Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சீனாவில் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கும் கனேடியர் மீது வழக்குத் தாக்கல்

Posted: 29 Jan 2016 05:24 PM PST

po

poசீனாவில் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கும் கனேடியர் மீது கனடாவுக்காக உளவு பார்த்ததாகவும், சீனாவின் அரச இரகசியங்களை திருடியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளதான இந்த தகவலை சீன நாட்டின் அதிகார பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டள்ளது.

கெவின் கரேட் எனப்படும் கனேடியரே கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சீன அரசாங்கத்தினால் கைதுசெய்யயப்பட்டிருந்தார். அப்போது அவருடன் சேர்த்து அவரின் மனைவி யூலியா என்பவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவரின் மனைவி யூலியாவை கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலை செய்துள்ள போதிலும், கெவின் கரேட் தொடர்ந்தும் தடுத்து வைக்ப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே கெவின் கரேட் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனது பெற்றோர் அவ்வாறான உளவுப் பணிகள் எவற்றிலும் ஈடுபடவிலலை என வன்கூவரில் வசித்துவரும் அவர்களின் மகன் தெரிவித்துள்ளார்.

தம்பதியினர் இருவரும் சுமார் 30 வருடங்களாக சீனாவில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வசித்து வரும் நகருக்கு அருகே, வட கொரிய எல்லைப் பகுதியில் அவர்கள் சிற்றூண்டி கடை ஒன்றினை நடாத்தி வந்ததுடன், கத்தோலிக்க தொண்டூளியப் பணியினையும் மேற்கொண்டு வந்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சீனாவில் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கும் கனேடியர் மீது வழக்குத் தாக்கல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தாக்குதல் நடாத்திய சிறுவன் கைது

Posted: 29 Jan 2016 08:15 AM PST

Arrest_-_11252015

Arrest_-_11252015பாலியல் தாக்குதல் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரைக் கைது செய்தாகவும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்த்தறையினர் கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் Eglinton Avenue மற்றும் Lloyd Manor வீதிப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வழியே நடந்து சென்ற 18 வயது பெண்ணை பின்தொடர்ந்திருந்த குறித்த 16 வயது சிறுவன் , அந்தப் பெண்ணுடன் பேசி Winsland drive மற்றும் Winterton drive பகுதியின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Arrest_-_11252015

நேற்று மாலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளதுடன், குறித்த அந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சிறுவன் மீது தாக்குதல், பாலியல் தாக்குதல் மற்றும் பலாத்காரமாக மறித்து வைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post பாலியல் தாக்குதல் நடாத்திய சிறுவன் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோ வீதியி்ல் உணர்வற்றுக் கிடந்த நபர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 29 Jan 2016 08:06 AM PST

man_found_on_side_of_road_-_10292016

man_found_on_side_of_road_-_10292016Lawrence Avenue மற்றும் Rouge Hills Drive ற்கு அருகே, Milldock Drive பகுதியில் உள்ள வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் காவல்த்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு காவல்த்துறையினர் விரைந்திருந்தனர்.

அப்போது குறித்த நபர் உணர்வற்ற நிலையில் கிடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவ இடத்திற்கு அவரச மருத்துவப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குறித்த அந்த நபர் மீட்கப்படுவதற்கு சுமார் 30 நிமிடங்களின் முன்னர் அங்கே வீழ்ந்திருக்கக் கூடும் என காவல்த்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அந்த பகுதியில் உள்ளவர்களை தமது கண்காணிப்பு ஒளிப்பதிவுகளை பரிசோதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.man_found_on_side_of_road_-_10292016

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் குறித்த அந்த நபர் வீழ்ந்து கிடந்த சம்பவத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் ஆதாரம் ஒன்றினை, அங்கிருந்து சிறிது தூரத்தில் கண்டெடுத்துள்ளனா என கூறப்படுகிறது.

எனினும் சம்பவத்திற்கான காரணங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

The post ஸ்காபரோ வீதியி்ல் உணர்வற்றுக் கிடந்த நபர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™