Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


எல்லை தாண்டிய சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்செயல் தொடர்பில் ஐவர் கைது

Posted: 22 Dec 2015 06:59 PM PST

guui

guuiஎல்லை தாண்டிய சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்செயலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் ரொரன்ரோ காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஐந்து பேரும் மோசடியான காசோலைகளை தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தி அதன் மூலம் பெறப்பட்ட அமெரிக்க தபால் மூலமான காசுக் கட்டளைகளை ரொரன்ரோ மற்றும் ஒன்ராறியோவின் லண்டன் பகுதிகளுக்கு அனுப்பி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவர்களின் இந்த நடவடிக்கை குறித்து தமக்கு தகவல் கிடைத்திருந்தாகவும், அதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் தாம் ஈடுபட்டிருந்ததாகவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது நடவடிக்கையில் லண்டன் காவல்த்துறை,அமெரிக்க காவல்த்துறை மற்றும் அமெரிக்க அரச தபால்ச் சேவைத் துறை ஆகியவற்றை இணைந்துக் கொண்டு இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டிருந்தாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளை அடுத்தே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஐவர் மீதும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒன்ராறியோவின் லண்டன் பகுதியையும், மூவர் ரொரன்ரோவையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எல்லை தாண்டிய சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்செயல் தொடர்பில் ஐவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியத்தின் காவலன் ஆன்டி ஆக்சிடன்ட்!

Posted: 22 Dec 2015 05:50 PM PST

,ll

,llநம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயல்படவும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தேவை.

அதேபோல், உடல் செயல்பாட்டின்போது, சுரக்கும் சில ரசாயனங்களால், செல்கள், டி.என்.ஏ. மூலக்கூறுகள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்தபாதிப்பைக் குறைக்க ஆன்டிஆக்சிடன்ட்கள் தேவை.

'நாம் சாப்பிடும் உணவிலேயே ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எந்தெந்த உணவுப் பொருட்களில் இவை நிறைவாக உள்ளது என்பதை தெரிந்து, அவற்றைச் சாப்பிடும்போது, பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

மாதுளம் பழம்:

பாலிபீனால் ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. இதனால் மாதுளையை ஆன்டிஆக்சிடன்ட் 'பவர் ஹவுஸ்' என்போம். இந்த ஆன்டிஆக்சிடன்ட், சூரியக் கதிர் வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், திசுக்களில் வீக்கத்தைத் தவிர்த்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. மாதுளம் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பும், ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

இந்தப் பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. பழத்தின் தோல் மற்றும் பட்டையில் அல்கலாய்டு, டேனின் உள்ளதால் இதனையும் பயன்படுத்தலாம்.

பப்பாளிப் பழம்:

மற்ற எல்லாப் பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளியில்தான் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ, சி, தாது உப்புக்களில் இரும்பு, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும், மிகக் குறைந்த கலோரியும் உள்ளன. இயற்கையாகவே விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி பப்பாளிப் பழத்தில் உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை இயற்கையான முறையில் ஊக்குவிக்கும். கொலஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். நல்ல செரிமானத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நல்லது.,ll

எலுமிச்சம்பழம்:

இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில் அதிக அளவு 'பெக்டின் ஃபைபர்' இருப்பதால், பசியைப் போக்கும். இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவிடும். புண்களைக் குணப்படுத்தவும், இணைப்புத் தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். மன வலிமையை ஊக்கப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்ட இது கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நோய் வராமல் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஃபிளவனாய்டு என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. மேலும் ஃபிளவனாய்டு, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, ஃபோலிக் அமிலம் மற்றும் தாமிரம், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளும் நிறைவாக உள்ளன.

The post ஆரோக்கியத்தின் காவலன் ஆன்டி ஆக்சிடன்ட்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எதைக் குறைத்தால் எடை குறையும்….? ஆ…..இவ்வளவு வழி(லி)களா…?

Posted: 22 Dec 2015 05:39 PM PST

kloo

klooஉடல் எடை ஒரே நாளில் அதிகரித்து விடுவதில்லை. அதேபோல்... ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. இன்றைய அவசர யுகத்தில் துரித உணவுகளே தினப்படி உணவுகளாக மாறிவிட்டன.

