Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted: 21 Jan 2016 09:55 AM PST

double_shooting_in_Scarborough2101

double_shooting_in_Scarborough2101ஸ்காபரோவில் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சமபவத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஃபின்ச் அவனியூவிற்கு வடக்கே, விக்டோரியா பார்க் அவனியூ பகுதியில் நேற்று இரவு 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது, அங்கே ஒருவர் உயிரிழந்த நிலையிலும், மற்றுமொருவர் காயமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக தமக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும், அவர்கள் தொடர்பிலான அடையாளங்கள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.double_shooting_in_Scarborough2101

ரொரன்ரோ காவல்த்துறையினர் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால், சம்பவம் இடம்பெற்ற அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை 4168084200 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈட்டோபிக்கோவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொலை

Posted: 21 Jan 2016 09:06 AM PST

Man_shot_to_death_in_Etobicoke

Man_shot_to_death_in_Etobicokeரொரன்ரோ ஈட்டோபிக்கோ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Princess Margaret Boulevard மற்றும் Kingsway பகுதியில் நேற்று மாலை ஆறு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏதோ தகராறு நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தாம் அந்த இடத்துக்கு விரைந்த போது, அங்கே குறித்த அந்த நபர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றமைகான காரணம் இன்னமும் தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.Man_shot_to_death_in_Etobicoke

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-7400 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஈட்டோபிக்கோவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொலை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் வாகனத்திற்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted: 21 Jan 2016 07:14 AM PST

shooting_in_Lawrence_Heights

shooting_in_Lawrence_Heightsநேற்று இரவு ரொரன்ரோவின் Lawrence Heights பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் இருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

ஃபிளமிங்டன் வீதி மற்றும் அலென் வீதிப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஃபிளமிங்டன் வீதியின் ஓரத்தில், வீதிக்கு வெளியே வாகனத்தினை நிறுத்தி விட்டு அதற்குள் மூன்று நண்பர்கள் உரையாடியவாறு இருந்ததாகவும், திடீரென அந்த இடத்திற்கு வந்த பிறிதோரு வாகனத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.shooting_in_Lawrence_Heights

துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட வாகனம் உடனடியாகவே அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், அதிஸ்டவசமாக இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

The post ரொரன்ரோவில் வாகனத்திற்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா?

Posted: 21 Jan 2016 06:55 AM PST

hk

hkஆசியாவின் தென் பகுதியில் மட்டுமே வளரும் நன்னாரியில் அனேக பயன்கள் அடங்கியுள்ளன.

இதன் வேரில் இருந்து சார் எடுத்தே நன்னாரி சர்பத் தயாரிக்கப்படுகின்றன. இந்த சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் உடனடி புத்துணர்ச்சியையும் தருகிறது.

மேலும் ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மையும் இந்த வேருக்கு உண்டு. இது மட்டுமில்லாமல் சிறுநீர் பிரச்சனையை சரிசெய்வது, உடலில் வேர்வையின் உற்பத்தியை அதிகரிப்பது, மூட்டுவலி, உடல் சூடு, தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்த நன்னாரி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு பிடி நன்னாரி வேரை எடுத்து இடித்துகொள்ளுங்கள். பின்னர் அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து ரசம் வைக்க வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் ரசத்தை சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் சிறுநீர் பிரச்சனை தீரும்.

அது போல் நன்னார் வேர்த்தூள், கால் பங்கு தண்ணீர், அரை பங்கு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மணப்பாகு போல் செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் சிறு அளவில் இதை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் குறையும்.hk

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள்.

உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்

நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம்.

காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும்.

உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.jl

The post உடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ பங்குச் சந்தை தொடர்ந்தும் சரிவு

Posted: 20 Jan 2016 07:27 PM PST

o

oஅனைத்துலக ரீதியில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட இறக்கம் காரணமாக, கடந்த நத்தார் நாளைத் தொடர்ந்து, சரிவுப் போக்கில் இருந்துவந்த ரொரன்ரோ பங்குச் சந்தை, நேற்று மூன்றாவது தடவையாகவும் உச்ச வீழ்ச்சியை தொட்டுள்ளது.

