Cinema.tamil.com |
- டான்-3ம் பாகத்தில் பிரியங்காவிற்கு பதிலாக கத்ரினா?
- சுதந்திர உணர்வை பொங்க வைக்கும் அக்ஷய் குமாரின் பாடல்!
- ஹாலிவுட் படத்தில் பிசியாக இருக்கும் பாலிவுட் நடன இயக்குனர்!
- கமலுக்கு கிடைத்த கவுரவம் - ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார்
- அரோல் கொரேலிக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சூர்யா
- தமிழிலும் வெற்றிக்காகக் காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்
- 'பாகுபலி 2' படப்பிடிப்பு எப்போது முடியும் ?
- ஆந்திர போலீஸ் உடையில் உருவாகும் 'எஸ் 3'
- சரைனொடு படத்தில் அதிரடியான கிளைமேக்ஸ்
- பவன் கல்யாணைப் புகழும் தயாரிப்பாளர்
- எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில் சிரஞ்சீவி?
- விற்பனையில் சாதனை படைத்த டிக்டேட்டர் படத்தின் முதல் டிக்கெட்
- தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக சமந்தா?
- மம்முட்டியை இயக்கியவருக்கு மோகன்லாலை இயக்கும் தைரியம் இல்லையாம்...!
- ஆட்டிசம் நோய் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்து மகிழ்வித்த திலீப்..!
- வதந்தியை நம்பாதீர்கள் ; பதறும் நிவின்பாலி பட இயக்குனர்...!
- அமெரிக்கர்களை பாஜிராவ் மஸ்தானி பார்க்க வைத்த பிரியங்கா சோப்ரா!
- யுடியூப்பை கலக்கி வரும் ஹிரித்திக், சோனம் கபூர் பாடல்!
- சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான்! - அரவிந்த் பேட்டி
- 2 வருட நிறைவில் 'வீரம், ஜில்லா'
| டான்-3ம் பாகத்தில் பிரியங்காவிற்கு பதிலாக கத்ரினா? Posted: பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படத்தின் ஒன்று, இரண்டு பாகங்களை தொடர்ந்து டான்-3ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் ஃபர்கான் அக்தர். இரண்டு பாகங்களிலும் நடித்த பிரியங்கா சோப்ராவிற்கு பதிலாக மூன்றாவது பாகத்தில் கத்ரினா கைஃப்பை நடிக்க வைக்கும் முயற்சியில் ... |
| சுதந்திர உணர்வை பொங்க வைக்கும் அக்ஷய் குமாரின் பாடல்! Posted: பாலிவுட் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கும் ஏர்லிஃப்ட் திரைப்படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வந்தே மாதரம் என்று ஒலித்து சுதந்திர தாகத்தையும், சுதந்திர உணர்வையும் மீண்டும் ஒருமுறை தட்டி எழுப்பும் விதமாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. எரிந்துக் ... |
| ஹாலிவுட் படத்தில் பிசியாக இருக்கும் பாலிவுட் நடன இயக்குனர்! Posted: பாலிவுட்டின் சிறந்த நடிகைகளான ஸ்ரீதேவி மற்றும் மாதுரி திக்ஷித் ஆகியோருக்கு பாலிவுட் படங்களில் நடனம் அமைத்துக் கொடுத்தவர் சரோஜ் கான். சில காலமாக அவரது பங்களிப்பு பாலிவுட்டில் காணாமல் போனது. அதற்கான விடையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சரோஜ் கான். "நான் பாலிவுட்டில் சிறப்பான பணியை செய்து வந்ததைத் தொடர்ந்து எனக்கு ... |
| கமலுக்கு கிடைத்த கவுரவம் - ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார் Posted: தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகர் கமல்ஹாசன். இன்றைக்கு சினிமாவை பற்றிய பல அரிய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். இந்திய சினிமா மட்டுமல்லாது, உலக சினிமாவை பற்றியும் நன்கு அறிந்தவர். தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு இப்போது ஒரு புதிய கவுரவம் கிடைக்க போகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் ... |
| அரோல் கொரேலிக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சூர்யா Posted: பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அரோல் கொரேலி. அவர் அடுத்து இசையமைத்து வெளிவந்த படம் 'பசங்க 2'. சூர்யா தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய பாண்டிராஜுக்கு சில நாட்களுக்கு முன் கார் ஒன்றைப் ... |
| தமிழிலும் வெற்றிக்காகக் காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் Posted: தமிழ் சினிமாவில் கடந்த வருடம் அறிமுகமான நடிகைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகையான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்த உடனேயே அவரைப் பல படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். இதற்கு முன் வேறு எந்த நடிகைக்கும் அப்படி ஒரு வரவேற்பு ... |
| 'பாகுபலி 2' படப்பிடிப்பு எப்போது முடியும் ? Posted: 2015ம் ஆண்டின் மறக்க முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்றது வரலாற்றுப் படமான 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் நேரடியாகவும், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய மொழிப் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படமாக சாதனை புரிந்தது. முதல் பாகம் உருவாகும் போதே இப்படத்தின் 40 சதவீத இரண்டாம் ... |
| ஆந்திர போலீஸ் உடையில் உருவாகும் 'எஸ் 3' Posted: இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் உருவாகும் 'சிங்கம் 3' படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமானது. அங்கு சூர்யா, சூரி, சாம்ஸ், பாடகர் கிருஷ் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போது எடுக்கப்பட்டு வரும் காட்சிகள் ஆந்திர ... |
