Tamil Star |
| ரொரன்ரோவின் நீர் மற்றும் குப்பை சேகரிக்கும் கட்டணங்கள் அதிகரிக்கும் Posted: 08 Nov 2015 06:27 AM PST
அடுத்த வருடத்தில் இருந்து ரொரன்ரோ வாசிகள் நீர் மற்றும் குப்பை சேகரிக்கும் கட்டணங்களின் அதிகரிப்பை எதிர்கொள்ள நேரிடலாம்.2016ஆம் ஆண்டிலிருந்து நீர் கட்டணத்தினை எட்டு சதவீத்தினாலும், குப்பை சேகரிப்பதற்கான கட்டணத்தினை மூன்று சதவீத்தினாலும் அதிரிப்பதற்கான முன்மொழிவினை ரொரன்ரோ நகர அதிகாரிகள் நகரசபை நிர்வாத்திடம் முன்மொழிந்துள்ளனர். இந்த அதிகரிப்பால் ரொரன்ரோ வாசிகள் குப்பை அகற்றுவதற்கு இதுவரை செலுத்திவரும் கட்டணததிலும் பார்க்க 7 டொலரிலிருந்து 15 டொலர்கள் வரையில் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் எனவும், 2015ஆம் ஆண்டில் வீட்டு நீர் கட்டணமாக சராசரியாக 882 டொலர்கள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு மேலதிகமாக 70.56 டொலர்கள் செலுத்த வேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் சேமிப்பு பிரதேசங்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளமை, இந்த துறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமை,குப்பை அகற்ற மேம்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளமை போன்ற காரணங்களால் கட்டண அதிகரிப்பு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது என ரொரன்ரோ நகர வரவுசெலவுத் திட்டமிடல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். நீர்ப் பாவனை குறைவடைவதால் ஏற்பட்டுள்ள ஒரு மில்லியன் பற்றாக்குறையினை ஈடுசெய்யும் வகையில் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் எட்டு சதவீத கட்டண அதிகரிப்பினை மேற்கொள்வது என முன்னரே அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரமே நீர்க் கட்டண அதிரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். The post ரொரன்ரோவின் நீர் மற்றும் குப்பை சேகரிக்கும் கட்டணங்கள் அதிகரிக்கும் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
