ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என்ன சொல்ல வருகிறாய், என்னவளே?
- அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
- வேளுக்குடி கிருஷ்ணன் மாமா வழங்கும் 108 திவ்யதேச தர்சனம் ! - Video!
- ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு
- பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி
- சத்துக்கள்
- வெங்காயத் தீயல்
- என்னை திட்டக் கூடாது
- நவீன குடும்ப விளக்கு _சசி
- ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று
- ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !
- சொத்து மதிப்பை தப்பா கூட்டியிருப்பாரோ...!!
- டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்
- விஞ்ஞான விடியல்
- தலைவர் ட்புள் மீனிங்ல பேசுறாரு..!!
- மழை - ஒரு பக்க கதை
- அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை...
- “உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- இப்பிடியும் ஒரு அப்பா !
- காதல் வந்தது..!
- ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...
- கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம்
- 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!
- வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்
- மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்
- நாகேஸ்வரர் ஆலய உலா
- படத்துடன் சிரிப்பு
- ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்?
- ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே !
- விடுமுறை பொதுவிளக்கம்!
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
| என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Posted: 28 Jan 2016 02:11 PM PST பெண் மனமும் என் மனமும் - எந்தன் கவிதை என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? கன்னமதில் கனிமுத்தம் கேட்டாயோ? - இல்லை சொல்லாதது சொல்லியதால் சுளிக்கிறாயோ? -இல்லை வல்லினம் தந்ததை மெல்லினம் ரசிக்கிறாயோ? இடையடைய உடையவனை அழைக்கிறாயோ? அதற்கு தடையினை உணர்ந்து தன்நா கடிக்கிறாயோ? சொக்கும் பார்வையாலே சொடுக்கி அழைக்கிறாயோ? சிக்கிவிட்ட சின்னவனை சீராட்ட விழைகிறாயோ? என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? ச.சந்திரசேகரன் |
| அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Posted: 28 Jan 2016 02:10 PM PST சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ... |
| புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை Posted: 28 Jan 2016 02:05 PM PST - எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. - நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். - 1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் ... |
| வேளுக்குடி கிருஷ்ணன் மாமா வழங்கும் 108 திவ்யதேச தர்சனம் ! - Video! Posted: 28 Jan 2016 01:56 PM PST அனைவருக்கும் வணக்கம், இது ஒரு நூதன திரி ..............நாங்க வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் டிரஸ்ட் இல் மெம்பர் ஆனதால், வழக்கமாய் புது வருட காலண்டர் புக் செய்வோம்................அப்படி வரும் காலண்டர்களுடன் ஒரு 4 வருடங்களாய், காலண்டருடன் வீடியோ cd க்களும் சேர்த்து அனுப்பறாங்க..............அருமையானவை அவை. இந்த முறை அப்படி அனுப்பிய து 108 திவ்ய தேசங்கள் CD .................. புக் பண்ணும்போதே எனக்கு ரொம்ப ஆவலாய் இருந்தது அதை பார்க்க..................நேரில் எல்லா கோவில்களுக்கும் போக முடியாவிட்டாலும் ... |
| ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்பு Posted: 28 Jan 2016 01:40 PM PST ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்புன்னா, அது அலாரம்ல இருக்கும் ஸ்னூஸ் ஆப்ஷன்தாடன்! - ஊரோடி - ---------------------------------- - அதிகாலையில் பேசிக்கொள்ள அவ்வளவு இருக்கிறது ஆலமரப் பறவைகளுக்கு! - இசை - --------------------------------------- - பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு மிதப்போடுதான் வெளியே வருகிறார்கள்! - வெங்கடஷ்6முகம் - ------------------------------------- - எந்தப் புராணக் கதையும் இல்லாமல் வாழ்வியலோடு ஒன்றியிருப்பதே பொங்கல் ... |
| பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி Posted: 28 Jan 2016 01:35 PM PST பதின் பருவம் பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய் சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் ... |
| Posted: 28 Jan 2016 01:18 PM PST சத்துக்கள் மண்ணுள்ளே இருந்த சத்துக்கள் மரமானது வேர்கள் வழியே உன்னுள்ளே இருந்த சத்துக்கள் உறவானது என் வழியே என்னுள்ளே இருந்த சத்துக்கள் என்மகனாய் உன் வழியே ச.சந்திரசேகரன் |
| Posted: 28 Jan 2016 12:16 PM PST - நன்றி- குங்குமம் தோழி |
