Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதனுக்கு மாரடைப்பு: கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 06 Dec 2015 11:17 PM PST

இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஏ.பி.பரதனுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கவலைக்கிடமான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்தேன்டு பூஷன் பரதன் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.பி.பரதன்(92), 1996 முதல் 2012-ம் ஆண்டுவரை இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய

காஷ்மீரில் பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீரர்கள் காயம்

Posted: 06 Dec 2015 11:00 PM PST

டெல்லி மற்றும் கொல்கத்தாவில் தற்கொலை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அப்படி ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளில் சிலர் காஷ்மீர் மாநிலத்துக்குள் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காஷ்மீரில்

மத்திய மந்திரி வி.கே.சிங் பதவி விலகக்கோரி பாராளுமன்றத்தில் காந்தி சிலை அருகே ராகுல் தலைமையில் காங்கிரசார் போராட்டம்

Posted: 06 Dec 2015 10:55 PM PST

அரியானா மாநிலத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து காசியாபாத்தில் மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங், ''யாரோ ஒருவர் நாயின்

151 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த குஜராத் வைர வியாபாரி

Posted: 06 Dec 2015 10:22 PM PST

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி மகேஷ் சவானி. இவர் கடந்த 7 ஆண்டுகளாக தாய், தந்தையை இழந்த இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். கடந்த 2008–ம் ஆண்டு சவானியிடம் வேலை பார்த்த ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது 2 மகள்கள் திருமணத்துக்கு சில நாட்களுக்கு

கேரள தலைமை செயலகத்தில் உள்ள உம்மன்சாண்டி அலுவலகத்துக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்

Posted: 06 Dec 2015 10:21 PM PST

கேரள அரசின் தலைமை செயலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. தலைமை செயலகத்தின் வடக்கு பகுதியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை முதல்–மந்திரி அலுவலகத்துக்கு ஒரு மர்ம போன் வந்தது.

எப்போதுமே வீட்டுக்கு போக மாட்டேன்-மாட்டிறைச்சி வதந்தியால் படுகொலை செய்யப்பட்ட அக்லக்கின் மகன்

Posted: 06 Dec 2015 10:15 PM PST

செப்டம்பர் 28-ம் தேதி, தன் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட போது டேனிஷ் அக்லக் பயத்தில் குலை நடுங்கிப் போனார். சிறு வயது முதல் அவருக்கு நண்பர்களாக இருந்தவர்களே அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்தனர். "டேனிஷ், இன்னைக்கு நீ சாகப் போறடா." என்ற அவர்களின் மிரட்டும் குரல்தான் டேனிஷை குலை நடுங்கச் செய்தது.

மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பினால் அயோத்தியில் பாபர் மசூதியை கட்டிக் கொடுங்கள்: பா.ஜ.க.வுக்கு ஆசம் கான் கோரிக்கை

Posted: 06 Dec 2015 09:46 PM PST

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 23-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்குவர விரும்பினால் அயோத்தியில் பாபர் மசூதியை கட்டத்தர வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநில மந்திரியும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது - சென்னை எக்ஸ்பிரஸ் ஹீரோ ஷாருக் கான் எங்கே?: போட்டுத் தாக்கும் சாத்வி பிராச்சி

Posted: 06 Dec 2015 09:32 PM PST

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கையில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த ஹீரோ ஷாருக்கான் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம்

18 நாட்களில் ரூ.13 கோடி இழப்பு: தமிழக பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை வருமானமும் குறைந்தது

Posted: 06 Dec 2015 08:50 PM PST

மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 18 நாட்கள் நிறைவடைந்து உள்ளது. நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை பெய்தாலும் பக்தர்கள் கூட்டம்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

Posted: 06 Dec 2015 08:26 PM PST

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.க்கு இந்தியாவில் உளவு பார்த்து வந்த ஒரு கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த கும்பலின் தலைவன் கபைதுல்லா கான், கடந்த 26–ந்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சென்னை மக்களுக்காக சிறப்பு பூஜை

Posted: 06 Dec 2015 07:29 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. சாமியை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிக

நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் வரை கவலைப்பட தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேட்டி

Posted: 06 Dec 2015 06:53 PM PST

நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் வரை யாரும் கவலைப்பட தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கூறினார். டெல்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது

Posted: 06 Dec 2015 06:50 PM PST

திருப்பதியை அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், வருகிற 16-ந் தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலாவும், 9-ந் தேதி காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலாவும், இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணிவரை அம்ச வாகன வீதிஉலாவும் நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலாவும், இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணிவரை சிம்ம வாகன வீதிஉலாவும் நடக்கிற

ரஷியாவிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி ராணுவ தளவாடங்களை வாங்க இந்தியா திட்டம்

Posted: 06 Dec 2015 06:18 PM PST

ரஷியாவில் இருந்து பல்வேறு ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து முப்படைகளில் பயன்படுத்தி வருகிறது. அந்தவகையில் எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கவல்ல எஸ்.400 ரக ஏவுகணைகள் உள்பட பல்வேறு ராணுவ தளவாடங்களை ரஷியாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.

மோடி அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று: மாயாவதி சாடல்

Posted: 06 Dec 2015 03:40 PM PST

மோடி தலைமையிலான மத்திய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளதாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

ரூ.5,511 கோடி செலவில் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க தேர்தல் ஆணையம் திட்டம்

Posted: 06 Dec 2015 03:06 PM PST

5,511 கோடி ரூபாய் செலவில் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி இந்தியாவில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை உயர்த்த திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இது தொடர்பான திட்ட அறிக்கையை தேர்தல்

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு: ஸ்மிரிதி இரானி தகவல்

Posted: 06 Dec 2015 01:53 PM PST

இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

சுஷ்மா சுவராஜை சந்தித்த நேபாள மாதேசி தலைவர்கள்

Posted: 06 Dec 2015 12:09 PM PST

நேபாள அரசுக்கு எதிராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாதேசி மக்கள் கடந்த 2 மாதங்களாக போராடி வரும் நிலையில், நேற்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்படுகிறது.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 8-ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி?

Posted: 06 Dec 2015 09:45 AM PST

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகின்றார். தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் தீவிரமான பருவமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை கொட்டித்

இன்று பாபா சாகேப் அம்பேத்கரின் 60-வது நினைவுநாள்: சிறப்பு நாணயங்களை வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்

Posted: 06 Dec 2015 02:49 AM PST

பெருமைக்குரிய நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பி, "பாரத ரத்னா", பாபா சாகேப் அம்பேதகரின் 60-வது நினைவுநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் அம்பேத்கரின் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™