Tamil Star |
- புதிய ஆண்டிலிருந்து ஒன்ராறியோவின் மின் கட்டணம், சாரதி விதிமுறைகளில் மாற்றம்
- அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம் – 21 பயணிகள் காயம்
- ஸ்காபரோ ஸ்டூடியோ ஒன்றின் உரிமையாளர் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு
| புதிய ஆண்டிலிருந்து ஒன்ராறியோவின் மின் கட்டணம், சாரதி விதிமுறைகளில் மாற்றம் Posted: 31 Dec 2015 09:45 AM PST
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் மின் கட்டணங்களில் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய லிபரல் அரசாங்கத்தின் சில திட்டங்கள் காரணமாக மீண்டும் புதிய மின்கட்டண மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த புதிய மின்கட்டண மாற்றங்களால் சில புதிய கட்டணக் கழிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனால் பொதுவாக கட்டண அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய கட்டண விதிமுறை ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடப்பிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து வினியோக கட்டணத்தினை ஹெட்ரோ வண் 0.4 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை புத்தாண்டின் முதல்நாளான நாளையில் இருந்து வாகன சாரதிகளுக்கான புதிய விதிமுறைகளும் நடப்பிற்கு வருகின்றது. அந்த புதிய வீதி விதிமுறைகளின் பிரகாரம், பாடசாலைப் பகுதிகளில் பாதசாரிகள் வீதிகளைக் கடக்கும் போது, அவர்கள் முற்றாக வீதியைக் கடந்து முடியும் வரையில் வாகனங்கள் தரித்து நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முன்னரைப் போல வீதிக் கடவைகளின் ஓரத்திற்கு பாதசாரிகள் சென்றதும் வாகனங்களை நகர்த்தும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் எனவும், பாதசாரிகள் முற்று முழுதாக வீதியை விட்டு விலகிய பின்னரே வாகனங்களை நகர்த்த வேண்டும் எனவும் விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. The post புதிய ஆண்டிலிருந்து ஒன்ராறியோவின் மின் கட்டணம், சாரதி விதிமுறைகளில் மாற்றம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம் – 21 பயணிகள் காயம் Posted: 31 Dec 2015 09:37 AM PST
332 பயணிகள் மற்றும் 19 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் சுமார் இரண்டு மணி நேர பயணத்தின் பின் அவசரமாக தரையிரக்கப்பட்ட குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நிலவிய மோசனமா வானிலையின் காரணமாகவே விமானம் அவ்வாறு ஆட்டங்கண்டதாகவும், அதனால் மூன்று சிறுவர்கள் உட்பட சுமார் 21 பயணிகள் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் கல்கரி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் கூறுகையில், பயணிகள் எவரும் இவ்வாறு நடக்கும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், அதனால் விமானம் ஆட்டங்கண்ட போது, அவரவர் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டதாகவும், தாங்கள் இறந்துவிடப்பபோவதாகவே அஞ்சியதாகவும் விபரித்துள்ளார். The post அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம் – 21 பயணிகள் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோ ஸ்டூடியோ ஒன்றின் உரிமையாளர் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு Posted: 31 Dec 2015 09:30 AM PST
ரொரன்ரோ புகைப்படம் எடுக்கும் நபருமான 56 வயதான குறித்த நபர் மீது பதின்ம வயது பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஏற்கனேவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்பாரோவில் இருந்த Y2K Studios என்ற நிலையத்தில் இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக அந்த பதின்மவயதுப் பெண் தெரிவித்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதின்மவயது பெண் அங்கு புகைப்படம் எடுப்பதற்கு சென்ற வேளையில் அந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது. பின்னர் கடந்த நவம்பர் மாதம் அவர் மீது 3 பாலியல் தாக்குதல் மற்றும் 3 பாலியல் தலையீடுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியிடப்பட்டதை அடுத்து புதன்கிழமை பிற்பகல் குறித்த சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னராஜா சிவசுப்பிரமணியம் எனப்படும் அந்த நபர் தற்போது மேலும் இரண்டு பாலியல் தாக்குதல் மற்றும் இரண்டு பாலியல் தலையீடு ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றார். அதேவேளை இவரால் பாதிக்கப்பட்ட மேலும் நபர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள விசாரணையாளர்கள், இந்த விடயம் தொடர்பில் தகவல் தர விரும்புபவர்கள் காவல்த்துறையினரை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காவல்த்துறையினரை தொடர்பு கொள்ள 416-808-4200 என்ற இலக்கத்தையும், குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்பு கொள்ள 416-222-8477 என்ற இலக்கத்தையும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். The post ஸ்காபரோ ஸ்டூடியோ ஒன்றின் உரிமையாளர் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


