மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்தியாவில் முதல் புகைப்பட கண்காட்சியை நடத்தும் இன்ஸ்டாகிராம்
- 95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு
- பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம் 13–ந்தேதி புறப்படுகிறது
- லோக் ஆயுக்தாவில் எடியூரப்பா மீதான 15 வழக்குகள் தள்ளுபடி
- சபரிமலை பாதுகாப்பு பணியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட குட்டி விமானம்
- எண்ணூர் அனல் மின் நிலைய வழக்கு: மறுமதிப்பீட்டுக்கு 3 வல்லுனர்களின் பெயர்களை பரிந்துரைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்: மத்திய அரசு அறிவிப்பு
- சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா மரணம்
- பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி
- டீசல் வாகன தடையை நீக்கக் கோரும் மனு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க சம்மதம்
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணம் ஒத்திவைப்பு
- மோடியின் தமிழக பயண புகைப்படத்தால் சர்ச்சை: முக்கிய பிரமுகர்கள் படங்களில் ஒட்டுவேலை கூடாது-மத்திய அரசு புதிய உத்தரவு
- டெல்லியில் மெட்ரோ ரெயில்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
- சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இ-விசா வசதியை 150 நாடுகளுக்கு விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டம்
- வெடிகுண்டு புரளியால் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு
- ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் முப்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை
- சத்தீஸ்கரில் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: ஒருவர் கைது
- பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க நவாஸ் ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்தல்
- பதான்கோட் விமான தளத்தில் தேடுதல் பணிகள் நாளை வரை நீடிக்கும்: மனோகர் பாரிக்கர்
- 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
| இந்தியாவில் முதல் புகைப்பட கண்காட்சியை நடத்தும் இன்ஸ்டாகிராம் Posted: 05 Jan 2016 10:46 PM PST தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் புதிய பரிணாமமாக சமூக வலைத்தளங்கள் விளங்கி வருகின்றன. பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களின் எண்ணங்களை பல்லாயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்கும் அதிவேக தந்தி |
| 95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு Posted: 05 Jan 2016 10:37 PM PST போபாலில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து இன்று ஏர் இந்தியாவின் AI-435 விமானம் போபாலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 95 பயணிகள் பயணம் செய்தனர். காலையில் |
| பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம் 13–ந்தேதி புறப்படுகிறது Posted: 05 Jan 2016 10:10 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. |
| லோக் ஆயுக்தாவில் எடியூரப்பா மீதான 15 வழக்குகள் தள்ளுபடி Posted: 05 Jan 2016 08:16 PM PST பெங்களூர் அருகே உள்ள அரகெரே, தேவசிக் கனஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய 12 ஏக்கர் நிலத்தை விடுவித்து அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்– மந்திரி எடியூரப்பா மீது சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஹிரேமத், லோக் ஆயுக்தா கோர்ட்டில் புகார் அளித்தார். |
| சபரிமலை பாதுகாப்பு பணியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட குட்டி விமானம் Posted: 05 Jan 2016 07:18 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாடெங்கும் இருந்தும் பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். அய்யப்பன் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| Posted: 05 Jan 2016 06:50 PM PST சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகளுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை மற்றும் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பங்கேற்றன. இறுதியாக ரூ.7,788 கோடியில் பாய்லர் ஆலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. |
| துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 05 Jan 2016 06:42 PM PST தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். |
| சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா மரணம் Posted: 05 Jan 2016 06:30 PM PST சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா. மும்பையைச் சேர்ந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. |
| Posted: 05 Jan 2016 06:16 PM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இவர்களின் தாக்குதலை நமது ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். |
| டீசல் வாகன தடையை நீக்கக் கோரும் மனு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க சம்மதம் Posted: 05 Jan 2016 04:22 PM PST 2 ஆயிரம் சி.சி.க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட டீசல் வாகனங்களை, டெல்லியில் மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்ய தடை விதித்து கடந்த 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி, மெர்சிடஸ் பென்ஸ், டொயோட்டா, மகிந்த்ரா ஆகிய |
| தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணம் ஒத்திவைப்பு Posted: 05 Jan 2016 02:24 PM PST பதான்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனா- இந்தியா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று |
| Posted: 05 Jan 2016 01:47 PM PST பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் தமிழக வெள்ள பாதிப்புகளை விமானத்தில் சுற்றிப்பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பிரிவு (பி.ஐ.பி.), டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது. |
| டெல்லியில் மெட்ரோ ரெயில்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் Posted: 05 Jan 2016 01:07 PM PST புதுடெல்லியில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இ-விசா வசதியை 150 நாடுகளுக்கு விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டம் Posted: 05 Jan 2016 11:27 AM PST வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தர ஆன்லைனிலேயே விசாக்களை பெற வழிவகை செய்யும் இ-டூரிஸ்ட் விசா வசதியை இந்த நிதியாண்டிற்குள் 150 நாடுகளுக்கு வழங்க மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. |
| வெடிகுண்டு புரளியால் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு Posted: 05 Jan 2016 09:01 AM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் 2 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன. இதை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் |
| ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் முப்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை Posted: 05 Jan 2016 08:09 AM PST ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். |
| சத்தீஸ்கரில் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: ஒருவர் கைது Posted: 05 Jan 2016 07:37 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகான் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மர்தபால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் |
| பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க நவாஸ் ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்தல் Posted: 05 Jan 2016 07:12 AM PST பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நவாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதான்கோட் தாக்குதல் குறித்து விவரங்களை |
| பதான்கோட் விமான தளத்தில் தேடுதல் பணிகள் நாளை வரை நீடிக்கும்: மனோகர் பாரிக்கர் Posted: 05 Jan 2016 05:38 AM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். முதல் நாள் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையானரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதி பாதுகாப்பு படையினர் விமானப்படை தளம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை போட்டு தேடினார்கள். |
| 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு Posted: 05 Jan 2016 03:39 AM PST துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்புவகைகளின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தாறுமாறாக உயர்ந்தது. விளைச்சல் குறைந்ததால், இந்த நிலை ஏற்பட்டது. மேலும், பருப்பு வியாபாரிகள், பருப்பை பதுக்கி வைத்து, செயற்கையான விலை ஏற்றத்துக்கு வழிவகுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது. இந்த |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |