Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் முதலாவது பெண் முதல்-மந்திரி மெகபூபா இன்று பதவி ஏற்பார்: பா.ஜனதா ஆதரவு

Posted: 07 Jan 2016 11:00 PM PST

காஷ்மீரில் முதலாவது பெண் முதல்–மந்திரியாக மெகபூபா இன்று பதவி ஏற்கிறார். காஷ்மீர் முதல்–மந்திரி முப்தி முகமது சையது உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து நேற்று விமானத்தில் ஸ்ரீநகர் கொண்டு செல்லப்பட்டது.

திருவனந்தபுரம் அருகே வயலில் குண்டு வெடித்து 13 பெண்கள் படுகாயம்

Posted: 07 Jan 2016 10:48 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடை அடுத்த நந்தியோடு பகுதியில் வயல்வெளி உள்ளது. தற்போது இந்த வயலில் 'களை' எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் இங்கு வந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல ஏராளமான பெண்கள் வயலில் வேலை செய்துகொண்டு இருந்தனர்.

சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் ஜங் உணவு கொண்டுவருவதை தடுக்க சோதனை நடத்த உத்தரவு

Posted: 07 Jan 2016 10:14 PM PST

சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளில் பெரும்பாலானவர்கள் கொழுப்புச்சத்து மிகுந்த ஜங் வகை உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்தது. பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுக்கப்பட்ட நொறுக்குத்

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் மகன் ஆந்திராவில் போட்டியிட முடிவு

Posted: 07 Jan 2016 09:43 PM PST

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் மகன் தாரக ராமராவ் சிர்சில்லா தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மந்திரி சபையில் தகவல் தொடர்பு துறை மந்திரியாக உள்ளார்.

இந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி இல்லை

Posted: 07 Jan 2016 09:41 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு பிர மோற்சவத்துக்கு அடுத்த படியாக வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பாக நடப்பது உண்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து கிடப்பார்கள். கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியும், டிசம்பர் 21–ந்தேதியும்

அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெங்களூரில் மதர்ஸா ஆசிரியர் கைது

Posted: 07 Jan 2016 09:36 PM PST

அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த மதர்ஸா ஆசிரியரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் அமெரிக்க சீல் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனால் தோற்றுவிக்கப்பட்ட

திருப்பதி கோவிலில் கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய காங்கிரஸ் தொண்டர்

Posted: 07 Jan 2016 09:13 PM PST

சோனியா, ராகுல் காந்திக்காக தனது கை சுண்டு விரலை வெட்டி திருப்பதி கோவில் உண்டியலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் காணிக்கை செலுத்திய தகவல் நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. அந்த தீவிர காங்கிரஸ் தொண்டரின் பெயர் சுரேஷ் (36). கர்நாடகா மாநிலம்

ஆந்திரா தொழில் அதிபரை காரில் கடத்திய 3 பேர் கைது

Posted: 07 Jan 2016 09:10 PM PST

ஆந்திர மாநிலம் டிவான்ட்லவூரை சேர்ந்தவர் பஜலிங்கம் (வயது 57). தொழில் அதிபரான அவர், கல்குவாரி மற்றும் கிரானைட் கற்கள் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் அவருடைய மகன் நித்யானந்தம் உதவியாக இருந்து வருகிறார். அவர்களுக்கு சொந்தமான கிரானைட் விற்பனை மைய அலுவலகம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பரதராமியில் உள்ளது.

விமான நிலையங்களில் தலைவர்கள் பெயர் நீக்கம்: மத்திய அரசு முடிவு

Posted: 07 Jan 2016 08:54 PM PST

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்தந்த மாநில அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டுள்ளது. நாடெங்கும் சில விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டப்படாமல் உள்ளது.

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 110 விமானங்கள் தாமதம்

Posted: 07 Jan 2016 08:45 PM PST

வடமாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை பனிமூட்டத்தின் தாக்கம்

தித்திக்கும் செய்தி: தகர்ந்தது தடை - தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

Posted: 07 Jan 2016 08:43 PM PST

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை தகர்த்தெறியும் விதமாக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கடை நடத்த மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: அசாதுதீன் ஒவைசி ஆவேசம்

Posted: 07 Jan 2016 08:41 PM PST

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் அசாதுதீன் ஒவைசியின் டுவிட்டர் பக்கத்தில் சிலர்,

பாலக்காடு சென்ற அரசு பஸ்சில் ரூ.35 லட்சத்துடன் ஏர்வாடி தம்பதி கைது: ஹவாலா பணமா? - தீவிர விசாரணை

Posted: 07 Jan 2016 08:11 PM PST

பொள்ளாச்சியில் இருந்து தமிழக அரசு பஸ் கேரளா நோக்கி சென்றது. பஸ் பாலக்காடு மாவட்டம் கூட்டுப்பாதை அருகே சென்ற போது இன்ஸ்பெக்டர் சஜீவ்குமார் தலைமையில் கலால் துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (33), அவரது மனைவி ஷாஹூல் ஹமீதும்மா (26)

ஆந்திராவில் விஷச்சாராயத்துக்கு 5 பேர் பலி: முன்னாள் எம்.எல்.ஏ. கைது

Posted: 07 Jan 2016 07:49 PM PST

ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் விஷச்சாராயத்துக்கு ஐந்து பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். விஜயவாடா மாவட்டத்தின் கிருஷ்ணகலா பகுதியில் உள்ள ஒரு பாரில்

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Posted: 07 Jan 2016 06:45 PM PST

கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை மற்றும் பம்பையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கேரள டி.ஜி.பி சென்குமார், சபரிமலை தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி பத்ம குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ரமேஷ் சென்னித்தலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போ

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மவுலானா மசூத் - உளவுத்துறை தகவல்

Posted: 07 Jan 2016 04:18 PM PST

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் என்று தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த

இது இந்திய அறிவியல் மாநாடு இல்லை... இது சர்க்கஸ், கும்பமேளா என்று விஞ்ஞானிகள் கடும் விமர்சனம்

Posted: 07 Jan 2016 03:11 PM PST

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted: 07 Jan 2016 02:40 PM PST

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளையும், நாளை மறுதினம் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

1979-ம் ஆண்டு தொடங்கி 2015 வரை இஸ்ரோ 50 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை

Posted: 07 Jan 2016 01:36 PM PST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறார்கள். இஸ்ரோ முதன் முதலாக எஸ்.எல்.வி-3 இ1 என்ற ராக்கெட்டை 1979-ம்

காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக மெகபூபா முப்தி தேர்வாகிறார்

Posted: 07 Jan 2016 12:00 PM PST

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா கூட்டணி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது சயீத் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று காலையில் காலமானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™