Tamil News | Online Tamil News |
- 'அம்பேல்' ஆகுமா ரபேல் ஒப்பந்தம்?
- காதலித்தால் வேலை இல்லை: பட்டதாரிகளுக்கு சோதனை
- அரசை கவிழ்க்க ஐ.எஸ்., சதி: விசாரணையில் பகீர் தகவல்
- மோடி அரசின் செயல்பாடு 'ஓகே' : கருத்து கணிப்பில் புதிய தகவல்
- அமெரிக்கா அலறும் 'சைகா' வைரஸ் இந்தியாவை பாதிக்குமா? : வரும் மாதங்களில் பரவும் என்பதால் பீதி அதிகரிப்பு
- 'அம்மா'வின் புகழ் பாட மாநகராட்சி கூட்டமா? திருவல்லிக்கேணியில் ஸ்டாலின் கேள்வி
- போடி தொகுதியில் முதல்வர் ஜெ.,? : சாதக, பாதகம் அலசும் மேலிடக்குழு
- இந்தியாவில் லஞ்சம், ஊழல்; சீனா, ரஷ்யாவை விட குறைவு!
- 'கல்லா கட்டும்' தமிழக ஜாதி அமைப்புகள் ஜோர்: மாநாடுகள் நடத்தி தீவிர வசூல் வேட்டை
- டில்லி முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம்
| 'அம்பேல்' ஆகுமா ரபேல் ஒப்பந்தம்? Posted: 27 Jan 2016 08:35 AM PST புதுடில்லி: பிரான்சிடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க, இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், விலை உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பாக, இழுபறி நீடிப்பதால், முழுமையான ஒப்பந்தம் கையெழுத்தாக, மேலும் பல வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றானபிரான்ஸ் நாட்டின் முன்னணி போர் விமான தயாரிப்பு நிறுவனமான, டஸால்டிடம் இருந்து, 126 ரபேல் வகை போர் விமானங்களை வாங்க, இந்தியா திட்டமிட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை, 36 ஆக ... |
| காதலித்தால் வேலை இல்லை: பட்டதாரிகளுக்கு சோதனை Posted: 27 Jan 2016 08:40 AM PST 'காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன. இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்து செய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் ... |
| அரசை கவிழ்க்க ஐ.எஸ்., சதி: விசாரணையில் பகீர் தகவல் Posted: 27 Jan 2016 09:12 AM PST புதுடில்லி: மத்திய அரசை கவிழ்த்து, நாடு முழுவதும், 'ஷரியத்' சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டிருந்ததாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள், விசாரணையின்போது தெரிவித்து உள்ளனர். குடியரசு தினத்துக்கு முன், நாட்டின் பல்வேறு இடங்களில், ஐ.எஸ்., ஆதரவாளர்கள், 14 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பானஎன்.ஐ.ஏ.,யின் அதிகாரிகள், இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:ஐ.எஸ்., ஆதரவாளர்கள், மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சி யில், அவர்கள் ஈடுபட்டிருந்ததுதெரியவந்தது. 'இஸ்லாமிய ... |
| மோடி அரசின் செயல்பாடு 'ஓகே' : கருத்து கணிப்பில் புதிய தகவல் Posted: 27 Jan 2016 09:13 AM PST புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு, சராசரிக்கும் அதிகமாக இருப்பதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ஏ.பி.பி., நியூஸ் - நீல்சன் நிறுவனங்கள் இணைந்து, மத்திய அரசின் செயல்பாடு குறித்து, நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தின; இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:மத்திய அரசின் செயல்பாடு, மிகவும் நன்றாக இருப்பதாக, 46 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதேநேரத்தில், பிரதமர் மோடியின் ... |
| Posted: 27 Jan 2016 09:17 AM PST சான் ஜுவான்: 'சைகா புளூ' என்ற காய்ச்சல் கர்ப்பிணி பெண்களை தாக்கினால், சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது. 'ஏடெஸ் எகிப்தி' என்ற கொசுவால் பரவும் இந்த வினோத காய்ச்சல், அமெரிக்கா, கரீபியன் தீவு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை கலங்கடித்து வருகிறது. 'நோய் பாதிப்புள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டாம்' என, பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று வருபவர்கள் அதிகம் என்பதாலும், அடுத்து வரும் கோடை காலத்தில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது என, ... |
