Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு கிடையாது: சுப்ரீம் கோர்ட்

Posted: 01 Dec 2015 10:35 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் தன்னிச்சையான அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது

மண்டல பூஜை: நடை திறந்த 15 நாளில் சபரிமலை வருமானம் ரூ.43 கோடி

Posted: 01 Dec 2015 09:20 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை நடந்து வருகிறது. சபரிமலையில் மழை பெய்து வந்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் நடை திறந்த 15 நாட்கள் ஆகிய நிலையில் சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை, அப்பம், அரவனை விற்பனை மூலம் இதுவரை ரூ.43 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சபரிமலை கோவில் பிரசாதமான அரவனை, அப்பம் ஆகியவை பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: பிரதமருக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம்

Posted: 01 Dec 2015 09:07 PM PST

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதங்கள் மத்திய மந்திரியிடம் சேர்ப்பிக்கப்பட்டது. ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் பசிப்பிணியை போக்கவும், பள்ளிக்கு மாணவர்களின் வருகை விகிதத்தை அதிகப்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்

சுப்ரீம் கோர்ட்டில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 01 Dec 2015 01:37 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 01 Dec 2015 11:59 AM PST

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கில் சட்டசபையில் நடந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் அடங்கிய பதிவுகளை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இருந்து 3.76 லட்சம் டன் கோதுமை இறக்குமதி: மத்திய அரசு மக்களவையில் தகவல்

Posted: 01 Dec 2015 10:59 AM PST

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3.76 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்திருப்பதாக மக்களவையில் உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் விலை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் மற்றும் மில் உரிமையாளர்கள் இவ்வாறு கோதுமையை இறக்குமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம்

Posted: 01 Dec 2015 09:29 AM PST

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில், வக்கீல் அசோக் பாண்டே என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால், அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

எந்தவொரு அட்டூழிய சம்பவமும் நாட்டின் மீதான ஒரு கரும்புள்ளியே: மாநிலங்களவையில் மோடி பேச்சு

Posted: 01 Dec 2015 07:47 AM PST

எந்தவொரு அட்டூழிய சம்பவம் நடந்தாலும் அது சமுதாயத்தின் மீது மட்டுமல்ல நாட்டின் மீதான ஒரு கரும்புள்ளிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சகிப்பின்மை குறித்த விவாதம் இன்று (செவ்வாய்) மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. மாநிலங்களவையில் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு, "நாட்டில் சகிப்பின்மை சிறிதளவு இருக்கத்தான் செய்கிறது. அதை பெரிதாக்கி

வி.கே.சிங் சர்ச்சையை கிளப்பினார் ராகுல்காந்தி: மக்களவையில் கடும் அமளி

Posted: 01 Dec 2015 05:30 AM PST

அரியானா மாநிலத்தில் இரண்டு தலித் சிறுவர்கள் எரித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி வி.கே.சிங் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தினை ராகுல்காந்தி இன்று மக்களவையில் எழுப்பியதால் கடும் அமளி நிலவியது. மக்களவையில் இன்று ராகுல்காந்தி பேசியபோது, "மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க நாம் அனைவரும் இங்கு உள்ளோம். தலித் குழந்தைகளை நாயுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி வி.கே.சிங் எங்கே?. தலித் மக்களை நாயுடன் ஒப்பிட்டதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு

மசோதாக்களுக்கு ஆதரவு தருகிறோம், மந்திரிகளுக்கு வாய்ப்பூட்டு போடுங்கள்: பா.ஜ.க.வுக்கு ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனை

Posted: 01 Dec 2015 04:05 AM PST

பகுஜன் சமாஜ் கட்சியை தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், மத்திய மந்திரிகளின் சர்ச்சை பேச்சுக்களை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

முகத்தில் அறையும் உண்மையை சொல்லும் தண்ணீர் மனைவிகள் குறும்படம்

Posted: 01 Dec 2015 03:37 AM PST

இந்தியாவின் பல இடங்களில் தண்ணீர் வீணடிக்கப்பட்டு வரும் வேளையில் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் பல மைல் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவர ஒரு பெண் தேவை என்ற காரணத்திற்காக மட்டுமே பல முறை திருமணம் செய்துக்கொள்ளும் அவலம் நீடிக்கிறது.

மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து

Posted: 01 Dec 2015 03:01 AM PST

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம், மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் நேருக்குநேர் மோதட்டும் என்று கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை மற்றும்

பாலியல் குற்றவாளிகள் விடுதலை ஆன பிறகும் கண்காணிக்கப்படவேண்டும்: மேனகா காந்தி வலியுறுத்தல்

Posted: 01 Dec 2015 02:08 AM PST

நிர்பயா பாலியல் வழக்கில் இளம் சிறார் குற்றவாளி வருகிற டிசம்பர் 16-ம் தேதி விடுதலை ஆகவுள்ள நிலையில், பாலியல் குற்றவாளிகள் தண்டனை முடிந்து விடுதலை பெற்ற பின்னும் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்கா நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய தடையா?: சத்யாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக காங். எம்.பி. அறிவிப்பு

Posted: 01 Dec 2015 01:52 AM PST

முஹம்மது நபி பிறந்த புனித பூமியான மக்கா நகருக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சத்யாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., ஹுசைன் தல்வாய் அறிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி பாராளுமன்ற மாநிலங்களவையில் 'அரசியலமைப்புச் சட்டத்துக்கு அர்ப்பணிப்பு' என்ற

சட்டசபை தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை: பீகார் காங்கிரசில் 45 தலைவர்கள் நீக்கம்

Posted: 01 Dec 2015 01:34 AM PST

காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 45 தலைவர்கள் காங்கிரசில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலின் போது மாநில முக்கிய நிர்வாகிகளான பத்மஷோஜா, ஹரிநாராயணன் சவுத்திரி, ஜம்சத் அஷ்ரப் பசந்த் சிங் உள்ளிட்ட 51 பேர் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தனர்.

முக்கிய வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: பணவீக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Posted: 01 Dec 2015 01:18 AM PST

முக்கிய வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வீட்டு கடன் உட்பட அனைத்து வகையான கடன்களுக்கான இ.எம்.ஐ. கட்டணங்களில் மாற்றம் இருக்காது என்று எதிர்பாக்கப்படுகிறது. இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரெப்போ தொடர்ந்து 6.75 சதவீதமாகவே

திடீர் உடல்நலக் குறைவு: அத்வானியின் மனைவி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Posted: 01 Dec 2015 01:10 AM PST

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்வானியின் மனைவி கமலா அத்வானி (80) மூச்சுத் திணறல் காரணமாக

ரெயில்களில் தாக்குதல் சதி முறியடிப்பு: கைதான தமிழக வாலிபரிடம் தேசிய புலனாய்வு குழு விசாரணை

Posted: 01 Dec 2015 01:05 AM PST

டிசம்பர் முதல் வாரத்தில் ரெயில்களில் தாக்குதல் நடத்த இருந்த சதி முறியடிக்கப்பட்டது. சமீபகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. கடந்த அக்டோபர் 4–ந்தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரிஷிகேஷ்– டெல்லி பயணிகள் ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை 14-ம் தேதிவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

Posted: 01 Dec 2015 12:51 AM PST

ஷீனா போரா கொலை வழக்கில் கைதான பீட்டர் முகர்ஜியின் நீதிமன்றக் காவல் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்காக புதுடெல்லி அழைத்து செல்லப்பட்ட பீட்டர் முகர்ஜியின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த 25-ம்

சரக்கு சேவை வரிக்கு முட்டுக்கட்டை: காங்கிரஸ் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை- மத்திய அரசு தீவிரம்

Posted: 01 Dec 2015 12:11 AM PST

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் சரக்கு சேவை வரியை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு பாராளுமன்ற மேல்–சபையில் மெஜாரிட்டி பலம் இல்லாததால் சரக்கு சேவை வரி விதிப்புக்கான


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™