மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை விட, உ.பி மந்திரி ஆசம் கான் ஆபத்தானவர்: சிவசேனா சர்ச்சை
- நான் இந்திரா காந்தியின் மருமகள் - யாருக்கும் பயப்பட மாட்டேன்: சோனியா காந்தி ஆவேசப் பேட்டி
- கர்ப்பிணியான ராதிகா ஆப்தேவின் தன்னம்பிக்கை: வைரல் குறும்படம்
- அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி
- நேஷனல் ஹெரால்ட் வழக்கில் 19-ம் தேதி மறுவிசாரணை: சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- முதல் மந்திரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
- ஆந்திர வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி செம்மரம் கடத்தல்: கண்காணிப்பு தீவிரம்
- காளஹஸ்தி அருகே மனைவி–கள்ளக்காதலனை வெட்டி கொன்ற விவசாயி
- இறுதி நிறுத்தத்தையும் மீறி தடுப்பு சுவரின் மீது மோதிய மும்பை மின்சார ரெயில்
- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு: மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் - கேரள மந்திரி அறிவிப்பு
- ஸ்ரீகாளஹஸ்தியில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
- சென்னையில் மழை குறைந்ததால் சபரிமலையில் மீண்டும் தமிழக பக்தர்கள் குவிந்தனர்
- பி.எப். வட்டியை 8.75 சதவீதமாக நிர்ணயிக்க நிதி அமைச்சகம் விருப்பம்
- வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: நாசிக்கில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
- மும்பையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி சாவு - 2 ஆயிரம் குடிசை வீடுகள் எரிந்து நாசம்
- தமிழ்நாட்டில் வெள்ளத்தால் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை: நேரடியாக ஆய்வு செய்த மத்திய சுகாதார குழு அறிக்கை
- துப்பாக்கி முனையில் பெண்ணிடம் உணவு கேட்ட மாவோயிஸ்டுகள்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி
- சென்னை மக்களுக்காக பட்டினி கிடந்து ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய பாலியல் தொழிலாளிகள்
- பெங்களூருவில் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
- சபரிமலை மாளிகைப்புரத்தம்மன் கோவிலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2-வது நாளாக சிறப்பு பூஜை
| நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை விட, உ.பி மந்திரி ஆசம் கான் ஆபத்தானவர்: சிவசேனா சர்ச்சை Posted: 07 Dec 2015 11:55 PM PST மும்பை தொடர் குண்டு வெடிப்பை நடத்திய, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை விட உத்தரபிரதேச மாநில மந்திரி ஆசம் கான் மிகவும் ஆபத்தானவர் என்று கூறி சிவசேனா சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. |
| நான் இந்திரா காந்தியின் மருமகள் - யாருக்கும் பயப்பட மாட்டேன்: சோனியா காந்தி ஆவேசப் பேட்டி Posted: 07 Dec 2015 11:31 PM PST நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தி நிறுவனம் தொடர்பான வழக்கில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. |
| கர்ப்பிணியான ராதிகா ஆப்தேவின் தன்னம்பிக்கை: வைரல் குறும்படம் Posted: 07 Dec 2015 10:43 PM PST அகல்யா என்ற குறும்படம் மூலமாக சில மாதங்களுக்கு முன், நெட்டிசன்களை அலற வைத்த ராதிகா ஆப்தே தற்போது 'Bold is Beautiful' என்ற குறும்படம் மூலமாக கர்ப்பமான பெண்களுக்கு பணியிடத்தில் உள்ள பாலின பாகுபாடு குறித்து கவனம் பெறச் செய்துள்ளார். 9 லட்சம் பேரைக் கடந்து யூ டியூபில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோவை பிரபல ஷாப்பிங் வலைதளமான மிந்த்ரா தனது விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உருவாக்கியுள்ளது. |
| அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி Posted: 07 Dec 2015 10:34 PM PST அரியானா மாநிலம் பல்வால் ரெயில் நிலையம் அருகே இன்று காலை லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் இருந்து புறநகர் மின்சார ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மின்சார ரெயிலும் நேருக்கு நேராக |
| நேஷனல் ஹெரால்ட் வழக்கில் 19-ம் தேதி மறுவிசாரணை: சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு Posted: 07 Dec 2015 10:10 PM PST வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மக்கள் மனங்களில் சுதந்திர வேட்கையை தூண்டிவிடும் வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு 'நேஷனல் ஹெரால்ட்' என்ற பத்திரிகையை தொடங்கினார். இந்த பத்திரிகை தற்போது வெளிவரவில்லை. கடந்த 2010–ம் ஆண்டு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை காங்கிரஸ் |
| முதல் மந்திரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது Posted: 07 Dec 2015 09:56 PM PST திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தின் வடக்கு பகுதியில் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் முதல் மந்திரியின் அலுவலகத்துக்கு ஒரு மர்ம போன் வந்தது. அலுவலக ஊழியர் அந்த போனை எடுத்து பேசியபோது, 'முதல் மந்திரி உம்மன் சாண்டி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அந்த குண்டு வெடித்து சிதறும்' என்று கூறிவிட்டு எதிர்முனையி |
| ஆந்திர வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி செம்மரம் கடத்தல்: கண்காணிப்பு தீவிரம் Posted: 07 Dec 2015 09:43 PM PST ஆந்திர மாநிலம், சேஷா சல வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கூலித் தொழிலாளர்கள் மூலம் வெட்டி, அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி கடத்தல்காரர்கள் பல கோடி சம்பாதித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கிய இந்த செம்மரக்கடத்தல் கடந்த 12 ஆண்டுகளில் பயங்கரமாக வளர்ந்துள்ளது. |
