Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகார் தேர்தல் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு கடும் சரிவு - பங்கு சந்தைகளிலும் வீழ்ச்சி

Posted: 08 Nov 2015 11:27 PM PST

பீகார் சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு இன்று இந்தியா பங்கு சந்தை நிலவரங்களில் எதிரொலித்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று (திங்கட்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கியதும் வீழ்ச்சி ஏற்பட்டது. தேர்தல் தோல்வியால் மத்திய அரசு

போலீஸ் சுட்டதில் மாணவர் பலி: காஷ்மீரில் பதற்றம்– ஊரடங்கு உத்தரவு

Posted: 08 Nov 2015 11:12 PM PST

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மத்திய போலீஸ் படை சுட்டதில் ஜவ்கர் நசீர்தர் என்ற மாணவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே மாணவர் கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பிரிவினைவாத

பீகாரில் டெபாசிட் காலி: முலாயம்சிங் கடும் விரக்தி

Posted: 08 Nov 2015 11:05 PM PST

பீகார சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தனி அணியாக போட்டியிட்டது. இதனால் யாதவர்கள், முஸ்லிம்களின் கணிசமான ஓட்டுக்களை முலாயம்சிங் கட்சி பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய மந்திரிசபையில் மாற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை

Posted: 08 Nov 2015 10:50 PM PST

பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளின் செயல் பாடுகள் பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது சில மத்திய மந்திரிகளின் நிர்வாகத் திறமை மீது அவருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்படாத மத்திய மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமனம் செய்ய திட்டமிட்டார். புதிய மந்திரிகளாக யார், யாரை நியமனம் செய்யலாம் என்பது பற்றியும் அவர் பட்டியல்

வெந்தப் புண்ணில் வேல்: ஒருமுறைதான் மக்கள் ஏமாறுவார்கள் - பா.ஜ.க.வின் பீகார் தோல்வியை விமர்சிக்கும் சிவசேனா

Posted: 08 Nov 2015 10:26 PM PST

பணபலம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை ஒருமுறைதான் ஏமாற்ற முடியும் என பா.ஜ.க.வுக்கு சிவசேனா உபதேசம் செய்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய சரிவை சந்தித்ததை சுட்டிக்காட்டும் வகையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று ஒரு தலையங்கக் கட்டுரை வெளியாகியுள்ளது.

திருப்பதியில் கனமழை: நடைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்து பக்தர்கள் ஓட்டம்

Posted: 08 Nov 2015 10:09 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசனம், நடைப்பாதை தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ரூ.300 செலுத்தி

ஒடிசாவில் இன்று நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை பரிசோதனை வெற்றி

Posted: 08 Nov 2015 09:55 PM PST

அணுஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி, அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்றுதரை இலக்கை தாக்கக்கூடிய அக்னி-4 ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது ஆகும். 20 மீட்டர் நீளம் 17 டன் எடை

சித்தூர் அருகே பன்றிக்கு வைத்த குண்டு தவறி வாலிபர் பலி - 12 பேர் கைது

Posted: 08 Nov 2015 09:46 PM PST

சித்தூர் அடுத்த பலமநேர் மண்டலம் திகுவமாருமூரு, எர்ரகுண்டபள்ளி, பாலமாகுலப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் கிருஷ்ணப்பா, ராமமூர்த்தி, ஆனந்தா, ஜெகன்நாதன், முனிரத்தினம், ராஜப்பா, மனோஜ், ரெட்டியப்பா, மற்றொரு கிருஷ்ணப்பா, சுப்பிரமணியம், சீனிவாசலு, சந்திரப்பா, சிரஞ்சீவி. இந்த 13 பேரும் பலமநேர் வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் பன்றி வேட்டைக்கு சென்றனர்.

மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடங்கியது

Posted: 08 Nov 2015 09:45 PM PST

தரப் பரிசோதனையில் பாதுகாப்பான உணவு என்பது உறுதியானதால் பிரபல நெஸ்ட்லே நிறுவனம் தனது மேகி நூடுல்ஸ் விற்பனையை இன்று மீண்டும் தொடங்கியது. நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு

பீகார் தேர்தல் முடிவு: மோடியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - உம்மன்சாண்டி

Posted: 08 Nov 2015 09:34 PM PST

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியது. பீகார் தேர்தலில் பா.ஜனதா தோல்வி குறித்து கேரள

காளஹஸ்தி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Posted: 08 Nov 2015 09:27 PM PST

காளஹஸ்தி அடுத்த பூதலப்பட்டு மண்டலம் காந்திநகரை சேர்ந்தவர் மணி (வயது 38). இவருடைய மனைவி லட்சுமி (36). அவர்களுக்கு பவ்யா (12), சித்ரா (10) என்ற இரு மகள்கள் இருந்தனர். மணி, கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால்,

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் – வேன் மோதியதில் வியாபாரிகள் 3 பேர் பலி

Posted: 08 Nov 2015 09:10 PM PST

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் என்தோஸ் (வயது 35). ஆலப்புழையை சேர்ந்தவர்கள் ஐபின் (30), சுனில்குமார் (34). இதில் என்தோஸ், ஐபின் ஆகியோர் கொழிஞ்சாம்பாறை வண்ணாங்கடையில் பல ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இஞ்சி பயிரிட்டு வியாபாரம் செய்து வந்தனர். சுனில்குமார் அதே பகுதியில் தென்னந்தோப்பில் கள் வியாபாரம் செய்து வந்தார். இவர்களது நண்பர்கள் பாபு (34), ஜார்ஜ் (34). நேற்று இரவு 8

பீகார் தேர்தல் பற்றிய கருத்து: ராகுல் காந்திக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

Posted: 08 Nov 2015 07:31 PM PST

பீகார் தேர்தல் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 'பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ்.சை வீழ்த்துவது மட்டுமின்றி அடித்து நொறுக்கவும் செய்யும்' என்று கூறியதாக தெரிகிறது. ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை - புனே நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் 9 மாதங்களில் ரூ. 136 கோடி வசூல்

Posted: 08 Nov 2015 07:24 PM PST

மும்பை - புனே நெடுஞ்சாலையில் மும்பையின் நுழைவு பகுதியான தகிசர், வாஷி, ஐரோலி, முல்லுண்டு, முல்லுண்டு எல்.பி.எஸ். மார்க் ஆகிய பகுதிகளில் சுங்க சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சுங்க சாவடிகளை நிரந்தரமாக மூடுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஏப்ரல் மாதம் கமிட்டி ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

திருமண சான்றிதழ் இல்லாததால் மோடி மனைவிக்கு பாஸ்போர்ட் மறுப்பு

Posted: 08 Nov 2015 07:23 PM PST

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். இவர் குஜராத்தின் வட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தனது சகோதரர் அசோக் மோடி குடும்பத்துடன் வசித்து வருகிறார். வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், குடும்ப நண்பர்களை சந்திக்க செல்வதற்காக யசோதா பென் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட்

மராட்டிய வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.4,330 கோடி கோர முடிவு: மந்திரி ஏக்நாத் கட்சே தகவல்

Posted: 08 Nov 2015 07:16 PM PST

மும்பையில் நேற்று மாநில வேளாண்துறை மந்திரி ஏக்நாத் கட்சே தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் சுவாதீன் சத்ரியா, நிவாரண மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் கோவின்ராஜ் மற்றும் வேளாண்துறை முதன்மை செயலாளர் ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் கூறியதாவது:

பீகார் சட்டசபை தேர்தல் முடிவு: மத்திய அரசின் மீதான மக்களின் மனநிலையை உணர்த்துகிறது - சரத்பவார் கருத்து

Posted: 08 Nov 2015 07:08 PM PST

பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வாகி இருக்கிறார்.

பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் - அமித்ஷா கருத்து

Posted: 08 Nov 2015 06:50 PM PST

பீகார் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி 170-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

Posted: 08 Nov 2015 06:42 PM PST

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று 88-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா தலைவர்

ஐ.ஐ.டி.யில் சேர ஒரு முறை மட்டுமே நுழைவுத்தேர்வு: வல்லுனர்கள் குழு சிபாரிசு

Posted: 08 Nov 2015 06:27 PM PST

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தற்போது மெயின், அட்வான்ஸ்ட் என்னும் 2 வித நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீப காலமாக ஐ.ஐ.டி. நிறுவனங்களில் படிக்க மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சி மையங்கள் அதிகரித்து விட்டன. இதனால் மாணவர்கள் இந்த மையங்களை சார்ந்திருக்கவேண்டிய கட்டாய சூழலும், ஐ.ஐ.டி. கல்வியின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™