Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் கொள்முதலில் மாற்றம் ரூ. 6,000 கோடி மிச்சம்

Posted: 22 Dec 2015 06:49 AM PST

தனியார் நிறுவனங்களிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்காததால், மின் வாரியத்திற்கு, 6,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. தமிழக மின் வாரியம் சார்பில், பிள்ளை பெருமாள் என்ற இடத்திலிருந்து, 330.50 மெகாவாட், சமல்பட்டி, 105.66, ஜி.எம்.ஆர்., 196, எஸ்.டி.சி.எம்.எஸ்., 250, பயோனிர், 52.8, லேன்கோ, 113.20, மதுரை பவர், 106 மெகாவாட் என, ஏழு தனியார் நிறுவனங்களிடம், 1,154 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஜி.எம்.ஆர்., பிள்ளை பெருமாள், சமல்பட்டி, மதுரை பவர் ஆகிய நான்கு நிறுவனங்களிடம் இருந்து, 1 யூனிட் மின்சாரம் சராசரியாக, 12 ரூபாய்க்கு வாங்கப் பட்டது; இதனால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, ...

'அத்வானி போல ஜெட்லியும் மீண்டு வருவார்'

Posted: 22 Dec 2015 07:21 AM PST

புதுடில்லி:'ஹவாலா மோசடி வழக்கில்இருந்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீண்டு வந்தது போல, டில்லி கிரிக்கெட் வாரிய ஊழல் குற்றச்சாட்டில் இருந்து, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் மீண்டு வருவார்' என, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பூதாகரமாக...:மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மீது, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது ஆம் ஆத்மி கட்சியினரும் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், பூதாகரமாக கிளம்பி உள்ளன. பார்லிமென்டிலும், இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ள, காங்கிரஸ் கட்சியினர், 'அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்' என, ...

இனி 16 வயதுக்கே 'பனிஷ்மென்ட்': சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

Posted: 22 Dec 2015 07:34 AM PST

புதுடில்லி: சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்மூலம், கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 முதல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், பிற குற்றவாளிகளைப் போலவே, விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்.கடந்த, 2012ல், டில்லியில் ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொடிய குற்ற வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில், நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதேநேரத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ...

வெள்ள சேதத்துக்கு ரூ.26,000 கோடி தேவை: மோடிக்கு ஜெ., கடிதம்

Posted: 22 Dec 2015 09:58 AM PST

சென்னை:'தமிழகத்தில், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய, 26 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இதை ஒதுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.வெள்ள சேதம் தொடர்பாக, மத்திய அரசுக்கு, இரண்டாவது அறிக்கை அளிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு, முதல்வர், பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், டிசம்பர் முதல் வாரம், எதிர்பாராத அளவுக்கு ...

கூட்டணி: காங்கிரசை ஓரங்கட்டுது தி.மு.க.,

Posted: 22 Dec 2015 10:05 AM PST

காங்கிரசுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்கும், தி.மு.க.,வின் எண்ண ஓட்டத்தில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., பெரிய கட்சி என்றாலும், பல தேர்தல்களில் கூட்டணி அமைத்தே போட்டியிடுகிறது. அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், கூட்டணி அவசியம் என்பது தான், தி.மு.க.,வின் நிலை. ஆனால், கூட்டணி சேர வரும் கட்சிகள், தி.மு.க.,வின் பலவீனம் அறிந்து, தங்கள் இஷ்டத்துக்கு செயல்பட வலியுறுத்துகின்றன. இது, தி.மு.க.,வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ...

அ.தி.மு.க., வலை; தே.மு.தி.க., கவலை

Posted: 22 Dec 2015 10:06 AM PST

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, ஆளுங்கட்சி ஆதரவாளராக மாற்றும் முயற்சி தீவிரமாக நடப்பதால், தே.மு.தி.க., தலைமை கவலை அடைந்துஉள்ளது. இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தல், தே.மு.தி.க.,வுக்கு வாழ்வா, சாவா பிரச்னை. இதனால், கட்சி நிர்வாகிகள், கூட்டணி விஷயத்தில், கட்சி தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவெடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், மாவட்ட சுற்றுப்பயணம், வெள்ள நிவாரண உதவி என, மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஏகப்பட்ட செலவு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். இப்படி பாதிப்பில் உள்ளவர்களுக்கு ...

வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நிவாரணம்: அரசு அலுவலகத்தில் அ.தி.மு.க.,வினர் அதிரடி

Posted: 22 Dec 2015 10:16 AM PST

சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசின் உதவிக்காக காத்திருக்கும் நிலையில், வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், அரசு ஊழியர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதிகபட்ச மழை, அடையாறு, கூவத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, சென்னையில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இதிலிருந்து மக்களை மீட்டு, நிவாரண உதவிகள் வழங்குவதில், அரசின் பல துறைகளும், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் முழு வீச்சில் ஈடுபட்ட தால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும், சில ...

கமிஷன் அதிகரிப்பால் அலறும் கான்ட்ராக்டர்கள்: இயற்கை சீற்றங்களாலும் அடிக்குது யோகம்

Posted: 22 Dec 2015 10:19 AM PST

தேனி: ரோடு, கட்டுமான பணிகளுக்கு 45 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளதால், ஒப்பந்த பணிகளை எடுக்க விருப்பம் இல்லாமல் கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் மூலம் பேரழிவு ஏற்பட்டால் கூட, அங்கு நடக்கும் வளர்ச்சிப்பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெரிய அளவில் ஆதாயம் பார்த்து விடுகின்றனர் என கான்ட்ராக்டர்கள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் பல கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக மழைசேதத்திற்கு மத்திய அரசு 1980 கோடி ரூபாய் ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் ...

ஆண்டுக்கு 1.66 கோடி பேர் ரயிலில் ஓசி பயணம்: 'வித்அவுட்'களை பிடிக்க முடியாமல் திணறல்

Posted: 22 Dec 2015 10:48 AM PST

நாடு முழுதும், ஆண்டுக்கு, 1.66 கோடி பேர், ரயில்களில் டிக்கெட் எடுக்காமல், 'வித்அவுட்' முறையில் பயணிக்கின்றனர்; இப்படி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவர்களை பிடிக்க முடியாமல், ரயில்வே துறை திணறி வருகிறது.தினமும், 19 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன; 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர். இவர்களில், டிக்கெட் இன்றி பயணிப்போர் அதிகளவில் உள்ளனர். கடந்த நிதியாண்டில், 1.66 கோடி பேர் டிக்கெட் இன்றி பயணம் செய்து உள்ளனர்; இவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிப்பதால், ரயில்வே நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.தெற்கு ரயில்வே ...

அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு

Posted: 22 Dec 2015 11:34 AM PST

புதுடில்லி : சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்காவிடமிருந்து, 'அவெஜ்சர்' எனப்படும், அதிநவீன ஆள் இல்லா விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எல்லைப் பகுதியில், சீன ராணுவத்தின் அச்சுறுத்தல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலம் வழியாக, சீன ராணுவத்தின் ஊடுருவலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் நவீன தயாரிப்பான, அவெஜ்சர் ரக, ஆளில்லா உளவு விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரம் கோடி ரூபாய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™