| காளஹஸ்தி அருகே மனைவி–கள்ளக்காதலனை வெட்டி கொன்ற விவசாயி Posted: 07 Dec 2015 09:13 PM PST ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள கதிரிநாதுனிகோட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா, விவசாயி. இவருடைய மனைவி அருணா (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அருணாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆதிநாராயணா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெங்கட்ரமணாவுக்கு தெரிய வந்தது. அவர், அருணாவை |
| இறுதி நிறுத்தத்தையும் மீறி தடுப்பு சுவரின் மீது மோதிய மும்பை மின்சார ரெயில் Posted: 07 Dec 2015 09:10 PM PST மும்பையின் மின்சார ரெயில் ஒன்று இறுதி நிறுத்தத்தையும் மீறி தடுப்பு சுவரின் மீது மோதியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜி.எஸ்.டி ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்த மும்பை மின்சார ரெயில் இறுதி நிறுத்தத்தையும் மீறி அங்கிருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. |
| Posted: 07 Dec 2015 09:04 PM PST கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தற்போது அணையில் நீர் மட்டம் 142 அடியை தொட்டுவிட்டது. |
| ஸ்ரீகாளஹஸ்தியில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை Posted: 07 Dec 2015 08:56 PM PST ஸ்ரீகாளஹஸ்தி குண்டேடிவாரி தெருவை சேர்ந்தவர் ராகவய்யா (வயது 65). இவருடைய மகன் ஜனார்த்தன் (45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராகவய்யாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. நோயின் கொடுமையால் அவதிப்பட்ட அவர், கடந்த மாதம் 25–ந்தேதி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| சென்னையில் மழை குறைந்ததால் சபரிமலையில் மீண்டும் தமிழக பக்தர்கள் குவிந்தனர் Posted: 07 Dec 2015 08:52 PM PST பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்று சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுவதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். |
| பி.எப். வட்டியை 8.75 சதவீதமாக நிர்ணயிக்க நிதி அமைச்சகம் விருப்பம் Posted: 07 Dec 2015 08:06 PM PST தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை, நடப்பு 2015-16-ஆம் நிதி ஆண்டிலும், 8.75 சதவீதமாக நிர்ணயிக்க மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதி ஆண்டுகளில் தொழிலாளர்களின் சேமிப்பிற்கு 8.75 சதவீத வட்டி வழங்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டிலும் அதே வட்டி வருவாய் வழங்க |
| வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: நாசிக்கில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் Posted: 07 Dec 2015 07:28 PM PST இந்தியாவில் வெங்காய விளைச்சலுக்கு பிரசித்திபெற்ற நாசிக்கில் வெங்காயத்தின் மொத்த கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் வெங்காய விளைச்சலை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மும்பையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி சாவு - 2 ஆயிரம் குடிசை வீடுகள் எரிந்து நாசம் Posted: 07 Dec 2015 07:16 PM PST மும்பை காந்திவிலி கிழக்கு, ஆகூர்லிமார்க் பகுதியில் தாமுநகர் குடிசைப்பகுதி உள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில் இங்குள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த இடமே அதிர்ந்தது. |
| Posted: 07 Dec 2015 07:04 PM PST மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார குழு 6-ந் தேதி சென்னை வந்தது. 7 பேர் கொண்ட அந்த குழுவினர் மாநில மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து 3 குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். |
| துப்பாக்கி முனையில் பெண்ணிடம் உணவு கேட்ட மாவோயிஸ்டுகள்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி Posted: 07 Dec 2015 06:54 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு, அட்டப்பாடி பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள அம்பலப்பாறா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் விரட்டப்பட்டனர்.அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் ஒரு வயர்லெஸ் கருவி, 303 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின. |
| சென்னை மக்களுக்காக பட்டினி கிடந்து ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய பாலியல் தொழிலாளிகள் Posted: 07 Dec 2015 06:53 PM PST தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மகாராஷ்டிரா மாநில பாலியல் தொழிலாளிகள் பட்டினி கிடந்து ஒரு லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத் நகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையில் வேறு போக்கிடமற்று தவிக்கும் 3 |
| பெங்களூருவில் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை Posted: 07 Dec 2015 06:40 PM PST பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா(வயது 21). இவர், கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபா ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் 11-வது மாடிக்கு சென்ற பூஜா திடீரென்று கீழே குதித்தார். |
| சபரிமலை மாளிகைப்புரத்தம்மன் கோவிலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2-வது நாளாக சிறப்பு பூஜை Posted: 07 Dec 2015 06:39 PM PST தமிழ்நாட்டில், வட மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக சென்னை நகரம் நீரில் மூழ்கியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக மழை வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று சபரிமலையில் உள்ள மாளிகைப்புரத்தம்மன் கோவிலில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |