Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாகிஸ்தானுடன் போர் இல்லை: அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி

Posted: 16 Dec 2015 08:36 AM PST

புதுடில்லி:''பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிலிருந்து, பாகிஸ்தானை மாற்ற, பேச்சு நடத்துவதே சிறந்த வழி; அந்நாட்டுடன் போர் நடத்துவது சரியானதல்ல,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபும், சமீபத்தில், பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், ஜூலையில், ரஷ்யாவின் உபா நகரிலும் சந்தித்துப் பேசிய போதும், இந்தியாவும், பாகிஸ்தானும், பயங்கரவாதம் தொடர்பாக பேச்சு நடத்துவது என, முடிவு செய்தனர். பேச்சு மூலமே, பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதால், பாங்காக் ...

கெஜ்ரிவால் முதன்மை செயலரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி: முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்

Posted: 16 Dec 2015 08:42 AM PST

புதுடில்லி,: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரிடம், ஊழல் குற்றச்சாட்டுதொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் இரண்டாவது நாளாக, நேற்றும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.அதில், பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமார். இவர், தன் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசு ஒப்பந்தங்களை, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம், டில்லி தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட, 14 இடங்களில், சி.பி.ஐ., ...

ஜெயலலிதா பேச்சும் ராமதாஸ் விளாசலும்!

Posted: 16 Dec 2015 09:33 AM PST

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து, மெல்ல மீண்டு வரும் நிலையில், இரு வாரங்களுக்கு பின், முதல்வர் ஜெயலலிதா, 'வாட்ஸ் ஆப்' மூலம் மக்களிடம் பேசி உள்ளார். உருக்கமும், உறுதியும் நிறைந்த அவரது உரையும், அதற்கு, தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டன குரலும், இங்கே பதிவு செய்யப்படுகின்றன.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: வெள்ளத்தில் சிக்கி, அனைத்தையும் இழந்து, மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா, இப்போது, வாட்ஸ் ஆப் மூலம், அவர்களின் துயரத்தை நினைத்து, வருத்தம் ...

வீடுகளை இழந்த மக்கள் வீதிகளில் பரிதவிப்பு

Posted: 16 Dec 2015 09:46 AM PST

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், மழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மூடப்பட்டதால், தங்க இடமின்றி, வீதிகளில் பரிதவித்து வருகின்றனர்.இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலுார் மாவட்டத்தில், நவ., 8 முதல், டிச., 5 வரை பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால், 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 85 ஆயிரம் பேரை, பள்ளிகள், திருமண மண்டபங்களில் அமைக்கப்பட்ட, 158 தற்காலிக முகாம்களில் தங்க வைத்து, உணவு வழங்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 8ம் தேதி பள்ளிகள் மீண்டும் ...

ஆக்கிரமிப்புகள் கூடாது: அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

Posted: 16 Dec 2015 09:55 AM PST

சென்னை: 'சென்னையில் ஓடும் ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், குப்பை கூளங்கள் குவிப்பதை தடுக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:நீர் நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவ்வப்போது, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.கொசஸ்தலை, கூவம், அடையார், பக்கிங்ஹாம் ஆறுகளை மீட்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையார் ஆற்றின் ...

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 10 நாட்களுக்குள் நிவாரண தொகை

Posted: 16 Dec 2015 09:57 AM PST

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 நாட்களுக்குள், வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னை மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். கடந்த எட்டு நாட்களுக்கு முன், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய எண்களை பிரத்யோக ...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு சிக்கல் : ஆகம விதிகளின் படி நியமிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 16 Dec 2015 10:51 AM PST

புதுடில்லி: 'தமிழக கோவில்களில், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், 2006ல் தி.மு.க., அரசு பிறப்பித்த, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற அவசர சட்டம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பாதிக்கப்படலாம் என்பதையும், நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த, 2006ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசு, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையால், பிறப்பிக்கப்பட்ட இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வு

Posted: 16 Dec 2015 12:16 PM PST

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ''இதன் மூலம், மத்திய அரசுக்கு, 2,500 கோடி ரூபாய் கிடைக்கும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி, 30 காசுகள் அதிகரிக்கப்பட்டு, 7.36 ரூபாயாகவும், டீசலுக்கான வரி, 1.17 ரூபாய் உயர்த்தப்பட்டு, 5.83 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 2,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.இதே போல, 'பிராண்டட்' பெட்ரோல் மற்றும் டீசலுக்கான உற்பத்தி வரியும், உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஆறு ...

ஜி.எஸ்.டி., மசோதா: காங்., கோரிக்கை ஏற்பு

Posted: 16 Dec 2015 12:23 PM PST

புதுடில்லி,:''காங்., கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., மசோதாவில், கூடுதலாக ஒரு சதவீதம் வரி வசூலிக்கும் விதிமுறையை நீக்க தயார்; எனவே, மசோதாவை நிறைவேற்ற, காங்., ஒத்துழைக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்தார்.டில்லியில் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அவர் பேசியதாவது:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியில், மாநிலங்கள் இடையேயான விற்பனையில், கூடுதலாக ஒரு சதவீதம் வரி விதிக்கும் திட்டத்தை, தொழில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்கள் வலியுறுத்துகின்றன.அவை, அடிப்படை கட்டமைப்பிற்கு அதிகம் ...

ரயில்களில் என்ன வசதி தேவை? பொதுமக்கள் கருத்து கூறலாம்

Posted: 16 Dec 2015 12:27 PM PST

புதுடில்லி: ரயில்களில் சுகமாக பயணம் செய்ய என்னென்ன வசதிகள் தேவை என்பதை தெரிவிக்கும்படி, பொதுமக்களை ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், 2016 - 17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, ரயில்வே துறையை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்பதாக, ரயில்வே வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில், ரயில்களில் பாதுகாப்பான பயணம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை, மின்மயமாக்குதல், ரயில் நிலையங்களை ...

ஸ்பெயின் பிரதமர் முகத்தில் ' பஞ்ச்' விட்ட இளைஞன் கைது

Posted: 16 Dec 2015 03:09 PM PST

மாட்ரிட் : தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்பெயின் பிரதமரை இளைஞன் ஒருவன் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது,
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் மரியானோ ரஜோய்(60), 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, எதிர்கட்சியான சோஷியலிஸ்ட் கட்சியினர் கூறிவந்தனர். இந்நிலையில் வரும் ஞாயிறன்று மறுதேர்தல் நடக்கிறது. இதில் தன்னை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சோஷியலிஸ் கட்சியின் பெட்ரோ சான்சூஸுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தி பிரசாரத்தில் கலந்துகொள்ள ரஜோய் வந்தார்.
...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™