Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


East York துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 05 Jan 2016 09:10 AM PST

East_York_shooting_-_01052016

East_York_shooting_-_01052016East York பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதின்மவயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துளார்.

உயிராபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளார்.

நேற்று மாலை ஆறு மணியளவில் Danforth அவனியூ மற்றும் Victoria Park அவனியூவிற்கு வடமேற்கே, Dentonia Park aveneu மற்றும் Thyra aveneu பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த இந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் என்றும், அவனின் கழுத்துப் பகுதியில் காயம் காணப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.East_York_shooting_-_01052016

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இது தவறுதலாகவோ, எதேச்சையாகவோ மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் அல்ல என்றே தமக்கு தோன்றுவதாக கூறுகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

The post East York துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™