மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரசியலாகும் கல்லூரி மாணவர் தற்கொலை: ராகுல் காந்தி ஐதராபாத் விரைகிறார்
- 79 எம்.பி.க்கள் இடம் காலியாகிறது: டெல்லி மேல்சபையில் காங்கிரஸ் பலம் குறைகிறது
- ரெயிலில் தம்பதியிடம் அநாகரீகமாக நடந்த பீகார் எம்.எல்.ஏ. மீது வழக்கு
- கேரளாவில் பிப்ரவரி 6–ந்தேதி முதல் 12 லட்சம் பென்சனர்களுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம்
- ஐதராபாத் மாணவர் தற்கொலை: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
- மும்பை, டெல்லியைச் சேர்ந்த 2 பேர் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- குடியரசு தினவிழாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
- என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: தெலுங்கு தேசம் கோரிக்கை
- வனச்செல்வங்களை பணமாக்க பாபா ராம்தேவுடன் கை கோர்க்கும் மகாராஷ்டிர அரசு
- செயலாளர்கள் மாற்றம்: அமித்ஷா மீண்டும் பா.ஜ.க. தலைவராகிறார்
- பனாமா கால்வாயில் கவிழ்ந்த படகு: 25 இந்தியர்கள் மூழ்கி பலி?
- போலியோ தடுப்பு மருந்தால் குழந்தைகள் பலியாவதாக வதந்தியைக் கிளப்பிய 12 பேர் கைது
- ஐதராபாத் மாணவர் தற்கொலை பின்னணியில் அரசியல் விளையாட்டு: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதிர்ச்சி
- இரண்டாயிரம் ரூபாய்க்காக மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை
- அரியானா மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது
- குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு
- இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலம் சிக்கிம்
- ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் - இந்தியாவுக்கு 2-வது இடம்
- வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: உயர்மட்ட குழு பரிந்துரை
- சபரிமலை வழக்கு: மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
| அரசியலாகும் கல்லூரி மாணவர் தற்கொலை: ராகுல் காந்தி ஐதராபாத் விரைகிறார் Posted: 18 Jan 2016 10:28 PM PST ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ரோகித் வெமுலா. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக கல்வி பிரிவில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்பு படித்து வந்தார். அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்து வந்தார். |
| 79 எம்.பி.க்கள் இடம் காலியாகிறது: டெல்லி மேல்சபையில் காங்கிரஸ் பலம் குறைகிறது Posted: 18 Jan 2016 10:28 PM PST பாராளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அந்த வகையில் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் 79 எம்.பி.க்களின் |
| ரெயிலில் தம்பதியிடம் அநாகரீகமாக நடந்த பீகார் எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 18 Jan 2016 10:24 PM PST அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டு வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்தர்பால் சிங் பெடி என்பவர் தன் மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த ரெயில் பீகார் மாநிலத்துக்குள் வந்த போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சர்பராஜ் ஆலம் ஏறினார். |
| கேரளாவில் பிப்ரவரி 6–ந்தேதி முதல் 12 லட்சம் பென்சனர்களுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் Posted: 18 Jan 2016 10:15 PM PST கேரளாவில் அரசு நலத்திட்டங்கள் மூலம் 32 லட்சம் பயனாளிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம், விதவைகள் பென்சன் போன்றவை தபால் துறை மூலமே வழங்கப்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் இத்தகைய ஓய்வூதியங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று புகார்கள் கூறப்பட்டது. தபால் துறையின் தாமதத்தால் பயனாளிகள் உரிய |
| ஐதராபாத் மாணவர் தற்கொலை: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 18 Jan 2016 09:47 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு காரணமான மத்திய மந்திரிகளை பதவி நீக்கம் செய்வதுடன் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பும் கேட்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். |
| மும்பை, டெல்லியைச் சேர்ந்த 2 பேர் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 18 Jan 2016 09:36 PM PST டெல்லியை அடுத்த குர்கான் தகவல் தொழில் நுட்ப நகரத்தில் 19 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9–ந்தேதி 3 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டு டெல்லி குதுப்விகார் அருகில் கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லியை சேர்ந்த வாலிபர் வினோத்துக்கு செசன்ஸ் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. ஐகோர்ட்டும் இந்த தண்டனையை |
| Posted: 18 Jan 2016 09:36 PM PST தலைநகர் டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைநகரில் வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. |
