Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது

Posted: 28 Dec 2015 05:09 PM PST

ui

uiரொரன்ரோ உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த பனிப் புயல் எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை காலையுடன் விலக்கப்பட்டுள்ளது.முன்னதாக ரொரன்ரோ, ஹமில்ட்டன், ஹால்ட்டன், பீல், யோர்க் மற்றும் டூர்ஹாம் பிராந்தியங்களுக்கு பனிப் புயல் எச்சரிக்கை விடுக்ப்பட்டிருந்தது. தற்போது அந்த பனிப் புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதேவேளை இன்று பனிப்பொழிவு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று இரவு முழுவதும் சுமார் பத்து சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் எனவும், நள்ளிரவுக்கு பின்னர் உறைபனி மழை பொழியக்கூடும் எனவும் சுற்றுச் சூழல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது.ui

இந்த பனிப்பொழிவுடன் காற்றும் வேகமாக வீசக்கூடும் எனவும், வீதிகளில் வாகனங்களைச் செலுத்திச் செல்வோருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த பனிப்பொழிவு நிலைமை செவ்வாய்கிழமையே மாற்றடையக் கூடும் எனவும், அத்துடன் அன்று மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுச் சூழல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

The post ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்?

Posted: 28 Dec 2015 05:02 PM PST

hhk

hhkவிளையாடி முடித்த பிறகு தசைகள் எல்லாம் சக்தியை இழப்பதோடு மட்டுமல்லாமல் வியர்வை வழியாக தாது உப்புக்களும் வெளியேறி விடுகின்றன.

அதனால் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

ப்ரெஷ் ஜூஸ், உலர் பழங்கள், மில்க் ஷேக் வகைகள், ஸ்வீட் லஸ்ஸி, பிரெட் ஜாம், ஃப்ரூட் பன், ஃப்ளேவர்டு மில்க், வாழைப்பழம் ஆகியவை, விளையாடி முடித்து வந்ததும் சாப்பிடலாம்.

வெப்பமான காலநிலையில், வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பு சேர்த்த உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

மீன், சிக்கன், மட்டன் மாதிரி அசைவ உணவுகள், அப்பளம், ஊறுகாய், வீட்டில் தயாரித்த பொடிகள் போன்றவற்றில் உப்பு உபரியாக இருக்கும்.

உப்பு, சர்க்கரை சேர்த்த எலுமிச்சம்பழச் சாறு, இளநீர் மாதிரி எடுத்துகொண்டால், எலெக்ட்ரோலைட்களைத்(Electrolytes) தக்கவைக்கும்.hhk

விளையாடும் விளையாட்டைப் பொறுத்து, கலோரி தேவை மற்றவர்களை விட 4 முதல் 5 மடங்கு வரை மாறுபடும்.

உப்பு போடாத பாப்கார்ன், காய்கறி சாலட், சோயா, சுண்டல் வகைகள், எனர்ஜி பார்ஸ், பயறு வகைகள், பால் பொருட்கள், விளையாட்டு வீரர்களுக்கான பிஸ்கெட் போன்றவற்றை விளையாட்டுக்கு முன் சாப்பிடலாம். நொறுக்குத்தீனிகளைத் தவிர்ப்பதும் முக்கியம். விளையாட்டு வீரர்களுக்கு அசைவ உணவுதான் அவசியம் என்றில்லை.

அசைவ உணவில் கிடைக்கும் அதே அளவு ஊட்டச்சத்தை சைவ உணவிலும் பெற முடியும்.

உடற்பயிற்சிக்கு 2 மணி நேரம் முன்னதாக முழுமையான உணவு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக்கு சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு பானங்கள், மாவுச்சத்து நிறைந்த பானங்கள் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி முடித்த 5 முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடனடி ஆற்றல் தேவைப்படுகிறவர்கள் அந்த ஆற்றலை கொடுக்கக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

மெதுவாக வெளிப்படக்கூடிய ஆற்றல் (Slow relase energy) தேவைப்படுபவர்கள் அத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

The post விளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிறிஸ்மஸ் தினத்தில் கத்திக்குத்து – 13 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு

Posted: 28 Dec 2015 11:16 AM PST

stabbing_teen_at_Flemingdon_Park_mall_-_1228

stabbing_teen_at_Flemingdon_Park_mall_-_1228கிறிஸ்மஸ் தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 வயது சிறுமி இன்று முற்பகல் 10 மணிக்கு Old City Hall நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கிறிஸ்மஸ் தினத்தில் Flemingdon பூங்காவில் வைத்து குறித்த சிறுமி வேறொரு சிறுமியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

Overlea Boulevard இற்கு அருகில் Don Mills வீதியில் அமைந்துள்ள Flemingdon பூங்காவில் கடந்த 25 ஆம் திகதி இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.stabbing_teen_at_Flemingdon_Park_mall_-_1228

இரண்டு சிறுமிகளுக்கும் இடையில் வாய்தர்க்கம் நிகழ்ந்தாகவும், அந்த தர்க்கம் தீவிரமடைந்த போது இந்த ஒரு சிறுமி மற்றொரு சிறுமியை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

கத்திக்குத்துக்கு ஆளான சிறுமி மருத்தவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிறிஸ்மஸ் தினத்தில் கத்திக்குத்து – 13 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வருட இறுதி நாளில் 1,800 சிரிய அதிகள் மொன்றியலை வந்தடைவர்

Posted: 28 Dec 2015 10:54 AM PST

Syrian_refugees_to_arrive_-_12102015

Syrian_refugees_to_arrive_-_121020151,800 சிரிய அதிகள் எதிர்வரும் 31ஆம் நாள் மொன்றியலை வந்தடையவுள்ளதாக கியூபெக் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் 25,000 சிரிய நாட்டு அகதிகளை கனடாவுக்குள் உள்ளீர்க்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாக அகதிகளை அழைத்துவரும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 300 அகதிகள் வருவார்கள் எனவும் கியூபெக் மாநில குடிவரவு அமைச்சர் மற்றும் பிரதி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு விமானங்கள் அந்த அகதிகளை மொன்றியலை நோக்கி அழைத்து வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த 300 பேரில் 200 பேர் தனியார் அனுசரணையிலும், 100 பேர் அரசாங்கத்தின் அனுசரணையின் கீழும்

கனடாவுக்கு வருகின்றனர் எனவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.Syrian_refugees_to_arrive_-_12102015

இதேவேளை கடந்த 25 ஆம் நாள் வரையில் 2,176 சிரிய நாட்டு அகதிகள் கனடாவுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையப்பக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

மத்திய அரசாங்கம் முன்னராக இந்த வருட இறுதிக்குள் பத்தாயிரம் சிரிய அகதிகளை கனடாவுக்குள் அழைத்துவரவுள்ளதாக அறிவித்திருந்தது.

பின்னர் குறித்த கால எல்லைக்குள் அதனை சாத்தியமாக்குவது கடினம் என மத்திய குடிவரவு அமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வருட இறுதி நாளில் 1,800 சிரிய அதிகள் மொன்றியலை வந்தடைவர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™