Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜல்லிக்கட்டு பற்றி பேச அனுமதி மறுப்பு: தி.மு.க., - காங்., - கம்யூ., வெளிநடப்பு

Posted: 21 Jan 2016 08:05 AM PST

சென்னை: ''ஜல்லிக்கட்டு நடத்த, தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது. வழக்கு, உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து விவாதிக்க முடியாது,'' என, சட்டசபை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தீர்மானம் வேண்டும்: இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று கேள்விநேரம் முடிந்ததும், 'ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இது தொடர்பாக நடந்த விவாதம்:தி.மு.க., - ஸ்டாலின்: ஜல்லிக்கட்டு தொடர்பாக, ...

செம்பரம்பாக்கம் ஏரி பிரச்னை'எதிர்க்கட்சிகள் சொல்வதெல்லாம் சுத்த பொய்!'

Posted: 21 Jan 2016 08:10 AM PST

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, சட்டசபையில் நேற்று, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

கற்பனை குற்றச்சாட்டு: அப்போது, அவர் கூறியதாவது:'செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. திடீரென, 2015 டிச., 1ம் தேதி இரவு, மிக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான், அடையாறில் பெருவெள்ளம் ஏற்பட்டு, சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் திறப்பது தொடர்பாக, முதல்வரின் உத்தரவு கிடைக்க தாமதம் ஏற்பட்டது' என, பல்வேறு கற்பனை குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் ...

ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஆதரவு வெளிநாட்டில் கமல்நாத் தகவல்

Posted: 21 Jan 2016 08:19 AM PST

டாவோஸ்: ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ், கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள முன்வந்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல், நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு, காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மழைக்கால, குளிர் கால கூட்டத் தொடர்களில், மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத, ராஜ்யசபாவில் முடங்கியுள்ளது. ...

'ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள் 92 சதவீதம் : வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம்

Posted: 21 Jan 2016 08:23 AM PST

புதுடில்லி:நாட்டின், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில், 92 சதவீதம் பேருக்கு, 'ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், தகுதி உடையவர்களுக்கு மட்டும் சென்றடைவதோடு, நிதியுதவிகளில் மூன்றாம் நபரின் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள, 128 கோடி மக்கள்தொகையில், 2015, டிசம்பர் 31 வரையில், 95 கோடி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2009ல் தொடங்கப்பட்டு, இதுவரை, 7,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள, இந்த திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 92 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை ...

மத்திய அரசு விழாவை புறக்கணித்த எம்.பி.,க்கள்: அமைச்சரின் செயலால் அதிகாரிகள் அதிருப்தி

Posted: 21 Jan 2016 09:08 AM PST

மத்திய அரசு விழாவில் பங்கேற்பதை தவிர்த்த, மாநில அமைச்சர் மற்றும் எம்.பி.,க்களின் செயல், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை, 2,766 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இம்மாதம், 19ல் கன்னியாகுமரியில் நடந்தது. மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில், 286 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கும், அடிக்கல் நாட்டப்பட்டது.மத்திய அரசு சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ...

அமைச்சர் நத்தம் அறிவிப்பால் 'குடி'மகன்கள் குஷி ' : மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்'

Posted: 21 Jan 2016 09:42 AM PST

சென்னை: ''தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது,'' என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர். மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.

தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகள் எல்லாமே, இதை ஆதரித்து குரல் கொடுத்தன. தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது, இதற்கு அரசு செவி சாய்க்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடத்திலும் ...

தனியாக நிற்க யாரும் முன்வரவில்லை! சட்டசபையில் சண்டை

Posted: 21 Jan 2016 10:13 AM PST

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும், - தி.மு.க.,வும் தனித்து போட்டியிட தயங்குவது, நேற்று சட்டசபையில், வெட்ட வெளிச்சமானது.

'தனித்து போட்டியிட தயாரா' என, இரண்டு கட்சியினரும் சவால் விட்டும், தயார் என்று சொல்ல, அவர்களில் யாரும் முன்வரவில்லை.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - துரைமுருகன்: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக, நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும், மக்களிடம் எடுபடாது. சென்னையில், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை என, மழை நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நீங்கள் நுழைய முடியாது. அப்பகுதிகளில், தனியாக சென்று ...

நீர் நிலை ஆக்கிரமிப்பு: கணக்கெடுப்பு துவக்கம்

Posted: 21 Jan 2016 10:16 AM PST

சென்னை: ''நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது; முடிந்ததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்தே.மு.தி.க., - பார்த்தசாரதி: 'தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 1,000 கோடி ரூபாயில், ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்' என, அறிவித்திருந்தீர்கள். நான்கு ஆண்டுகளாகியும், பணிகளை துவக்கவில்லை.ஏரி, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தற்போது நீர் நிலைகளில், முழு கொள்ளளவில், 60 சதவீதம் அளவிற்கு கூட, தண்ணீரை ...

ராணுவ தளங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய விரைவில் கமிட்டி

Posted: 21 Jan 2016 10:49 AM PST

புதுடில்லி:பதன்கோட் தாக்குதல் சம்பவத்தையடுத்து, நாடு முழுவதுமுள்ள ராணுவ தளங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்கான கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது சமீபத்தில் தாக்குதல்நடத்தினர். 'உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இச்சம்பவத்திற்கு காரணம்' என, எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்கூறியதாவது:நாடு முழுவதுமுள்ள ராணுவ தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கமிட்டி அமைக்கப்படும். ஓரிரு நாட்களில் ...

நேதாஜி உடல் எரியூட்டப்பட்ட தகவல் ஆதாரங்களுடன் வெளியானதால் சர்ச்சை

Posted: 21 Jan 2016 12:26 PM PST

லண்டன்: சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சர்ச்சைக்குரிய மரணம் குறித்த, புதிய தகவல்களை வெளியிட்டு வரும், பிரிட்டன் இணையதளம், அவரது உடல் எரியூட்டப்பட்டதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் தொடர்பான விஷயத்தில், மர்மம் நீடித்து வருகிறது.சமீபகாலமாக, 'நேதாஜியின் இறுதி நாட்கள் பற்றிய உண்மையை வெளியிட வேண்டும்' என, திரிணமுல் காங்கிரஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™