| என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: தெலுங்கு தேசம் கோரிக்கை Posted: 18 Jan 2016 09:22 PM PST ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்து ஆட்சியை பிடித்தவர் என்.டி. ராமராவ். இவரது 20–வது மறைந்த தினம் நேற்று ஆந்திராவில் கடைபிடிக்கப்பட்டது. என்.டி.ராமராவின் சாதனைகளையும், ஆந்திரா மாநிலத்துக்கு அவர் செய்துள்ள சேவைகளையும் கவுரவிக்கும் வகையில் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. |
| வனச்செல்வங்களை பணமாக்க பாபா ராம்தேவுடன் கை கோர்க்கும் மகாராஷ்டிர அரசு Posted: 18 Jan 2016 09:02 PM PST ஆயுர்வேத பொருட்கள் முதல் அழகு சாதன பொருட்கள் வரை பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு காடுகளில் கிடைக்கும் பொருட்களில் இருந்து கூடுதலாக பெறப்படும் பொருட்களை வழங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. |
| செயலாளர்கள் மாற்றம்: அமித்ஷா மீண்டும் பா.ஜ.க. தலைவராகிறார் Posted: 18 Jan 2016 08:49 PM PST பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014–ம் ஆண்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்த போது ராஜ்நாத்சிங் தேசியத் தலைவராக இருந்தார். அவர் மத்திய மந்திரி பொறுப்பை ஏற்றதால், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. புதிய தேசிய தலைவராக அமித்ஷா தேர்ந்து எடுக்கப்பட்டார். |
| பனாமா கால்வாயில் கவிழ்ந்த படகு: 25 இந்தியர்கள் மூழ்கி பலி? Posted: 18 Jan 2016 08:38 PM PST அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் பயணம் சென்றபோது பனாமா கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதல்வர் பாதல் தலைமையிலான பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடான பனாமாவுக்கு |
| போலியோ தடுப்பு மருந்தால் குழந்தைகள் பலியாவதாக வதந்தியைக் கிளப்பிய 12 பேர் கைது Posted: 18 Jan 2016 08:04 PM PST ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சமூக விரோதிகள் சிலர் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் பலியாவதாக வதந்தியைக் கிளப்பினர். இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால் தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்த பெற்றோர்கள் |
| ஐதராபாத் மாணவர் தற்கொலை பின்னணியில் அரசியல் விளையாட்டு: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதிர்ச்சி Posted: 18 Jan 2016 08:00 PM PST தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்துவந்த தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பின்னணியில் அரசியல் கலந்துள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். |
| இரண்டாயிரம் ரூபாய்க்காக மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை Posted: 18 Jan 2016 07:23 PM PST மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் சம்சுல்(50). அந்தப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சம்சுல் சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக (வைஷாலி மாவட்டம், பீகார்) ) கடந்த 10-ம் தேதி தனது மகனிடம் இரண்டாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். |
| அரியானா மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது Posted: 18 Jan 2016 07:08 PM PST அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இந்தியாவில் காலூன்ற மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சீலாம்பூரில் முகமது ஆசிப் (வயது 41) என்பவரையும், |
| குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு Posted: 18 Jan 2016 07:05 PM PST தலைநகர் டெல்லியில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், சிவில் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். |
| இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலம் சிக்கிம் Posted: 18 Jan 2016 04:18 PM PST இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலம் சிக்கிம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்னுக்கும் உடலுக்கும் கேடுவிளைவிக்கும் வேதி உரங்களை பயன்படுத்தாமல் முற்றிலுமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டும் செய்யப்படுவது உயிர்ம வேளாண்மை ஆகும். 6 லட்சம் மக்களையும் 75 |
| ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் - இந்தியாவுக்கு 2-வது இடம் Posted: 18 Jan 2016 03:56 PM PST இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்றவாறு சைபர் கிரிமினல்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக பிரபல ஆன்டி-வைரஸ் மென்பொருளான கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. |
| வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும்: உயர்மட்ட குழு பரிந்துரை Posted: 18 Jan 2016 03:41 PM PST வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி மத்திய அரசு நியமித்தது. |
| சபரிமலை வழக்கு: மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Jan 2016 03:41 PM PST சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது தொடர்பான பொதுநல வழக்கை தொடர்ந்த மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |