Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


2016ல் இளையராஜாவின் முதல் இசைப் பதிவு

Posted:

'தாரை தப்பட்டை' படம் மூலம் இந்த ஆண்டில் தன்னுடைய இசைப் பயணத்தை அதிரடியாக ஆரம்பிக்க உள்ளார் இளையராஜா. கடந்த ஆண்டில் தமிழில் அவர் இசையமைத்து 'டூரிங் டாக்கீஸ்' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வந்தது. தெலுங்கில் 'ருத்ரமாதேவி', கன்னடத்தில் 'மைத்ரி', ஹிந்தியில் 'ஷமிதாப்' என மொழிக்கு ஒன்றாக நான்கு படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ...

துல்கரின் வசூல் சாதனைக்கு தடைக்கல்லாக வெளியான திருட்டு விசிடி..!

Posted:

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சார்லி' வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. உடன் வெளியான மற்ற மூன்று படங்களை காட்டிலும் இந்தப்படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் மற்றும் பார்வதி இருவரின் நடிப்பும், புதுவிதமாக சொல்லப்பட்ட திரைக்கதை பாணியும் இந்தப்படத்திற்கு பார்வையாளர்களை அதிகரித்து ...

ரஜினியுடன் மோதும் இன்டர்நேஷனல் வில்லன்கள்

Posted:

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் இடத்தில் 'கபாலி' ...

அமீருடன் நடிப்பது ஆர்யா இல்லை, ஆரி.

Posted:

இயக்குநர் அமீரும், அர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அந்த செய்தியில் சில தகவல் பிழைகள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. அமீருடன் இணைந்து நடிக்க இருப்பது ஆர்யா அல்ல, ஆரி. ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் ரெட்டச்சுழி, கிருஷ்னா இயக்கிய ...

கொடைக்கானலில் பேரன்பு

Posted:

தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம், வசந்தபவன் ஹோட்டல் அதிபரின் மகனை ஹீரோவாக வைத்து 'தரமணி' என் படத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தரமணி படம் கடந்த ஓராண்டுக்கு மேலாக முடங்கிக் கிடக்கிறது. இனியும் தரமணி படத்தை நம்பிக்கொண்டிருப்பது வேஸ்ட் என் நினைத்தோ என்னவோ தன் அடுத்தப்படமாக 'பேரன்பு' என்ற படத்தை இயக்குகிறார் ...

3 வாரத்தில் 6000 கோடி வசூல் செய்த ஸ்டார் வார்ஸ்-7!

Posted:

இந்திய அளவில் 600 கோடி வசூல் செய்த பாகுபலியின் சாதனை நாம் போற்றும் நேரத்தில் உலக அளவில் 'ஸ்டார் வார்ஸ்-7' படத்தின் சாதனையை பார்த்தால் தலையே சுற்றி விடுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1300 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 19 நாட்களில் ரூ. 6000 கோடிகளை வசூல் செய்து பல பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை நாளுக்கு நாள் உடைத்து எறிந்து வருகிறது ஸ்டார் ...

எந்திரனில் அமிதாப் நடிக்காததற்கு ரஜினியே காரணம்

Posted:

2010ல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ''எந்திரன்''. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக முதலில் ஷங்கர் தேர்வு செய்தது பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனைத் தானாம்.

ஷங்கரின் தேர்வு குறித்து ரஜினியிடம் ஆலோசனை செய்தார் ...

'தில்வாலே பாடலுக்கு பாத்ரூமில் நடனமாடினேன்' - ஆலியா பட்!

Posted:

பாலிவுட்டின் இளம் கதாநாயகி ஆலியா பட்டிற்கு, யாருக்குமே இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்குடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இந்த ஸ்டூடன்ட் நம்பர் ஒன் நாயகி.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த ஆலியா பட்: "நான் ...

சல்மான்கானின் வெப் போர்டல் பெயரை மாற்ற சொல்லும் வர்த்தக நிறுவனங்கள்!

Posted:

சல்மான்கானின் 50வது பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பாக தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சல்மான்கான் தனது 'கான்மார்க்கெட்ஆன்லைன்.காம்' என்ற வெப்சைட்டை வெளியிட்டார்.

ஆனால், தற்போது அந்த வெப்சைட்டிற்கு சிக்கல் ...

'சரப்ஜித் சிங் பயோபிக்' - பாங்ரா ஆடும் ஐஸ்வர்யா ராய்!

Posted:

ஐஸ்வர்யா ராய் தனது அடுத்த சுற்றை துவங்கியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சரப்ஜித் சிங்கின் தங்கையான தல்பிர் கௌர் வேடத்தில் நடித்து வருகிறர் ஐஸ்வர்யா ராய். சரப்ஜித் சிங்காக ரண்தப் ஹூடா நடித்து வருகிறார்.

