Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்தியாவில் 3 ஆயிரம் பட்டதாரிகள் பிச்சை எடுக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted: 28 Dec 2015 10:46 PM PST

இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் உள்ளனர்? அவர்கள் ஏன் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தனர்? என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. நாடெங்கும் நடத்தப்பட்ட அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன் விபரம் வருமாறு:– இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சுத்து 72 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 79,415

பாரிஸ் தாக்குதல் தீவிரவாதியை தேடும் வேட்டையில் கொல்லப்பட்ட போலீஸ் நாய்க்கு வீரதீர விருது

Posted: 28 Dec 2015 10:43 PM PST

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையை தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு போலீஸ் நாய் குண்டு பாய்ந்து உயிரிழந்தது. டீசல் என அழைக்கப்பட்ட அந்த பெல்ஜியன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய்க்கு பிரிட்டைனில் செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு வீரதீர விருது

ஆற்றில் குளித்த அய்யப்ப பக்தர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு

Posted: 28 Dec 2015 10:35 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை (30–ந்தேதி) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள்.

கேரள அரசின் புதிய மதுபான கொள்கைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 28 Dec 2015 10:16 PM PST

கேரள அரசின் புதிய மதுபான கொள்கைக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கேரளாவில் 2023-ம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்ட நடவடிக்கையாக 3 மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு மட்டுமே இனி

பீகாரில் மேலும் ஒரு என்ஜினியர் கொடூரமான முறையில் கொலை

Posted: 28 Dec 2015 09:13 PM PST

பீகார் மாநிலத்தில் 2 என்ஜினியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அங்கு மேலும் ஒரு என்ஜினியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்த அங்கித் ஜா என்ற அந்த என்ஜினியர் கடந்த ஞாயிறு அன்று இரவு கட்டுமான தளத்தில் வேலை இருப்பதாக கூறி வீட்டிலிருந்து அலுவலக காரில் சென்றுள்ளார்.

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்

Posted: 28 Dec 2015 08:29 PM PST

ஓடும் ரெயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரெயிலில் பயணம் செய்த தன் மகளைக் காணவில்லை என்று அந்த சிறுமியின் தந்தை ரெயில்வே போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை தேடிய போலீசார்

பஞ்சாயத்து தேர்தலில் ஆன்லைனில் ஓட்டுப்பதிவு: குஜராத் மாநில அரசு திட்டம்

Posted: 28 Dec 2015 08:25 PM PST

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் வாக்களிக்கும் முறையை கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநில அரசு அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே குஜராத் மாநில அரசுதான் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

திரிணாமுல் காங்கிரசை மேற்கு வங்காளத்திலிருந்து தூக்கி எறியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேசம்

Posted: 28 Dec 2015 07:44 PM PST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 நாள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள

மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்: டெல்லியில் பரபரப்பு

Posted: 28 Dec 2015 07:23 PM PST

டெல்லியின் புறநகர் பகுதியில் ஆம் ஆத்மியை சேர்ந்த தலைவர் ஒருவர் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது இன்று காலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி புறநகர் பகுதியான புர்வான்ஞ்சல் பகுதியை சேர்ந்தவர் திரேந்திர

ஸ்மிருதி இராணியை பிரதமரின் இரண்டாவது மனைவி என்றதற்காக அசாம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மந்திரி பேட்டி

Posted: 28 Dec 2015 07:15 PM PST

மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியை பிரதமரின் இரண்டாவது மனைவி என்றதற்காக அசாம் முதல்வர் தருண் கோகாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் வலியுறுத்தியுள்ளார்.

உ.பி.யில் துணிகரம்: பட்டப்பகலில் வங்கி வாசலில் 91 லட்சம் கொள்ளை

Posted: 28 Dec 2015 07:04 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வங்கி வாசலில் துப்பாக்கி முனையில் 91 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தின் தாம்பூர் பகுதியில்

நேரு, சோனியாவை விமர்சிக்க ஆர்.எஸ்.எஸ் அகராதியின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது: விசாரணை செய்ய கோரிக்கை

Posted: 28 Dec 2015 04:41 PM PST

மும்பையில் காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கையான 'காங்கிரஸ் தர்ஷன்' என்ற இதழ் வெளியாகிறது. காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் நேற்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்ட பத்திரிகையில் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகளில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சிக்கும் விதத்திலான குறிப்புகள் இடம்பிடித்திருந்தன.

போர் என்ன வழங்கி இருக்கிறது? நிலமா அல்லது சொர்க்கமா? ஒன்றுமே இல்லை: பாகிஸ்தானில் மோடி உதிர்த்த முத்துக்கள்

Posted: 28 Dec 2015 04:23 PM PST

கடந்த டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 66-வது பிறந்த தினத்தை முன்னிட்டு லாகூருக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்த பயணம் குறுகிய நேரமே என்றாலும் இருநாட்டு பிரதமர்களிடையே நல்ல நட்பை உருவாக்கியுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி மைசூரில் இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted: 28 Dec 2015 01:29 PM PST

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறவுள்ள 103-வது இந்திய அறிவியல் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மோடி இரண்டு நாள் பயணமாக ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் கர்நாடகா செல்கிறார். பயணத்தின் முதல் நாளில் தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்து வைக்கும் அவர், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

காவிரி நீர் பங்கீடு வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு: சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது

Posted: 28 Dec 2015 11:31 AM PST

தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதுபோல் ஏராளமான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 8 நக்சலைட்டுகள் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted: 28 Dec 2015 09:41 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீசாருடன், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து சுக்மா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

என்னுடைய வெற்றிகள் தோல்விகளில் இருந்து உருவானவை: சத்ய நாதெல்லா

Posted: 28 Dec 2015 08:38 AM PST

ஆந்திரவை பூர்வீகமாக கொண்டவரும் மைக்ரோசாப்ட்டின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுருமான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சத்ய நாதெல்லாவும் ஆந்திர

எம்.டி.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் இலவச ரோமிங் சேவை

Posted: 28 Dec 2015 08:25 AM PST

அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். வரும் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இலவச ரோமிங் சேவையை வழங்க உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஏற்கனவே இலவச ரோமிங் சேவையை வழங்கி வருகிறது. ஆனால், எம்.டி.என்.எல். வாடிக்கையாளர்கள் டெல்லி, மும்பைக்கு வெளியே சென்றால் இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: சிறிது நேரத்தில் விடுவிப்பு

Posted: 28 Dec 2015 07:25 AM PST

டெல்லி அருகே குர்கானில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டார். டிஎஸ்டி கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, இன்று காலை கல்லூரியின் வாசல் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல், திடீரென அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றது. அந்தப் பெண் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு

ஐதராபாத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கேம்பஸ்: பிப்ரவரி மாதம் துவக்க விழா

Posted: 28 Dec 2015 06:05 AM PST

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான இன்போசிஸ், தனது மிகப்பெரிய தொழில்நுட்ப வளாகத்தை ஐதராபாத்தில் திறக்க உள்ளது. தொழில்நுட்ப நகரமான ஐதராபாத்தில் உள்ள போச்சரம் பகுதியில் 25 ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய அளவில் பிரம்மாண்டமாக மிகப்பெரிய கேம்பஸ் ஒன்றை இன்போசிஸ் அமைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™