அளவுக்கு அதிகமான உணவு, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எண்ணெய் - மசாலா பொருட்கள் இவற்றால் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போகும்போது, உடல் பெருத்து, வயதுக்கு மீறிய தோற்றம் தெரிகிறது. இதய நோய், நீரிழிவு, கான்சர் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

ஒவ்வொருவரின் உயர‌த்‌துக்கும் ஏற்ற எடையைக் கணக்கிட பிஎம்ஐ (BMI-Body Mass Index)அ‌ட்டவணை உள்ளது. இந்த அளவீட்டைத் தாண்டி ஒருவர் 30 ‌கிலோ அ‌திக உடல் எடையுடன் இரு‌ந்தா‌ல், அவருடைய ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டுகள் வரை குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு!

இப்படி உடல் எடையால் பாதிக்கப்படுபவர்கள், பழையபடி நடமாடவே, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சைகள் பயன்படுகின்றன. இதில்... ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி, கேஸ்ட்ரிக் பைபாஸ், கேஸ்ட்ரிக் பேண்டிங் மற்றும் லிபோசக்ஷன் ஆகிய சிகிச்சைகள் உள்ளன.

ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Sleeve gastrectomy)

இரைப்பையின் அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை இது. இரைப்பையின் அளவை 75 சதவிகிதம் சுருக்கிவிடுதல். பசியைத் தூண்டும் ஹார்மோனும் அகற்றப்பட்டுவிடும். இதனால், இரண்டு தோசை சாப்பிட்டால்கூட ஐந்து தோசைகள் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இந்த சிகிச்சை முறையினால், சாப்பிடும் உணவு அளவுதான் குறையுமே தவிர, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகித்துக்கொள்வதில் எந்தக் குறைவும் இருக்காது. தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடத் தேவையில்லை.kloo

முன்பு ஓபன் சர்ஜரியாக செய்யப்பட்ட இந்த சிகிச்சை, முறை இப்போது லாப்ராஸ்கோப்பி மூலமாக செய்யப்படுகிறது. இதனால் தழும்புகூடத் தெரியாது. அறுவை சிகிச்சையும் 45 நிமிடத்தில் முடிந்துவிடும். 110 கிலோ எடையுள்ள ஒருவர், 60 கிலோவாக குறைந்துவிடுவார். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் அரிதாக சிலருக்கு மட்டுமே திரும்பவும் எடைகூட வாய்ப்பு இருக்கிறது என்பதால், எந்த பயமும் தேவையில்லை.

கேஸ்ட்ரிக் பை-பாஸ் (Gastric by-pass)

இதில், சிறுகுடலின் அமைப்பைக் கொஞ்சம் மாற்றி அமைத்தல். 2,000 கலோரிகளைக் கொடுக்கக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும்கூட வெறும் 400 கலோரிகளை மட்டுமே உடம்பு எடுத்துக் கொள்ளும். ஆறு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து இந்த சிகிச்சையைப் பெறவேண்டும். வாழ்நாள் முழுவதும் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

கேஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric banding)

பிஎம்ஐ (BMI) அளவானது 45-க்கு கீழ் இருப்பவர்கள் கேஸ்ட்ரிக் பேண்ட்டிங் சர்ஜரி செய்து கொள்ளலாம். இரைப்பையின் அளவைக் குறைக்கும் வகையில், ஒரு பேண்ட் போடப்படும். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டு வாரம் வீட்டில், ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் பேண்ட் அட்ஜஸ்ட் செய்வதற்காக மருத்துவமனை வரவேண்டியிருக்கும். இதன் மூலம் 50% எடையைக் குறைத்து விடலாம்.

லிபோசக்ஷன் (Liposuction)

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவது லிபோசக்ஷன். கை, கால், தொடை, இடுப்பு, வயிறு என பல்வேறு இடங்களில், தோலின் அடியில் உள்ள கொழுப்பை லேசர் கதிர்கள் மூலம் உறிஞ்சி எடுக்கும் முறைதான் இது. 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம். ஆறில் இருந்து எட்டு கிலோ வரை உடல் எடையைக் குறைத்துவிடலாம்!

