மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தடையை மீறி மாட்டிறைச்சி விழா: எம்.எல்.ஏ. உள்பட மாணவர்கள் கைது
- கண்ணிவெடி தாக்குதல் வழக்கு விசாரணை: சந்திரபாபு நாயுடுவுக்கு திருப்பதி கோர்ட்டு சம்மன்
- மும்பை விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது
- பெரியாறு அணையில் முன் அறிவிப்பின்றி மதகுகளை திறந்ததால் தமிழக அதிகாரிகள் மீது நடவடிக்கை: கேரள மந்திரி ஆவேசம்
- அனுமதியின்றி பொது கூட்டம் நடத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு விலக்கு
- தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை ஓட்டியதாக கார்டு பணி இடைநீக்கம்
- இந்தியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இடையே தனித்துவம் மிக்க நெருங்கிய உறவு உள்ளது: தலாய்லாமா
- திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா: திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்குவது ரத்து
- திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
- நேஷனல் ஹெரால்டு வழக்கு: 100 சதவீதம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ராகுல் குற்றச்சாட்டு
- 1½ லட்சம் டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க முடிவு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- ரெயில்களில் பயன்படுத்த படுக்கை விரிப்பை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி
- வெள்ள நிவாரண நிதிக்கு டெல்லி தமிழ் சங்கம் ரூ.11 லட்சம் உதவி
- சிறுபான்மையின இளைஞர்களுக்கான நயீ மஞ்ஜில் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
- மோடியின் ரஷ்ய பயணத்தில் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்: ஜிதேந்தர் சிங்
- டெல்லி அரசின் புதிய கார் பார்முலா திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு: அரவிந்த் கெஜ்ரிவால்
- இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரீப்-சுஷ்மா சுவராஜ் சந்திப்பில் முடிவு
- இந்தியா எங்களுடன் விளையாடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான்
- நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு: சோனியா, ராகுல் சிறைக்கு செல்வது உறுதி என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி
- ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 15 மின்சார ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ராஜஸ்தான் அரசு
| ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தடையை மீறி மாட்டிறைச்சி விழா: எம்.எல்.ஏ. உள்பட மாணவர்கள் கைது Posted: 09 Dec 2015 09:37 PM PST ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் மிகவும் பிரசித்து பெற்றது. தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் இப்பல்கலைக்கழக மாணவ– மாணவிகளின் பங்கு மகத்தானதாக அமைந்தது. தனி மாநிலம் கோரி இந்த பல்கலைக்கழக மாணவ– மாணவிகள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இதனால் உஸ்மானியா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தனி மதிப்பு உள்ளது. |
| கண்ணிவெடி தாக்குதல் வழக்கு விசாரணை: சந்திரபாபு நாயுடுவுக்கு திருப்பதி கோர்ட்டு சம்மன் Posted: 09 Dec 2015 09:26 PM PST ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மீது திருப்பதியில் கடந்த 2003–ம் ஆண்டு கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. திருப்பதி பிரமோற்சவ கருடசேவை விழாவில் ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்க காரில் சென்ற போது மாவோயிஸ்டு |
| மும்பை விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது Posted: 09 Dec 2015 09:14 PM PST தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மும்பை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மும்பை வந்து இறங்கிய ஒரு பயணியை குடியுரிமை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் |
| Posted: 09 Dec 2015 09:00 PM PST கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த 142 அடியை எட்டும் அளவிற்கு நீர் பெருகியதால் தமிழக அதிகாரிகள் அணையின் மதகுகளை திறந்து தண்ணீரை |
| அனுமதியின்றி பொது கூட்டம் நடத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு விலக்கு Posted: 09 Dec 2015 07:36 PM PST ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால் மும்பை மான்கூர்டில் போக்குவரத்து போலீசாரின் அனுமதியின்றி பொது கூட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை குர்லா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. |
| தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை ஓட்டியதாக கார்டு பணி இடைநீக்கம் Posted: 09 Dec 2015 07:31 PM PST மத்திய ரெயில்வேயின் சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மின்சார ரெயில் ஒன்று தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக தண்டவாள தடுப்பு கட்டை நொறுங்கியதுடன் தடுப்புச்சுவரும் பெயர்ந்தது. |