| Posted: 28 Jan 2016 12:10 PM PST என்னை திட்டக் கூடாது அன்புடை Guest படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் . என்னை திட்டக் கூடாது , இப்பவே சொல்லிட்டேன் . நன்றி படம் முகநூல் . வசனங்கள் எந்தன் சரக்கு ! ரமணியன் |
| Posted: 28 Jan 2016 11:30 AM PST கோழிகள் கூவவில்லை என்றாலும் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு பார்த்தால் மணி 5:30 ஆகா! மணி ஆகிவிட்டதே! எழுந்திருத்து தன் சுத்தம் பேணி வாசல் தெளித்து கோலமிட்டு குதூகலமாய் புத்துணர்ச்சியோடு அடுக்களைக்குள் நுழைந்தால் அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு ஆனால் ராஜா செய்யவது இல்லை! ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே ஸ்லோகன்களையோ ... |
| ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று Posted: 28 Jan 2016 10:09 AM PST ரத்தன் நவால் டாடா (Ratan Naval Tata, பிரித்தானிய இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் ... |
| ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ ! Posted: 28 Jan 2016 09:54 AM PST நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான். எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் ... |
| சொத்து மதிப்பை தப்பா கூட்டியிருப்பாரோ...!! Posted: 28 Jan 2016 09:51 AM PST - |
| டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன் Posted: 28 Jan 2016 09:49 AM PST - – சமூக வலைதளமான டுவிட்டரில் (சுட்டுரை) நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர். மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு வரை அதிகரித்துகொண்டே சென்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில், தேசிய கீதத்தை கமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வரவேற்று, ... |
| Posted: 28 Jan 2016 08:31 AM PST விஞ்ஞான விடியல் அலாரம் என்னை அலறி எழுப்ப வீட்டுப்பாடம் விரைந்து முடிக்க ஹீட்டர் தன்னில் வெந்நீர் கொதிக்க பட்டும் படாமல் குளித்து முடிக்க சீருடை தன்னை சட்டென அணிய சிகையலங்காரம் சீப்பின்றி முடிய சூடான நூடுல்ஸ் சுவையாய் முடிக்க வாட்ஸ்ஹாப் தன்னில் வணக்கம் சொல்ல முகநூல் திறந்து முழுமையாய் அலச பள்ளி வாகனம் அலறி அழைக்க விஞ்ஞான விடியல் வேகமாய் விடிந்தது ச.சந்திரசேகரன் |
| தலைவர் ட்புள் மீனிங்ல பேசுறாரு..!! Posted: 28 Jan 2016 07:34 AM PST ![]() |
| Posted: 28 Jan 2016 06:22 AM PST - மழை எப்போப்பா நிற்கும்? – இரண்டு நாட்களாக திரும்பத் திரும்ப இதையே கேட்டுக் கொண்டிருந்தான் மகன் ஆனந்த். – நகரில் பொருட்காட்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது. ஒரு நாள் கூட்டிச் செல்கிறேன் என அவனிடம் சொன்னது முதல், மழை நிற்பது பற்றியே கேட்டுக் கொண்டிருந்தான் – இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும்னு ரமணன் டி.வி.யில சொன்னதை காலையில்தானே பார்த்தே, மழை நின்று தேங்கியிருக்கும் மழைநீர் நன்றாக வடிந்த பிறகுதான் செல்ல முடியும் – அவனை சமாதானப் படுத்தினேன். – மறு அறிவிப்பு வரை பள்ளிகளுக்கு ... |
| அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை... Posted: 28 Jan 2016 06:19 AM PST முக்காலிக்கு கால் இருக்கும், நாற்காலிக்கு கால் இருக்கும் தக்காளிக்கு கால் இருக்குமா? - ஷாய்னி - ----------------------------------- - நாம கடிச்சி ஜீராவை உறிஞ்சினா அது ரசகுல்லா, நம்மள கடிச்சி ரத்தத்தை உறிஞ்சினா அது டிராகுலா..! - ஜெயக்குமார் - ------------------------------------- - அடி மேலே அடி விழுந்தா அது வாழ்க்கை... முடி முடி மேலே முடி விழுந்தா அது, வழுக்கை! - ஜெயக்குமார் - --------------------------------------- - சினிமா தியேட்டர், பொதுக்கூட்டம் இதுல விசில் அடிக்கலாம், ... |
| Posted: 28 Jan 2016 04:28 AM PST காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல * தன் காயம் காக்க வெங்காயம் போதும் * வாழை வாழ வைக்கும் * அவசர சோறு ஆபத்து * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும் * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை *இருமலை போக்கும் வெந்தயக் கீரை * உண்ணா நோன்பு ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 28 Jan 2016 04:10 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 28 Jan 2016 03:47 AM PST இப்பிடியும் ஒரு அப்பா ! நன்றி : முகநூல் ரமணியன் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Jan 2016 03:11 AM PST - காற்று வருமென்று ஜன்னலை நான் திறந்து வைத்தேன்! காற்று வரவில்லை! – கடைசியில் திறந்து வைத்த ஜன்னல் வழியே… எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து எதிர் வீட்டுப் பெண்ணோடு எனக்கு காதல்தான் வந்தது! – —————- ஞா.நெல்சன் கண் விழித்த கவிப் பூக்கள் |
| ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... Posted: 28 Jan 2016 03:01 AM PST ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..) உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் ... |
| கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Posted: 28 Jan 2016 02:26 AM PST கும்பகோணம், ஜன.28– - - கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா அடுத்த மாதம் 13–ந் தேதி தொடங்கி 22–ந் தேதி வரை நடைபெறுகிறது. 13–ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் 22–ந் தேதி வரை புனித நீராடலாம் என ஆதீனங்கள் தெரிவித்து உள்ளனர். வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா போல் கும்பகோணம் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆன்மீக திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள். சுமார் 45 லட்சத்திற்கும் ... |
| 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Posted: 28 Jan 2016 01:01 AM PST சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ஏராளமானோர் தங்கள் உடைமையை இழந்தனர். இதில், பலரின் காஸ்ட்லி கார்களும் வீணாயின. இந்த கார்களை பயன்படுத்த விரும்பாத பலர், அவற்றை வந்த விலைக்கு விற்று விட்டனர். இந்நிலையில், கார்களை வந்த விலைக்கு விற்பதை விட, அதன் ஆயுட்கால வரியை திரும்பப் பெறுவதின் மூலம், அதிக பணம் கிடைக்கும் என்ற தகவலால், அடிமாட்டு விலைக்கு காரை விற்ற பலரும் புலம்பி வருகின்றனர். திரும்ப பெறுவது எப்படி? ஆயுட்கால வரியை திரும்பப் பெறுவது எப்படி என்பது ... |
| வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Posted: 28 Jan 2016 12:50 AM PST விழாக்கள், முக்கியமாக குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் நிறைந்த விழாக்களின் போது பெற்றோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக, ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவன் ஒருவனின் பிறந்த நாள் விழாவின்போது, நுரையைக் கொண்ட திரவத்தை (ஃபோம்) அதிகப்படியாகத் தெளித்து விளையாடுகின்றனர். அது மெழுகுவர்த்தியில் மீது பட்டு, முகத்தில் தீப்பிடிக்கிறது. விழாவுக்கு வந்த சிறுவர்கள் அதைப் பார்த்து அழுதுகொண்டே அலறுகின்றனர் . வீடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றி முழுமையாகத் தெரியாத ... |
| மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம் Posted: 28 Jan 2016 12:30 AM PST நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும். அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? ... |
| Posted: 28 Jan 2016 12:25 AM PST - குடமூக்கு, குடந்தை என்ற பெயர்களால் கும்பகோணம் அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள மகாமகத்தை முன்னிட்டு மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக் கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. - இக்கோயில்களில் முக்கியமானது நாகேஸ்வரர் கோயில். ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும் உணர்வை ஏற்படுத்தும். - ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு அழகு - கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சாரங்கபாணி கோயில் ... |
| Posted: 27 Jan 2016 11:31 PM PST படத்துடன் சிரிப்பு நன்றி முகநூல் ரமணியன் |
| ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Posted: 27 Jan 2016 09:28 PM PST வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரபல யூ-டியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்செனுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, அவரது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது. அப்போது அதிபர் ஒபாமா தனது கோட் பாக்கெட்டில் இருந்து பல சிறிய பொருட்களை எடுத்து காண்பித்தார். அதில், இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலையும் இருந்தது. அதை பற்றி ஒபாமா கூறியவை பின்வருமாறு:- இது இந்துக் கடவுளான #அனுமனின் ... |
| ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே ! Posted: 27 Jan 2016 08:58 PM PST ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே ! .......ஏற்கனவே 4 நாளாய் ஆளைக்காணும் இதில் இன்னும் 4 நாளைக்கு லீவா என்று உங்களின் mind வாய்ஸ் எனக்கு கேட்கிறது.............. . . . என்ன பண்ண ?..........பொங்கல் வேலைகள் மற்றும் பாக்கிங் வேலைகள் அதனால் கொஞ்சம் பிசி .....இப்போ நாளைக்கு (20.1.2016) சௌதி கிளம்பறேன் அதனால் ஒரு 4 நாள் லீவு வேண்டும் என்று கேட்கிறேன்..............ஆனால் முடியும்போது நடுவில் இங்கு இணைகிறேன்........... அன்புடன், கிருஷ்ணாம்மா |
| Posted: 27 Jan 2016 08:57 PM PST படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி! இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு ... |
| Posted: 27 Jan 2016 08:20 PM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