பொதுவாக வாழ்க்கை வரலாறு படமென்றாலே போர் அடிக்கும், சோகமாகவே ...

காதலர்களை வெகுவாக கவர்ந்து வரும் ஃபிடூர் டிரைலர்!

Posted:

கத்ரீனா கைஃப், ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபிடூர், தனது ட்ரெய்லரை நேற்று ரிலீஸ் செய்துள்ளது. ட்ரெய்லர் ரிலீசாகி 13 மணி நேரங்களிலே 7 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், காதலர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது ஃபிடூர் டிரெய்லர். ...

மகன்களுடன் ஆட்டோ சவாரி செய்யும் ஹிருத்திக்!

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவ்வப்போது இரவு வீடு செல்ல ஆட்டோ சவாரி செய்வது வழக்கம். அவரை தொடர்ந்து மற்றுமொரு பிரபல பாலிவுட் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன் தனது இரு மகன்களுடன் இரவில் ஆட்டோ சவாரி செய்து அதனை டிவிட்டரிலும் பதிந்து உள்ளார்.

ஹிருத்திக்கின் இரு மகன்களான ஹிரிஹான் மற்றும் ஹிரிதான் ஆகிய இருவருடன் தனது ஆட்டோ சவாரி ...

என்னை பெருமைப்படுத்திய படங்கள் 'பேபி - கபார் இஸ் பேக்' - அக்ஷ்ய்

Posted:

ஆக்ஷ்ன், காமெடி, ரொமாண்ட்டிக் என்று அசத்தி வருபவர் நடிகர் அக்ஷ்ய் குமார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான இவர், தற்போது தனது ஏர்லிப்ட் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இப்படம் இம்மாதம் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அக்ஷ்ய் குமார் அளித்த பேட்டியில், பேபி படமும், கபார் இஸ் பேக் படமும் தன்னை ...

இனி வருடத்திற்கு ஒரு படம் - கங்கனா முடிவு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். குயின் படத்திற்காக தேசிய விருது எல்லாம் பெற்றார். தற்போது சில படங்களில் நடித்து வருபவர் 2017ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதுப்பற்றி கங்கனா கூறியுள்ளதாவது... ''இனி வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு ரோலில் ...

அசார் படத்தில் நடனம் ஆடும் அக்ஷ்ய்-நர்கீஸ்

Posted:

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாறும் இந்தியில் ''அசார்'' என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடிக்க அவரது முதல் மனைவி கதாபாத்திரத்தில் பிராச்சி தேசாயும், சங்கீதா ரோலில் ...

ராக்கி ஹேண்ட்சம் லோகோ வெளியீடு

Posted:

ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ராக்கி ஹேண்ட்சம்''. நிஷிகாந்த் காமத் இயக்கும் இப்படம் ஆக்ஷ்ன் கம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை சுனில் கேதர்பால் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ...

எனக்கு ஜாதி அடையாளம் வேண்டாம் - பார்வதி!

Posted:

மலையாள சினிமாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட நடிகைகளில் பார்வதியும் ஒருவர். எத்தனை கோடி சம்பளம் கொடுக்க முன்வந்தாலும் தனக்கு கேரக்டர் பிடித்திருந்தால் தான் நடிப்பார். தமிழில், 'பூ, சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான்' உள்ளட ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார். வேதளாத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை ...

காதலர் தினத்தில் காதல் பாடல் வெளியிடுகிறார் அனிருத்

Posted:

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் அனிருத் கடந்த ஆண்டு இசை அமைத்த மாரி, நானும் ரவுடிதான், வேதாளம் படங்களும் வெற்றி பெற்றது. பாடல்களும் ஹிட்டடித்தது. இளம் வயதிலேயே ஐரோப்பிய நாடுகளில் இசை சுற்றுப் பயணம் செய்யும் அளவிற்கு வளர்ந்தார்.

கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர்களில் அவரும் ஒருவர். ஆனால் டிசம்பர் மாதம் ...

சீரியல் இயக்குனராகிறார் பாத்திமா பாபு

Posted:

சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.

பாத்திமா ...

மீண்டும் படம் தயாரிக்கிறார் அபிராமி ராமநாதன்

Posted:

சென்னையில் உள்ள பிரமாண்ட சினிமா மால்களில் புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மாலும் ஒன்று. இதன் நிறுவனர் அபிராமி ராமநாதன் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத்தில் தலைவராக இருக்கிறார். அபிராமி மெகா மால் தற்போது திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல்களை தயாரித்து வருகிறது. அபிராமி ராமநாதன் 2008ம் ஆண்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™