Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் விபத்து

Posted: 06 Jan 2016 06:25 PM PST

o

oரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோசமாக காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் Eglinton அவனியூவிற்கு அருகில் Black Creek Drive பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பன உள்ளிட்ட மேலதிக தகவல்களை இந்த விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்தில் இருந்து பெற்றக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்த அசைவற்ற நிலையில் இருந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு நபரும் சிறிய காயங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற Black Creek Drive பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டு விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

The post ரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான

Posted: 06 Jan 2016 09:39 AM PST

Matthiew_Klinck_-01062016

Matthiew_Klinck_-01062016கனடாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான மத்தியூ கிளிங்க் மத்திய அமெரிக்க நாடான பெலீசில் (Belize) கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெலீசின் கையோ மாவட்டத்தில் உள்ள செலீனா எனப்படும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரது உடலின் முதுகுப் புறத்திலும், கழுத்திலுமாக 14 கத்திக் குத்துக் காயங்கள் காணப்படுவதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கியூபெக்கைச் சேர்ந்த 37 வயதான மத்தியூ கிளிங்க், இதுவரை பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பெலீசில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவரை கடந்த சனிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் இறுதியாக கண்டதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பெலீசில் உள்ள கனேடிய தூதரகத்தினை தாம் தொடர்பு கொண்டுள்ளதாக கனேடியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.Matthiew_Klinck_-01062016

The post திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடற்ற நிலையில் குறைந்தது 2,250 முன்னாள் படைவீரர்கள்

Posted: 06 Jan 2016 07:20 AM PST

homeless_person_on_Queen_Stree_-_01062016

homeless_person_on_Queen_Stree_-_01062016கனடாவில் முன்னாள் படை வீரர்கள் பலர் வசிப்பதற்கு வீடு அற்றவர்களாகக் வாழ்ந்து வருகின்றனர் என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் குறைந்தது 2,250 முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு வசிப்பதற்கு வீடற்றவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை நாட்டில் வீடுகள் இன்றி தற்காலிக கூடாரங்களில் தங்குவோரின் எண்ணிக்கையில் 2.7 சதவீததம் என கணிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள, அவசரகால தற்காலிக தங்குமிடங்கள் 60 இலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பனிக் காலங்களில் வீடுகள் இல்லாத நிலையில் அடைக்கலம் நாடுவதற்காக அமைக்கப்படும் தற்காலிக நிலையங்களில் தங்க வருவோரில், முன்னாள் படை வீரர்களே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் வயதானவர்களாகவும், மருத்துவ, அங்கவீன பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களாகவும், காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.homeless_person_on_Queen_Stree_-_01062016

சாதாரணமானவர்களில் வீடற்றோரின் சராசரி வயது 37ஆக காணப்படும் நிலையில், அவ்வாறான முன்னாள் படை வீரர்களின் சராசரி வயது 52ஆக காணப்படுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு வீடுகள் அற்றவர்களாக உள்ள முன்னாள் படை வீரர்களில் பலரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், போதைக்கும், மதுவுக்கும் அடிமையானவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு விபரங்கள் தொடர்பில் கனேடிய இராணுவத் தளபதி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறு வீடற்று அலையும் முன்னாள் படைவீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post வீடற்ற நிலையில் குறைந்தது 2,250 முன்னாள் படைவீரர்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அவரைக்காயின் மருத்துவ பலன்கள்

Posted: 06 Jan 2016 06:52 AM PST

j

jஅரிய மருத்துவ குணங்களை கொண்ட அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் சக்தி கொண்டது.

இதில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன, பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வாகிறது.

சுமார் 100 கிராம் அவரை காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்பு சத்து, நார் சத்து, புரதசத்து உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.j

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

மூளைக்கு, முதுகு தண்டுக்கு, இளம் தாய்மார்களுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என அனைத்து வகையிலும் பயன்படுகிறது. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

The post அவரைக்காயின் மருத்துவ பலன்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™