Tamil News | Online Tamil News |
- அரசு பஸ் ஊழியர்களின் நிதியுதவியை ஏற்காதது ஏன்?
- வெள்ளத்திற்கு 340 பேர் பலி!
- நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?
- மூழ்கிய கார்கள் ஏராளம்: பழுது நீக்க பெரும் போராட்டம்
- கன மழைக்கு இனி வாய்ப்பில்லை
- ஆசையாய் வீடு வாங்கி 26வது மாடியில் தத்தளித்த அடுக்குமாடி வாசிகள்!
- நிவாரண பையில் முதல்வர் படம் எதிர்ப்பால் ஸ்டிக்கர்கள் அகற்றம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் வலுக்கிறது: அதிகாரிகளும் விரட்டியடிப்பால் ஆளும் கட்சியினர் பீதி
- ரூ.2500 கோடி அளவுக்கு இழப்பீடு கேட்டு காப்பீடு நிறுவனங்களில் மனு
- 1992ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மீண்டும் ஏற்படுமா? தாமிரபரணியில் கூடுதல் நீர் திறப்பினால் அபாயம்
- அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
| அரசு பஸ் ஊழியர்களின் நிதியுதவியை ஏற்காதது ஏன்? Posted: சென்னை மற்றும் கடலுார் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ, போக்குவரத்து கழகத்தில் உள்ள சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், தங்களது ஒரு நாள் சம்பளத்தை தர முன்வந்தனர். ஆனால், அதை ஊழியர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யாததால், இச்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் - சி.ஐ.டி.யூ., துணை பொதுச் செயலர் சேகர் கூறியதாவது: எங்கள் சங்கத்தில், 30 ஆயிரம் பேர் உள்ளனர். வெள்ள நிவாரண நிதியாக, நவம்பர் மாத சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடிக்குமாறு, போக்குவரத்து துறை செயலர் மற்றும் ... |
| Posted: வட கிழக்கு பருவ மழை, வழக்கத்தை விட, மிக அதிகளவு பெய்ததால், தமிழகத்தில் மொத்தம், 340 பேர் இறந்துள்ளனர். வட கிழக்கு பருவ மழை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது; பிற மாவட்டங்களிலும் பரவலாக பாதிப்பு இருந்தது. அக்., 1 முதல், இதுவரை, மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை, 340 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 95 பேர் இறந்துள்ளனர். ராமநாதபுரம், நாகை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மழையால், உயிர் இழப்பு இல்லை என, வருவாய்த்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.மாவட்ட வாரியாக இறப்பு ... |
| நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி? Posted: சென்னை:வெள்ளம் பாதித்த பகுதிகளில், தொற்று நோய் பரவாத வகையில், எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, பொது சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.* தண்ணீர், பூச்சிகளால் நோய் பரவும் வாய்ப்புள்ளதால், பாதுகாக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துங்கள் * தொற்று நோய் பாதிக்காத வகையில், சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவுங்கள். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை, பயன்படுத்த வேண்டாம் * காய்ச்சல், வயிற்றுபோக்கு ஏற்பட்டால், மருத்துவ முகாம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே ... |
| மூழ்கிய கார்கள் ஏராளம்: பழுது நீக்க பெரும் போராட்டம் Posted: மழையால் பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்கள், 'சர்வீஸ் சென்டர்'களை நோக்கி படையெடுத்து வருவதால், அவை, இடப்பற்றாக்குறையால் திணற துவங்கியுள்ளன. பல சர்வீஸ் சென்டர்களில் நிறுத்தப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான கார்கள், வெள்ளத்தில் மூழ்கியது தற்போது தெரிய வந்து உள்ளது. சர்வீஸ் சென்டர்களுக்கு பழுது நீக்க வரும் வாகனங்கள், இரவு நேரத்தில் அங்கு நிறுத்தப்படுவது வழக்கம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சர்வீஸ் சென்டர்களில், நவ., 30ல் நிறுத்தப்பட்டிருந்த,1,000க்கும் அதிகமான வாகனங்கள், அன்று நள்ளிரவு எதிர்பாராமல் கொட்டிய அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ... |
| Posted: சென்னை: 'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இனி கன மழைக்கு வாய்ப்பு இல்லை' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை மூலம், சராசரியாக, 44 செ.மீ., மழை கிடைக்கும். அக்., 1 முதல், நேற்று வரை வட கிழக்கு பருவ மழை மூலம், தமிழகத்தில் பெய்த மழை குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:ஒரு மடங்கு அதிகம்இந்த கால கட்டத்தில் சராசரியாக, 39 செ.மீ., மழை பெய்யும். ஆனால், நடப்பு ஆண்டில், 64 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சராசரியை விட, 213 சதவீத மழை அதிகமாக ... |
