Tamil News | Online Tamil News |
- பொங்கல் பரிசு ரூ.150?
- உண்மையான செய்தி வெளியாவதில்லை: 'டிவி' சேனல்கள் மீது ஜெட்லி புகார்
- சட்டசபை தேர்தலில் மம்தாவின் ஆட்டம் 'குளோஸ்?'
- கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு: மது 'பார்' தடையை தொடர உத்தரவு
- அ.தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி மக்கள் தயார் என ஸ்டாலின் பேச்சு
- ஜெயலலிதா 'ஆக் ஷன்': கட்சிகள் அதிருப்தி
- ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் 'யாஸிடி' கொடுமை அம்பலம்
- மீனவர்கள் நிவாரணம்: ரூ.1,000 'லபக்'கிய அதிகாரிகள்
- உரம், மண்ணெண்ணெய்க்கும் மானியம் 'கட்?' மோடி அரசின் அதிரடி திட்டம் விரைவில் அமல்
- மகப்பேறு விடுமுறை 26 வாரம்?
- டில்லியில் இன்று முதல் கார்களுக்கு கட்டுப்பாடு
| Posted: 29 Dec 2015 06:58 AM PST ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 150 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.பொங்கலை முன்னிட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில், தலா, அரை கிலோ பச்சரிசி, வெல்லம்; பச்சை பருப்பு, 100 கிராம்; முந்திரி, ஏலம், திராட்சை தலா, 20 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு பை, ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றதும், பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, வெல்லத்துடன், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்ததால், 2015ம் ஆண்டு பொங்கல் பரிசு பை வழங்கவில்லை. ... |
| உண்மையான செய்தி வெளியாவதில்லை: 'டிவி' சேனல்கள் மீது ஜெட்லி புகார் Posted: 29 Dec 2015 08:04 AM PST புதுடில்லி:''டிவி சேனல்கள், குறுகிய நோக்கில் விவாதங்களை நடத்துவதால், உண்மையான செய்தி வெளியாவதில்லை,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அருண் ஜெட்லி கூறினார். டில்லியில் நேற்று, இந்திய ஊடகங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவர், பேசியதாவது: நாளிதழ்களை படித்து தான், முன் செய்திகளை மக்கள் தெரிந்து கொண்டனர். அப்போது, செய்திக்கும், கருத்துக்கும், வேறுபாட்டை பத்திரிகைகள் கடைப்பிடித்து வந்தன செய்திதொடர்பான தங்கள் கருத்தை, தலையங்கத்தில் தான் எழுதி வந்தன.ஆனால், இப்போது, 'டிவி' சேனல்கள் பெருகி விட்டன. அவை, செய்திக்கும், கருத்துக்கும் ... |
| சட்டசபை தேர்தலில் மம்தாவின் ஆட்டம் 'குளோஸ்?' Posted: 29 Dec 2015 08:17 AM PST கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு, சில மாதங்களே உள்ள நிலையில், மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அரசியல் ரீதியில் வலிமை இழந்து வருவதை, பல்வேறு நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மேற்கு வங்கத்தில், 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் வென்று சாதனை படைத்தது. ஒரு சில மாதங்களில்...முதல்வர் பொறுப்பில் அமர்ந்த, மம்தா பானர்ஜி, அசைக்க முடியாத தலைவராக விளங்கினார். இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் ... |
| கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு: மது 'பார்' தடையை தொடர உத்தரவு Posted: 29 Dec 2015 08:19 AM PST புதுடில்லி: கேரளாவில், 10 ஆண்டுகளில் மதுபானத்தை அறவே ஒழித்துக்கட்டும் நோக்கில், அம்மாநில அரசு தயாரித்துள்ள திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஐந்து நட்சத்திர ஓட்டல் தவிர்த்து, பிற ஓட்டல்கள், பார்களில், அயல்நாட்டு மதுபானம் எனப்படும் பிராந்தி, விஸ்கி விற்க தடை விதிக்கப்படுகிறது. கேரளாவில், மதுபான உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, 10 ஆண்டுகளில் மதுவை ஒழித்துக் கட்ட, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, சிறப்புத் திட்டத்தை கடந்தாண்டு, அவர் ... |
| அ.தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி மக்கள் தயார் என ஸ்டாலின் பேச்சு Posted: 29 Dec 2015 08:57 AM PST திருச்சி : ''அ.தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் தயாராகி விட்டனர்,'' என்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.திருச்சி மாவட்டம் துறையூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பச்சமலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு, 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், அங்குள்ள மக்கள் மத்தியில் பேசியதாவது: மலை வாழ் மக்களுக்கு அதிக வசதிகளை செய்து கொடுத்தது தி.மு.க., ஆட்சிதான்.சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விட்டதால், ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்; லட்சக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர். ஏரியை ... |
| ஜெயலலிதா 'ஆக் ஷன்': கட்சிகள் அதிருப்தி Posted: 29 Dec 2015 09:31 AM PST சென்னை: அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில், அநாகரிகமாக நடந்து கொள்வது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு வழக்கமாகி விட்டது. தஞ்சையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், அருகே பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த, முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை, கிழித்தெறியும் படி, கட்சியினருக்கு உத்தரவிட்டார்; கட்சியினர் கிழித்தெறிந்தனர்.அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.,வினரும் தே.மு.தி.க., கொடி, பேனர்களை கிழித்து தீ வைத்தனர். விஜயகாந்த் உருவ பொம்மைகளை, எல்லா ஊர்களிலும் எரித்தனர். இந்த போராட்டம், தமிழகம் முழுவதும் பரவியது. ... |
| ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் 'யாஸிடி' கொடுமை அம்பலம் Posted: 29 Dec 2015 09:38 AM PST பெய்ரூட்: மேற்கு ஆசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில், சில பகுதிகளை கைப்பற்றியிருக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அந்நாடுகளின் சிறுபான்மை இன பெண்களை, அடிமைகளாக நடத்தியிருப்பதை, அந்த இயக்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் சில பகுதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைப்பற்றிய போது, அங்கு வசித்துவந்த, 'யாஸிடி' இன பெண்களை, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் உறவு கொண்டு, அடிமைகளாக நடத்துவதாக, ஐ.நா., அமைப்பு ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தது.இந்நிலையில், அதை உண்மை என்பதை உறுதிபடுத்தும்வகையில், அமெரிக்கா தலைமையிலான ... |
| மீனவர்கள் நிவாரணம்: ரூ.1,000 'லபக்'கிய அதிகாரிகள் Posted: 29 Dec 2015 09:44 AM PST சென்னையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை, படகு மூலம் மீட்டதற்காக, மீனவர்களுக்கு தரப்பட்ட உதவித்தொகை, 5,000 ரூபாயில், அதிகாரிகள், 1,000 ரூபாயை 'லபக்கி, 4,000 ரூபாய் மட்டும் வழங்கி வரும் அதிர்ச்சி தகவல், வெளியாகி உள்ளது. சமீபத்திய கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை படகு மூலம் மீட்க, மீன்வளத் துறை அதிகாரிகள், காசிமேட்டில் துவங்கி, மாமல்லபுரம் வரை வசிக்கும் மீனவர்களுக்கு, ஒரு படகுக்கு, 5,000 ரூபாய் வீதம், உதவித்தொகை நிர்ணயம் செய்து மீட்பு பணியில் களமிறக்கினர். ஆனால், வழங்கப்பட்ட உதவித்தொகை யில், 1,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்து ... |
| உரம், மண்ணெண்ணெய்க்கும் மானியம் 'கட்?' மோடி அரசின் அதிரடி திட்டம் விரைவில் அமல் Posted: 29 Dec 2015 10:41 AM PST புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டரை மானிய விலையில் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ள மத்திய அரசு, அடுத்ததாக, மண்ணெண்ணெய், யூரியா போன்ற பொருட்களிலும் கைவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் மற்றும் யூரியா போன்றவற்றை மானிய விலையில் அளிக்க, பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டு வருகிறது; இதனால், பெரியளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என, சில ... |
| Posted: 29 Dec 2015 11:21 AM PST புதுடில்லி:அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ... |
| டில்லியில் இன்று முதல் கார்களுக்கு கட்டுப்பாடு Posted: 29 Dec 2015 12:45 PM PST புத்தாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள, 'ஆட் - ஈவன்' கார் கட்டுப்பாட்டு திட்டத்தின் வெள்ளோட்டம், டில்லியில் இன்று துவங்குகிறது. டில்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து, காற்றின் சுத்த தன்மை மிகவும் குறைந்துள்ளது. மாறி மாறி...காற்று மாசுவை கட்டுப்படுத்த, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, புதுமையான நடவடிக்கையை இன்று மேற்கொள்ள உள்ளது.அதன் படி, ஒற்றை இலக்க எண்கள் கொண்ட கார்கள், ஒரு நாளும், இரட்டை இலக்க எண்கள் கொண்ட கார்கள், மறு நாளும் என, மாறி, மாறி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நகரில் ஓட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 30,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |