Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகாவில் வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

Posted: 09 Jan 2016 08:55 PM PST

uy

uyமிசிசாகாவின் வடகிழக்குப் பகுதியில் இன்று மாலை வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலையில் அடிபட்டு மோசமான காயங்களுக்கு ஆளான நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான அந்த மூதாட்டி 70 வயது மதிக்கத் தக்கவர் என்றும், விபத்தை அடுத்து அவர் உயிராபத்தான நிலையில் இருந்தார் என்றும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூதாட்டி Dixie மற்றும் Rathburn வீதிகளின் சந்திப்புப் பகுதியைக் கடக்க முயன்ற போது இன்று சனிக்கிழமை மாலை 5.17 மணியளவில் வாகனத்தால் மோதப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.uy

விபத்துத் நடந்த இடத்தில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இருப்பதாக தெரிவிக்கபடபட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் யாரேனும் தகவல் தெரிப்பதானால் 905-453-3311 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post மிசிசாகாவில் வாகனம் மோதி மூதாட்டி படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காவல்த்துறையினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற நபருக்கு வலைவீச்சு

Posted: 09 Jan 2016 09:19 AM PST

Search_on_for_suspects_-_01092016

Search_on_for_suspects_-_01092016சந்தேக நபர் ஒருவர் காவல்த்துறையினரின் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 7.30 அளவில் குறித்த சந்தேக நபர் வாகனம் ஒன்றில் நெடுஞ்சாலை 407இல் பயணித்துக்கொண்டிருந்தார் என்றும், எனினும் அவரின் அந்த பயணம் ஆபத்தானதாக முறையில் பயணித்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனால் தாங்கள் குறித்த அந்த நபரை வாகனத்தை நிறுத்துமாறு சமிக்கை வழங்கியதாகவும், எனினும் அந்த நபர் தமது அந்த சமிக்கையை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பயணித்ததாகவும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

அதனால் குறித்த அந்த நபரின் வாகத்தை தாம் துரத்திச் செல்ல நேரிட்டதாகவும், அப்போது நெடுஞ்சாலையில் தவறான வழித்தடத்தி்ன் ஊடாக தப்பிச் செல்ல முயன்ற அந்த வாகனம், அந்த வழியே வந்த பிறிதொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது என்றும் தெரிவித்துள்ளனர்.Search_on_for_suspects_-_01092016

அப்போது குறித்த நபர் விபத்துக்குள்ளான தனது வாகனத்திலிருந்து தப்பித்து வெளியே ஓடியதுடன், அங்கு நிறுதி வைக்கப்பட்ட காவல்த்துறையினரின் வாகனத்தினை அபகரித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

வாகனம் விபத்துக்காளனதை அடுத்த தாம் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற வேளையிலேயே தமது வாகனம் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு எனவும் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மிசிசாகாவின் Winston Churchill Boulevard மற்றும் Eglinton Avenue பகுதியில் தமது வாகனம் கைவிடப்பட்டிருந்ததாகவும், அதனை செய்மதி வழிகாட்டிக் கருவியின் உதவியுடன் தாம் அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.

அந்த இடத்திற்கு சென்று தமது வாகனத்தினை மீட்டுள்ள போதிலும், சந்தேக நபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சந்தப்பத்தில் இடம்பெற்ற குறித்த வாகன விபத்தில் மூன்று பேர் மிக மோசமான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

The post காவல்த்துறையினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற நபருக்கு வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சின்னமுத்து நோய்ப் பரவல்: பீல் பிராந்திய பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Posted: 09 Jan 2016 08:31 AM PST

Public_Health_-_01092016

Public_Health_-_01092016சின்னமுத்து நோய்ப் பரவல் தொடர்பில் பீல் பிராந்திய பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரம்டன் மற்றும் மிசிசாகா பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை உள்ளடக்கியதான அறிக்கை ஒன்றையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

பிரம்டன் பகுதிகளில் சிறுவர் ஒருவருக்கு சின்னமுத்து நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த அந்த சிறுவர் மூலம் பிரம்டன் மற்றும் மிசிசாகா பகுதிகளில் நோய்க் கிருமிகள் பரவியிருக்கக் கூடும் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்த சிறுவன் சின்னமுத்து நோய் மோசமான அளவில் தாக்கிவரும் நாடு ஒன்றிலிருந்து அண்மையில் கனடாவுக்கு வந்திருந்தார் என்றும்,கனடாவை வந்தடைந்த பின்னரே நோயிக் அறிகுறி வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர்.Public_Health_-_01092016

கடந்த முதலாம் திகதிக்கும் ஐந்தாம் திகதிக்கும் இடையிலேயே அந்த நோய்பரவல் இடம்பெற்றிருக்கக் கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் அந்த இடங்களில் நடமாடியோர் மருத்துவ ரீதியில் மேலதிக கவனத்தினை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தமது உடல்நிலையினை தொடர்ச்சியாக அவதானிக்குமாறும், ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post சின்னமுத்து நோய்ப் பரவல்: பீல் பிராந்திய பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்?

