Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அணைகளை சீரமைக்க தாமதிக்கும் பொ.ப.து.,

Posted: 08 Jan 2016 07:41 AM PST

மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை புனரமைக்க, பொதுப்பணித்துறை விரைவாக ஒப்புதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, நீலகிரி மாவட்டம் - குந்தா; கோவை - காடம்பாறை; ஈரோடு மற்றும் நெல்லையில் உள்ள நீர் மின் உற்பத்தி வட்டங்களில், 38 அணைகள் உள்ளன. இவை, கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், சேதம் அடைந்து உள்ளன. உலக வங்கி உதவிநாட்டில் உள்ள அணைகளை புனரமைக்க, உலக வங்கி உதவி செய்கிறது. இந்த நிதி, மத்திய நீர் ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. மத்திய நீர் ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும், எஸ்.பி.எம்.யூ., எனப்படும் மாநில திட்ட ...

உயர்கிறது ரயில் கட்டணம்

Posted: 08 Jan 2016 07:54 AM PST

புதுடில்லி:சமையல் எண்ணெய் உட்பட, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மற்றும் பஸ் கட்டணத்தை விட, ரயில் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டின் போது, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர்கூறியதாவது:ரயில்களை இயக்குவதற்கான செலவு, பல மடங்கு அதிகரித்துள்ள போதும், அதற்கேற்ப ரயில் கட்டணம் உயரவில்லை;குறிப்பாக, முன்பதிவு இல்லாத பொது வகுப்பு மற்றும் புறநகர் ரயில் கட்டணங்கள் மிகவும் குறைவாக ...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததால் மாடு பிடி வீரர்கள் உற்சாகம் ஒட்டு மொத்த தமிழகமும் விடுத்த கோரிக்கைக்கு வெற்றி

Posted: 08 Jan 2016 08:47 AM PST

புதுடில்லி: பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ள நிலையில், தமிழக கிராமங்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என, எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு, மத்திய அரசு நல்ல செய்தி அளித்துள்ளது; அந்த போட்டிக்கு விதித்திருந்த தடையை விலக்கியுள்ளது. இதனால், மாடு பிடி வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒட்டு மொத்த தமிழகமும் விடுத்த கோரிக்கைக்கு, வெற்றி கிடைத்ததாகக் கருதப்படுகிறது.

விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து, காளையை நீக்கி, தமிழகம் மட்டுமின்றி, குஜராத், கேரளா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், காளைகளை வைத்து ...

பாகுபாடின்றி நிவாரண நிதி'

Posted: 08 Jan 2016 09:17 AM PST

சென்னை:தி.மு.க., தலைவர், கருணாநிதி அறிக்கை: வெள்ளம் வடிந்து ஒரு மாதமாகிறது.
பாதிக்கப்பட்டோர் பட்டியல் இன்னும் முறையாக தயாரிக்கவில்லை. காரணம், ஆளுங்கட்சியினரின் தலையீடு. நிவாரணநிதி பாகுபாடின்றி வழங்கப் படவில்லை.
சென்னை மாநகரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, இரண்டு லட்சம் பேரை, நிவாரண பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்து விட்டதில் செய்த தவறை,நிவாரணம் வழங்குவதிலும் செய்வதாகவே பாதிக்கப்பட்டோர் ...

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி

Posted: 08 Jan 2016 09:22 AM PST

சென்னை: ''சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக ...

எதிரிகள் சொத்து சட்டத்தில் திருத்தம்

Posted: 08 Jan 2016 09:45 AM PST

புதுடில்லி: கடந்த, 47 ஆண்டுகளாக அமலில் இருந்த எதிரிகள் சொத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முதல் அவசரச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.கடந்த, 1965 மற்றும், 1971ம் ஆண்டுகளில், பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்ட போது ஏராளமானோர், இந்தியாவில்இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு சொந்த மான சொத்துகள், இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தன.அந்த சொத்துகளை, பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் நீடிக்கச் செய்யும் வகையில், 1968ல், எதிரிகள் சொத்து சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில், சிலகுறைபாடுகள் உள்ளதாக மத்திய ...

பதன்கோட் தாக்குதல் : எஸ்.பி.,யிடம் உண்மை அறியும் சோதனை

Posted: 08 Jan 2016 09:52 AM PST

பதன்கோட்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில், கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு முன், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தியதாக கூறப்படும், எஸ்.பி.,யிடம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

பதன்கோட் விமானப்படை தளத்தில், 1ம் தேதி இரவு முதல் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், பாதுகாப்புப் படை வீரர்கள், ஏழு பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தன்னை காரில் கடத்தி சென்றதாக பஞ்சாப் போலீஸ் ...

ஜாம் ஜாம்னு ஜமாய்க்கும் ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர், பாலமேட்டில் உற்சாகம்

Posted: 08 Jan 2016 10:17 AM PST

அலங்காநல்லுார்: 'ஏ அடங்காத காளை, சுழட்டுது பார் வால, இறங்காத கீழ, பாயுது பார் மேல... முடிஞ்சா பிடிச்சு பாரு, முடியாட்டி திரும்பி ஓடு...' என, வாடிவாசலில் உற்சாக குரல் கொடுக்க, ஜல்ஜல் சலங்கைகள் ஒலிக்க காளைகள் மிரட்ட போகிறது இந்த ஜல்லிக்கட்டில்.

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கியதை அடுத்து மதுரை அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேடு மக்கள் மகிழ்ச்சி பொங்கல் பொங்க தாரை, தப்பட்டை சத்தம் தெறிக்க ஜாம் ஜாம் என கொண்டாடினர். வாடிவாசல் முன் பொதுமக்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அலங்காநல்லுார் காளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு ...

பிப்., 2 ஜெ., விடுதலையை எதிர்த்த வழக்கில் விசாரணை ஆரம்பம்...:தினமும் நடக்கும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு :டூ2ஜி வழக்கிலும் விசேஷ கோர்ட்டில் பிப்ரவரியில் இறுதி வாதம்

Posted: 08 Jan 2016 10:20 AM PST

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேரை விடுவித்து, கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, பிப்ரவரி, 2ம் தேதி துவங்குகிறது. 'அன்று முதல், தினமும் விசாரணை நடக்கும்' என, நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், பிப்ரவரியில் இறுதி வாதம் துவங்குகிறது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, கர்நாடக சிறப்பு ...

பதன்கோட்டிற்கு மோடி வர உள்ளதாக தகவல்

Posted: 08 Jan 2016 12:07 PM PST

பதன்கோட்: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமான படை தளத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 1-ம் தேதி ராணுவ உடையில் நுழைந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், இச்சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பலியாயினர்.இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றியதை தேசிய புலானய்வு துறையினர் உறுதிப்படுத்தினர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™