| 'அம்மா'வின் புகழ் பாட மாநகராட்சி கூட்டமா? திருவல்லிக்கேணியில் ஸ்டாலின் கேள்வி Posted: 27 Jan 2016 09:38 AM PST சென்னை: சென்னையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நான்காம் கட்ட, 'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி மீன் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.மீன் வியாபாரிகள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில்உள்ள அரசு செயல்படுகிறதா என்பதே தெரியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில், முதல்வரின் அலட்சியப் போக்கினாலேயே அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.சென்னையில், மாதந்தோறும் மாநாகராட்சி மன்றக் ... |
| போடி தொகுதியில் முதல்வர் ஜெ.,? : சாதக, பாதகம் அலசும் மேலிடக்குழு Posted: 27 Jan 2016 09:39 AM PST சின்னமனுார்: தேனி மாவட்டம் போடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அங்கு ஒரு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க.,வின் சாதக, பாதகங்கள் குறித்து அக்குழு ஆய்வு செய்து வருகிறது. போடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். வரும் தேர்தலில் இங்கு ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அங்கு வளர்ச்சி பணிகள் முழு வீச்சில்நடக்கின்றன.இந்நிலையில் இத்தொகுதியில் சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு முகாமிட்டுள்ளது. இக்குழுவினர் சில ... |
| இந்தியாவில் லஞ்சம், ஊழல்; சீனா, ரஷ்யாவை விட குறைவு! Posted: 27 Jan 2016 09:42 AM PST 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா பன்னாட்டு அமைப்பு, உலக நாடுகளில் நிலவும், லஞ்சம், ஊழலை பட்டியலிட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பெர்லின் நகரில், 1993ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகளின் நிர்வாக வெளிப்படை தன்மையை காட்டி வருகிறது. இதன் தகவல்கள், உலக மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தாலும், நாடுகளின் தலைவர்களுக்கும், அரசுகளுக்கும் எரிச்சலை ஊட்டுகின்றன. 'கரப்ஷன் பெர்செப்ஷன்ஸ்' : கடந்த, 2015ல், உலக நாடுகளில் நிலவிய லஞ்சம், ஊழல் அடிப்படையில், 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல் கரப்ஷன் பெர்செப்ஷன்ஸ்' என்ற ... |
| 'கல்லா கட்டும்' தமிழக ஜாதி அமைப்புகள் ஜோர்: மாநாடுகள் நடத்தி தீவிர வசூல் வேட்டை Posted: 27 Jan 2016 10:31 AM PST தேர்தலில் மல்லுக்கட்ட தயாராகி வரும் பிரதான கட்சிகள் மத்தியில், 'கல்லா கட்டும்' திட்டத்துடன், தமிழக ஜாதி அமைப்புகள் ஜோராக களம் இறங்கி உள்ளன. மாநாடுகள் நடத்தி, தீவிர வசூல் வேட்டை நடத்தவும், ஓட்டுக்காக வளைக்க விரும்பும் கட்சிகளுடன் பேரம் பேசவும் காத்திருக்கின்றன. தேர்தல் களம் காணும் முன், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சியின் பலத்தை வெளிப்படுத்தவும், பிரதான கட்சிகள், மாநாடு நடத்துவது வழக்கம். சிறிய கட்சிகள், 'சீட்' பேரத்துக்காக, மாநாடுகளை நடத்தி, கூட்டத்தைக் கூட்டுவது உண்டு.இப்போது, ஜாதி கட்சிகளும் அதை பின்பற்றத் துவங்கி விட்டன. ஒவ்வொரு ... |
| டில்லி முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் Posted: 27 Jan 2016 12:35 PM PST புதுடில்லி: 'பென்ஷன் எப்போது கிடைக்கும்' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஒரு முதியவர் கேட்ட கேள்வியை, 29 துறைகளுக்கு அனுப்பிய, டில்லி முதல்வர் அலுவலகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த முதியவருக்கு, ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு வசிக்கும், சரண்ஜீத் சிங் பாட்டியா என்பவர், 'என் மனைவிக்கு கிடைத்து வந்த, உடல் ஊனமுற்றோருக்கான பென்ஷன், இடையில் நிறுத்தப்பட்டுள்ளது; அது எப்போது கிடைக்கும்' என, தகவல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |