Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தகுதியான நபர்கள் பா.ஜ.,வில் பற்றாக்குறை: தள்ளிப்போகுது மத்திய அமைச்சரவை மாற்றம்

Posted: 30 Dec 2015 07:53 AM PST

புதுடில்லி,: பீஹார் மாநில சட்டசபை தேர்தலில், படுதோல்வியை சந்தித்த நிலையில், திறமையற்ற அமைச்சர்களை நீக்க, பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால், அதற்கான சரியான ஆட்கள் கிடைக்காததால், முடிவை தள்ளி போட்டு வருகிறார்.

பொருளாதார மேம்பாடு:
பிரதமராக கடந்த மே மாதம் மோடி பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான அரசு, பல விதங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது; நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என, பல தரப்பில் பேசப்பட்டாலும், அமைச்சர்களில் சிலர் மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர்களை மாற்ற வேண்டும் என, அவர் விரும்பினாலும், அந்த இடங்களை நிரப்ப ...

தூங்கி வழியும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாடம்: சோலார் மானியத்தை 10 மடங்காக உயர்த்த அதிரடி முடிவு

Posted: 30 Dec 2015 07:55 AM PST

புதுடில்லி,: மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், சூரிய சக்தி மூலம், 4,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடு, குடியிருப்புகள், கட்டடங்கள் ஆகியவற்றின் மேல்தளத்தில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், 5,000 கோடி ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. பட்ஜெட்டில், 600 கோடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் அவசியத்தை உணர்ந்து, 5,000 கோடி ரூபாயாக மானியத்தை உயர்த்தி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம், ...

சிக்கலில் ஜல்லிக்கட்டு வீரியம் காட்டும் விலங்குகள் நல வாரியம்

Posted: 30 Dec 2015 08:04 AM PST

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில், விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தொடர்வதால், கடைசி நேர சிக்கல் எழுந்துள்ளது. இதனால், உறுதியான முடிவை, மத்திய அரசு எடுக்க, சில நாட்கள் ஆகலாம் என்றே கூறப்படுகிறது.இதுகுறித்து டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. 'தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து, வரும் ஓரிரு நாட்களுக்குள், நல்ல செய்தி வெளியாகும்' என, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர், மூன்று நாட்களுக்கு முன் டில்லியில் ...

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' பிரதமர் உத்தரவின்றி நடக்காது!

Posted: 30 Dec 2015 08:56 AM PST

புதுடில்லி,:இனி, பிரதமர் மோடியின் உத்தரவின்றி, மத்திய அரசு பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய முடியாது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.ஓ.எஸ்., போன்ற குடிமைப்பணி அதிகாரிகள், அச்சமின்றி பணியாற்றவும், அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் பந்தாடப்படுவதை தடுக்கவும், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த புதிய விதிமுறைகளை, மத்திய அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரின் அனுமதியுடன், மத்திய சீராய்வுக் குழு பரிந்துரைப்படி மட்டுமே, ...

மதவாத சக்திகளை எதிர்க்கணும்: சோனியா பேச்சு

Posted: 30 Dec 2015 08:59 AM PST

திருவனந்தபுரம்: நாட்டில் மத ரீதியான வேற்றுமையை களைய அனைவரும் கடினமாக பாடுபட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா பேசினார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை அனைவரும் ஏற்று நடக்க வேண்டும். அதன் படி, மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஜாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக சமூக சீர்திருத்த கொள்கைகளை கொண்டிருந்தவர் நாராயண குரு. எனவே, நாட்டில், மத ரீதியான வேற்றுமையை களைய அனைவரும்இன்னமும் கடினமாக பாடுபட வேண்டும்; அதற்கு, நாராயண குருவின் ...

ராஜபக் ஷே ஊழல்களுக்கு ஆதாரம்: இலங்கை அரசு அறிவிப்பு

Posted: 30 Dec 2015 09:02 AM PST

கொழும்பு: 'இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே மற்றும் அவர் அமைச்சரவை சகாக்கள், ஊழல் செய்துள்ளதற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில், இந்த ஆண்டு ஜனவரியில், அதிபர் தேர்தல் நடந்தது. அதில், 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராஜபக் ஷே, படுதோல்வியடைந்தார்; புதிய அதிபராக மைத்ரிபாலா சிரிசேன தேர்வு செய்யப்பட்டார்.ராஜபக் ஷே ஆட்சியில், பல முறைகேடுகள், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளதாக, புதிய அதிபர் சிறிசேன குற்றஞ்சாட்டினார்; விசாரிக்க, விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.ராஜபக் ஷேவின் தம்பியும், முன்னாள்அமைச்சருமான ...

பற்றாக்குறை நோயால் தமிழகம் பாதிப்பு: கருணாநிதி தகவல்

Posted: 30 Dec 2015 09:34 AM PST

சென்னை: 'பற்றாக்குறை எனும் நோயால், தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. தற்போது, 2.11 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு கடன்,234.98 சதவீதம் உயர்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சியுடன் ஒப்பிடும்போடு, அ.தி.மு.க., ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை, 1,220 கோடி ரூபாய்; நிதிப் பற்றாக்குறை, 15,600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகமாகி, 'பற்றாக்குறை' என்னும் நோயால், தமிழகம் பாதிக்கப்பட்டு விட்டது.நிதி ...

டில்லியில் மகளிர் மதுக்கடை விற்பனை 'விறுவிறு'

Posted: 30 Dec 2015 09:42 AM PST

டில்லி: டில்லியில், மது அருந்தும் பெண்களுக்கென, திறக்கப்பட்டுள்ள, பிரத்யேக மதுக்கடையில், விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.டில்லி, 'மெட்ரோ' ரயிலில், பெண்களுக்கென தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது போல, பெண் ஓட்டுனர்களைக் கொண்ட, வாடகை கார்கள், ஆட்டோ ரிக் ஷாக்கள், டில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன.இதை பின்பற்றி, கிழக்கு டில்லியில், 'ஸ்டார் சிட்டி மால்' என்ற வணிக வளாகத்தில், பெண்களுக்காகவே, பிரத்யேக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, பாதுகாப்பு பணியில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெண்களே மது பாட்டில்களை விற்பனை ...

சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட அ.தி.மு.க., தயார்: இன்று பொதுக்குழுவில் ஜெ., அறிவிப்பார் என எதிர்பார்ப்பு

Posted: 30 Dec 2015 10:09 AM PST

லோக்சபா தேர்தலை போலவே, 2016 சட்டசபை தேர்தலிலும், தனித்து போட்டியிட அ.தி.மு.க., தயாராகி வருகிறது. இது குறித்து, சென்னையில் இன்று கூடும் அக்கட்சியின் பொதுக்குழுவில், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என, ஆளும் வட்டாரம் எதிர்பார்க்கிறது.சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு, சென்னையில், இன்று காலை கூடுகிறது. லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும், ஆளும் கட்சி தனித்து களம் இறங்கியது; அதில், 37 தொகுதிகளை வென்றது. அதேபோன்ற அதிரடி முடிவை, இந்த தேர்தலிலும் எடுக்க, ஜெயலலிதா விரும்புகிறார். அதனால் தான், தேர்தல் நெருங்கும் ...

மாநில அரசுகள், ரயில்வே இணைந்து செயல்பட முடிவு

Posted: 30 Dec 2015 11:26 AM PST

புதுடில்லி: மாநில அரசுகள், ரயில்வே துறை பங்களிப்புடன், கூட்டு முயற்சி நிறுவனங்கள் அமைக்க, பிரதமர் தலைமையிலான, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மாநிலங்களில், ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ரயில்வே துறை இணைந்து, கூட்டு முயற்சி நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.இதன் மூலம், ரயில்வே திட்டங்கள் மற்றும் நிதி விஷயங்களில் முடிவெடுப்பதில், மாநில அரசுகளின் பங்களிப்பும் இருக்கும்.மாநில அரசுகளின் பங்களிப்பால், நிலம் கையகப்படுத்துதல், சிமென்ட், உருக்கு, மின்சாரம் உற்பத்தி ஆலைகள் நிர்மாணித்தல் ...

அரசு கட்டடங்களில் 'சோலார்': சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டாயம்

Posted: 30 Dec 2015 02:57 PM PST

ராய்பூர் : 'புதிதாக கட்டப்படும் அனைத்து அரசு கட்டடங்களின் மொட்டை மாடியில், கட்டாயம் சூரிய மின் சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவி, மின் உற்பத்தி செய்ய வேண்டும்' என, சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான அரசு உள்ளது. முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று(டிச.,30) நடைபெற்றது. இதில், மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், அரசு கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனக் கட்டடங்கள், தொழில் அமைப்புகளின் கட்டடங்களில், சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™