| இந்தியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இடையே தனித்துவம் மிக்க நெருங்கிய உறவு உள்ளது: தலாய்லாமா Posted: 09 Dec 2015 07:30 PM PST திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே ஒரு தனித்துவம் மிக்க நெருங்கிய உறவு உள்ளது. இது முக்கியமானது. ஏனென்றால் இந்த நாடுகளில் ஜனநாயக சிந்தனைகள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது. |
| திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா: திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்குவது ரத்து Posted: 09 Dec 2015 07:16 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 21-ந்தேதி வைகுண்ட ஏகாதசியும், 22-ந்தேதி துவாதசியும் நடக்க உள்ளது. அதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி நாகேந்திரகுமார், கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி |
| திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா Posted: 09 Dec 2015 07:05 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில், உற்சவர் பத்மாவதி தாயார் தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தாயார் வீதிஉலாவுக்கு முன்னால், இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்ய |
| நேஷனல் ஹெரால்டு வழக்கு: 100 சதவீதம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ராகுல் குற்றச்சாட்டு Posted: 09 Dec 2015 06:34 PM PST 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சியின் நிதியை பயன்படுத்தி விலை கொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு |
| 1½ லட்சம் டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க முடிவு: மத்திய மந்திரிசபை ஒப்புதல் Posted: 09 Dec 2015 06:33 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, 1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி ஒப்புதல் அளித்தது. |
| ரெயில்களில் பயன்படுத்த படுக்கை விரிப்பை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி Posted: 09 Dec 2015 06:28 PM PST தற்போது, ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மட்டுமே பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் பயணிகள் நலனுக்காக, படுக்கை விரிப்புகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே துறை இம்மாதம் அறிமுகம் செய்கிறது. |
| வெள்ள நிவாரண நிதிக்கு டெல்லி தமிழ் சங்கம் ரூ.11 லட்சம் உதவி Posted: 09 Dec 2015 06:16 PM PST தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்துக்கு திரட்டப்படும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு டெல்லி தமிழ் சங்கம் ரூ.11 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் என்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| சிறுபான்மையின இளைஞர்களுக்கான நயீ மஞ்ஜில் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல் Posted: 09 Dec 2015 04:21 PM PST சிறுபான்மையினர் சமூக இளைஞர்களுக்காக நயீ மஞ்ஜில்(புதிய தளம்) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது இதற்கான அறிவிப்பை நிதி மந்திரி அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் |
| மோடியின் ரஷ்ய பயணத்தில் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்: ஜிதேந்தர் சிங் Posted: 09 Dec 2015 03:28 PM PST பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய சுற்றுப் பயணத்தில் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 24, 25 |
| டெல்லி அரசின் புதிய கார் பார்முலா திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 09 Dec 2015 01:42 PM PST டெல்லி அரசு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒற்றைப்படை இரட்டைப்படை எண் கார் பார்முலா திட்டத்தில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் புதிய கார் பார்முலா திட்டத்திற்கு மத்திய |
| இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரீப்-சுஷ்மா சுவராஜ் சந்திப்பில் முடிவு Posted: 09 Dec 2015 12:48 PM PST ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். மேலும் இஸ்லாமாபாத் நகரில் |
| இந்தியா எங்களுடன் விளையாடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் Posted: 09 Dec 2015 12:10 PM PST இந்திய அணி எங்களுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இருநாடுகளின் மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. |
| Posted: 09 Dec 2015 10:13 AM PST நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சிறைக்கு செல்வது உறுதி நூறு சதவீதம் உறுதி என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் |
| ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 15 மின்சார ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ராஜஸ்தான் அரசு Posted: 09 Dec 2015 08:24 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின்சாரத்துறை ஊழியர்கள் 15 பேர் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில மின்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் சார்பில் சம்பள கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |