வருகிறார்கள். கடந்த சட்டசபை கூட்டம் நடந்தபோது எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக நிதி மந்திரி மாணி பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அதுபோல

பிரதமர் மோடி மூன்று நாள் சூறாவளி சுற்றுப்பயணம்: தெற்காசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்

Posted: 04 Feb 2016 09:30 PM PST

அசாம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். தலைநகர் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று அசாம் மாநிலத்துக்கு செல்லும் மோடி, வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக திப்ருகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ கெமிக்கல்

7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு

Posted: 04 Feb 2016 09:20 PM PST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10

பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கு 11 பேருக்கு மரண தண்டனை: மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு

Posted: 04 Feb 2016 07:26 PM PST

மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 55 குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு விவசாய நிலத்தை ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் ஆக்கிரமிக்க முயன்று வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி, அந்த கும்பல், நிலத்தை பறிக்க

ஹேமமாலினிக்கு அளிக்கப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்யுங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 04 Feb 2016 07:20 PM PST

நடிகையும், பா.ஜனதா எம்.பி.யும் ஆன 67 வயது ஹேமமாலினிக்கு நாட்டிய பள்ளி அமைக்கும் பொருட்டு, மும்பை புறநகர் ஒஷிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுரமீட்டர் காலி மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள இந்நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்துக்கு ஒதுக்கீடு

கெஜ்ரிவால் ஷூ வாங்குவதற்காக ரூ.364 அனுப்பி வைத்த தொழிலதிபர்

Posted: 04 Feb 2016 04:26 PM PST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்வதற்காக, அவருக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சுமித் அகர்வால் ஒருவர் ரூ. 364-ஐ அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவை மீண்டும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆட்படுத்த வேண்டாம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் ரதம் மூலம் தமிழக மக்களை சந்தியுங்கள்: அமித் ஷா

Posted: 04 Feb 2016 04:23 PM PST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், மத்திய அரசின் சாதனைகளை டிஜிட்டல் ரதம் மூலம் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அரசின்

ஜனநாயகம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்

Posted: 04 Feb 2016 04:17 PM PST

கவர்னரின் முடிவுகளை கோர்ட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜனநாயக நடைமுறைகள் கொல்லப்படும்போது வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறியது. அருணாசல பிரதேசத்தில், நாபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. திடீரென 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்களும் பலியானதாக அறிவிப்பு

Posted: 04 Feb 2016 04:08 PM PST

காஷ்மீரின் சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்களும் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீரவணக்கம் செலுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் புதைந்தது. அப்போது பணியில் இருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரி மற்றும் 9 வீரர்கள் உயிருடன் புதைந்தனர். அவர்கள் அனைவரும் மெட்ராஸ் பட்டாலியனை சேர்ந்தவர்கள்.

டெல்லியில் மாநில காங்.தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

Posted: 04 Feb 2016 03:51 PM PST

டெல்லியில் இன்று ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட அனைத்து மாநில தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்க காலத்தில் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்த

அன்னா ஹசாரே அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

Posted: 04 Feb 2016 03:12 PM PST

மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் அலுவலகம் உள்ளது. அங்கு விவசாயி ஒருவர், நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் போலீசார் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த நபரின் பெயர் பாலு என்றும், நிலப்பிரச்சினை காரணமாக, அவர்

ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: மத்திய மந்திரி தகவல்

Posted: 04 Feb 2016 02:49 PM PST

வருகிற 25-ந்தேதி தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு கூறினார். மத்திய ரெயில்வே பட்ஜெட் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெர்மன் அகதிகள் முகாமிலிருந்து 8 வயது மகளுடன் மீட்கப்பட்ட இந்தியப் பெண்

Posted: 04 Feb 2016 02:19 PM PST

பலருக்கு வெறும் பொழுது போக்காக மட்டுமே உள்ள சமூக வலைதளங்கள் தான், பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவியாய் உள்ளது. அந்த வகையில், சமுக வலைதளத்தின் மூலமாக ஜெர்மன் நாட்டு அகதிகள் முகாமில் சிக்கித்தவித்த இந்தியப் பெண் ஒருவர் தனது 8 வயது மகளுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று, இந்தியாவைச் சேர்ந்த குர்ப்ரீத் என்ற தாய் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றினார். வீடியோவில் இந்தியில்

சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்

Posted: 04 Feb 2016 01:56 PM PST

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களை பேசுகிறார். வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 04 Feb 2016 01:32 PM PST

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து பஸ்தர் மண்டல காவல் துறை ஐ.ஜி. எஸ்.ஆர்.பி.கல்லூரி கூறியதாவது:

சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு தூக்கு தண்டனை

Posted: 04 Feb 2016 12:41 PM PST

மராட்டிய மாநிலம் நாக்பூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் முகேஷ். டாக்டர். இவர் அப்பகுதியில் சிறிய மருத்துவமனை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான ராஜேஷ் தனலால் தவாரே (வயது 21) மற்றும் அரவிந்த் அபிலாஷ் சிங் (25) ஆகியோர், இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்காக, இரண்டாம் வகுப்பு படித்து வந்த முகேசின் 8 வயது மகன் யூக் சந்தக்கை கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடத்தினர். பின்னர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™