| ஆசையாய் வீடு வாங்கி 26வது மாடியில் தத்தளித்த அடுக்குமாடி வாசிகள்! Posted: 'மழை, வெள்ளத்தின் போது எந்த தொடர்பும் இல்லாமல், மீட்பு உதவியும் இன்றி, இருட்டுக்கு மத்தியில் அந்தரத்தில் இரண்டு நாட்கள் தவித்தோம்' என, பழைய மாமல்லபுரம் சாலையில், அதிக தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் கூறியுள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை, வெள்ளம், எந்த பிரிவு மக்களையும் விட்டு வைக்கவில்லை. ஏரிகள் உடைப்பு, அதிகபட்ச உபரி நீர் திறப்பு போன்றவற்றால், பெரும்பாலான கட்டடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சில கட்டடங்களில் மக்கள், மூன்றாம் தளத்தில் அல்லது மொட்டை மாடிகளில் தஞ்சம் ... |
| நிவாரண பையில் முதல்வர் படம் எதிர்ப்பால் ஸ்டிக்கர்கள் அகற்றம் Posted: சென்னை:ஆலந்துார் மண்டலத்தில், தொண்டுள்ளம் கொண்டோர் வழங்கிய, நிவாரண பொருட்கள் அடங்கிய பையில், முதல்வர் பட ஸ்டிக்கர் ஒட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.கனமழையால், அடையாறு கரை ஓரம் வசித்த, முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தோர், அதிகம் பாதிக்கப்பட்டனர்.அதேபோல், ஆலந்துார், நிலமங்கைநகர், இந்திராநகர் பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளை இழந்தோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆலந்துார் மண்டலத்தில் உள்ள, 12 முகாம்களில், 2,120 பேர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு, ... |
| Posted: மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், தமிழகத்தில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால், மக்களின் கோபம் வலுத்து வருகிறது. அமைச்சர்களை தொடர்ந்து, அதிகாரிகளையும் மக்கள் விரட்டியடிப்பதாலும், சிறை பிடிப்பதாலும் ஆளுங்கட்சியினர் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரத்தில், மழை விடாது கொட்டியது. ஏரிகள் நிறைந்து, உபரி நீர் திறப்பதால், சிங்காரச் சென்னை, வெள்ளக்காடாக மாறியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களும் வெள்ள பாதிப்பில் திணறின. சில நாட்களாக மழை விட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அரசின் சரியான ... |
| ரூ.2500 கோடி அளவுக்கு இழப்பீடு கேட்டு காப்பீடு நிறுவனங்களில் மனு Posted: மும்பை: தமிழகத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 10 ஆயிரம் பேர் இழப்பீடு கோரியுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.2,500 கோடி என இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்திலிருந்து அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் இழப்பீடு கேட்டு 10 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.2,500 கோடி வரை இருக்கும். அனைத்து நிறுவனங்களும் இதனை எதிர்கொண்டு இழப்பீடு வழங்க தயாராகி வருகின்றன. இதற்காக சென்னையில் 12 மையங்கள் அமைக்க உள்ளன. இதன் மூலம் விரைவாக இழப்பீடு வழங்க முடியும்.நியூ ... |
| 1992ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு மீண்டும் ஏற்படுமா? தாமிரபரணியில் கூடுதல் நீர் திறப்பினால் அபாயம் Posted: திருநெல்வேலி: பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதால், நெல்லையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட, 11 அணைகளும் நிரம்பிவிட்டன. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் டிச., 7ம் தேதி காலை, 97 அடியாக இருந்தது; நேற்று மாலை, 114 அடியாக உயர்ந்தது. அணைக்கு, 7,000 கன அடி வீதம் நீர்வரத்து இருப்பதால் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறக்கப்படும். தற்போது, பாபநாசம் அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ... |
| அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு Posted: வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம் வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதி திறக்கப்படுவது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 10,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |