Tamil News | Online Tamil News |
- உபரிநீரை தந்த கர்நாடகா :28 டி.எம்.சி., நீர்வரத்து
- பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்
- தமிழக வெள்ள சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?
- எம்.பி.,க்களுக்கு 'எலக்ட்ரிக் பஸ்' பரிசளிக்கிறார் பிரதமர் மோடி
- மக்கள் நல கூட்டணி: விஜயகாந்த் விருப்பம்
- பிரதமருக்கு ஜெ., கடிதம்:சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வையுங்கள்!
- தற்காலிக பால பணிக்கு நிதி கிடையாது: வீராணம் குழாய்களை தேடும் அதிகாரிகள்
- நம்பிக்கை வந்து விட்டது! கடவுள் மீது...
- ஆறு, ஏரி, குள ஆக்கிரமிப்புகளை அகற்ற சரியான தருணம் வந்தாச்சு: ஜெ.,யின் அதிரடி நடவடிக்கை பாயும் என வெங்கையா
- தேசிய வழிபாடு நகரமாகிறது சபரிமலை
- 34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு
| உபரிநீரை தந்த கர்நாடகா :28 டி.எம்.சி., நீர்வரத்து Posted: 13 Dec 2015 08:20 AM PST கர்நாடகாவில் பெய்த மழையால், 28 டி.எம்.சி., தண்ணீரை, காவிரியில், அம்மாநில அரசு திறந்து விட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை, நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.அதன்படி, ஜூன் முதல், டிச., 9ம் தேதி வரை, 173 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும்; ஆனால், 140 டி.எம்.சி., மட்டுமேகிடைத்துள்ளது; 32.5 டி.எம்.சி., கர்நாடகா பாக்கி வைத்துள்ளது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு ... |
| பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம் Posted: 13 Dec 2015 08:21 AM PST பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும். இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. ... |
| தமிழக வெள்ள சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா? Posted: 13 Dec 2015 09:43 AM PST 'தமிழக வெள்ள சேதங்களை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிடும் நிலையில், மத்திய அரசு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பெய்த பருவ மழையால், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 'தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ... |
| எம்.பி.,க்களுக்கு 'எலக்ட்ரிக் பஸ்' பரிசளிக்கிறார் பிரதமர் மோடி Posted: 13 Dec 2015 09:49 AM PST புதுடில்லி: தலைநகர் டில்லியில், கடுமையான வாகன போக்குவரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளிக்க உள்ளார். இதுபற்றி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று கூறியதாவது:டில்லியில் கடும் வாகன போக்குவரத்தால், காற்று மாசு அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உதவும் வகையில், பார்லிமென்ட் எம்.பி.,க்களுக்கு, இரண்டு எலக்ட்ரிக் பஸ்களை, வரும், 21ல் பரிசளிக்க ... |
| மக்கள் நல கூட்டணி: விஜயகாந்த் விருப்பம் Posted: 13 Dec 2015 10:04 AM PST சென்னை:''மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு, பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களை சந்திக்காமல், முதல்வர் ஜெயலலிதா, ராணி போல வீட்டில் உள்ளார்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். தே.மு.தி.க., சார்பில், சென்னையில், நேற்று, 200 இடங்களில் குப்பை அள்ளும் பணி நடந்தது. சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு, கட்சியினருடன் சென்று, விஜயகாந்த் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:சென்னையில், குப்பை அகற்றும் பணியில், ஒரு லட்சம் தே.மு.தி.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டே, இந்த பணிகளை செய்கிறோம். ... |
| பிரதமருக்கு ஜெ., கடிதம்:சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வையுங்கள்! Posted: 13 Dec 2015 10:06 AM PST சென்னை:'சிவில் சர்வீஸ் தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.பிரதமருக்கு, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை, தமிழக செய்தித்துறை, நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:தமிழக வெள்ள பாதிப்புக்களை தனிப்பட்ட முறையில் நீங்களே அறிவீர்கள். வெள்ள பாதிப்புகளால் பல இடையூறுகள் ஏற்பட்டன. மின் வினியோகமும் பாதிப்படைந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று 14ம் தேதி தான், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.வெள்ள பாதிப்பால், ... |
| தற்காலிக பால பணிக்கு நிதி கிடையாது: வீராணம் குழாய்களை தேடும் அதிகாரிகள் Posted: 13 Dec 2015 10:09 AM PST சேதமடைந்த தரைப்பாலங்களில், தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்காததால், வீராணம் குழாய்களை தேடி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலைகின்றனர். தமிழகத்தில், அக்., 28ல் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. இதனால், நவம்பர் மாத இறுதி வரை, 5,000 கி.மீ., நீள சாலைகள் சேதமடைந்தன. டிச., 1ல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை கன மழை புரட்டி எடுத்தது. இந்த மாவட்டங்களில், சாலைகள், நீர்நிலைகள் கடந்து செல்லும் தரைப்பாலங்கள் கடும் சேதம் அடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 32, திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு இடங்களில், சாலை உடைப்பு ... |
| நம்பிக்கை வந்து விட்டது! கடவுள் மீது... Posted: 13 Dec 2015 10:16 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் இடது கையில், ஒரு வாரமாக, சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திரா மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்து கட்டியது, மன ரீதியாக உற்சாகத்தை அளித்துள்ளதால், அவருக்கும் கடவுள் நம்பிக்கை வந்து விட்டது என்றே, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:'தமிழக முதல்வராக, ஆறாவது முறையாக கருணாநிதி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது' என, சித்தர்கள், சாமியார்கள் சிலர், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் அருள் வாக்கு கூறியுள்ளனர். அதனால் தான், 'முதல்வர் வேட்பாளர்' ... |
| Posted: 13 Dec 2015 10:47 AM PST வெள்ளப் பாதிப்பால் தத்தளித்த தமிழகம், அதில் இருந்து மீண்டு வரும் நிலையில், ''ஆறு, ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, இது தான் சரியான தருணம். இதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை பாயும்,'' என, மத்திய, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று முன்தினம் மாலை, சென்னை வந்தார். வெள்ளம் பாதித்த தாம்பரம் முடிச்சூர், வேளச்சேரி ராம் நகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்; வீடு வீடாகச் சென்று மக்களிடம் விசாரித்தார். 'ஐந்து நாட்களாக ... |
| தேசிய வழிபாடு நகரமாகிறது சபரிமலை Posted: 13 Dec 2015 10:58 AM PST சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு நகரமாக்கும் அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சபரிமலை அமைந்துள்ள இடம், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு, எந்த பணி நடத்த வேண்டுமென்றாலும், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி கொடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது. 'ஒரு மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து ... |
| 34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு Posted: 13 Dec 2015 12:43 PM PST சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 14,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |