Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


50 சதவீத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு: பிரதமர் உறுதி

Posted: 31 Jan 2016 08:17 AM PST

புதுடில்லி: 'இந்திய விவசாயிகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பேரையாவது, அடுத்த இரண்டு ஆண்டு களுக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்,' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, 'மான் - கி - பாத்' என்ற, மாதாந்திர வானொலி நிகழ்ச் சியில், நாட்டு மக்களுக்கு, நேற்று உரையாற்றினார்.அதன் விவரம்:இயற்கை இடர்பாடுகளால், விவசாயிகளின் ஓராண்டு உழைப்பு வீணாகிறது; அவர்களை பாதுகாக்கும் நோக்குடன், 'பிரதம மந்திரி பயிர் காப்பீடு' என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம். ஏற்கனவே உள்ள பயிர் காப்பீட்டு திட்டங்களால், 20 - 25 சதவீத ...

'ஸ்மார்ட் சிட்டி'க்கு முதலீடு கிடைக்குமா?

Posted: 31 Jan 2016 08:19 AM PST

புதுடில்லி: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசின் கனவு திட்டமான, 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கோவை, சென்னை உட்பட, 20 நகரங்களின் முதல் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.10 லட்சம் கோடி:
இந்த திட்டத்தின்படி, 100 நகரங்களை, ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு, அடுத்த சில ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்; ...

பாக்., அடுத்த தாக்குதல் 'பலூன்?'

Posted: 31 Jan 2016 08:38 AM PST

ஜெய்ப்பூர்: அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஏவப்படும், எல்லை தாண்டிய, பயங்கரவாத தாக்குதல்களில் அடுத்தது, பலுான் தாக்குதலாக இருக்கும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது, பாக்., பயங்கரவாதிகள் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் செயல். அந்த வரிசையில், இப்போது, புது விதமான தாக்குதலை பாக்., மேற்கொள்ளலாம் என, நம்பப்படுகிறது. வாயு நிரப்பப்பட்ட பலுான்களில் ...

இந்தியாவில் இணைய சமநிலை நீடிக்குமா? 'டிராய்' முடிவுக்கு அதிக எதிர்பார்ப்பு

Posted: 31 Jan 2016 08:42 AM PST

புதுடில்லி: நாட்டில் இப்போது பின்பற்றப்படுவது போன்ற, இணையத்தில் எந்த நிறுவனத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படாத, இணைய சமநிலை தொடர வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, 'டிராய்' எனப்படும், தொலை தொடர்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

அமெரிக்காவின், 'பேஸ்புக்' சமூக வலைதளம், 'பிரீ பேசிக்ஸ்' என்ற பெயரில், இலவச இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளது. இந்தியாவில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. அதன்படி, இணையதள ...

தற்கொலை செய்த மாணவர் தலித் அல்ல: சுஷ்மா பேச்சால் பெரும் சர்ச்சை

Posted: 31 Jan 2016 10:01 AM PST

தானே: ''தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பல்கலையில் படித்து தற்கொலை செய்த மாணவர் ரோஹித் வெமுலா, தலித் அல்ல,'' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.தெலுங்கானாவில், ஐதராபாத் பல்கலையில், படித்து வந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த, ரோஹித் வெமுலா என்ற மாணவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக, பல்கலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தபோது, விடுதியில் உள்ள நண்பர் அறையில், ரோஹித் தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ...

'ரெய்டு'க்கு தடா? குஷியில் அதிகாரிகள்

Posted: 31 Jan 2016 10:20 AM PST

சென்னை: 'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகள் சிக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். தேர்தல் முடியும் வரை, 'ரெய்டு' நடத்த வேண்டாம்' என, விஜிலென்ஸ் போலீசாருக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளில், அரசுத் துறைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில், அரசியல் கட்சியினரும் மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசுத் துறை அதிகாரிகளை, லஞ்ச ஒழிப்பு போலீசார் மாமூல் பெற்றதாக ...

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வர்

Posted: 31 Jan 2016 10:21 AM PST

சென்னை: ''தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை; ஐயமும் இல்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.ஜெயலலிதா பேரவை செயலரும், வருவாய் துறை அமைச்சருமான உதயகுமார் தலைமையில், பேரவை நிர்வாகிகள், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, கட்சி வளர்ச்சி நிதிக்காக, 1.10 கோடி ரூபாய் வழங்கினர்.அப்போது, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: உங்களுக்கெல்லாம் தெரியாதது அல்ல. இப்போது நாம், சட்டசபை பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். நாம், புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பது தான், நம்முடைய லட்சியம். இந்த சட்டசபை பொதுத் தேர்தலில், ...

ரூ.30,000கோடி தான் முக்கியம்: தமிழக அரசு மீது கனிமொழி தாக்கு

Posted: 31 Jan 2016 10:22 AM PST

சென்னை: ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என தெரியவில்லை,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி கூறினார். அவர் அளித்த பேட்டி:'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்' என்றார், முதல்வர் ஜெயலலிதா; ஆனால், எதையும் செய்யவில்லை. அதைப் போல, 'தொழில் துறையில், மாநிலத்தை முதல் நிலைக்கு எடுத்துச் செல்வோம்' என்றார்; ஆனால், தமிழகத்தில் பல தொழில்கள் முடங்கிவிட்டன. இங்கிருக்கும் தொழில்கள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குசென்றுவிட்டன. தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என ...

கடன் நெருக்கடியால் 'பில்டர்'கள் பலர் தலைமறைவு? 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் அபாயம்

Posted: 31 Jan 2016 11:06 AM PST

விற்பனை வீழ்ச்சி, விலை உயர்வு போன்ற காரணங்களால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1,000 கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடன் சுமை நெருக்கடியால் 'பில்டர்'கள் தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், புதிய குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வீடு வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பிற தொழில்கள், நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் இதர சேவை துறைகளில் பணி புரிய வருவோர், சென்னையில் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் ...

61 சதவீதம் பேர் ஓய்வுக்கு தயார்: எச்.எஸ்.பி.சி., ஆய்வில் தகவல்

Posted: 31 Jan 2016 12:02 PM PST

மும்பை: பணியிலிருக்கும் பிரச்னை, ஏற்படும் மன அழுத்தம், அதனால் உடல் நல குறைபாடு அதிகரிக்கும் வாய்ப்பு போன்ற பல காரணங்களால், இந்தியாவில் வேலை பார்க்கும் மக்களில், 45 வயதை தாண்டியவர்களில், 61 சதவீதம் பேர், 'விட்டால் போதும்; இன்னும், ஐந்தாண்டுகளில் ஓடத் தயார்' என்ற நிலையில் இருப்பதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனினும், ஓய்வு பெற முடியாத வகையில், பணக்கஷ்டம், வாழ்க்கையில், 'செட்டில்' ஆகாத நிலை, வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் போன்ற சூழ்நிலைகளால், இவர்கள், கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலை, இந்தியா மட்டுமின்றி, ...

கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம்

Posted: 31 Jan 2016 02:38 PM PST

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், 'ஜி - டாக்சி' சேவையை துவக்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், 'ஷி - டாக்சி' சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பின்பற்றி, திருநங்கையரை, சமூக நீரோட்டத்தில் இணைக்கும் திட்டமாக, ஜி - டாக்சி எனப்படும், வாடகைக் கார் சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சமூக நீதித்துறை உருவாக்கிய இந்த திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் திருநங்கையர் இருப்பர். வரும், மார்ச் மாதம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™