The post எதைக் குறைத்தால் எடை குறையும்….? ஆ…..இவ்வளவு வழி(லி)களா…? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உதடுகள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்

Posted: 22 Dec 2015 05:35 PM PST

lkl

lklசில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும், இதற்கு ஊட்டச்சத்து குறைபாடும், உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகளின் பக்கவிளைகளும் ஒரு காரணம் ஆகும்.

கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன.

அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, ரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் ரத்த அணுக்களின் அளவும், ரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டுக்கு செல்லும் சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, நிறம் மங்கிவிடுகிறது.

எனவே இத்தகைய பிரச்னைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

தேன்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

பாதாம் பால், எண்ணெய்

தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.

மாதுளை

மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

தயிர்

பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.lkl

இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

வெண்ணெய்

கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

கிளிசரின்

கிளிசரின் லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.

சர்க்கரை

உதட்டிற்கு 'ஸ்கரப்' செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.

The post உதடுகள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு

Posted: 22 Dec 2015 08:48 AM PST

Canadian_woman_dead_after_single-vehicle_crash__12222015

Canadian_woman_dead_after_single-vehicle_crash__12222015அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், விபத்தில் உயிரிழந்தவர் ஒரு பெண் பிரசை என்றும் தெரிவிக்கின்றது.

மொன்ரானா மாநிலத்தின், யெலோஸ்டோன்(Yellowstone) தேசிய புங்காவிற்கு மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இந்த விபத்து சம்பவித்ததனை அந்த மாநில காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்த பெண் தமது கணவருடன் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், கணவரே வாகனத்தை செலுத்திச் சென்ற நிலையில், பனி படர்ந்திருந்த வீதியில் வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.Canadian_woman_dead_after_single-vehicle_crash__12222015

கட்டுபாட்டினை இழந்த வாகனம், வீதியோர தடுப்புச் சுவருடன் மோதுண்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கவிழந்து உருண்டு சென்ற வாகனத்தினுள் இருந்து குறித்த அந்த பெண் வெளியே வீசப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மோசமான காயங்களுக்குள்ளான அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்ற போதிலும் அவரின் பெயர் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் இவர்கள் இருவருடன் அவர்களின் ஏழு மற்றும் எட்டு வயதான இரண்டு பேரப்பிள்ளைகளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது அவர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

The post அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றில் கனடா மீண்டும் இடம்பிடிக்கும் – பிரதமர் நம்பிக்கை

Posted: 22 Dec 2015 08:39 AM PST

Justin_Trudeau_-_111162015

Justin_Trudeau_-_111162015ஐ.நா கட்டமைப்பில் மிகவும் பலம் பொருந்திய அமைப்பான பாதுகாப்பு மன்றத்தில் முக்கிய இடத்தினை பிடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடியப் பிரதமர்,2019ஆம் ஆண்டுக்குள் அதனைச் சாத்தியமாக்கமுடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா உட்பட உலக நிறுவனங்கள் அனைத்திலும் கனடாவின் பங்களிப்பினையும், ஆதிக்கத்தினையும் நிலைநாட்டுவதே தமது வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியமானதாக காணப்படுவதாகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் விரைவில் இடம்பிடிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் மீண்டும் இடம்பிடிப்பது என்பது மிகவும் சிறந்த ஒரு சந்தர்ப்பம் என்ற போதிலும், அதனை சாத்தியமாக்குவதற்கு பல்வேறு சவால்களை வெற்றிகொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Justin_Trudeau_-_111162015

அதேவேளை குறித்த அந்த ஒரு விடயத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்காது, பல்வேறு அனைத்துலக விடயங்களிலும் கனடா தனது கவனத்தினை செலுத்தவேண்டி இருக்கும் எனவும், இதனையே தாம் தற்போது மேற்கொண்டு வருவதாகவும் கனேடியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடா வசம் இருந்த ஐ.நா பாதுகாப்பு மன்ற ஆசனம் கடந்த 2010ஆம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டிடம் கைமாறியது.

இதனால் முன்னைய ஸ்டீபன் ஹார்ப்பர் அரசாங்கத்தின் பாரிய வெளியுறவு கொள்கை வீழ்ச்சியாக அது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

The post ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றில் கனடா மீண்டும் இடம்பிடிக்கும் – பிரதமர் நம்பிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™