Tamil Star |
- கேல்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை
- ஹமில்டனில் தீ சம்பவம்
- ரொரன்ரோவிற்கு இன்றும் தீவிர குளிர் எச்சரிக்கை!
| கேல்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை Posted: 18 Jan 2016 09:56 AM PST
இலக்கம் 11016, விமான நிலைய வீதியில் அமைந்துள்ள அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுத முனையில் இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கறுப்பு நிற துப்பாக்கிகளுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் நுளைந்திருந்தனர் என்றும், பின்னர் அவர்கள் நிலையத்தின் முன் கதவினை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆயுத முனைக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்த்துறையினர் முன்னெடுத்துள்ள போதிலும்,சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை தேடி வருவதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post கேல்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Jan 2016 08:40 AM PST
தீ பற்றிக் கொண்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை தீ பற்றிய குறித்த அந்த வீட்டில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தோ, அவரின் விபரம் தொடர்பிலோ மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிபடப்படவில்லை. இந்த நிலையில் குறித்த இடத்தில் ஏற்பட்ட அந்த தீ விபத்துச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள ஹமில்ட்டன் தீயணைப்புத் துறையினர் , தீப் பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர். The post ஹமில்டனில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவிற்கு இன்றும் தீவிர குளிர் எச்சரிக்கை! Posted: 18 Jan 2016 07:54 AM PST
ரொரன்ரோவுக்கு தீவிர குளிருக்கான எச்சரிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்ததுடன்,குளிரின் அளவு உறைநிலைக்கு கீழே 20 பாகை செல்சியசாக உணரப்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டிருந்தது. தற்போதை நிலையில் இன்றைய தினமும் நேற்றைய நாள் போன்றே வெப்பநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதாவது,இன்று பகல் குளிரின் அளவு உறைநிலைக்கு கீழே 7 பாகையாக இருக்கும். எனினும். அது -15 பாகையாக உணரப்படும். இன்று மாலை குளிரின் அளவு உறைநிலைக்கு கீழே 12 பாகையாக வீழ்ச்சியடையும். எனினும், அது 21 பாகையாக உணரப்படும். ரொரன்ரோவின் வடமேற்கு பகுதிகளில் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என்பதுடன், சுமார் மூன்றிலிருந்து ஏழு சென்ரிமீட்டர் வரையிலான பனிப் பொழிவு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதேவேளை ரொரன்ரோவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீவிர குளிர் நிலையினை முன்னிட்டு, வீடற்றவர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகளை ரொரன்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த அந்த தங்குமிடங்களுக்கு செல்வதற்கான இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. The post ரொரன்ரோவிற்கு இன்றும் தீவிர குளிர் எச்சரிக்கை! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கேல்டன்(Caledon) பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை அளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹமில்டனின் தெற்கு குயின் வீதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1மணியளவில் தீ பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொரன்ரோவுக்கு விடுக்கப்பட்ட தீவிர குளிர் எச்சரிக்கை இன்று காலையும் தொடர்கிறது.