Posted: 09 Jan 2016 08:18 AM PST

j

jமாம்பழம் என்ற பெயரை கேட்டாலே நாவிலிருந்து எச்சில் ஊறும்.

மாம்பழத்தினை அன்றாடம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

225 கிராம் மாம்பழத்தில் (1 கப்) உள்ள சத்துக்கள்

105 கலோரி, 75 % விட்டமின் சி, 25 % விட்டமின் ஏ, 11 % விட்டமின் பி6 (இதய நோய் தடுப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது), 9 % காப்பர் (இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திற்கு உதவுகிறது), 7 % பொட்டாசியம், 4 % மெக்னீசியம் உள்ளது.

புற்றுநோயை எதிர்க்கிறது

ஆன்டி ஆக்ஸிடண்ட்களான, quercetin, isoquercitrin, astragalin, fisetin, gallic acid போன்றவை மாம்பழத்தில் நிறைந்துள்ளதால், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பெருங்குடல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

கொலஸ்ட்ரால்

மாம்பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது, மேலும் புதிதாத உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழத்தில், பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பினை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தின் இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதனை சூடுபடுத்திய பின்னர், வடிகட்டி குடித்து வந்தால், இன்சுலின் ஹார்மோனை சீரான முறையில் ஒழுங்குப்படுத்துகிறது.j

தோள் பளபளப்புக்கு

மாம்பழத்துண்டினை எடுத்து முகத்தில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, குளித்தால் முகக்சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளபாக இருக்க உதவும்.

கண்பார்வை

மாம்பழத்தில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு விட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

செரிமானப் பிரச்சனை

மாம்பழத்தில், pre-biotic dietary, விட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் 25 சதவீதமான கரோட்டினாய்டுகள் சேர்ந்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

பெண்களுக்கு சிறந்தது

இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்தசோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

மேலும், சீரரான மாதவிடாய்க்கும் இதனை சாப்பிடலாம்.

The post மாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எயர் கனடா பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம்

Posted: 09 Jan 2016 08:13 AM PST

Air_Canada_-_12252015

Air_Canada_-_12252015எயர் கனடா பயணிகள் விமானம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை அவசர தரையிறக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது.

623 என்ற இலக்கம் கொண்ட அந்த எயர் கனடா விமானம் நேற்றைய தினம் ஹலிஃபெக்சிஸ் விமான நிலையத்திலிருந்து ரொரன்ரோ நோக்கி புறப்பட்டிருந்தது.

எனினும் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் ஹலிஃபெக்ஸ் ஸ்டான்ட்ஃபீல்ட் அனைத்துலக விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் பேச்சாளர் ஒருவர் விமானம் அவசர தரையிறக்கம் செய்ய்பபட்டமை தொடர்பில் தகவல் தெரிவிக்கையில்,பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையினுள் புகை வெளியானதை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தொடர்பிலோ, விமானத்தின் தற்போதய நிலை தொடர்பிலோ மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.Air_Canada_-_12252015

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எயர் கனடா நிறுவனம் இதுவரையில் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எயர் கனடா நிறுவனத்தினை தொடர்பு கொள்ள ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post எயர் கனடா பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாப்பிட்டு முடித்த பின்னர் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

Posted: 08 Jan 2016 05:22 PM PST

7

7உணவினை சாப்பிட்டு முடித்த பின்னர் சிலர் மேற்கொள்ளும் தவறான பழக்கவழக்கங்களால் சாப்பிட்ட உணவின் பலன் உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது.

இதனால் ஏற்படுவது, சத்துக்குறைபாடு மட்டுமின்றி அதனால் சில வித நோய்களும் ஏற்படுகின்றனர்.

எனவே நாம் சாப்பிடும் உணவின்போதும், சாப்பிட்டு முடித்த பின்னர் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.

சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது

உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.2

உடற்பயிற்சி செய்யக் கூடாது

உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது.

சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது. காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.3

சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது

சாப்பிட்டவுடன் குளித்தால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும்.

குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.ik

சிப்ஸ், அப்பளம்

உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும். "தொலைக்காட்சி' பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடாதீர்கள்.

உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக் கொள்ளும். அப்போது மனம் ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.4

சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடக்கூடாது

காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்தும் பிற சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.7

The post சாப்பிட்டு முடித்த பின்னர் இதையெல்லாம் செய்யாதீர்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™