Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நான்காவது மாடியில் இருந்து தரையில் குதித்த குடும்பத்தினர் மருத்துவமனையில்

Posted: 07 Jan 2016 09:09 PM PST

giui

giuiகியூபெக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் நான்காவது தளத்தில் உள்ள வீடு ஒன்று தீப்ற்றியதை அடுத்து, அதில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டில் இருந்தவர்கள் கீழே குதித்துள்ளனர்.

தாய்,தந்தை, 10 வயது சிறுவன் ஆகிய மூவருமே அவ்வாறு கீழே குதித்திருந்தனர் எனவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தந்தையும் மகனும் காயங்களுக்கு ஆளான போதிலும், அவர்களுக்கு உயிராபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அந்த பத்து வயது சிறுவனுக்கு தீ காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் தாயார் கோமா நிலையில் இருப்பதாக அவரின் சகோதரர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 4.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.giui

கட்டத்தில் தீபற்றிக் கொண்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்திருந்தனர்.

சுமார் 20 வீடுகளில் இருந்தவர்கள் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.

கட்டத்தில் தீ பற்றிக்கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பிலான அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நான்காவது மாடியில் இருந்து தரையில் குதித்த குடும்பத்தினர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தானாவே மருத்துவமனைக்கு சென்ற நபர்

Posted: 07 Jan 2016 10:08 AM PST

victim_walks_in_to_Etobicoke_hospital_01072016

victim_walks_in_to_Etobicoke_hospital_01072016துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் தானாகவே ஈட்டோபிக்கோ மருத்துவமனைக்கு சென்று சேர்ந்துள்ளமை தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை வேளை 2.20 மணியளவில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் மருத்துவமனையை தனியாகவே சென்று சேர்ந்துள்ளதாகவும், அவரின் கையிலும், உடலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பின்னர் அவர் மாற்றப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குறித்த இளைஞன் மருத்துவமனைக்கு வந்திருந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.victim_walks_in_to_Etobicoke_hospital_01072016

அத்துடன் இன்று அதிகாலையில் Vice Regent Boulevard மற்றும் நெடுஞ்சாலை 27 பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என காவல்த்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

The post துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தானாவே மருத்துவமனைக்கு சென்ற நபர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடகொரியாவின் ஐதரசன் குண்டு சோதனை: கனடா கண்டனம்

Posted: 07 Jan 2016 09:06 AM PST

north_-_korea_-_01072016

north_-_korea_-_01072016ஐதரசன் குண்டு பரிசோதனையை நடாத்தியதாக வட கொரியா அறிவித்துள்ள நிலையில், வட கொரியாவின் அந்த நடவடிக்கையை கனடா கண்டித்துள்ளது.

வட கொரியாவின் இந்த நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள,கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோர், இது வடகொரியாவின் பொறுப்பற்ற நடத்தை என்றும் விபரித்துள்ளார்.

வட கொரியா அனைத்துலக அமைத்தியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் இந்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வட கொரியாவின் இந்த நவடடிக்கையால் அந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

வடகொரியா மேற்கொள்ளும் அணுவாயுத சோதனைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்றும், அது ஏனைய நாடுகளை ஆத்திரமூட்டும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.north_-_korea_-_01072016

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை, பழமைவாதக் கட்சியின் வெளியுறவு விமர்சகர் ரொனி கிளெமென்டும் வன்மையாக கண்டித்துள்ளார்.

வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளுக்க எதிராக ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உலக அமைதிக்கு அச்சுறுத்தலான விடயங்களையே தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியர், உலக நாடுகளிடம் இருந்து தன்னைத் தனே பிரித்து வைத்துள்ளதுடன், தனது நாட்டு மக்களையும் அடக்கி ஒடுக்கி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

The post வடகொரியாவின் ஐதரசன் குண்டு சோதனை: கனடா கண்டனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ Corso Italia பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 07 Jan 2016 08:56 AM PST

police_line_-_12012015 (1)

police_line_-_12012015 (1)ரொரன்ரோவின் Corso Italia பகுதியில் இன்று அதிகாலை கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆண் நபர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவின்-லெவின் (7-11) வணிக நிலையம் ஒன்றின் வெளியில் இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வணிக நிலையம் Dufferin Street மற்றும் St. Clair Avenue பகுதியில் அமைந்துள்ள நிலையில், தகவல் அறிந்த காவல்த்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

சம்பவ இடத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மிகவும் மோசமான காயங்களுடன் உயிராபத்தான நிலையில் கிடந்தாகவும், அவர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.police_line_-_12012015 (1)

குறித்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் கறுப்பு இன ஆண் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அந்த கறுப்பு இன ஆண் நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் சம்பவத்தினை தொடர்ந்து Dufferin Street இல் வடக்கு திசை நோக்கி தப்பிச் சென்றதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த கறுப்பின ஆண் நல்ல கட்டான உடல்வாகு கொண்ட, சுமார் ஐந்து அடி ஏழு அங்குல உயமுடையயவர் என்றும், கறுப்பு நிற குளிர் அங்கி அணிந்திருந்ததார் என்றும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோ Corso Italia பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாஜூதீனின் மரணம்! விரைவில் கைதுகள் இடம்பெறும்!- ராஜித

Posted: 07 Jan 2016 07:14 AM PST

waseem-thajudeen

waseem-thajudeenதாஜூதீனின் மரணம் தொடர்பில் தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் எதனையும் மறைக்க தயார் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஒன்றும் மறைக்கப்படமாட்டாது, வழக்குக்கு வழக்கு முடிவுகள் வெளியாகின்றன.

கைது செய்வதற்கு இன்றும் சிறிய இடைவெளியே உள்ளன.

இந்த கைதுகளை தடுப்பதற்காகவே நாட்டில் பாரிய குழப்பநிலையை தோற்றுவித்து, நாட்டில் ஸ்திரத்தன்மையை இல்லாது செய்யவே தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

The post தாஜூதீனின் மரணம்! விரைவில் கைதுகள் இடம்பெறும்!- ராஜித appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™