Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடும் குளிரிலும் தமிழக மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக... எகிறியது கோடையில் அதிகரிக்கும் தேவையை சமாளிக்குமா மின்வாரியம்?

Posted: 09 Jan 2016 06:23 AM PST

நடப்பு ஜனவரி மாதத்தில், தமிழக மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளதால், கோடை காலத்தில் ஏற்படும் மின் தேவையை, தமிழ்நாடு மின் வாரியம் சமாளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மின் தடை அமல்படுத்தப்பட்டது. புதிய மின் நிலையங்களில் இருந்து தினமும், சராசரியாக, 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால், மின் தடை அறிவிப்பை, 2014ல், தமிழக அரசு திரும்ப பெற்றது.
உச்ச அளவு:
தற்போது, மின் தேவை, தினமும் சராசரியாக, 12,500 மெகாவாட்டாக உள்ளது. ஆண்டுதோறும், கோடைகாலமான மார்ச் - ஜூலை மாதங்களில், மின் தேவை ...

ஹரியானா மாநிலத்தைப் போல தமிழகத்திலும்... அமலாகுமா? பஞ்., தேர்தல் வேட்பாளர்களால் ரூ.153 கோடி வசூல்

Posted: 09 Jan 2016 07:11 AM PST

சண்டிகர்:ஹரியானாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், 'அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், கடன் மற்றும் கட்டண பாக்கிகள் வைத்திருக்காதவர்கள் மட்டுமே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால், கூட்டுறவு வங்கிகளில், கடன் பாக்கி வைத்திருந்தவர்கள், 153 கோடி ரூபாய் அளவுக்கு, திரும்பச் செலுத்தி உள்ளனர். அதேபோன்ற, விதிமுறைகள் தமிழகத்திலும் அமலாக வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசு, 2015ல், பஞ்சாயத்து ...

பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாக்.,கிற்கு அமெரிக்கா... கண்டிப்பு 'பேசியது போதும்; நடவடிக்கை எங்கே' என கேள்வி

Posted: 09 Jan 2016 08:05 AM PST

வாஷிங்டன்: 'பதன்கோட்டில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது, பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் வாக்குறுதி மட்டும் போதாது; நடவடிக்கை அவசியம்' என, அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தானிலிருந்து, பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், எல்லை பகுதியில் உள்ள, பதன்கோட் விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்; பயங்கரவாதிகள் ஆறு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டின்பாதகாப்புக்கே சவால் விடும் வகையில், பயங்கரவாதிகள் ...

பதன்கோட்டில் நடந்தது என்ன? பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Posted: 09 Jan 2016 08:08 AM PST

புதுடில்லி: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான, பதன்கோட் விமானப்படை தளத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, நேரில் சென்று பார்வையிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில், ஷிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக உள்ளார். இங்குள்ள, பதன்கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், கடந்த வாரம் ஊடுருவினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ...

'ராணுவ வீரர்களின் சீருடையை பொதுமக்கள் அணிவது குற்றம்'

Posted: 09 Jan 2016 08:38 AM PST

புதுடில்லி:'ராணுவத்தினரின் சீருடை போன்ற உடைகளை, பிறர் அணிவது சட்டவிரோதம்; அந்த வகை உடைகள் அணிவதை, 'பேஷன்' என, காரணம் கூற முடியாது' என, ராணுவம் கூறியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதன்கோட், தினாநகர் ஆகிய பகுதிகளில், ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, பலரை கொன்று குவித்தனர். பயங்கரவாதிகள், ராணுவ உடையில் ஊடுருவி, தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரில், நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது, ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் ...

'பான் கார்டு' அறிவிப்பால் பாதகம் நகை நிறுவனங்கள் புலம்பல்

Posted: 09 Jan 2016 08:40 AM PST

மும்பை,:இம்மாதம் முதல், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், நகை விற்பனை, 25 - 30 சதவீதம் குறைந்து விட்டதாக, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பான - ஜி.ஜே.எப்.,பின் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:இம்மாத துவக்கம் முதல், ௨ லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோரிடம், வருமான வரித் துறையின், பான் கார்டு எண் பெற வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன், இந்த வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது; இது, தற்போது, 2 லட்சம் ...

மத்திய அரசு உத்தரவால் ஜல்லிக்கட்டு நடப்பது...உறுதி:அரசாணைக்கு உடனடி தடை பெற வாய்ப்பில்லை

Posted: 09 Jan 2016 09:53 AM PST

மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கி உள்ளது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், அதை எதிர்கொள்ள, மத்திய, மாநில அரசுகள் தயாராக உள்ளன. தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., கூட்டணி அரசு, 2011ல், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில், காட்சி விலங்குகள் பட்டியலில், காளையை சேர்த்தது. 2014ல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது.
பாரம்பரிய ...

திக்குமுக்காடிய தமிழக பா.ஜ.,

Posted: 09 Jan 2016 10:08 AM PST

டில்லி மேலிடம், கூட்டணி குறித்து தெளிவான யோசனைகளை சொல்லாததால், கூட்டணி அமைப்பதில் தமிழக பா.ஜ., கடும் தடுமாற்றங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த சில நாட்களிலேயே, ம.தி.மு.க.,
இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டி, கூட்டணியில் இருந்து விலகிச் சென்று விட்டது. தற்போது மக்கள் நலக் கூட்டணியையும் ஏற்படுத்தி விட்டது.மற்ற கட்சிகளும் பா.ஜ.,வுடன் இணக்கமாக இல்லாத சூழலில், வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., - பா.ம.க.,வை மட்டும் வைத்தாவது, தன் தலைமையில் கூட்டணி ஒன்றை அமைத்து விட வேண்டும் என, தமிழக பா.ஜ., ...

வேலைவாய்ப்பு மையங்களில் வேலை கேட்டு 4 கோடி பேர் பதிவு

Posted: 09 Jan 2016 10:59 AM PST

ஜாம்ஷெட்பூர் : வேலை கேட்டு, வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்துள்ள, நான்கு கோடி பேரின் விவரங்களும், மத்திய அரசு துவங்கியுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தில் இணைக்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மை ஆலோசகர் பி.பி.மித்ரா கூறியதாவது: வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஜூலை மாதம் துவங்கப்பட்ட இணையதளத்தில், நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, நான்கு கோடி பேரின் தகவல்களும் இணைக்கப்படுகிறது; அதேபோல், வேலை அளிக்க முன்வந்து, ஒன்பது லட்சம் நிறுவனங்களும் பதிவு ...

'தூய்மை இந்தியா' எப்படி? ஆய்வு பணி துவங்கியது

Posted: 09 Jan 2016 11:15 AM PST

புதுடில்லி:துாய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடு, முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, 75 நகரங்களை தரவரிசை படுத்தும் பணியை, தேசிய தர கட்டுப்பாட்டு அமைப்பு, வரும் 20ம் தேதி வரை நடத்துகிறது.

மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றான, 'ஸ்வச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம், 2014ல்,துவக்கி வைக்கப்பட்டது. 2015, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்த திட்டத்தின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, தரவரிசை படுத்தும் பணியை, தேசிய தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய அரசுஒப்படைத்துள்ளது.நாடு முழுவதும், 75 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™