Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரேமண்ட் நிறுவனத்திற்கு விதர்பாவில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கியது மகாராஷ்டிரா அரசு

Posted: 21 Dec 2015 10:46 PM PST

மிகவும் வறட்சியான பகுதியான விதர்பாவில் ஆடை நிறுவனம் தொடங்க 500 ஏக்கர் நிலத்தினை மகாராஷ்டிர அரசு பிரபல நிறுவனமான ரேமண்டுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் பணி கடிதங்களை மகாராஷ்டிர மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ் ரேமண்ட் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குனருமான கௌதம் சிங்கானியாவிடம் இன்று ஒப்படைத்தார்.

அருண்ஜெட்லி மீது ஊழல் புகார்: கீர்த்தி ஆசாத் எம்.பி. மீது நடவடிக்கை - பா.ஜனதா மேலிடம் முடிவு

Posted: 21 Dec 2015 10:22 PM PST

மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 2003–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த

அத்வானியை போல் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வருவார்: அருண்ஜெட்லிக்கு மோடி ஆதரவு

Posted: 21 Dec 2015 10:08 PM PST

டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் குற்றச்சாட்டில் நிதிமந்திரி அருண்ஜெட்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அருண்ஜெட்லி மீதான டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றது.

தெலுங்கானாவில் வாளேந்திய மனநோயாளி வெறியாட்டம்: போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்

Posted: 21 Dec 2015 09:50 PM PST

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரிம்நகர், லக்‌ஷ்மிநகர் பகுதியில் இன்று கையில் வாளுடன் ஒரு மனநோயாளி நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான தகவல் கிடைத்து விரைந்துவந்து பாப்லூ என்ற அந்த மனநோயாளியை பிடிக்க முயன்ற போலீசாரையும் அவர் கண்மூடித்தனமாக வாளால் வெட்டினார். இதில் அலி என்ற தலைமை காவலர் காயமடைந்தார்

2 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை ரஷியா பயணம்: கூடங்குளத்தில் 5, 6–வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்

Posted: 21 Dec 2015 09:46 PM PST

ரஷியா – இந்தியாவின் 16–வது ஆண்டு கூட்டம் நாளை ரஷியாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) ரஷியா நாட்டுக்கு செல்கிறார்.

திருப்பதி கோவிலில் தங்க ரதத்தின் இரும்பு ஏணி சரிந்து 6 பேர் காயம்

Posted: 21 Dec 2015 09:42 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 'தங்க ரத' உலா நடந்தது. ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியுடன் மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய பேருந்து: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

Posted: 21 Dec 2015 09:24 PM PST

கொல்கத்தா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் விமானம் உள்ள இடம் வரை பேருந்து ஒன்றில் பயணிகள் செல்வது வழக்கம். அப்படி கொல்கத்தா விமானத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது.

டெல்லி அருகே எல்லை பாதுகாப்பு படை விமானம் விழுந்து நொறுங்கியது: 10 பேர் பலி

Posted: 21 Dec 2015 09:10 PM PST

இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற சூப்பர் கிங் ரக விமானம் இன்று காலை டெல்லி அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியாகினர். தொழில்நுட்பப் பணியாளர்களுடன் டெல்லியில் இருந்து ராஞ்சி நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புதுடெல்லியின் துவாரகா எட்டாவது செக்டர் அருகேயுள்ள பக்டோலா கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கு

சோலார் பேனல் மோசடி வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த சி.டி., பென் டிரைவ்களை காணவில்லை: சரிதாநாயர்

Posted: 21 Dec 2015 09:07 PM PST

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதானவர் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களின் தொடர்பு இருப்பதாக புகார் கிளம்பியதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில்

நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: நன்னடத்தையால் மராட்டிய அரசு முடிவு

Posted: 21 Dec 2015 08:37 PM PST

கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. இந்த வழக்கில் ஆயுதங்கள் பதுக்கியதாக நடிகர் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 31–ந்தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து சஞ்சய்தத் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தண்டனை எதிர்த்து அவர் சுப்ரீம்

27–ந்தேதி மண்டல பூஜை: சபரிமலையில் கூடாரம் போட்டு தங்கும் அய்யப்ப பக்தர்கள்

Posted: 21 Dec 2015 08:35 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 27–ந்தேதி பகல் 12.30 மணிக்கு பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜை அன்று சுவாமி அய்யப்பன் ஜொலிக்கும் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப் பார். இதை தரிசனம் செய்

கிறிஸ்துமஸ் கொண்டாட பெங்களூரு சென்ற சென்னை பாதிரியார் விபத்தில் பலி

Posted: 21 Dec 2015 08:25 PM PST

யாதமரி மண்டலம் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமய்யாகண்டிகை அருகே வேகமாக வந்த ஒரு கார் சாலை ஓரம் இருந்த ஒரு மரத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. கார் டிரைவரும், அதில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மேற்கண்ட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை

மும்பை பெண் ஓவியர் ஹேமா உபத்யாய் கொடூர கொலை: பிரிந்து வாழும் கணவர் சிந்தன் கைது

Posted: 21 Dec 2015 08:10 PM PST

மும்பையை சேர்ந்த பிரபல ஓவியரும், நிறுவல் கலை நிபுணருமான ஹேமா உபத்யாய் (43) மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி (65) கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 12-ம் கண்டெடுக்கப்பட்டது. குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்த ஹேமா உபத்யாய், தன்னுடைய

சரத்பவார் பிரதமர் ஆகாதது துரதிருஷ்டவசமானது: சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு

Posted: 21 Dec 2015 07:34 PM PST

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் தன்னுடைய 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் பாகுபாடின்றி அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், நாக்பூரில் நடைபெற்று வரும் சட்டசபை குளிர்கால கூட்ட தொடரில்,

வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை: சித்தராமையா பேட்டி

Posted: 21 Dec 2015 07:26 PM PST

தார்வார் மாவட்ட மேல்-சபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உப்பள்ளியில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கர்நாடகம் வருகை

Posted: 21 Dec 2015 07:20 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார். இதையொட்டி, பெங்களூரு மற்றும் கலபுரகியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்

குடியரசு தினத்தன்று அனைத்து போலீசாருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார், பிரதமர் மோடி

Posted: 21 Dec 2015 06:36 PM PST

குடியரசு தினத்தன்று, நாட்டில் உள்ள மொத்தம் 18 லட்சம் போலீசாருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அதாவது, அவர்கள் அனைவருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப உள்ளார். டி.ஜி.பி. முதல் கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் அவர் எஸ்.எம்.எஸ். அனுப்ப போகிறார்.

சுப்பிரமணிய சாமிக்கு பங்களா ஒதுக்கீடு: வெங்கையா நாயுடு வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Dec 2015 06:31 PM PST

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு டெல்லியில் டைப்-7 ரக பங்களா ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு வீடு முன்பு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா அமரிந்தர் சிங்

டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் பா.ஜனதாவில் இணைந்தார்

Posted: 21 Dec 2015 02:20 PM PST

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் அமித்ஷா, வர்த்தகபிரிவின் தலைவர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ஆர்.அன்பழகனார் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களமிறங்கும் ராம்ஜெத்மலானி

Posted: 21 Dec 2015 01:46 PM PST

டெல்லி கிரிக்கெட் சங்க சர்ச்சை தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ராம்ஜெத்மலானி ஆஜராகவுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™