Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் பரவாமல் இருக்க முஸ்லிம்கள் ஆற்றிவரும் பங்கு பெருமைக்குரியது: ராஜ்நாத் சிங் புகழாரம்

Posted: 01 Jan 2016 11:13 PM PST

உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் இந்தியாவில் பரவாமல் இருக்க இங்குள்ள முஸ்லிம்கள் ஆற்றிவரும் பங்கு பெருமைக்குரியது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நேற்று நடத்திய விழாவில் பங்கேற்று பேசிய ராஜ்நாத் சிங்,

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அசாம் காங்கிரஸ் அரசின் இலவச திட்டங்கள்

Posted: 01 Jan 2016 11:08 PM PST

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தருண்சோகாய் முதல்– மந்திரியாக பணியாற்றி வருகிறார். 2001–ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக அவர் முதல்–மந்திரியாக பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு அசாம் மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 4–வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில்

உ.பியில் புத்தாண்டு தினத்தில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.26 லட்சம் கொள்ளை

Posted: 01 Jan 2016 10:59 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கந்தோலி வட்டாரத்தில் ஆக்ரா வங்கி உள்ளது. இங்கு நேற்று மதிய உணவு இடைவேளையின்போது 6 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.

யாத்திரைக்காக நேபாளத்துக்கு சென்றவர்கள் திரும்பிய ஜீப் மீது பஸ் மோதி 10 பக்தர்கள் பலி

Posted: 01 Jan 2016 10:41 PM PST

நேபாள நாட்டில் இமயமலை அடிவாரத்தில் உள்ள புனித ஸ்தலங்களை தரிசிப்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷிரவஸ்தி மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஒரு ஜீப்பில் சென்றிருந்தனர். யாத்திரை முடித்து திரும்பும் வழியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள துல்சிபூர் பகுதி அருகே இன்று அதிகாலை வந்தபோது, சாலையில் கடுமையான உறைபனி பெய்து கொண்டிருந்தது.

பஞ்சாப் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 01 Jan 2016 10:31 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.

ஐதராபாத் நகருக்குள் நுழைய பிரபல பாகிஸ்தான் பாடகர் ராஹத் பதே அலி கானுக்கு அனுமதி மறுப்பு

Posted: 01 Jan 2016 10:25 PM PST

பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான பாடகர் ராஹத் பதே அலி கான்(42). சில பாலிவுட் படங்களிலும் பின்னணி பாடியுள்ள இவரது இசை நிகழ்ச்சி ஐதராபாத் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு நள்ளிரவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மங்கள்யான் புத்தாண்டு வாழ்த்து

Posted: 01 Jan 2016 10:09 PM PST

இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் 5–ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தினார்கள்.

பாகிஸ்தானுடன் நட்புணர்வையே விரும்புகிறோம்: மீறி வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் - ராஜ்நாத் சிங்

Posted: 01 Jan 2016 10:00 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக முப்தி முகமது சயீத் மகள் காஷ்மீர் முதல்–மந்திரி ஆகிறார்

Posted: 01 Jan 2016 09:59 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி – பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரான முப்தி முகமது சயீத் அம்மாநில முதல்–மந்திரியாக உள்ளார். அவர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்

திருப்பதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்

Posted: 01 Jan 2016 09:58 PM PST

திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா மிருகக்காட்சி சாலை பகுதியில் ஏராளமான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து அலிபிரி அருகே உள்ள செர்லோபள்ளி வழியாக அவை பல்வேறு இடங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும், சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆந்திரா, தெலுங்கானாவில் புத்தாண்டு தினத்தில் மட்டும் ரூ.300 கோடிக்கு மது விற்பனை

Posted: 01 Jan 2016 08:59 PM PST

ஆங்கில புத்தாண்டை மது அருந்தி வரவேற்று ஆந்திரா, தெலுங்கானா மக்கள் பெரும் சாதனை படைத்து விட்டனர். புத்தாண்டு தினத்துக்கு முன்தினம் இரவு ஆந்திராவில் உள்ள அனைத்து பார்களும் நிரம்பி வழிந்தன. 31–ந்தேதி இரவு மட்டும் ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் 2 லட்சம்

கோழிக்கோட்டில் முத்தப்போராட்டம் நடத்தியவர்கள் மீது சரமாரி கல்வீச்சு: போலீஸ் தடியடி – 32 பேர் கைது

Posted: 01 Jan 2016 08:28 PM PST

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இளம் பெண்களும் வாலிபர்களும் மது அருந்திவிட்டு நடனமாடுவதாகவும் அவர்கள் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்வதாகவும் இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் தகவல் பரவியது.

திருப்பதியில் 5 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை கும்பிட்ட பக்தர்கள்

Posted: 01 Jan 2016 08:00 PM PST

ஆங்கில புத்தாண்டு (2016) தொடங்கியதையொட்டி நேற்று, ஏழுமலையான் குடி கொண்டுள்ள திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புத்தாண்டின் தொடக்க நாளில் ஏழுமலையானை தரிசிக்கும் நோக்கத்துடன் முன்தினம் இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேக சேவைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மிக முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். அதன்பின்னர் காலை 7 மணி

பஞ்சாப்: விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தவந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - 2 பாதுகாப்பு படையினர் வீரமரணம்

Posted: 01 Jan 2016 07:57 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அந்த விமான தளத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவினர்.

ஆந்திராவில் சினிமா பேனர்கள் கட்டியபோது மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு

Posted: 01 Jan 2016 07:45 PM PST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மந்தபேடா என்ற இடத்தில், தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் 30 அடி நீள 'பேனர்' கட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது மின்கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டில் 978 விவசாயிகள் தற்கொலை

Posted: 01 Jan 2016 07:45 PM PST

2015-ம் ஆண்டு முடிந்து 2016-ம் ஆண்டு தொடங்கி உள்ளது. புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஏன் கர்நாடகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடியதாக தகவல்கள் கூறுகின்றன.

இறந்தவர்களின் சிறுநீரகங்களை தானம் பெற வழிகாட்டும் முறைகள்: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

Posted: 01 Jan 2016 07:34 PM PST

மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைசிகிச்சை அமைப்பு(நோட்டோ) இறந்தவர்களின் சிறுநீரகங்களை பெற்று மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு

டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்

Posted: 01 Jan 2016 07:15 PM PST

உத்தரபிரதேசத்தின் பாக்பட் தொகுதி பா.ஜனதா எம்.பி. சத்யபால் சிங், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட காரில் நேற்று டெல்லிக்கு வந்தார். அவரது காரை இந்தியா கேட் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், புதிய வாகன இயக்க நடைமுறை குறித்த துண்டு பிரசுரம் ஒன்றை அவரிடம் அளித்தனர்.

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

Posted: 01 Jan 2016 07:03 PM PST

மானியம் இல்லாமல் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முதல் 49 ரூபாய் 50 காசு உயர்த்தின. இந்த விலை உயர்வுக்கு பின், உள்ளூர் வரி மாற்றத்துடன்

பஞ்சாப்: விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தவந்த இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை

Posted: 01 Jan 2016 06:52 PM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. இன்று அதிகாலை அந்த விமான தளத்துக்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவினர். இதை கண்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™