Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Agincourt பகுதியில் கனரக வாகனம் மோதி சிறுமி படுகாயம்

Posted: 03 Nov 2015 06:20 PM PST

y

yஇன்று பிற்பகல் Agincourt பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட 3 வயது சிறுமி ஒருவர் மோசமான காயங்களுடன் மரத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெனடி வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் எவையும் உடனடியாக அறிந்து கொள்ள முடியவிலலை.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கனரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனை வானத்திலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள் காட்டுகின்றன.y

விபத்தினை தொடர்ந்து ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில், கெனடி வீதியின் இரு திசைகள் நோக்கிய போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் மாலை 5.40 அளவில் அவை மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன.

The post Agincourt பகுதியில் கனரக வாகனம் மோதி சிறுமி படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Woodbineஇல் வாகனம் மோதி மிதிவண்டி ஓட்டுனர் பலி

Posted: 03 Nov 2015 06:17 PM PST

g

gWoodbine Racetrackஇல் வாகனத்தினால் மோதுண்ட மிதிவண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை 27இல், Vice Regent Boulevard பகுதியில் இன்று மாலை ஆறு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிதிவண்டியில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் எவையும் அதிகாரிகளால் உடனடியாக வெளியிடப்படவில்லை

விபத்தினை தொடரந்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன.

The post Woodbineஇல் வாகனம் மோதி மிதிவண்டி ஓட்டுனர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாளை பதவியேற்றுக்கிறது ஜஸ்டின் ரூடோ தலைமையிலான அரசாங்கம்

Posted: 03 Nov 2015 01:31 PM PST

i

iஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கம் நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளது.நாளை அமையப் போகும் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான இந்த புதிய அசராங்கத்தில் அதிகாரங்கள் போதிய அளவில் பரவலாக்கப்பட்ட குழுநிலை நிர்வாக கட்டமைப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆட்சிக் காலத்தில் மறைமுகமாக ஒருவரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழேயே அரசாங்கம் இயங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையிலேயே இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை பதவி ஏற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நாளைய தினம் பதவியேற்கவுள்ள பிரதமரும் அமைச்சர்களும் தனித் தனி வாகனங்களில் அணிவகுப்பாக வருகை தராது, அனைவரும் ஒரு பேரூந்தில் நிகழ்வு மண்டபத்திற்கு செல்லவுள்ளனர் என்றும், பின்னர் வளாகத்தின் வாயிற்பகுதியி்ல் இறங்கி அனைவரும் நடந்தே நிகழ்விடத்திற்கு செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.i

அத்துடன் இந்த பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு இம்முறை பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன்,பெருமளவு மக்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அங்கு வரும் அனைவரும் நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் வகையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பாரிய காணொளித் திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

The post நாளை பதவியேற்றுக்கிறது ஜஸ்டின் ரூடோ தலைமையிலான அரசாங்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பு

Posted: 03 Nov 2015 12:25 PM PST

u

uமுன்னைய ஸ்டீபன் ஹார்ப்பர் அரசாங்கம், தானியங்கி தாக்குதல் துப்பாக்கிகள், கவசவாகனங்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்டவை எனக் கூறப்படும் ஆயுதங்களை உக்ரெய்னுக்கு வினியோகிப்பதனை அனுமதிக்கும் திட்டத்தினை முன்வைத்திருந்தது.

ஆனால் அந்த திட்டத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன்,அனைத்துலக மன்னிப்புச் சபையின் கனேடிய கிளை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தினை எதிர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

இது தொடர்பில் வெளியுறவு அமைச்சுக்கு கடிதம் ஒன்றினையும் அந்த அமைப்புக்கள் அனுப்பி வைத்துள்ளன. அதில் இவ்வாறான பயங்கர ஆயுங்களை உக்ரெய்னுக்கு வினியோகிப்பதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளன.

u

இவ்வாறான ஆயுதங்களை வினியோகிக்கக் கூடாது என கனடாவால் 39 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ள போதிலும், அந்த பட்டியலில் உள்ள சவூதி அரேபியாவுக்காக மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி அண்மையில் 13 பில்லியன் டொலர்களுக்கான ஆயுங்கள் வினியோகிக்ப்பட்டுள்ளதனையும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பதவி விலகிச் செல்லும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், உக்ரெய்ன் பிரதமருடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பிலான கோரிக்கைய வெளியுறவு அமைச்சு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே உக்ரெய்னுக்கான ஆயுத வினியோகத் திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள மனித உரிமை அமைப்புக்கள், அந்த நாட்டின் மனித உரிமை நிலவரம் சீரடையும் வரையில் உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வினியோகிப்பது தடைசெய்யப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

The post உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Posted: 03 Nov 2015 06:39 AM PST

5

5நாம் சாப்பிட்டு முடித்த பின்னர் மிஞ்சிய உணவுகளை பத்திரமாக எடுத்து வைக்கிறோம்.
அந்த மிஞ்சிய உணவுகளை சாப்பிடும்போது, மீண்டும் அதனை சூடாக்கி எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எல்லாவகை உணவுகளையும் இவ்வாறு மீண்டும் சூடேற்றுவது சில ஆரோக்கிய கெடுதல்களை விளைவிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அதனை மீண்டும் எடுத்து சூடேற்றும்போது அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும்.3

கோழிக்கறி

கோழிக்கறியில் புரதம் அதிகம் உள்ளதால், இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.4

 

காளான்

காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்

 

 

 

 

 

 

5

பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.6

கீரைகள்

கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.,m

 

The post உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஏற்படும் விளைவுகள் என்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™