திங்கட்கிழமை 131 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்த ரொரன்ரோ பங்குச் சந்தை, நேற்றைய வர்த்தக நாள் முடிவில் சுமார் 60 புள்ளிகள் மட்டும் அதிகரித்து 12,002.24 ஆக நிலைபெற்றுள்ளது.

இதேவேளை நியூயோர்க் பங்குச் சந்தையும் விடுமுறையின் பின்னர் நேற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே காணப்பட்டுள்ளது.

மசகு எண்ணெயின் விலையும் 96 சதங்களால் குறைவடைந்து பரலுக்கு 28.46 அமெரிக்க டொலர்களாக நேற்று பதிவாகியுள்ளது.

ஏற்கனவே வீழச்சியடைந்துள்ள கனேடிய டொலரின் பெறுமதியும், அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது நேற்று மேலும் ஒரு சதத்தினால் குறைவடைந்து 68.69 டொலர்களாக பதிவாகியுள்ளது.

The post ரொரன்ரோ பங்குச் சந்தை தொடர்ந்தும் சரிவு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேர்கினா ஃபாசோவுக்கு உதவத் தயார்: RCMP

Posted: 20 Jan 2016 06:49 PM PST

yuj

yujமேற்கு ஆபிரிக்க நாடான பேர்கினா ஃபாசோவின் தலைநகரில் கடந்த வாரம் அல் கைய்டா அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மனிதாபிமான பணிகளுக்காக சென்றிருந்த கியூபெக் மாநிலத்தைச் சேர்நத் ஆறு கனேடியர்களும் கொல்லப்பட்ட நிலையில், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக கனேடிய மத்திய காவல்த்துறை அறிவித்துள்ளது.

ஆறு கனேடியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் வரையில் பலியாக காரணமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற பேர்கினா ஃபார்சோ நாட்டு அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க கனேடிய மத்திய காவல்த்துறை தயாராக உளளது எனவும் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கு அந்த நாடடு அதிகாரிகளுக்கு கனேடிய காவல்த்துறை உதவவுள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.yuj

அத்துடன் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணங்களை தயாரிப்பதிலும் கனேடிய காவல்த்துறை உதவவுள்ளதாகவும், அதன் மூலம் உயிரிழந்தவர்களின் சடலங்களை கனடாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை வேகப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயிரிந்த ஆறு பேரில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை வழங்குவதை தமது பணிகளில் முன்னுரிமைப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்ப்பட்டவர்களை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் ஒட்டாவா மட்டுமின்றி ஏனைய நாடுகளில் உள்ள வழங்களும் பயன்படுத்தப்படும் எனவும் வெளியுறவு அமைச்சின் பேச்சளார் தெரிவித்துள்ளார்.

The post பேர்கினா ஃபாசோவுக்கு உதவத் தயார்: RCMP appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விலங்குப் பண்ணையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் குறைந்தது 2,000 பன்றிகள் பலியாகின

Posted: 20 Jan 2016 07:56 AM PST

u

uஒன்றாரியோவின் பார்க்ஹில் என்படும் நகரில் உள்ள விலங்குப் பண்ணை ஒன்றில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற அந்த தீ சம்பவத்தில் குறைந்தது 2,000 பன்றிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பண்ணையில் தீ பற்றிக்கொண்டமை தொடர்பில் தீயணைப்புப் படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும் இந்த தீ சம்பவம் சந்தேகத்திற்கிடமானதாக நோக்கப்படவில்லை என ஒன்றாரியோ மாகாணக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.u

ஒன்ராறியோ வேளான்துறை அதிகாரி ஒருவர் இந்த தீச் சம்பவம் குறித்து கருத்துக் கூறுகையில், குளிரான பருவநிலை காரணமாக இயங்கிய வெப்ப பிறப்பாக்கிகளால், மின்சுற்றில் ஒழுக்கு ஏற்பட்டு தீ பரவியிருக்கக் கூடும் என அனுமானம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பண்ணைகளுக்கு புகை உணர் கருவிகளோ, தீ முன்னெச்சரிக்கைக் கருவிகளோ அவசியம் இல்லை என்ற போதிலும், காப்புறுதியினை தாம் பரிந்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post விலங்குப் பண்ணையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் குறைந்தது 2,000 பன்றிகள் பலியாகின appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™