| சரைனொடு படத்தில் அதிரடியான கிளைமேக்ஸ் Posted: ருத்ரமாதேவி படத்தில் அதிரடியான நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்த டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன், சரைனொடு எனும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டதை எட்டியுள்ளன. ஜனவரி மாத இறுதியில் சரைனொடு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான ... |
| பவன் கல்யாணைப் புகழும் தயாரிப்பாளர் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்புகள் குஜராத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகின்றார். பவன் ... |
| எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில் சிரஞ்சீவி? Posted: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு திரை உலகில் பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவற்றுடன் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படமும் மோதவிருக்கின்றது. இயக்குனர் காந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சுரபி ஜோடி சேர்ந்துள்ளனர். ... |
| விற்பனையில் சாதனை படைத்த டிக்டேட்டர் படத்தின் முதல் டிக்கெட் Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ள டிக்டேட்டர் திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் சோனல்சௌகன் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான இப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ... |
| தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக சமந்தா? Posted: தனது இசையாலும் குரலாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக மாறவுள்ளதாக தகவல் வெளிவந்தது. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை தயாரிக்கின்றார். ராக்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகை ... |
| மம்முட்டியை இயக்கியவருக்கு மோகன்லாலை இயக்கும் தைரியம் இல்லையாம்...! Posted: கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து தொடர் பாராட்டு மழைகளால் நனைந்துகொண்டு இருக்கிறார் 'இயக்குனர் மார்ட்டின் பரக்கத். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சார்லி' படத்தின் இயக்குனர் இவர் தான். 2010ல் மலையாள சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இவருக்கு முதல் படமே மம்முட்டியுடன் தான். கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் ... |
| ஆட்டிசம் நோய் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்து மகிழ்வித்த திலீப்..! Posted: ஒவ்வொரு பிரபல நடிகரும் லட்சக்கணக்கில் இருக்கும் தனது ரசிகர்கள் அனைவரையும் சந்தித்து விடமுடியாது தான். ஆனால் வெகு சில ரசிகர்கள் சாதாரண ரசிகர்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களை தாங்களே நேரடியாக சந்திப்பதை தங்களது கடமையாகவே மலையாள நடிகர்கள் அனைவரும் நினைக்கின்றனர்.. கடந்த மாதம் போலந்தில் இருந்து தன்னைக்காண ... |
| வதந்தியை நம்பாதீர்கள் ; பதறும் நிவின்பாலி பட இயக்குனர்...! Posted: மலையாளத்தில் இதுவரை '1983' என்கிற ஒரே ஒரு படம் தான் இயக்கியுள்ளார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.. ஆனால் அவரது இரண்டாவது படம் வருவதற்குள் பாடாய் படுத்தி எடுத்து விடுவார்கள் போல தெரிகிறது. தனது முதல் பட ஹீரோ நிவின்பாலியை வைத்து இரண்டாவதாக 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற படத்தை இயக்கியுள்ளார் அப்ரிட் ஷைன். இந்தப்படத்தில் முதன்முறையாக போலீஸ் ... |
| அமெரிக்கர்களை பாஜிராவ் மஸ்தானி பார்க்க வைத்த பிரியங்கா சோப்ரா! Posted: பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடத்த பீப்பிள் சாய்ஸ் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்று விருதை வென்றார். இந்த விருதை வாங்கும் முதல் ஆசிய பெண்மணி என்ற அந்தஸ்த்தையும் அடைந்தார் பிரியங்கா சோப்ரா. ஏபிசி சேனலில் ஒளிபரப்பாகும் ஆக்ஷன் திரில்லர் சீரியலை அமெரிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ... |
| யுடியூப்பை கலக்கி வரும் ஹிரித்திக், சோனம் கபூர் பாடல்! Posted: ஆசிக் படத்திற்காக பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்து வெளியான 'தீரே தீரே' பாடல் பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் யோ யோ ஹனி சிங் மூலம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு முன்னர் யுடியூப்பில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் ... |
| சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான்! - அரவிந்த் பேட்டி Posted: பாசமலர் தொடரில் பாரிவள்ளல் என்ற லீடு ரோலில் நடித்து வருபவர் அரவிந்த். அப்பா-அம்மா - இரண்டு தங்கைகள் என குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பொறுப்புள்ள வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். அதன்காரணமாக ஏராளமான நேயர்களின் மனங்களிலும் இடம்பிடித்து பிரபலமாகி வருகிறார் அரவிந்த். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த ... |
| 2 வருட நிறைவில் 'வீரம், ஜில்லா' Posted: எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், வரிசையில் 'விஜய் - அஜித்' ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகவே கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தாலும், இணைய வசதிகள் அதிகரித்தவுடன் அவர்கள் இருவரின் ரசிகர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலுமே மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் மோதலைப் பற்றி செய்திகள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |