Tamil News | Online Tamil News |
- முக்கிய கேள்விகள் புத்தகத்தில் ஜெ., படம்: பெற்றோர் அதிருப்தி
- விஜயகாந்தின் கூட்டணி 'டிராமா'வுக்கு பின்னணி யார்? இதோ... அதோ... என போக்குகாட்டுவது பற்றி பகீர் தகவல்
- லட்சங்களில் புரளும் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு: கறுப்பு பணத்தை ஒழிக்க நேரடி வரிகள் வாரியம் அதிரடி
- நேதாஜியின் கடைசி நாள்: புதிய தகவல் அம்பலம்
- அரசுக்கு நிதி வழங்கும் ஆக்கிரமிப்பு நிறுவனங்கள்: அகற்றம் இப்போதைக்கு இல்லை?
- ஜல்லிக்கட்டு: பா.ஜ.,வுக்கு நெருக்கடி
- ராணுவ ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிக்கணும்: பிரதமர் மோடி
- பதன்கோட் விமானப்படை தளத்தில் தொடரும் தாக்குதல்
- ஆசிரியர்களை அதிர வைக்கும் 'வாட்ஸ் ஆப்' தகவல்
- 'சூப்பர் - 30' நகரங்களில் இடம்பிடித்த மும்பை, டில்லி
- ஆப்கனில் இந்திய தூதரகத்தில் தாக்குதல்
| முக்கிய கேள்விகள் புத்தகத்தில் ஜெ., படம்: பெற்றோர் அதிருப்தி Posted: 03 Jan 2016 08:06 AM PST பிளஸ் 2 கற்றல் கையேடு புத்தகத்தில், முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முக்கிய கேள்விகள் அடங்கிய, குறைந்தபட்ச கற்றல் கையேடு புத்தகத்தை, தமிழக கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும் என, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் ... |
| விஜயகாந்தின் கூட்டணி 'டிராமா'வுக்கு பின்னணி யார்? இதோ... அதோ... என போக்குகாட்டுவது பற்றி பகீர் தகவல் Posted: 03 Jan 2016 10:30 AM PST 'சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு எங்கள் பக்கம் வாங்க; நீங்கள் விரும்பும் பதவியை தரத் தயார்' என தி.மு.க., மற்றும் மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ., தலைவர்கள் என ஆளாளுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களுக்கு எல்லாம் விஜயகாந்த், இதோ... அதோ... என போக்கு காட்டி வருகிறார். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இதனால் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக நேரடியாகவும், ... |
| Posted: 03 Jan 2016 10:43 AM PST புதுடில்லி: 'கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில், ஏப்., 1 முதல், 30 லட்சம் ரூபாய்க்கு மேலான அனைத்து பண பரிவர்த்தனைகளையும், வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய நேர்முக வரிகள் வாரியமான, சி.பி.டி.டி., உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சி.பி.டி.டி., வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் விவரம்: * ஏப்ரல், 1 முதல், 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான பணவரவு, பங்குகள் வாங்குதல், பரஸ்பர நிதியத்தில் முதலீடு, சொத்துகள் வாங்குதல், அன்னிய கரன்சி விற்பனை போன்றவை பற்றி, வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இதற்காக, 61 - ஏ படிவத்தை பயன்படுத்த வேண்டும் * அசையா ... |
| நேதாஜியின் கடைசி நாள்: புதிய தகவல் அம்பலம் Posted: 03 Jan 2016 10:45 AM PST லண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நாளுக்கு முந்தைய நாளில் நிகழ்ந்த சம்பவங்களை, பிரிட்டனைச் சேர்ந்த இணையதளம், ஆவணங்களுடன் விரிவாக வெளியிட்டுள்ளது. நேதாஜி இறுதியாக பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது பற்றி, பல்வேறு முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. இதுபற்றி, பல விசாரணை குழுக்களும் விசாரணை நடத்தியுள்ளன. இந்நிலையில், பிரிட்டன் இணையதளம் ஒன்று, சில ஆவணங்களுடன் புதிய தகவல்களை வெளியிட்டு உள்ளது. www.bosefiles.info என்ற அந்த இணையதளத்தை, பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஷ் ... |
| அரசுக்கு நிதி வழங்கும் ஆக்கிரமிப்பு நிறுவனங்கள்: அகற்றம் இப்போதைக்கு இல்லை? Posted: 03 Jan 2016 10:46 AM PST ஆக்கிரமிப்பு நிறுவனங்கள், அரசிடம் வெள்ள நிவாரண நிதியை போட்டி, போட்டு வழங்கி வருவதால், அடையாறு மற்றும் கூவம் ஆற்று ஆக்கிரமிப்புக்களில், 'கை வைக்க' அதிகாரிகள் தயங்குகின்றனர்.இதையடுத்து, 'அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை, முறையாக அகற்ற வேண்டும்' என, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றும், முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும், நீர்வளத் துறை துவங்கியது. ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில், அடையாறு ... |
| ஜல்லிக்கட்டு: பா.ஜ.,வுக்கு நெருக்கடி Posted: 03 Jan 2016 10:47 AM PST பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், மாடு பிடி விளையாட்டான, ஜல்லிக்கட்டுவுக்கு தடை நீடிக்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகை களைகட்டவில்லை. இந்நிலையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டுவை நடத்தி விட வேண்டும் என்பதில், தமிழக, பா.ஜ., உறுதியாக இருக்கிறது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஜல்லிக்கட்டு விஷயத்தில், கடந்தாண்டை விட அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. 'எப்படியோ ஜல்லிக்கட்டு நடந்தால் சரி தான்' என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வும், ... |
| ராணுவ ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிக்கணும்: பிரதமர் மோடி Posted: 03 Jan 2016 10:49 AM PST துமகூரு: ''பாதுகாப்பு துறையில், இந்தியா தன்னிறைவு பெற, ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பாதுகாப்பு துறையில், இந்தியா தன்னிறைவு பெற, இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். ... |
| பதன்கோட் விமானப்படை தளத்தில் தொடரும் தாக்குதல் Posted: 03 Jan 2016 10:53 AM PST பதன்கோட்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில், பயங்கரவாதிகள் நேற்றும் தாக்குதல் நடத்தினர்; அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க, தொடர்ந்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் மாவட்டம், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளது. இங்கு, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. அதிநவீன போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் ... |
| ஆசிரியர்களை அதிர வைக்கும் 'வாட்ஸ் ஆப்' தகவல் Posted: 03 Jan 2016 10:55 AM PST பள்ளிகளுக்கு ஆய்வக கருவிகள் மற்றும் நுாலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வரும், மாவட்ட அதிகாரியின் பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளுக்கும், 8ம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும், ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில், மத்திய அரசின் நிதி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும் அறிவியல் உபகரணங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய், நுாலகத்துக்கு புத்தகங்கள் வாங்க, 10 ஆயிரம் ... |
| 'சூப்பர் - 30' நகரங்களில் இடம்பிடித்த மும்பை, டில்லி Posted: 03 Jan 2016 11:29 AM PST புதுடில்லி:பொருளாதார வலிமையில், உலகின் சக்தி வாய்ந்த, 30 சூப்பர் நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் மும்பை, டில்லி நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக, சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜே.எல்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை:உலகில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் நிறுவனங்கள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி கள் உள்ள, 30 நகரங்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தில் உள்ளது.அத்துடன், நியூயார்க், லண்டன், பாரிஸ் ஆகிய நான்கு நகரங்கள், ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. இந்த பட்டியலில், ... |
| ஆப்கனில் இந்திய தூதரகத்தில் தாக்குதல் Posted: 03 Jan 2016 01:14 PM PST காபூல்: ஆப்கனில் இந்திய துாதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், துாதரகத்தில் இருந்த இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது .காபூல் அருகே மஜாரி ஷரீப் பகுதியில், இந்திய துாதரக கிளை உள்ளது. நேற்று இரவு, துாதரகத்தின் அருகே இருந்த கட்டடத்தில் பயங்கரவாதிகள் புகுந்தனர். இந்திய துாதரகத்தின் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.துாதரக பாதுகாப்பு வீரர்கள் சுதாரித்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |